திங்கள், 21 நவம்பர், 2011

எல்லோருக்குமானது இவ்வுலகம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 3-படங்களுடன்)

பறவைப் பார்வை:


# 1. முப்பது ஏழு மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட மெர்லயன்..
.தனியே.. தன்னந்தனியே.. ஹார்பர் பார்த்து..

ஃப்ளையர் ஏறாமல் தவறவிட்டப் பறவைப் பார்வை மவுண்ட் ஃபேபரிலிருந்து சென்டோஸா தீவுக்குப் பயணிக்கையில் கிடைத்தது. அப்போது காட்சிப்படுத்தியவையே முதல் நான்கு படங்களும்.

# 2. கூகுள் மேப் அல்ல.. கேபிள் வாகனப் படம்..


அடர்த்தியான நாற்பது ஐம்பதடி உயர அடர்த்தியான மழைக்காட்டு மரங்கள் பச்சைபசேலெனக் கவனத்தைக் கவர்ந்தன. 2011ஆம் ஆண்டு சர்வதேச வன ஆண்டும்.

# 3. மழைக்காடு
ஃப்ளிக்கரில் இதை நான் பகிர்ந்திருந்த போது thumbnail அளவில் முதலில் பார்த்த போது ப்ரகோலி என்றே நினைத்ததாக ஒரு நண்பர் சொல்ல இன்னொரு தோழியின் பகிர்வு: In Julianne Koepcke's survival story... she will say "I saw the forest beneath me—like green cauliflower, like broccoli "

# 4. நீந்தும் கப்பலை வானில் நீந்தியபடி ரசிக்கலாம்:


5. தீவுக்கு மோனோ ரயில், சாலை வழியாகவும் வரலாம்:
நாங்கள் கேபிள் காரில் சென்று சாலைவழியாகத் திரும்பினோம். தீவு எங்கிருக்கிறது, கேபிள் கார்ப் பயணம் எங்கே தொடங்கி எங்கே முடிந்தது என்பதையெல்லாம் இருதினம் கழித்து ஒரு மாலையில், சிங்கப்பூர் நண்பர் தந்த ஆலோசனையின்படி சென்ற விவோசிடியின் பின்புறம் மற்றும் மேல்தளத்திலிருந்து ரசிக்க முடிந்தது.

# 6. வரவேற்கிறது சென்டோசா

# 7. Resorts World Sentosa Singapore



# 8. விவோ சிடி

# 9. நீண்ட தன் மூக்கைப் போலவே நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் பினோச்சியோ

விவோசிடி மேல்தளத்து குளத்தில் குழந்தைகளை விளையாடவிட்டபடி பொழுதைக் கழிக்கிறார்கள் மாலை வேளையில் பலரும். இன்னொரு பக்கத்தில் சிலர், குறிப்பாக வயதான தம்பதியர் சென்டோசா திசை பார்த்து அமர்ந்து, நகரும் கப்பல்களையும் இயற்கையையும் ரசித்தபடி ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தனர்.

# 10. அந்திமாலையில்..



# 11 அந்தப் பசுபிக் கடலோரம்..


# 12. சிங்கப்பூரின் அடையாளச் சின்னம் மெர்லயனின் முன்புறத் தோற்றம்


சிங்கப்பூரின் பொருளாதாரம் குறித்த ஞானம் அதிகம் இல்லை. ஆனால் பெரும்பாலும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு பொருளாதார நிலையில் மேம்பட்டு இருப்பதும் அதற்கு அரசும் உதவுவதும், எங்களை சிடி டூர் அழைத்துச் சென்ற டாக்ஸி ட்ரைவரின் பேச்சிலிருந்து அறிய முடிந்தது.

‘சிங்கப்பூர் சின்ன நாடு முடிகிறது. நம்ம நாடு பெரிசு, ஜனத்தொகையும் அதிகம்’ என்றெல்லாம் எவரேனும் வாதிட்டால் வெட்கக்கேடு. நம் ஜனத்தொகை நமது பலம். அரசியல்வியாதிகளின் ஊழலுக்கு சரியான அடி கொடுத்தாலே வறுமைக் கோட்டில் உழலுபவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலும். அரசின் இந்த ‘எல்லோருக்குமானது நாடு’ எனும் செயல்பாடு பிடித்தது போலவே, பார்த்த இடங்களில் எனக்கு மிகப் பிடித்தவையாக, எல்லோருக்குமானது இவ்வுலகம் எனப் புரிய வைத்தவையாக அமைந்திருந்தன நீந்துவன, நடப்பன, பறப்பன இவை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் (சென்டோஸா தீவின்) அன்டர் வாட்டர் வொர்ல்ட், நைட் சஃபாரி மற்றும் ஜுராங் பறவைப் பூங்கா. வரும் பதிவுகளில் அவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)


2. சின்ன நாடு.. பெரிய பேரு..-சிங்கப்பூர் பயண அனுபவம்(பாகம்-2)-படங்களுடன்




52 கருத்துகள்:

  1. அருமையான அசத்தலான படங்கள்
    நேரடியாக பார்ப்பதைப் போன்ற உணர்வினை
    ஏற்படுத்திப் போனது
    ம்னம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    பதிலளிநீக்கு
  2. காமிரா பேசுகிறது! அருமை ராமல்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  3. நாள் முழுக்க சிங்கப்பூர் பெருமை பற்றி நாம் பேசலாம். ஆனால் அரசியல்வியாதிகள் மட்டும் நாங்க சிங்கப்பூராக மாற்றுவோம் என்று மட்டுமே பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. கூகிள் மேப் அல்ல, கேபிள் வாகனப் படம்....:))
    உண்மை அப்படித்தான் தோன்றியது. வழக்கம் போல அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  5. காமிரா பேசுகிறதா... புகைப்படங்கள் பேசுகிறதா... படங்கள் அருமை. ஜோதிஜி சொன்னது 100க்கு 100 உண்மை.

    பதிலளிநீக்கு
  6. சிங்கப்பூர் எப்பவுமே அழகுதான் நேரில் பார்த்து ரசித்த இடங்களை உங்க பதிவின் மூலமாக திரும்பவும் ரசிக்க வச்சுட்டீங்க.படங்கள் எல்லாமே அழகு.

    பதிலளிநீக்கு
  7. இன்னும் நிறையா உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.புகை படங்கள் அனைத்தும் அருமை.நல்ல தெளிவான கட்சி பதிவுகள்.
    போய் வரும் செலவு , தங்க கூடிய அறை,இடங்கல் தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் வழக்கம் போல் அருமை.

    கடைசி பாரா எழுதியது நீங்களா !!!!!

    பதிலளிநீக்கு
  9. படங்களில் உங்கள் பெயரை வாட்டர் மார்க்காக ,படத்தின் நடுவில் போடவும் ...ஓரமாக இருந்தால் கட் பண்ணிவிடலாம்


    அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு
  10. தங்களின் பயணத் தொடர்கட்டுரைக்கு இது நல்லதொரு துவக்கம்.... படங்கள் அற்புதம்...ஒரு எழுத்தாளராய், வாழும் தன்மையில் அங்குள்ளவரின் மனவோட்டங்களையும், நம்மவ ருடையதையும் எடுத்து எழுதினால் இன்னும் சுவை சேரும்..

    பதிலளிநீக்கு
  11. படங்களும் பகிர்வும் அழகு,தங்களின் சிங்கப்பூர் பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்க ஆசை.

    பதிலளிநீக்கு
  12. முத்தக்கா...எப்பவும்போல சூப்பர் படங்கள் !

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள். அழகான படங்களுடன் அருமையான பதிவு. vgk

    பதிலளிநீக்கு
  14. சிங்கப்பூரின் பெருமையே இயற்கை தந்த பசுமையும்,அதைக் கெடுக்காமல் இவர்கள் புகுத்திய பழமை மாறா புதுமையும் ஆகும். உங்கள் பதிவும், படங்களும் மிக அழகு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. பார்க்க கொடுத்து வச்சிருக்கனும்.உங்கள் காமிரா'வா நான் இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. //ஹேமா சொன்னது..."முத்தக்கா எப்பவும்போல் சூப்பர் படங்கள்..."//

    முத்தக்கா...?

    பதிலளிநீக்கு
  17. பழமையைத் போற்றி புதுமையும்
    ஆற்றும் சிங்கப்பூர் ஒரு சிங்கார பூமி!
    நானும் பல ஆண்டுகளுக்கு
    முன்னால் இரண்டு முறை சென்றுள்ளேன்!
    படங்கள் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  18. அருமையான காட்சிகள் உங்கள் கைவண்ணத்தில்... எல்லோருக்குமான நாடு... அந்த மனப்பான்மை நாம் நாட்டிற்குள் வந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  19. எல்லோருக்குமானது இவ்வுலகம் எனப் புரிய வைத்தவையாக அமைந்திருந்தன நீந்துவன, நடப்பன, பறப்பன இவை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் (சென்டோஸா தீவின்) அன்டர் வாட்டர் வொர்ல்ட், நைட் சஃபாரி மற்றும் ஜுராங் பறவைப் பூங்கா. வரும் பதிவுகளில் அவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.//

    பகிர்வை படிக்க காத்து இருக்கிறோம்.

    சிங்கப்பூர் பயணக் கட்டுரை, படங்கள்
    கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  20. படங்கள் வழமைபோல் மனதைக் கொள்ளை கொண்டன. சிங்கப்பூரின் இயற்கையழகை நீங்கள் விவரிக்க விவரிக்க எவ்வாறேனும் ஒருமுறை நேரமும் பணமும் ஒதுக்கி நேரில் சென்று பார்த்துவர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. நீங்கள் கடைசிப் பாராவில் சொல்லியிருப்பது நிஜமான நிஜம்! அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. பாச மலர் / Paasa Malar has left a new comment on your post :

    வழக்கம்போலவே ராமலக்ஷ்மி பாணி வர்ணனையுடன் அழகான படங்கள்...

    Posted by பாச மலர் / Paasa Malar to முத்துச்சரம் at November 22, 2011 1:14 PM

    பதிலளிநீக்கு
  22. உங்கள் கேமெராவில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை.. பிரமாதமான படங்கள் தானாகவே வந்து விழுகின்றனவோ உங்கள் கேமராவில்? அருமை.
    தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. உங்கள் படங்களில் ஒரு திருத்தம் / cleanliness இருப்பது எப்படி என்பது தெரியவில்லை. picture card quality எப்போதும்.

    நன்று.

    பதிலளிநீக்கு
  24. எல்லாமே நல்லாருக்குன்னாலும், பறவைப்பார்வை ரொம்பவும் அசத்தல்..

    பதிலளிநீக்கு
  25. //ஸ்ரீராம். said...

    //ஹேமா சொன்னது..."முத்தக்கா எப்பவும்போல் சூப்பர் படங்கள்..."//

    முத்தக்கா...?//
    முத்துச்சரம் தொடுக்கும் அக்கா ?
    :-)

    பதிலளிநீக்கு
  26. Ramani said...
    //அருமையான அசத்தலான படங்கள்
    நேரடியாக பார்ப்பதைப் போன்ற உணர்வினை
    ஏற்படுத்திப் போனது. மனம் கவர்ந்த பதிவு//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஷைலஜா said...
    //காமிரா பேசுகிறது! அருமை ராமல்ஷ்மி!//

    நன்றி ஷைலஜா:)!

    பதிலளிநீக்கு
  28. ஜோதிஜி திருப்பூர் said...
    //நாள் முழுக்க சிங்கப்பூர் பெருமை பற்றி நாம் பேசலாம். ஆனால் அரசியல்வியாதிகள் மட்டும் நாங்க சிங்கப்பூராக மாற்றுவோம் என்று மட்டுமே பேசுவார்கள்.//

    உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம். said...
    //கூகிள் மேப் அல்ல, கேபிள் வாகனப் படம்....:))
    உண்மை அப்படித்தான் தோன்றியது. வழக்கம் போல அருமையான படங்கள்.//

    நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  30. தமிழ் உதயம் said...
    //ஜோதிஜி சொன்னது 100க்கு 100 உண்மை.//

    ஆம் ரமேஷ்.

    ////காமிரா பேசுகிறதா... புகைப்படங்கள் பேசுகிறதா... படங்கள் அருமை.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. Lakshmi said...
    //சிங்கப்பூர் எப்பவுமே அழகுதான் நேரில் பார்த்து ரசித்த இடங்களை உங்க பதிவின் மூலமாக திரும்பவும் ரசிக்க வச்சுட்டீங்க.படங்கள் எல்லாமே அழகு.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  32. வடுவூர் குமார் said...
    //Lot of changes....//

    நன்றி குமார். முன்னர் பார்த்தவருக்கே அது தெரியும்:)!

    பதிலளிநீக்கு
  33. மழைதூறல் said...
    //இன்னும் நிறைய உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.புகை படங்கள் அனைத்தும் அருமை.நல்ல தெளிவான காட்சிப் பதிவுகள்.
    போய் வரும் செலவு , தங்க கூடிய அறை, இடங்கள் தெரிவிக்கவும்.//

    ஒவ்வொருவர் தேவையைப் பொறுத்து அது மாறுபடவே செய்யும். சென்னையைச் சேர்ந்தவரெனத் தெரிகிறது. அங்கிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட டூர் ஆபரேட்டர்களிடம் தகவல் சேகரியுங்கள். ஒவ்வொருவர் வழங்குவதிலும் உங்களுக்குப் பொருத்தமான பேக்கேஜ் எதுவென முடிவெடுப்பதே சரியாக அமையும். நீங்கள் கேட்ட கேமரா விவரங்களைக் குறிப்பிட்ட அப்பதிவில் தருகிறேன்:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. மோகன் குமார் said...
    //படங்கள் வழக்கம் போல் அருமை.

    கடைசி பாரா எழுதியது நீங்களா !!!!!//

    அரசியல் பற்றி ஒரு வாக்கியம் கூட எழுதக் கூடாதென்றால் எப்படி??? நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  35. goma said...
    //படங்களில் உங்கள் பெயரை வாட்டர் மார்க்காக ,படத்தின் நடுவில் போடவும் ...ஓரமாக இருந்தால் கட் பண்ணிவிடலாம்

    அருமையான படங்கள்//

    ஓரமாகப் போட்டிருப்பதையே சிலர் படத்தின் அழகைக் குறைப்பதால் பார்டரில் போடுங்கள் என்கிறார்கள்:(! இணையத்துக்குக் கொடுத்து விட்டால் ஓரளவுக்கு மேல் நாம் பாதுகாக்க முடிவதுமில்லை. அக்கறையுடனான கருத்துக்கு நன்றி கோமாம்மா.

    பதிலளிநீக்கு
  36. kothai said...
    //தங்களின் பயணத் தொடர்கட்டுரைக்கு இது நல்லதொரு துவக்கம்.... படங்கள் அற்புதம்...ஒரு எழுத்தாளராய், வாழும் தன்மையில் அங்குள்ளவரின் மனவோட்டங்களையும், நம்மவ ருடையதையும் எடுத்து எழுதினால் இன்னும் சுவை சேரும்..//

    தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ஆனால் ஒருவார பயணத்தில் அதைக் கணிப்பது சிரமமென்றே எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. asiya omar said...
    //படங்களும் பகிர்வும் அழகு,தங்களின் சிங்கப்பூர் பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்க ஆசை.//

    வாங்க ஆசியா. மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    பதிலளிநீக்கு
  38. ஹேமா said...
    //முத்தக்கா...எப்பவும்போல சூப்பர் படங்கள் !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  39. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //வாழ்த்துக்கள். அழகான படங்களுடன் அருமையான பதிவு. vgk//

    மிக்க நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  40. துபாய் ராஜா said...
    //சிங்கப்பூரின் பெருமையே இயற்கை தந்த பசுமையும்,அதைக் கெடுக்காமல் இவர்கள் புகுத்திய பழமை மாறா புதுமையும் ஆகும். உங்கள் பதிவும், படங்களும் மிக அழகு. வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  41. விச்சு said...
    பார்க்க கொடுத்து வச்சிருக்கனும்.உங்கள் காமிரா'வா நான் இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்.
    November 22, 2011 5:17 AM
    ஸ்ரீராம். said...
    ***//ஹேமா சொன்னது..."முத்தக்கா எப்பவும்போல் சூப்பர் படங்கள்..."//

    முத்தக்கா...?//***

    முன்னர் லக்ஷ்மி அக்கா என்றே அழைப்பார்கள்:)! இப்போது பாலராஜன் கீதா அவர்கள் சொல்லியிருப்பது போல எடுத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. புலவர் சா இராமாநுசம் said...
    //பழமையைத் போற்றி புதுமையும்
    ஆற்றும் சிங்கப்பூர் ஒரு சிங்கார பூமி!
    நானும் பல ஆண்டுகளுக்கு
    முன்னால் இரண்டு முறை சென்றுள்ளேன்!
    படங்கள் அருமை!//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. குமரி எஸ். நீலகண்டன் said...
    //அருமையான காட்சிகள் உங்கள் கைவண்ணத்தில்... எல்லோருக்குமான நாடு... அந்த மனப்பான்மை நாம் நாட்டிற்குள் வந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.//

    வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  44. கோமதி அரசு said...
    //பகிர்வை படிக்க காத்து இருக்கிறோம்.

    சிங்கப்பூர் பயணக் கட்டுரை, படங்கள்
    கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.//

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  45. கணேஷ் said...
    //படங்கள் வழமைபோல் மனதைக் கொள்ளை கொண்டன. சிங்கப்பூரின் இயற்கையழகை நீங்கள் விவரிக்க விவரிக்க எவ்வாறேனும் ஒருமுறை நேரமும் பணமும் ஒதுக்கி நேரில் சென்று பார்த்துவர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. நீங்கள் கடைசிப் பாராவில் சொல்லியிருப்பது நிஜமான நிஜம்! அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.//

    அவசியம் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய இடமே. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. பாச மலர் :

    //வழக்கம்போலவே ராமலக்ஷ்மி பாணி வர்ணனையுடன் அழகான படங்கள்...//

    நன்றி மலர். பதிவு மாறி வந்து விட்டிருந்தது தங்கள் கருத்து. எனவே மின்னஞ்சலில் இருந்து எடுத்துப் பதிந்தேன்:)!

    பதிலளிநீக்கு
  47. அப்பாதுரை said...
    //உங்கள் கேமெராவில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை.. பிரமாதமான படங்கள் தானாகவே வந்து விழுகின்றனவோ உங்கள் கேமராவில்? அருமை.
    தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!//

    கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றிங்க:)!

    பதிலளிநீக்கு
  48. தருமி said...
    //உங்கள் படங்களில் ஒரு திருத்தம் / cleanliness இருப்பது எப்படி என்பது தெரியவில்லை. picture card quality எப்போதும்.

    நன்று.//

    மிக்க நன்றிங்க. பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. பாயிண்ட் அண்ட் ஷூட் படங்களில் noise சில படங்களில் அதிகமாய் காணப்படும். DSLR படங்களில் பொதுவாக அதிகம் இருப்பதில்லை என்றாலும் கூட cropped image(உதாரணத்துக்கு இங்கு முதல் படம்) என்றால் தெளிவின்மை ஏற்படலாம். அப்போது படத்தின் இரைச்சலை Photoshop, Neat image, Gimp போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீக்கிவிடலாம்.

    பதிலளிநீக்கு
  49. அமைதிச்சாரல் said...
    //எல்லாமே நல்லாருக்குன்னாலும், பறவைப்பார்வை ரொம்பவும் அசத்தல்..//

    மிக்க நன்றி சாந்தி. ஃப்ளிக்கரில் பதிந்திருந்த போதும் பிடித்துப் பாராட்டியிருந்தீர்கள்:)!

    பதிலளிநீக்கு
  50. பாலராஜன்கீதா said...
    **** //ஸ்ரீராம். said...//ஹேமா சொன்னது..."முத்தக்கா எப்பவும்போல் சூப்பர் படங்கள்..."//முத்தக்கா...?//

    முத்துச்சரம் தொடுக்கும் அக்கா ?
    :-)//****

    நான் ஸ்ரீராமுக்கு சொல்ல இருந்த பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள்:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  51. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin