வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நெல்லை காந்திமதி - சொல்வனத்தில் படங்கள் - ஒரு பகிர்வு

# 1

நெல்லையப்பர் கோவிலில் அம்மை அப்பனை தரிசித்து விட்டு வரும் போது மூன்றாம் சுற்று பிரகாரத்தின் முடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் காத்திருப்பவள் ஆனை காந்திமதி. கழுத்தில் சர மணி மாலை, ஒரு குழந்தைக்குத் திலகமிடுவது போல் பார்த்துப் பார்த்து ரசனையுடன் நெற்றி, காதுகள், தும்பிக்கையில் இடப்பட்டத் திலகங்களுடன் காட்சி அளிப்பவளை ரசிக்காதவர் இருக்க முடியாது. இவளின் வருகைக்கு முன்னர் கோவிலுக்குச் சின்னக் குட்டியாகக் கிடைத்த நயினார் யானையைப் பற்றி அறிவீர்களா? அது குறித்து சுவைபடச் சொல்லியிருக்கிறார் தொடர்ந்து நெல்லையைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தன் எழுத்தின் மூலமாக ஆவணப்படுத்தி வரும் ‘மூங்கில் மூச்சு’ சுகா அவர்கள் தனது ‘நயினார்’ கட்டுரையில், 1 பிப்ரவரி 2012 சொல்வனம் இணைய இதழில். அதே கட்டுரை வேணுவனத்திலும். படித்துப் பாருங்கள். அதில் யானை காந்திமதியைப் பற்றியதான பகிர்வுக்கு நான் எடுத்த (இப்பதிவின் முதலிரண்டு) படங்கள் உபயோகிப்பட்டுள்ளன. சொல்வனத்துக்கும் சுகா அவர்களுக்கும் நன்றி.

# 2

இப்போதைய காந்திமதி உலகின் சாதுவான யானைகளில் ஒன்றாக மக்களால் கொண்டாடப்படுவது பற்றியும், கொடுக்கப்படும் அன்பான கவனிப்பைக் காரணமாகச் சொல்வதையும் ஏற்கனவே 2010-ல் ‘இறையும் கலையும் - நெல்லைப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்’ பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

# 3
இம்மூன்று படங்கள் போக ‘நயினார்’ கட்டுரையை வாசித்த பின் மேலும் என் ஆல்பத்தில் தேடிய போது கிடைத்த படங்கள் சிலவற்றையும் பகிர விருப்பம். “ குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன்” எனக் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘காந்திமதி’யின் இப்போதையப் பாகன் இவரே:
# 4


நமக்கு மட்டும்தான் பாஸ்போர்ட் சைஸில் ப்ரொஃபைல் படம் அவசியமா? காந்திமதிக்கும் இருந்தால் அழகுதானே?
# 5

மேலும் ஒரு படமாகக் கோவில் தெப்பக்குளத்தின் பச்சை நீரில் காந்திமதி அம்மன் கோபுரமும் மணிமண்டபமும் பிரதிபலிக்கும் காட்சி. உச்சி நேரத்தில் எடுத்தபடியால் வானம் சற்று வெளுப்பாகி விட்டிருந்தாலும் பகிர்ந்து கொண்டு விட்டேன்:)!

# 6
***

60 கருத்துகள்:

  1. படங்களும் பகிர்வும் சூப்பரா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அசத்துது. ஃப்ரொபைல் படம் ஜூப்பர் போங்க :-)

    பதிலளிநீக்கு
  3. ரெண்டாவது படம் அழகு. காந்திமதியின் "புரோபைல் படம் " என்கிற வரியை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. படங்களும் தகவலும் நன்று.


    ‘இறையும் கலையும் - நெல்லைப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்’
    பதிவின் மூலம் இசைத்தூண் பற்றிய புதியத் தகவலையும் அறிந்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் மிக தத்ரூபமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. யானையை எத்தனை தடவை பாத்தால் போதும்?
    அருமை காந்திமதியின் உயிரோட்டமான படங்கள் அசத்துகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. யானையும் ரயிலும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதே இல்லை என்று சொல்வார்கள். ஒளிப்படங்களில் உள்ள யானைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? யானை என்றாலே பிரமாண்டம்தான். யானைக்கான ப்ரொபைல் படத்தின் பிரமாண்டமும் திகைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  8. யானை Fresh ஆ இருக்கே..புத்துணர்ச்சி முகாம் போய் வந்ததோ?

    பதிலளிநீக்கு
  9. நெல்லையப்பர் கோயிலில் தரிசனமும் யானையை நேரில் பார்த்த போதும்கூட இவ்வளவு அழகாய் உணர்நததில்லை. உங்களின் படங்கள் மனதைத் திருடி விட்டன. அருமை, நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஒரு குழந்தைக்குத் திலகமிடுவது போல் பார்த்துப் பார்த்து ரசனையுடன் நெற்றி, காதுகள், தும்பிக்கையில் இடப்பட்டத் திலகங்களுடன் காட்சி அளிப்பவளை ரசிக்காதவர் இருக்க முடியாது.//

    ஆம் ராமலக்ஷ்மி, ரசனையுடன் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து இருக்கிறார்.
    அவர் ரசனை நம்மையும் ரசிக்க வைக்கிறது.

    படங்கள் எல்லாம் அழகு.
    காந்திமதியின் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. யானையைத் தொட்டுப் பார்க்க தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  12. அக்கா....உங்கள் கைவண்ணத்தில் புகைப்படங்கள் எப்போதுமே உயிரோவியங்கள் போல !

    பதிலளிநீக்கு
  13. படங்களும், பகிர்வும் அருமை....

    பதிலளிநீக்கு
  14. தெப்பக்குளம் அற்புதம் அக்கா :)

    பதிலளிநீக்கு
  15. படங்கள் நிஜமாகவே அருமை..பளிச். யானையின் பாஸ்போர்ட் சைஸ் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  16. படங்கள் மிக தத்ரூபமாக இருக்குக்கா...காந்திமதி கொள்ளை அழகு,பகிர்வுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  17. யானைகளை எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது. அழகான புகைப் படங்கள். தண்ணீரில் தெளியும் ஸாரி, தெரியும் பிம்பத்துடன் கூடிய புகைப் படமும் அழகாய் இருக்கிறது. சொல்வனம் போய்ப் பார்த்து வந்தேன். சுகா எழுத்தை ரசித்து வந்தேன். அவரின் அம்மன் சன்னதியும் மூங்கில் மூச்சும் வாங்கியுள்ளேன்!

    பதிலளிநீக்கு
  18. உங்க காமிராக்கு என்ன மந்திரம் போடறீங்க ராமலஷ்மி இப்படிக்கண்ண+ மனசைக்கட்டிப்போடுகிறதே!!

    பதிலளிநீக்கு
  19. கம்பீர யானை அழகு...படங்கள் அருமை ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  20. Lakshmi said...
    //படங்களும் பகிர்வும் சூப்பரா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அமைதிச்சாரல் said...
    //படங்கள் அசத்துது. ஃப்ரொபைல் படம் ஜூப்பர் போங்க :-)//

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  22. மோகன் குமார் said...
    //ரெண்டாவது படம் அழகு. காந்திமதியின் "புரோபைல் படம் " என்கிற வரியை ரசித்தேன்//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  23. அமைதி அப்பா said...
    //படங்களும் தகவலும் நன்று.

    ‘இறையும் கலையும் - நெல்லைப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்’
    பதிவின் மூலம் இசைத்தூண் பற்றிய புதியத் தகவலையும் அறிந்துக் கொண்டேன்.//

    மகிழ்ச்சி. நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  24. ஸாதிகா said...
    //படங்கள் மிக தத்ரூபமாக உள்ளது.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  25. வல்லிசிம்ஹன் said...
    //யானையை எத்தனை தடவை பாத்தால் போதும்?
    அருமை காந்திமதியின் உயிரோட்டமான படங்கள் அசத்துகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  26. சரண் said...
    //யானையும் ரயிலும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதே இல்லை என்று சொல்வார்கள். ஒளிப்படங்களில் உள்ள யானைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? யானை என்றாலே பிரமாண்டம்தான். யானைக்கான ப்ரொபைல் படத்தின் பிரமாண்டமும் திகைக்க வைத்தது.//

    மிக்க நன்றி சரண்.

    பதிலளிநீக்கு
  27. சமுத்ரா said...
    //யானை Fresh ஆ இருக்கே..புத்துணர்ச்சி முகாம் போய் வந்ததோ?//

    காந்திமதி எப்போதுமே புத்தணர்வோடுதான் இருந்து வருகிறது:)! நல்ல கவனிப்பும் காரணம். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. கணேஷ் said...
    //நெல்லையப்பர் கோயிலில் தரிசனமும் யானையை நேரில் பார்த்த போதும்கூட இவ்வளவு அழகாய் உணர்நததில்லை. உங்களின் படங்கள் மனதைத் திருடி விட்டன. அருமை, நன்றி.//

    மகிழ்ச்சி கணேஷ். நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சசிகுமார் said...
    //நல்லா இருக்கு...//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  30. கோமதி அரசு said...
    //ஆம் ராமலக்ஷ்மி, ரசனையுடன் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து இருக்கிறார்.
    அவர் ரசனை நம்மையும் ரசிக்க வைக்கிறது.

    படங்கள் எல்லாம் அழகு.
    காந்திமதியின் பகிர்வுக்கு நன்றி./**

    மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  31. தருமி said...
    யானையைத் தொட்டுப் பார்க்க தோன்றுகிறது!

    நன்றி சார்:)!

    பதிலளிநீக்கு
  32. ஹேமா said...
    //அக்கா....உங்கள் கைவண்ணத்தில் புகைப்படங்கள் எப்போதுமே உயிரோவியங்கள் போல !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  33. கோவை2தில்லி said...
    //படங்களும், பகிர்வும் அருமை....//

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  34. சுசி said...
    //தெப்பக்குளம் அற்புதம் அக்கா :)//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  35. விச்சு said...
    //படங்கள் நிஜமாகவே அருமை..பளிச். யானையின் பாஸ்போர்ட் சைஸ் சூப்பர்.//

    மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  36. S.Menaga said...
    //படங்கள் மிக தத்ரூபமாக இருக்குக்கா...காந்திமதி கொள்ளை அழகு,பகிர்வுக்கு நன்றி!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம். said...
    //யானைகளை எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது. அழகான புகைப் படங்கள். தண்ணீரில் தெளியும் ஸாரி, தெரியும் பிம்பத்துடன் கூடிய புகைப் படமும் அழகாய் இருக்கிறது. //

    மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்.

    //சொல்வனம் போய்ப் பார்த்து வந்தேன். சுகா எழுத்தை ரசித்து வந்தேன். அவரின் அம்மன் சன்னதியும் மூங்கில் மூச்சும் வாங்கியுள்ளேன்!//

    நல்லது. நானும் மூங்கில் மூச்சு வாங்கி விட்டேன். தாயார் சன்னதி இரண்டாம் பாகம் வாங்க உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  38. ஷைலஜா said...
    //உங்க காமிராக்கு என்ன மந்திரம் போடறீங்க ராமலஷ்மி இப்படிக்கண்ண+ மனசைக்கட்டிப்போடுகிறதே!!//

    வாங்க ஷைலஜா:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. பாச மலர் / Paasa Malar said...
    //கம்பீர யானை அழகு...படங்கள் அருமை ராமலக்ஷ்மி..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  40. அன்பின் ராமலக்‌ஷ்மி - அருமையான படங்கள் - காந்திமதியின் திலகங்கள் - அழகானவை - அருமையானவை - இரசனையுடன் பொறுமையுடன் திலகமிடுபவருக்குப் பாராட்டுகள் - ஃப்ரொஃபைல் படம் அட்டகாசம் - மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  41. யானை துறு துறுன்னு பார்க்கவே ஆசையாக இருக்கு.பகிந்த படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  42. ராமலக்‌ஷ்மி

    உங்க பதிவ திறந்ததும் யானை வந்து தலையில் ஒரு கொட்டு வைபப்து போல் இருக்கு

    சூப்பரான படஙக்ள் அருமை

    பதிலளிநீக்கு
  43. "காந்திமதிக்கும் பாஸ்போர்ட் சைஸில் ப்ரொஃபைல் படம் இருந்தால் அழகுதானே?"

    ரசித்துப்படித்த வரிகள்

    பதிலளிநீக்கு
  44. cheena (சீனா) said...
    //அருமையான படங்கள் - காந்திமதியின் திலகங்கள் - அழகானவை - அருமையானவை - இரசனையுடன் பொறுமையுடன் திலகமிடுபவருக்குப் பாராட்டுகள் - ஃப்ரொஃபைல் படம் அட்டகாசம் - மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள்//

    மகிழ்ச்சியும் நன்றியும் சீனா சார்!

    பதிலளிநீக்கு
  45. Asiya Omar said...
    //யானை துறு துறுன்னு பார்க்கவே ஆசையாக இருக்கு.பகிந்த படங்கள் அனைத்தும் அருமை.//

    நன்றி ஆசியா:)!

    பதிலளிநீக்கு
  46. Jaleela Kamal said...
    //உங்க பதிவ திறந்ததும் யானை வந்து தலையில் ஒரு கொட்டு வைபப்து போல் இருக்கு

    சூப்பரான படஙக்ள் அருமை//

    நன்றி ஜலீலா:)!

    பதிலளிநீக்கு
  47. வியபதி said...
    //"காந்திமதிக்கும் பாஸ்போர்ட் சைஸில் ப்ரொஃபைல் படம் இருந்தால் அழகுதானே?"

    ரசித்துப்படித்த வரிகள்//

    மகிழ்ச்சி. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  48. படத்தின் கிளாரிட்டி அசத்துகிறது
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும்
    அற்புதப் படங்கள்
    குறிப்பாக பிரகாரம் தெப்பக்குளம்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  49. A- class.

    இரண்டாம் படம் ரொம்பவும் கவர்ந்தது. கடைசிப் படமும். தேர்ந்த திறமை காண மகிழ்ச்சியாய் இருக்கு.

    பதிலளிநீக்கு
  50. Ramani said...
    //படத்தின் கிளாரிட்டி அசத்துகிறது
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும்
    அற்புதப் படங்கள்
    குறிப்பாக பிரகாரம் தெப்பக்குளம்
    பகிர்வுக்கு நன்றி//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. Shakthiprabha said...
    //A- class.

    இரண்டாம் படம் ரொம்பவும் கவர்ந்தது. கடைசிப் படமும். தேர்ந்த திறமை காண மகிழ்ச்சியாய் இருக்கு.//

    நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு
  52. Kanchana Radhakrishnan said...
    //படங்கள் அருமை ராமலக்ஷ்மி.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  53. பிரமாண்டம் அழகு ரெண்டும் சேந்து இருக்கறது ரெண்டு விஷயங்கள் தான்னு நினைக்கிறேன்... ஒண்ணு மலைகள் அடுத்து யானை...அழகான படம் மற்றும் வர்ணனை... நன்றி

    பதிலளிநீக்கு
  54. யானைப்படங்கள் அனைத்துமே வெகு அருமையாக அமைந்துள்ளன.

    பார்க்கப்பார்க்க ஆசையாக உள்ளது.

    கடைசிபடம்: கோயில் கோபுரம்+குளம் அதுவும் நல்ல அழகு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  55. அருமையான பகிர்வு ராமலக்ஷ்மி மேடம். நெல்லை காந்திமதி படங்கள் மிக அருமை. நானும் சுகா அண்ணாச்சியின் நயினார் கட்டுரையை படித்தேன். நல்லதொரு பகிர்வு. மறக்கமுடியாத நினைவுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin