வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பறவை போனால் பறவைக்கூடு யாரைத் தேடும்..? - Sep PiT

வெற்று அல்லது காலி. EMPTY. EMPTINESS. இதுதான் இந்த மாத PiT போட்டியின் தலைப்பு.

பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதாக இருக்க வேண்டும் படங்கள்.

மாதிரிக்கு சில படங்களைப் பார்க்கலாம்:

# 1


# 2


# 3


# 4


# 5


# 6


#7


# 8


# 9


# 10
sparrow nest

போட்டி அறிவிப்பில் நவ்ஃபல் எடுத்த மேலும் சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாம். விதிமுறைகள் இங்கே.

போட்டிக்கு வர ஆரம்பித்து விட்ட படங்களை இங்கு காணலாம்.

படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2012

இன்னும் இரண்டு வாரகால அவகாசம் இருக்கிறது:)!
***



35 கருத்துகள்:

  1. வெற்றி பெறப்போகும் அந்த அதிஸ்ர சாலி யாரோ !!¨.....
    வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாக்கும் ஓடிப்
    பிடித்து வாருங்கள் ...மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கும்
    போட்டி அறிவிப்பிற்கும் .

    பதிலளிநீக்கு
  2. ஆளில்லாத அந்த பள்ளி வராண்டாவும், கோயில் பிரகாரமும் கண்களை ஈர்த்தன. அருமை.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு பிடித்தவை : 5 and 10

    வெற்றி பெறுவோர்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. எல்லா படங்களும் அழகு, என்றாலும் கடைசி இரண்டு படங்கள் மனதைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  5. தலைப்பும் அதற்காக தாங்கள் கொடுத்துள்ள
    புகைப்படங்களும் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சில நேரம் மனதும்கூட இப்படி ஒரு வெற்றிடத்தினை உருவாக்கும். நானும் போட்டோ எடுத்துதான் பார்க்கிறேன். ஒரு கிளாரிட்டியே வரமாட்டுக்குது.

    பதிலளிநீக்கு
  7. எல்லாப்படங்களுமே அழகுதான் ஆனாலும் வெறுமை குடிகொண்ட ஒரு பெருவெளி !

    பதிலளிநீக்கு
  8. புகைப்படம்,4 & 9 ம் கண்களை கவர்கின்றன!

    பதிலளிநீக்கு
  9. சுவரோர பெஞ்ச் படம் அழகு. மற்ற படங்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்தவை. இந்தப் படங்களின் துல்லியத்தைப் பார்த்த பிறகு என்னிடம் இருக்கும் சம்பந்தப் பட்ட தீம்களில் இருக்கும் படங்களைப் பகிரவே மனம் வருவதில்லை! 'அவர்கள்' படத்தில் பணக்கார ரஜினி வாங்கி வந்திருக்கும் பெரிய ஆப்பிள்களைப் பார்த்த பின் ஏழைக் கமல் தன் சிறிய ஆப்பிள்களை அதற்கு நடுவே மறைத்து வைத்து விடுவார். அது போல...!!!

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.

    ’பிட்’காரங்க நம்மளைப் (என்னை???) போல அமெச்சூர்களுக்குன்னு ஒரு தனி பொட்டி நடத்துனா நல்லாருக்கும்!! :-))))

    பதிலளிநீக்கு
  11. ஹுசைனம்மா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். அமெச்சூர்களுக்குன்னு போட்டி வை த்தால் நன்றாக இருக்கும். அந்தப் பாறை யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.வெற்றிடம்.பறவைக்கூடும் அப்படியே. நல்ல படங்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. @ஹுஸைனம்மா,

    நன்றி. போட்டி குறித்த கேள்விக்கும் பதில் கடைசியில்:)!

    பதிலளிநீக்கு
  13. @விச்சு,

    தொடர்ந்து எடுத்துப் பழகுங்கள். நிச்சயம் கைவரும். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @ஹேமா,

    தலைப்பே அதன் தாக்கத்தைதான் வேண்டுகிறது ஹேமா. நன்றி!

    பதிலளிநீக்கு
  15. @ஸ்ரீராம்.,

    நன்றி.

    பிடித்த படத்தை போட்டிக்குக் கொடுங்களேன். தொடர்ந்து கலந்து கொள்வதில் இருக்கும் நன்மை மற்றவர் படங்களைப் பார்த்து நிறையக் கற்றுக் கொள்ளலாம். பெரிய ஆப்பிள்களையும் விரைவில் பறித்திடலாம்:)!

    பதிலளிநீக்கு
  16. @வல்லிசிம்ஹன்,

    துணி துவைக்கிற பாறை. சனங்கள்தான் மெஷினுக்கு மாறி விட்டார்களே. நன்றி வல்லிம்மா.

    ஹுஸைனம்மாவும் நீங்களும் சொல்லியிருப்பது, பலரும் அவ்வப்போது கேட்ட, கேட்கிற ஒன்றே. பாயிண்ட் அண்ட் ஷூட் , SLR எனப் பிரிக்கலாமா என்றுகூட யோசிக்கப்பட்டது. கேமரா ஒரு விஷயமல்ல என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்தப் பதிவில் 6,7,9 தவிர்த்து மற்றன பாயிண்ட் அண்ட் ஷூட்டில் முன்னர் எடுத்தவையே. சரி, விருப்பமானவர்கள் பிரிவு-1 மற்றவர் பிரிவு-2 எனக் கொடுக்க வைக்கலாமெனில் அவற்றை இரண்டு பிகாஸா ஆல்பங்களாகப் பிரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் வருகின்றன:(! இப்போது படங்கள் தானாக ஆல்பத்தில் சேருகிற மாதிரி வசதி செய்யப்பட்டுள்ளது. PiT ஆரம்பித்ததிலிருந்து கொடுத்து வரும் சீனியர் நீங்கள். நினைவிருக்கிறதா, அப்போதெல்லாம் அதற்கென்று பதிவிட்டு சுட்டி கொடுக்க வேண்டும். தேதி நெருங்க நெருங்க தமிழ்மணம் முழுக்க பிட் பதிவுகளாய் வலம் வரும். பரபரப்பாகப் பாய்ந்து பாய்ந்து ஒவ்வொருவர் பிட் பதிவுக்கும் செல்வோம்:)! ரசனையான ஒளிபடப் பொற்காலம்:)!!!

    பதிலளிநீக்கு
  17. எல்லாப் படங்களுமே அழகாக இருக்குங்க. கடைசி படம் மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  18. @அக்கா,

    போட்டி நடத்துவதன் சிரமங்கள் அறிவேன். அதிலும் இரண்டு போட்டி என்றால் - கட்டணம் எதுவுமில்லாமல், நேரம் செலவழித்து - செய்வது சாத்தியக்குறைவுதான். தெரியும், இருந்தாலும் ஆர்வம் காரணமாகவேச் சொன்னேன்.

    இந்தப் போட்டிகள் நடக்கட்டும், பார்வையாளராக இருந்தே கற்றுக் கொண்டு பின் மெதுவாக உள்ளே வருகிறேன், இன்ஷா அல்லாஹ். பதிவெழுத வந்ததே அப்படித்தானே!! ப்ளாக் கையைப் பிடிச்சு இழுத்ததைப் போல, ’பிட்’டும் இழுத்துவிடாதா என்ன? :-)))))))

    பதிலளிநீக்கு
  19. @கோமதி அரசு,

    உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி:)! நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin