Wednesday, September 5, 2012

நண்பனை வழியனுப்புதல் – சீனக் கவிதை - அதீதத்தில்..


வடக்கு மதிலைத் தாண்டி
நீண்டிருந்தது பச்சை மலைத் தொடர்.
கிழக்கு நகரத்தைச் சுற்றிப்
பாய்ந்து கொண்டிருந்தது வெள்ளை நீர்.

இதோ இங்கே இவ்விடத்திருந்து
தன்னந்தனியே தரிகொள்ளா மனநிலையுடன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலான
பயணத்தைத் தொடங்குகிறான் அவன்.

விரைகின்ற மேகங்களாய்
பயணிகளின் உட்துடிப்பு இருக்க
மறைகின்ற கதிரவனாய்
எனதாருயிர் நண்பனின் அன்பு.

கிளம்பிச் செல்லுகையில்
கையசைத்து விடை கொடுக்கிறான்
கலங்கும் கண்களைக்
கட்டுப்படுத்திக் கொண்டு.

வெள்ளைத் திட்டுகள் கொண்ட
அவனது பழுப்புக் குதிரையின்
கனைப்பில் வெளிப்படுகிறது..
தனிமை.
***

படம் நன்றி: இணையம்

மூலம்: சீன மொழியில்-Li Bai
ஆங்கிலத்தில்-Stephen Carlson

1 செப்டம்பர் 2012 அதீதம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.

33 comments:

 1. நல்லதொரு வரிகள்.. அருமை...

  ReplyDelete
 2. நட்புகளிடமிருந்து விடைபெறுதலென்பதே வலி நிறைந்ததுதானே..

  அருமையான கவிதையும் களமும்.

  ReplyDelete
 3. வெள்ளைத் திட்டுகள் கொண்ட
  அவனது பழுப்புக் குதிரையின்
  கனைப்பில் வெளிப்படுகிறது..
  தனிமை.//அருமையான கவிச்சாரல்.

  ReplyDelete
 4. நல்லாயிருக்கு கவிதையின் வரிகள்.

  ReplyDelete
 5. இந்தக் கவிதை மூலம்(ஆங்கிலம்) படர்க்கையில் சொல்லப்படுவதாக் இருக்கிறது. உங்கள் மொழி பெயர்ப்பில், சற்றே ஊசலாடுகிறது. சில இடங்களில் படர்க்கையும், சில இடங்களில் தன்மையும்(எனதாருயிர்) தென்படுகிறது. மேலும், travelers' intents என்பதை plural (பயணிகளின்) என்று எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள். "பயணிப்பவனின்" என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை அதுவென எண்ணுகிறேன். ம்ற்றபடி, கவிதையின் மூல உணர்வை உங்கள் தமிழ்க் கவிதையும் ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 6. பிரிதல்கள் வலி நிறைந்தவை எப்போதுமே. நம் பிரிவால் வருந்தும் நண்பனைப் பெற தவம் செய்திருக்க வேண்டும்!

  ReplyDelete
 7. @T.N.Elangovan,

  கவிஞன் தன்மையில் விவரிக்கும் ஒரு நிகழ்வாகவே கவிதையைப் பார்க்கிறேன். கையசைத்து விடைபெறுகிறவன் நதிக்கும் மலைக்குமா கையசைக்கிறான்? கவிஞனைப் பார்த்துதான் என நான் எண்ணுகிறேன்.

  விடைபெற்றுச் செல்லுகிறவனின் கலக்கம் போலவே விடைகொடுப்பவனுக்கும் அவனைப் பிரிவதில் சங்கடம் என்பதைக் காட்டவே ‘எனதாருயிர்’ என்கிற பதம்.

  traveller's என்றால் (singular) "பயணி"யின் என அர்த்தமாகும். travellers' என்றால் (plural) "பயணிகளின்" என அர்த்தமாகும்.

  மற்றபடி, மூல உணர்வை வெளிப்படுத்துவதாகக் கூறியிருப்பதற்கு நன்றி.

  ReplyDelete
 8. @ஸ்ரீராம்.,

  முற்றிலும் உண்மை. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 9. பிரிவையும் அதன்பின் நேரும் தனிமையையும்
  உணரச் செய்து போகிறது கவிதை
  மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

 10. ம்ம்ம் அருமை
  நல்ல மொழியாக்கம்

  ReplyDelete
 11. விரைகின்ற மேகங்களாய்
  பயணிகளின் உட்துடிப்பு இருக்க
  மறைகின்ற கதிரவனாய்
  எனதாருயிர் நண்பனின் அன்பு.


  கவிதை அருமை .

  ReplyDelete
 12. //வெள்ளைத் திட்டுகள் கொண்ட
  அவனது பழுப்புக் குதிரையின்
  கனைப்பில் வெளிப்படுகிறது..
  தனிமை.//

  பிரிதலும்... தனிமையும்... நிச்சயம் கஷ்டமானது தான்....

  நல்ல கவிதை.

  ReplyDelete
 13. தலைப்பே மனதை என்னவோ செய்கிறது. அமைதிச்சாரல் சொல்வது போல் நட்புகளிடமிருந்து விடைபெறுதலென்பதே வலி நிறைந்தது. அந்த வலியை இன்னும் கூட்டித் தருகிறது கவிதை மொழி. அருமையான தமிழாக்கத்துக்கும் அதீதத்தில் வெளிவந்தமைக்கும் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 14. பழுப்பு நிறத்தில் வெள்ளைத்திட்டுகள்.அந்தக் குதிறாஈ அப்பலூசா வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ. அப்படியே கண் முன் சித்திரமாக இந்தப் பிரிவு நிகழ்கிறது. அருமையான தமிழாக்கம் ராமலக்ஷ்மி. நீங்கள் பகிர்ந்ததால் சிறப்புறுகிறது.

  ReplyDelete
 15. @கும்மாச்சி,

  நன்றி, முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 16. @வல்லிசிம்ஹன்,

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ஆம் வல்லிம்மா. Appaloosa வகை போலதான் தெரிகிறது:)!

  ReplyDelete
 17. நல்ல கவிதை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. உயிரோட்டமான மொழிபெயர்ப்பு.அருமையான கவிதை.

  ReplyDelete
 19. கிளம்பிச் செல்லுகையில்
  கையசைத்து விடை கொடுக்கிறான்
  கலங்கும் கண்களைக்
  கட்டுப்படுத்திக் கொண்டு.

  வெள்ளைத் திட்டுகள் கொண்ட
  அவனது பழுப்புக் குதிரையின்
  கனைப்பில் வெளிப்படுகிறது..
  தனிமை.//

  மனதை கனக்க செய்யும் கவிதை.
  பேரன் மதுரைக்கு பாட்டி வீட்டுக்கு போய்விட்டான். நவராத்திரிக்கு வருவான். வீடு வெறிச் என்று இருக்கிறது. அவன் போகும் போது கலங்கும் கண்களை கட்டுப்படுத்தி தான் வைத்துக் கொண்டேன்.

  உணர்வுகளை அழகாய் பொழிபெயர்த்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 20. @கோமதி அரசு,

  உணர்வுகள் பொதுவானவையாயிற்றே. பேரன் மீண்டும் வரவிருக்கும் நவராத்திரியை எதிர்பார்த்திருப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சி இந்த வருத்தத்தைப் போக்கியிருக்கும் இல்லையா? நன்றி கோமதிம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin