Friday, September 14, 2012

தூறல்:8 - குங்குமம் வலைப்பேச்சு; பெங்களூரில் பேருந்துகள் வேலைநிறுத்தம்

ந்தவாரக் குங்குமம் வலைப்பேச்சில்..., என் சென்ற பதிவாகிய காரணம் ஆயிரத்திலிருந்து..

நன்றி குங்குமம்:)!ஜூலை 2012 பூவரசி சிற்றிதழில் எனது 'தொடரும் பயணம்' கவிதை.

நன்றி பூவரசி!

ஈழவாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சமூக இலக்கிய சினிமா அரசியல் அரையாண்டிதழ் பூவரசி. விலை:125. இது இரண்டாவது இதழாகும்.
தொடர்புக்கும் படைப்புகள் அனுப்பவும்:
editor@poovarashi.com
poovarashi@gmail.com

அதீதம் கார்னர்:
அபிராமி அந்தாதி

தூறல்:7-ல் அதீதம் ஒலிப்பேழை குறித்தும் அதன் முதல் வெளியீடான தாலாட்டுப் பாடலையும் பகிர்ந்திருந்தேன். இப்போது தொடராக அதில் அபிராமி அந்தாதி வெளிவரத் தொடங்கியுள்ளது, ராகங்களின் அடிப்படையில். காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கேட்டு மகிழ இங்கே செல்லலாம். திருமதி இந்திரா சுப்பிரமணியன் அவர்கள் அற்புதமாகப் பாட, தாயாரின் குரலை நேர்த்தியாகப் பதிவு செய்து பொருளும் எழுதியிருப்பவர் பதிவர் அப்பாதுரை அவர்கள்.


ரசுப் பேருந்துக்கழக ஊழியர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நேற்றிலிருந்து. செய்தித்தாளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது அரசு. நடக்கவிருந்த பரீட்சைகள் தள்ளிப் போயுள்ளன. சில தனியார் பள்ளிகளோ காலையில் விடுமுறையை அறிவிக்காமல் குறைந்த அளவு மாணவர் வருகையால் பிறகு அறிவிக்க அவர்கள் வீடு திரும்பத் திண்டாடும் சூழல் நகரெங்கும் இருந்திருக்கிறது. காஷ்மீரிலிருந்து பொறியியல் கல்லூரில் சேருவதற்காகத் தனியாக முதன் முறையாக பெங்களூர் வந்து இறங்கிய இளைஞன் உட்பட, ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் மெஜஸ்டிக்கில் செய்வதறியாது திகைத்து நிற்க போலீசார் 17 தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்து அவற்றின் மூலமாக உரிய இடங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பணியாளர் வருகை குறைந்தாலும் இயங்கின அலுவலகங்கள். ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மீட்டர் போட மறுத்து, சொல்லும் தொகைக்கு சம்மதித்தாலே ஏற்றிக் கொள்கின்றன. இயல்பு வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க எப்போது முடிவுக்கு வரும் போராட்டம் என்கிற தவிப்பில் பெங்களூரு.

இவற்றோடு இன்னொரு கவலையாக இன்றிலிருந்து ஏற்றம் கண்டிருக்கிறது லிட்டருக்கு ரூ 5 ஆக டீசல் விலை. கூடவே சமையல் வாயு விலையும். தொடர்ந்து அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க அச்சத்தில் எளிய ஜனங்கள்.

படத்துளி:
மெட்ரோ @ எம்.ஜி. ரோட்ஏராள மரங்களை ஏப்பமிட்டு உருவாகிய மெட்ரோ திட்டமாவது முழுமையாக செயலுக்கு வந்து சாலைப் போக்குவரத்தையே நம்பிக் கிடக்கிற பெங்களூர்வாசிகளின் நிலைமையை மாற்றுமா, தெரியவில்லை.
***

46 comments:

 1. குங்குமம் வலைப்பேச்சில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...

  டீசல் விலையேற்றம் தான் இப்போது கவலை கொள்ள வைக்கிறது...

  ReplyDelete
 2. குங்குமம் வலைப்பேச்சிலும் பூவரசியிலும் உங்களைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கிற விஷயம்தான். பங்ககளூருவில் நிறைய மரங்கள் வெட்டப்பட்ட செய்தி கேட்டதில் இருந்தே மனம் வருந்ததியது நிறைய. என்னத்தச் சொல்ல...

  ReplyDelete
 3. கலக்கறீங்க...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. - குங்குமம் வலைப் பேச்சு - வாழ்த்துகள்.
  - பூவரசி - அரையாண்டிதழ் - ஆறுமாதத்துக்கொருமுறை? தொடரும் பயணத்துக்கும் வாழ்த்துகள்!
  - அட, அப்பாஜியின் அபிராமி அந்தாதி! அம்மாவையும் பார்த்தேன்.
  - கர்னாடக அரசுப் பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு வேறு காரணம் என்று நினைத்திருந்தேன். ஊதிய உயர்வா?!
  - டீசல் விலை உயர்வு ஒரு பக்கம் என்றால் வருடத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் என்பது இன்னொரு இடி!
  - மரங்கள் வெட்டுப் பட்டாலும் மெட்ரோ ரயில் படம் கவர்கிறது.


  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 6. வலைபேச்சில் வந்ததிற்கு வாழ்துக்கள் சகோ!

  ReplyDelete
 7. குங்குமத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !

  ReplyDelete
 9. வலையில் எழுதியவை இதழ்களில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. பெங்களூர் போக்குவரத்து நெறிபட இன்னும் ஐந்து வருடங்களாகும் என்று நினைக்கிறேன். அதற்குள் பெங்களூரு வாசிகள் இன்னும் இரண்டு மடங்கு பெருகிவிட்டால் தொடர்ந்து நெரிபட வேண்டியது தான்.

  ReplyDelete
 11. வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள்.
  ஆமா.. அதுக்கு என்ன அர்த்தம்? பறக்குது பட்டம், சிறுக்குது சட்டம்னு சும்மாவானும் டி ராஜேந்தர் மாதிரி ஏதாவது எழுதிட்டீங்களா இல்லே எனக்குத்தான் புரியலியா? :-)

  ReplyDelete
 12. வாழ்த்துகள்.

  டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு.... என்ன செய்யப் போகிறோமோ என்ற பதட்டத்துடன் தான் மக்கள் இருக்க வேண்டி இருக்கிறது.

  ReplyDelete
 13. @ஸ்ரீராம்.,

  மெட்ரோ நன்றாகத் தெரிகிற மாதிரி மீண்டும் எடுக்க வேண்டும். கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்!

  ReplyDelete
 14. @அப்பாதுரை,

  உண்மைதான். பெட்ரோல் டீசல் விலை உயர்வுகள் வாகன விற்பனையையோ சாலை நெரிசலையோ குறைக்கவேயில்லை.

  ReplyDelete
 15. @அப்பாதுரை,

  அடுக்காக வந்து விட்டாலே டி.ஆர்-தானா:)? சரி பிடியுங்கள் பொழிப்புரையை: பட்டம் செய்யும் போது வாலினை சரியாக ஒட்டுவது ஒருசின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால் நன்றாகப் பறப்பதற்கு அத்தியாவசமான காரணங்களில் அதுவும் ஒன்று.

  நன்றி:)!

  ReplyDelete
 16. தூறல் சுகம்.:) வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.:)

  ReplyDelete
 17. . திருமதி இந்திரா சுப்பிரமணியன் அவர்கள் அற்புதமாகப் பாட, தாயாரின் குரலை நேர்த்தியாகப் பதிவு செய்து பொருளும் எழுதியிருப்பவர் பதிவர் அப்பாதுரை அவர்கள்.//

  திருமதி இந்திரா அவர்களின் குரல் வளம் நன்றாக இருக்கிறது. அவர்கள் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம்.
  நீங்கள் சொல்லி இருப்பது போல் நேர்த்தியான பதிவுதான்.
  பாடலுக்கு திரு அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருக்கும் விளக்கமும் அருமை.

  குங்கும வலைபேச்சில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  தூறல் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷிமி.

  சரியோ, தவறோ அந்த "க்" போட்டால்த்தான் நல்லா வாழ்த்தியமாரி ஒரு திருப்தி எனக்கு.

  உங்க வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாமல், "நம்ம ராமலக்ஷ்மிதானே? நமக்கும்தானே அவங்க வெற்றியடைந்தால் பெருமை"னு நெனச்சுக்கிறேன்.
  [பாருங்க! உங்க வெற்றியை நானும் கொஞ்சம் திருடப் பார்க்கிறேன். :) ]

  ReplyDelete
 19. முத்துச் சரம்
  பதிவின் காரணப் பெயர்
  என்பதைஎல்லா சமயங்களிலும்
  நிரூபித்துப்போகிறீர்கள்
  இந்தப் பதிவும் விதிவிலக்கல்ல
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. வாழ்த்துகள் அக்கா.

  இப்போ பேருந்து வேலைநிறுத்தப் பிரச்னை சரியாகிவிட்டதா?

  ReplyDelete
 22. @ஹுஸைனம்மா,

  ‘எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று போராட்டத்தில் இறங்கிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்ற பிறகு பிரச்சனை முடிவுக்கு வந்தது. முன்னரே ஆவன செய்திருக்கலாம்.

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin