ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வாழ்க்கை என்பது எதிரொலி


மற்றவர் கோணம்..

1. இழுக்கின்ற கயிற்றின் மறுமுனையைக் காணும் வரை விடாது தொடருவோம்.

2. பெரிய சாதனைகள் சிறிய வாய்ப்பிலேயே துளிர் விடுகின்றன.

3. கையிலேயே கிடைத்தாலும் ‘கடினமாய் இருக்கிறதே’ என உடைக்காமல் உருட்டிக் கொண்டிருப்பான் தேங்காயை, பசியற்றவன்.

4. தோல்வி மோசமான ஒன்றல்ல. அதிலிருந்து மீண்டு வரும் எண்ணமற்றிருப்பது மிக மோசமானது.

5. நமது கோணத்தில் மற்றவரைப் பார்க்க வைக்கப் போராடும் முன் அவரது கோணத்தையும் கவனிப்போம். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் பிறகு..

6. வாழ்க்கை என்பது எதிரொலி. கொடுப்பதே பன்மடங்காகத் திரும்பும்.

7. நல்ல வார்த்தைகளால் நாலு பேரைப் பாராட்டுவதை விடவும் எளிதானதே அமைதி காத்து ஒருவரைப் பற்றி அவதூறு சொல்லாதிருப்பது.

8. ‘நன்றாகச் சொன்னாய்’, ‘நன்றாகச் செய்தாய்’ எது சிறப்பு?

9. திருப்தி என்பது நம் தேவைகள் நிறைவேறுவதால் ஏற்படும் ஒன்றல்ல. இதுவரையில் என்னவெல்லாம் கிடைத்திருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்வதில்.

10. இதழ்களில் வரையப்பட்டதாக அன்றி இதயத்திலிருந்து மலருவதாக இருக்கட்டும் சிரிப்புகள்.

***

[ஆன்றோரும் சான்றோரும் அனுபவத்தில் சொல்லாத ஏதொன்றையும் புதிதாக நாம் சொல்லிவிடப் போவதில்லை. ஆயினும் நம் அனுபவத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, புரிந்து கொண்டவற்றை, நடைமுறைப் படுத்தியவற்றை, கடைப்பிடிக்க விரும்புவற்றை நமக்கு நாமே உரக்கச் சொல்லிக் கொள்வது உற்சாகமாய் இருக்கவும் உறுதியுடன் நகரவும் வழிவகுக்கும். அப்படியாக ஆரம்பித்த ‘ட்வீட்’களை, பலராலும் விரும்பப்பட்ட ‘ஃபேஸ்புக்’  நிலைமொழிகளை  இங்கும் தொகுப்பது தொடர்கிறது.., உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், எனக்கான சேமிப்பாகவும்.]

தொடர்புடைய முந்தைய பதிவு:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..



நட்சத்திர வாய்ப்புக்கு நன்றி யுடான்ஸ்!

உடன் வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி!

***

49 கருத்துகள்:

  1. மீண்டும் படித்தாலும் அதே வேகத்துடன் ரசிக்க முடிகிறது இது போன்ற கருத்துகளை..நன்றி ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு.

    //நமது கோணத்தில் மற்றவரைப் பார்க்க வைக்கப் போராடும் முன் அவரது கோணத்தையும் கவனிப்போம். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் பிறகு..//

    பதிலளிநீக்கு
  3. அருமையான, அர்த்தமுள்ள அனுபவ மொழிகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துகள் ராமலஷ்மி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. நறுக்கென்று சுருக்கமான வரிகளில் கீச்சுகள் சிறப்பாக இருக்கின்றன. நன்று!

    பதிலளிநீக்கு
  6. //வாழ்க்கை என்பது எதிரொலி. கொடுப்பதே பன்மடங்காகத் திரும்பும்.//

    ரொம்ப கரெக்ட் ராமலக்ஷ்மி.. அருமையான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  7. பாச மலர் / Paasa Malar said...
    //மீண்டும் படித்தாலும் அதே வேகத்துடன் ரசிக்க முடிகிறது இது போன்ற கருத்துகளை..நன்றி ராமலக்ஷ்மி..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  8. Asiya Omar said...
    //அருமையான பகிர்வு.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  9. Lakshmi said...
    //நல்ல சிந்தனைகள்//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  10. தமிழ் உதயம் said...
    //அருமையான, அர்த்தமுள்ள அனுபவ மொழிகள். வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  11. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //நல்ல கருத்துகள் ராமலஷ்மி. வாழ்த்துகள்.//

    நன்றி பவளா.

    பதிலளிநீக்கு
  12. Rathnavel Natarajan said...
    //அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.//

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  13. கணேஷ் said...
    //நறுக்கென்று சுருக்கமான வரிகளில் கீச்சுகள் சிறப்பாக இருக்கின்றன. நன்று!//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  14. அமைதிச்சாரல் said...
    **//வாழ்க்கை என்பது எதிரொலி. கொடுப்பதே பன்மடங்காகத் திரும்பும்.//

    ரொம்ப கரெக்ட் ராமலக்ஷ்மி.. அருமையான கருத்துகள்./**

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  15. அருமை!

    அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை!!!

    பதிலளிநீக்கு
  16. மனம் தொட்டப் பகிர்வுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மறுபடியும் அனைத்தும் அருமை. நாய் பெற்ற தெங்கம்பழத்தை நினைவுபடுத்துகிறது மூன்றாவது. ஏழு மிக அருமை. முன்னதாக மேலே 'என்ன அருமையான படம்'.

    பதிலளிநீக்கு
  18. படத்துடன் கருத்துக்களும் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  19. எல்லாமே தெரிந்த கருத்துகள் என்று சொல்ல முடியாது ராமலக்ஷ்மி.
    யாராவது எடுத்துச் சொல்லும்போது பளிச்சுனு புரியும். மிகவும் நன்றீ.

    பதிலளிநீக்கு
  20. நல்ல சிந்தனைகள்
    நல்ல கருத்துகள் !

    பதிலளிநீக்கு
  21. // தோல்வி மோசமான ஒன்றல்ல. அதிலிருந்து மீண்டு வரும் எண்ணமற்றிருப்பது மிக மோசமானது.// நல்ல வரி!

    பதிலளிநீக்கு
  22. //நல்ல வார்த்தைகளால் நாலு பேரைப் பாராட்டுவதை விடவும் எளிதானதே அமைதி காத்து ஒருவரைப் பற்றி அவதூறு சொல்லாதிருப்பது.
    //

    எனக்கு இது மிகவும் பிடித்தது.

    இரண்டாவதாக இட்ட பொன்மொழியும் உங்களுக்கும் உங்கள் உழைப்புக்கும் ஏற்றது.

    பதிலளிநீக்கு
  23. நல்ல கருத்துகள். பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  24. ஒவ்வொன்றும் வாழ்வோடு இணைகிறது.நல்முத்துக்கள் !

    பதிலளிநீக்கு
  25. பயனுள்ள பத்து... பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  26. துளசி கோபால் said...

    /அருமை!

    அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை!!!/

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  27. கீதமஞ்சரி said...

    /மனம் தொட்டப் பகிர்வுகள். நன்றி./

    வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம். said...

    /மறுபடியும் அனைத்தும் அருமை. நாய் பெற்ற தெங்கம்பழத்தை நினைவுபடுத்துகிறது மூன்றாவது. ஏழு மிக அருமை. முன்னதாக மேலே 'என்ன அருமையான படம்'./

    நன்றி ஸ்ரீராம்:).

    பதிலளிநீக்கு
  29. ஸாதிகா said...

    /படத்துடன் கருத்துக்களும் பிரமாதம்/

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  30. வல்லிசிம்ஹன் said...

    //எல்லாமே தெரிந்த கருத்துகள் என்று சொல்ல முடியாது ராமலக்ஷ்மி.
    யாராவது எடுத்துச் சொல்லும்போது பளிச்சுனு புரியும். மிகவும் நன்றீ.//

    பளிச்சுன்னு எனக்கு நானே சொல்லிக்கவுமே இந்த முயற்சி. நன்றி வல்லிம்மா:).

    பதிலளிநீக்கு
  31. ஷைலஜா said...

    /நல்ல சிந்தனைகள்
    நல்ல கருத்துகள் !/

    நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  32. கே. பி. ஜனா... said...

    **// தோல்வி மோசமான ஒன்றல்ல. அதிலிருந்து மீண்டு வரும் எண்ணமற்றிருப்பது மிக மோசமானது.// நல்ல வரி!/**

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. Shakthiprabha said...

    ***//நல்ல வார்த்தைகளால் நாலு பேரைப் பாராட்டுவதை விடவும் எளிதானதே அமைதி காத்து ஒருவரைப் பற்றி அவதூறு சொல்லாதிருப்பது.
    //

    எனக்கு இது மிகவும் பிடித்தது.

    இரண்டாவதாக இட்ட பொன்மொழியும் உங்களுக்கும் உங்கள் உழைப்புக்கும் ஏற்றது.//***

    நன்றி ஷக்தி:).

    பதிலளிநீக்கு
  34. கோவை2தில்லி said...

    /நல்ல கருத்துகள். பகிர்வுக்கு நன்றிங்க./

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  35. ஹேமா said...

    //ஒவ்வொன்றும் வாழ்வோடு இணைகிறது.நல்முத்துக்கள் !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  36. குமரி எஸ். நீலகண்டன் said...

    //பயனுள்ள பத்து... பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி..//

    நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  37. Kanchana Radhakrishnan said...

    //அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  38. 1. இழுக்கின்ற கயிற்றின் மறுமுனையைக் காணும் வரை விடாது தொடருவோம்.

    ~ 1930 களில் சென்னை மாகாண பிரதமராக ராஜாஜி இருந்த போது, பிரிட்டீஷ் அதிகாரிகள் பேசிக்கொள்வார்களாம். இவர் விடாக்கொண்டன். உஷாராக இருக்கவேண்டும் என்று. இழுக்கின்ற கயிற்றின் மறுமுனையைக் காணும் வரை விடாது தொடர்ந்தால் நம்முடைய வலிமையே நமக்கு தெரியவரும்.
    இன்னம்பூரான்

    பதிலளிநீக்கு
  39. Vasudevan Tirumurti said...
    //நல்லாயிருக்கு, தொடருங்க!//

    நன்றி திவா சார்.

    பதிலளிநீக்கு
  40. Innamburan said...
    //~ 1930 களில் சென்னை மாகாண பிரதமராக ராஜாஜி இருந்த போது, பிரிட்டீஷ் அதிகாரிகள் பேசிக்கொள்வார்களாம். இவர் விடாக்கொண்டன். உஷாராக இருக்கவேண்டும் என்று. இழுக்கின்ற கயிற்றின் மறுமுனையைக் காணும் வரை விடாது தொடர்ந்தால் நம்முடைய வலிமையே நமக்கு தெரியவரும்.//

    நன்றி இன்னம்பூரான் சார். தொடரக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  41. மாதேவி said...
    //சிந்திக்க நல்ல பகிர்வு.//

    மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin