Wednesday, February 8, 2012

ஏன் பாடுகிறது கூண்டுப் பறவை.. நானறிவேன்! - மாயா ஏஞ்சலோ கவிதை (1)


ரு சுதந்திரப் பறவை
காற்றின் முதுகில் தொத்திக் கொண்டு
பாயும்நீரின் முனைவரை மிதந்து
தன் சிறகுகளை
ஆதவனின் ஆரஞ்சுக் கதிரினில் நனைத்து
வானத்தையும் ஆக்ரமிக்கத் துணிகிறது.
அடைப்பட்ட பறவைக்கோ
குறுகிய கூண்டின் கொடும் கம்பிகளை மீறி
வெளியுலகினைக் காண இயலுவதில்லை.
கால்கள் கட்டப்பட்டிருக்க
சிறகுகள் ஒடுக்கப்பட்டிருக்க
வேறு வழியின்றிப் பாடத் தொடங்குகிறது
தொண்டையைத் திறந்து.

பாடுகிறது கூண்டுப்பறவை
நடுக்கம் நிறைந்த குரலெழுப்பி
அறிந்திராத விடயங்களைப் பற்றி
ஆனால் அறிய ஏங்குவன பற்றி...
விடுதலைக்காக இறைஞ்சும் அதன் இசை
தூரத்து மலைகளுக்கும் கேட்கும்படி.

ன்னொரு இளந்தென்றலைத் தேடுகின்ற
சுதந்திரப் பறவைக்காக
பருவக்காற்று நயமாகிறது
நெடுமூச்செறியும் மரங்களின் ஊடே.
காத்திருக்கின்றன கொழுத்த புழுக்கள்
சுதந்திரப் பறவைக்காக..
அதிகாலை பிரகாசத்துடன்
மினுங்கியப் புல்வெளியில்.
கொண்டாடுகிறது சுதந்திரப்பறவை
வானத்தைத் தனதென்று.

கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
கனவுகளின் கல்லறை மேலே.
அதன் நிழலும் கூட அலறுகிறது
கோரக்கனவு கண்டதனாலே.
கட்டப்பட்ட கால்களுடன்
ஒடுக்கப்பட்ட சிறகுகளுடன்
பாடத் தொடங்குகிறது
வேறு வழியறியாது
தொண்டையைத் திறந்து..

நடுக்கம் நிறைந்த குரலெழுப்பி
அறிந்திராத விடயங்களைப் பற்றி
ஆனால் அறிய ஏங்குவன பற்றி..
தூரத்து மலைகளுக்கும் கேட்கும்படி
விடுதலை வேண்டி.
***

மூலம்:
I Know Why The Caged Bird Sings
Maya Angelou (April 4, 1928)


படம் நன்றி: இணையம்

29 ஜனவரி 2012 அதீதம் இணைய இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.

49 comments:

 1. 1928 இல் வந்தததன் மொழிபெயர்ப்பா....அருமை.
  (நிச்சயம் யாராவது மூலத்தையும் முழுதும் தந்திருக்கலாமே என்று கேட்பார்கள்!)

  ReplyDelete
 2. கூண்டுப் பறைவைக்கு விடுதலைக் கிடைத்து அது சுதந்திரப் பறவையோடு சுற்றித் திரிய வேண்டும் என்று நம்மை ஏங்க வைக்கிறது கவிதை!

  நன்று.

  ReplyDelete
 3. மிகப்ப்ழைய கவிதையை மொழி பெயர்த்திருப்பது புதுமை பிளஸ் அருமை.

  ReplyDelete
 4. மூலத்தையும் தந்திருக்கலாமே என்று நான் கேட்க மாட்டேன்- தங்களின் மொழிபெயர்ப்பு அதைவிடச் சிறப்பாக இருக்குமென்று தோன்றுவதால். கூண்டுப் பறவையின் வலியை என்னால் உணர முடிகிறது. அருமை.

  ReplyDelete
 5. அருமையான கவிதை.
  நன்றி.

  ReplyDelete
 6. கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. நூறு வருடப் பழமக் கூவலா.
  அப்போதிலிருந்து கூவி இப்போது தமிழுக்கும் வந்துவிட்டது ராமலக்ஷ்மியின் கருணையால்.அதன் ஏக்கம் எங்கள் நெஞ்சிலும் எதிரொலிக்க வைத்துவிட்டீர்கள்.
  திறந்துவிட்டு விடலாமா அந்தக் கதவை.

  ReplyDelete
 8. கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை.... பாராட்டுகள்.

  ReplyDelete
 9. கூண்டுப் பறவையின் ஏக்கக் குரல் ஒலிக்கின்றது....

  ReplyDelete
 10. விடுதலைக்கான கூக்குரல்கள் நூற்றாண்டு தாண்டியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே.....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..மொழிபெயர்ப்பு சிறப்பாய் இருக்கிறது....

  ReplyDelete
 11. அக்கா திரட்டிகள் பிரச்சினையை தீர்க்க பிளாக்கர் நண்பனின் பதிவை பார்க்கவும்.

  ReplyDelete
 12. கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
  கனவுகளின் கல்லறை மேலே.

  பலரும் கனவுகளின் கல்லறை மேலே நிற்கிறார்கள்.வலிகளைச் சொல்லும் அருமைக் கவிதை வாழ்த்துகள்

  ReplyDelete
 13. கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. கூண்டு பறவையின் கவிதை!
  கனக்க வைத்தது மனதை!!

  ReplyDelete
 15. அருமையான கவிதை அக்கா.கூண்டுப்பறவை என்று சொல்லிப் பரிதாபப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்போல ரொம்பக் காலமாகவே !

  ReplyDelete
 16. கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை,பாரட்டுக்கள் அக்கா!!

  ReplyDelete
 17. எப்போதான் விடுதலை கிடைக்குமோ கூண்டுப்பறவைக்கு..

  அருமையான கவிதை.

  ReplyDelete
 18. ஸ்ரீராம். said...
  //1928 இல் வந்தததன் மொழிபெயர்ப்பா....அருமை.
  (நிச்சயம் யாராவது மூலத்தையும் முழுதும் தந்திருக்கலாமே என்று கேட்பார்கள்!)//

  நன்றி ஸ்ரீராம். உங்கள் பின்னூட்டம் வந்ததும் மூலக்கவிதைக்கான இணைப்பினை சேர்த்து விட்டேன்.

  ReplyDelete
 19. அமைதி அப்பா said...
  //கூண்டுப் பறைவைக்கு விடுதலைக் கிடைத்து அது சுதந்திரப் பறவையோடு சுற்றித் திரிய வேண்டும் என்று நம்மை ஏங்க வைக்கிறது கவிதை!

  நன்று.//

  ஆம் அப்படித் தோன்றும் வகையில் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 20. ஸாதிகா said...
  //மிகப்ப்ழைய கவிதையை மொழி பெயர்த்திருப்பது புதுமை பிளஸ் அருமை.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 21. கணேஷ் said...
  //மூலத்தையும் தந்திருக்கலாமே என்று நான் கேட்க மாட்டேன்- தங்களின் மொழிபெயர்ப்பு அதைவிடச் சிறப்பாக இருக்குமென்று தோன்றுவதால். கூண்டுப் பறவையின் வலியை என்னால் உணர முடிகிறது. அருமை.//

  மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 22. Rathnavel Natarajan said...
  //அருமையான கவிதை.
  நன்றி.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 23. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி vgk சார்.

  ReplyDelete
 24. //.....மூலக்கவிதைக்கான இணைப்பினை சேர்த்து விட்டேன்.//

  பார்த்தேன். படித்தேன். நன்றி.

  ReplyDelete
 25. @ ஸ்ரீராம்,

  /பார்த்தேன். படித்தேன். நன்றி./

  மகிழ்ச்சியும் மீள் வருகைக்கு நன்றியும்.

  ReplyDelete
 26. வல்லிசிம்ஹன் said...
  /நூறு வருடப் பழமக் கூவலா.
  அப்போதிலிருந்து கூவி இப்போது தமிழுக்கும் வந்துவிட்டது ராமலக்ஷ்மியின் கருணையால்.அதன் ஏக்கம் எங்கள் நெஞ்சிலும் எதிரொலிக்க வைத்துவிட்டீர்கள்.
  திறந்துவிட்டு விடலாமா அந்தக் கதவை./

  நிச்சயமாகத் திறந்து விட வேண்டும் வல்லிம்மா. நன்றி.

  ReplyDelete
 27. கோவை2தில்லி said...
  //கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை.... பாராட்டுகள்.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 28. மாதேவி said...
  //கூண்டுப் பறவையின் ஏக்கக் குரல் ஒலிக்கின்றது....//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 29. பாச மலர் / Paasa Malar said...
  //விடுதலைக்கான கூக்குரல்கள் நூற்றாண்டு தாண்டியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே.....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..மொழிபெயர்ப்பு சிறப்பாய் இருக்கிறது....//

  மிக்க நன்றி மலர்.

  ReplyDelete
 30. dhanasekaran .S said...
  //கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
  கனவுகளின் கல்லறை மேலே.

  பலரும் கனவுகளின் கல்லறை மேலே நிற்கிறார்கள்.வலிகளைச் சொல்லும் அருமைக் கவிதை வாழ்த்துகள்//

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. Lakshmi said...
  //கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 32. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //கூண்டு பறவையின் கவிதை!
  கனக்க வைத்தது மனதை!!//

  நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகையில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. ஹேமா said...
  //அருமையான கவிதை அக்கா.கூண்டுப்பறவை என்று சொல்லிப் பரிதாபப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்போல ரொம்பக் காலமாகவே !//

  உண்மைதான் ஹேமா. மிக்க நன்றி.

  ReplyDelete
 34. S.Menaga said...
  //கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை,பாரட்டுக்கள் அக்கா!!//

  மிக்க நன்றி மேனகா.

  ReplyDelete
 35. அமைதிச்சாரல் said...
  //எப்போதான் விடுதலை கிடைக்குமோ கூண்டுப்பறவைக்கு..

  அருமையான கவிதை.//

  காலகாலமாக கூண்டிலே பறவைகள். நன்றி சாந்தி.

  ReplyDelete
 36. ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)

  ReplyDelete
 37. சசிகுமார் said...
  //அக்கா திரட்டிகள் பிரச்சினையை தீர்க்க பிளாக்கர் நண்பனின் பதிவை பார்க்கவும்.//

  பார்த்தேன் சசிகுமார். அந்த முறையில் மேற்கொண்ட திருத்தத்தில் எனது வலைப்பூவில் பிரச்சனை சரியாகவில்லை. காந்திருக்கிறேன் பலரையும் போல் வேறு தீர்வுக்கு:)! அக்கறையுடனான பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 38. சுசி said...
  //ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)//

  மிக்க நன்றி சுசி.

  ReplyDelete
 39. கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்குமா? இல்லை மறுபடி கூண்டுக்கே திரும்பி வருமா? :(

  மொழிபெயர்ப்பு அருமை. பல கவிதைகளும் படித்தாலும் மொழிபெயர்க்க ஆவல் இருந்தாலும் கவிதை வடிவில் மொழிபெயர்க்க வருவதில்லை. கவிதைனா ரசிக்க மட்டுமே தெரியும். :))))))) அதனாலே நம்மளாலே உங்களுக்கெல்லாம் தொந்திரவு குறைஞ்சிருக்காக்கும்.

  ReplyDelete
 40. அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!

  ReplyDelete
 41. geethasmbsvm6 said...
  //கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்குமா? இல்லை மறுபடி கூண்டுக்கே திரும்பி வருமா? :(//

  யோசிக்க வைக்கும் கேள்வி.

  //மொழிபெயர்ப்பு அருமை.//

  நன்றி மேடம்:)!

  ReplyDelete
 42. கே. பி. ஜனா... said...
  //அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!//

  வருகையில் மகிழ்ச்சியும் கருத்திற்கு நன்றியும்.

  ReplyDelete
 43. எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

  ReplyDelete
 44. அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.
  பகிர்விற்கு நன்றி

  படித்ததும் என் பேனா மீண்டும் பதிவுலகத்திற்காக நிமிர்கிறது

  ReplyDelete
 45. பதிவிற்குச் சம்பந்தமில்லாத கருத்து.
  தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ராமலஷ்மி மேடம்.எனது மெயில் இன்பாக்ஸில் சமீபத்தில் கமெண்டுகள் வந்தால் தெரிவதில்லை. ஸ்பாமில் சென்றுவிட்டிருந்தன உங்கள் கமெண்டுகள்...
  சித்திரசந்தையில் ஸ்டால் நம்பர் சொன்னாலும் கண்டுபிடித்திருக்கமுடியாதுதான். செம பிரம்மாண்டமாய் இருந்தது. என்னாலும் முழுவதும் சுற்ற இயலவில்லை...:))

  சித்திரச்சந்தை புகைப்படங்களை நீங்கள் பதிவிடவில்லையா??

  ReplyDelete
 46. raji said...
  //எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி//

  மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ராஜி. எப்போதும் போலவே இதைப் பதிவுலகில் எழுதி வரும் அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 47. raji said...

  //அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.
  பகிர்விற்கு நன்றி

  படித்ததும் என் பேனா மீண்டும் பதிவுலகத்திற்காக நிமிர்கிறது//

  நன்றி ராஜி. உங்கள் பேனா வடிக்கப் போகின்றவற்றை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 48. thamizhparavai said...
  //ஸ்டால் நம்பர் சொன்னாலும் கண்டுபிடித்திருக்கமுடியாதுதான். செம பிரம்மாண்டமாய் இருந்தது. என்னாலும் முழுவதும் சுற்ற இயலவில்லை...:))//

  எந்த இடத்தில் ஸ்டால் இருக்கிறது எனக் கேட்டறிந்து வந்திருக்க இயலும். என் உறவினர் ஸ்டாலை அப்படிதான் கண்டு பிடித்தோம்:)!

  முழுவதுமாய் சுற்றினால் தலை சுற்றிப்போகும் போலிருந்தது:)!

  //சித்திரச்சந்தை புகைப்படங்களை நீங்கள் பதிவிடவில்லையா??//

  நிச்சயமாகப் பதிவு உண்டு! நேரமின்மையால் இன்னும் படங்களைக் கணினியில் ஏற்றவில்லை. விரைவில் செய்கிறேன். ஆர்வத்துடன் கேட்டிருப்பதற்கு மிக்க நன்றி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin