Monday, February 20, 2012

‘க்ளோஸ்-அப்’ இம்மாத PiT போட்டி - ‘யுடான்ஸ்’ இவ்வார நட்சத்திரம்

அடடா அடடா! க்ளோஸ்-அப் (அண்மைக் காட்சி) என ஒரு தலைப்பை நடுவர் கொடுத்தாலும் கொடுத்தார், அறிவிப்பு ஆன தினத்திலிருந்து நிற்காத அடைமழையாய் படங்கள் வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றன. ஒரே நாளில் 23 பேர், 45 பேர்களின் படங்களெல்லாம் வந்து திக்கு முக்காடச் செய்து விட்டன. அப்புறம் எதற்கு நினைவூட்ட ஒரு பதிவெனக் கேட்கிறீர்களா:)? நம்ம கடமையை நாம செஞ்சிரணுமில்லையா? அதுவுமில்லாம வழக்கம் போலப் படங்களை அனுப்ப 15ஆம் தேதியே கடைசி என நினைத்துத் தவற விட்டவர்களுக்கு 20-தான் கடைசி, இன்னும் இருக்கு முழுசா ஒரு நாள் எனச் சொல்லவுமே இப் பதிவு.

அறிவிப்பில் க்ளோஸ்-அப் பற்றி மிக அருமையான விளக்கம் தந்திருக்கிறார் சர்வேசன். குறிப்பா “குழந்தையின் முகமோ, கைகளோ, பூக்களின் மேலிருக்கும் வண்டோ, பறவையின் கூரிய பார்வையோ, பெண்களின் புருவமோ, மீசைக்காரரின் வசீகரச் சிரிப்போ, பாட்டியின் சுருங்கிய விரல்களோ, மீனோ, மானோ, பளீர் தக்காளியோ, சில்லென்ற கோக் பாட்டிலோ, ஃபுல் மீல்ஸோ, எதுவாக இருந்தாலும், அருகாமையில் சென்று அதன் விவரங்களைப் பதிந்தால், அந்தப் புகைப்படத்துக்கு ஒரு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்.” என அவர் மகுடி வாசித்த விதத்துக்கு மயங்கிக் கட்டுண்டு நண்பர்கள் படமெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
இதுவரை வந்திருக்கும் 140-க்கும் அதிகமான படங்களைக் காண இங்கே செல்லுங்கள். உங்கள் கருத்துகளை வழங்கி உற்சாகம் கொடுங்கள்.

நான் எடுத்த சில பார்வைக்கு:

# 1. சின்னஞ்சிறு ப்ரிமுலா

# 2. மக்கா கிளி

3. பூக்களின் ராணி


# 4. கணபதயே நமக
# 5. சிவாய நமக
# 6. எத்தனை அடுக்கு எண்ணலாம், வாங்க
# 7. யார் வரவைத் தேடுது..

கீழ்வருவன யாவும் முத்துச்சரத்தில் இதுவரையிலும் பகிராதவை:

# 8. மழை ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில் சிறகுலர்த்தும் சின்னப் புறா


# 9. கொஞ்சம் நீள முகம்


# 10. தைப்பூச நிலா
மறையும் முன் நிறை நிலா..
மஞ்சளுக்கு மாறிக் கொண்டிருந்த நேரத்தில்..!

# 11. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
உழவர் திருநாள் வாழ்த்தாக ஃப்ளிக்கரில் பதிந்த மஞ்சள் கொத்து

# 12. ஏதோ நினைவுகள்.. கனவுகள்..ஓரங்குலமே இப் பொம்மையின் முகம். 4-வது படத்திலிருக்கும் கணேசா 3 அங்குல உயரம் கொண்டவரே. படமெடுக்க வீட்டுகுள்ளேயே நிறைய வாய்ப்புகள். சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டுங்க:)! பக்கமாய் நின்று படம் புடிங்க.

# 13. உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே..

# 14. யார் தூரிகை செய்த ஓவியம்..?


# 15. யார் சிந்தனை குழைந்த காவியம்.. :)?
கண்ணைப் பறிக்கும் ‘மெஜந்தா’ வண்ணம்.

# 16. பளிச்சிடும் பற்களுக்குக் ‘க்ளோஸ் அப்’ :)!


# 17. க்க்க்ளோஸ்-அப்ப்ப்

தேமே என நின்றிருந்த தேனீ பக்கத்துல போய் கேமரா ‘கிர்ரக் கிர்ரக்’ என சவுண்டு விட்டு க்ளிக்கினால் அது சும்மா இருக்குமா? மெல்ல கால்களைத் தூக்கி அதுவும் சவுண்டு விட ஆரம்பித்தது...

# 18. ZZZzzzz.....கைகளைப் பதம் பார்த்து விடக் கூடாதெனத் தேனீ மேலே டார்ச் அடித்து ஒளிபாய்ச்சிய உதவியாளர்களிடம் 'பேக் அப்' சொல்லி விட்டேன். இதுவரை படம் அனுப்பாதவங்களுக்கு சொல்லவிரும்புவது:
ஸ்டார்ட் கேமரா' :)!


இந்த வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை
என்னை நட்சத்திரப் பதிவராக
அறிவித்திருக்கும் யுடான்ஸ் திரட்டிக்கு
நன்றி!!!
***

48 comments:

 1. ம்ஹூம். ஒருத்தர்கிட்டயே இத்தனை திறமை இருப்பது அன்சகிக்கபிள்:)
  ராமலக்ஷ்மி என் மூச்சு நின்று வருகிறது ஒவ்வொரு படத்துக்கும். பிராணாயாமம் செய்த பலன் கிட்டியது!
  பிடியுங்கள் ஆயிரம் தாமரை கொண்ட பூங்கொத்தை.

  ReplyDelete
 2. படங்கள் கண்ணில் ஒற்றுகிறது, அவ்வளவு நெருக்கம். வாழ்த்துகள் இராம லஷ்மி

  ReplyDelete
 3. உங்கள் புகைப்படங்கள் - அழகிய ரசனையின் தொகுப்புகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ஆஹா ! மிக அருமை ராமலஷ்மி,உங்க படம் எல்லாம் பார்த்து விட்டு நான் எடுக்கிற டப்பா படத்தை அனுப்ப யோசனை தான்.
  யுடான்ஸ் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வல்லிமாவின் கமெண்டுக்கு ரிப்பீட்டு!!

  நட்சத்திர வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அருமைப் பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 7. அருமையான புகைப்படங்கள் எப்படி என்று க்ளாஸ் எடுங்களேன் ராமலக்‌ஷ்மி.

  ReplyDelete
 8. இந்த மாதம் முழுவதும் எந்த படமும் எடுக்க மாட்டேன். வேறென்ன? இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்து வெளியிட்டால் - எனக்கு எந்த படமும் எடுப்பதற்கு கை + மனது வரமாட்டேன் என்கிறது.

  ReplyDelete
 9. நீங்கள் எடுத்துள்ள படங்கள் (வழக்கம்போல) பிரமாதம். குறிப்பாக, பூக்களின் ராணி, மஞ்சள், யார் தூரிகை செய்த ஓவியம்....

  கவுதமன் சொல்லியிருப்பதுதான் என் பதிலும்!

  ReplyDelete
 10. கவிநயா said...
  //வாவ்! ஜூப்பர்!//

  நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 11. வல்லிசிம்ஹன் said...
  //ம்ஹூம். ஒருத்தர்கிட்டயே இத்தனை திறமை இருப்பது அன்சகிக்கபிள்:)
  ராமலக்ஷ்மி என் மூச்சு நின்று வருகிறது ஒவ்வொரு படத்துக்கும். பிராணாயாமம் செய்த பலன் கிட்டியது!
  பிடியுங்கள் ஆயிரம் தாமரை கொண்ட பூங்கொத்தை.//

  நன்றி வல்லிம்மா:))!

  ReplyDelete
 12. கோவி.கண்ணன் said...
  //படங்கள் கண்ணில் ஒற்றுகிறது, அவ்வளவு நெருக்கம். வாழ்த்துகள் இராம லஷ்மி//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 13. தமிழ் உதயம் said...
  //உங்கள் புகைப்படங்கள் - அழகிய ரசனையின் தொகுப்புகள். வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 14. Asiya Omar said...
  //ஆஹா ! மிக அருமை ராமலஷ்மி,உங்க படம் எல்லாம் பார்த்து விட்டு நான் எடுக்கிற டப்பா படத்தை அனுப்ப யோசனை தான்.
  யுடான்ஸ் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி . தன்னம்பிக்கையுடன் எடுப்போம் ஆசியா.

  ReplyDelete
 15. ஹுஸைனம்மா said...
  //வல்லிமாவின் கமெண்டுக்கு ரிப்பீட்டு!!

  நட்சத்திர வாழ்த்துகள்.//

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 16. DhanaSekaran .S said...
  //அருமைப் பதிவு வாழ்த்துகள்//

  மிக்க நன்றி தனசேகரன்.

  ReplyDelete
 17. ஸாதிகா said...
  //அருமையான புகைப்படங்கள் எப்படி என்று க்ளாஸ் எடுங்களேன் ராமலக்‌ஷ்மி.//

  PiT-ல் அனைத்திற்கும் பாடங்களும் இருக்கின்றன ஸாதிகா. நன்றி:)!

  ReplyDelete
 18. kg gouthaman said...
  //இந்த மாதம் முழுவதும் எந்த படமும் எடுக்க மாட்டேன். வேறென்ன? இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்து வெளியிட்டால் - எனக்கு எந்த படமும் எடுப்பதற்கு கை + மனது வரமாட்டேன் என்கிறது.//

  உற்சாகமல்லவா வரவேண்டும்:)? மிக்க நன்றி கெளதமன்.

  ReplyDelete
 19. ஸ்ரீராம். said...
  //நீங்கள் எடுத்துள்ள படங்கள் (வழக்கம்போல) பிரமாதம். குறிப்பாக, பூக்களின் ராணி, மஞ்சள், யார் தூரிகை செய்த ஓவியம்....

  கவுதமன் சொல்லியிருப்பதுதான் என் பதிலும்!//

  தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெறுவீர்கள் என எதிர்பார்த்தேன். ஒருமுறையோடு நிறுத்தி விட்டீர்களே?

  பிடித்த படங்களைக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 20. அள்ளும் அழகு....அழகோ அழகு..

  ReplyDelete
 21. அழகிய புகைப்படங்கள்....

  யுடான்ஸ் இவ்வார நட்சத்திரம் - வாழ்த்துகள்....

  ReplyDelete
 22. சிரிப்பு அழகோ அழகு.மிச்சம் எல்லாம் கொள்ளை அழகு !

  ReplyDelete
 23. அட!சூப்பர்! பூங்கொத்து!!

  ReplyDelete
 24. சிரிப்'பூ'... ஜூப்பரப்'பூ' :-))

  ReplyDelete
 25. கேமராவில் உங்ககைவண்ணம் அழகுபட மிளிர்கிறது அக்கா..வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 26. காமெராக் கவிஞரே... நீங்கள் வடித்த கவிதைகள் அனைத்துமே மனதைக் கொள்ளை கொண்டன. அருமை! (ஸாதிகா தங்கச்சி கேட்ட மாதிரி நீங்க க்ளாஸ் எடுத்தா நான்தான் ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட்! இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா...) யுடான்ஸ் நட்சத்திரத்துக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. படங்கள் ஒன்னொன்னும் கதை சொல்லுது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. சூப்பர் படங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. மோகன் குமார் said...
  //Excellent photos. Congrats Yudans star !

  நன்றி மோகன் குமார்:)!

  ReplyDelete
 30. பாச மலர் / Paasa Malar said...
  //அள்ளும் அழகு....அழகோ அழகு..//

  நன்றி மலர்.

  ReplyDelete
 31. வெங்கட் நாகராஜ் said...
  //அழகிய புகைப்படங்கள்....

  யுடான்ஸ் இவ்வார நட்சத்திரம் - வாழ்த்துகள்....//

  மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 32. ஹேமா said...
  //சிரிப்பு அழகோ அழகு.மிச்சம் எல்லாம் கொள்ளை அழகு !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 33. அன்புடன் அருணா said...
  //அட!சூப்பர்! பூங்கொத்து!!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 34. அமைதிச்சாரல் said...
  //சிரிப்'பூ'... ஜூப்பரப்'பூ' :-))//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 35. S.Menaga said...
  //கேமராவில் உங்ககைவண்ணம் அழகுபட மிளிர்கிறது அக்கா..வாழ்த்துக்கள்!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 36. கணேஷ் said...
  //காமெராக் கவிஞரே... நீங்கள் வடித்த கவிதைகள் அனைத்துமே மனதைக் கொள்ளை கொண்டன. அருமை! (ஸாதிகா தங்கச்சி கேட்ட மாதிரி நீங்க க்ளாஸ் எடுத்தா நான்தான் ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட்! இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா...) யுடான்ஸ் நட்சத்திரத்துக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!//

  நன்றி கணேஷ்:)! என்ன தெரிஞ்சுக்கணுமென்றாலும் PiT-ல் எளியமுறையில் விளக்கப்பட்ட பாடங்கள் இருக்கின்றன. வாசித்துப் பயன் பெறுங்கள்.

  ReplyDelete
 37. Lakshmi said...
  //படங்கள் ஒன்னொன்னும் கதை சொல்லுது. வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 38. தாமோதர் சந்துரு said...
  //சூப்பர் படங்கள். வாழ்த்துகள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும்!

  ReplyDelete
 39. அருமையான படங்கள் ராமலக்ஷ்மி மேடம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 40. எண் 5 (இரண்டு படத்துக்கு 5 இருக்கு) சிவாய நமக படத்தில் நிஜமாகவே தண்ணீர் செல்கிறதா?

  எண் 13 அருமை.. குறிப்பா வண்ணம் :-)

  ReplyDelete
 41. தூரிகை ஓவியம், சிந்தனை காவியம், பூக்களின் ராணி, எத்தனை அடுக்கு எண்ணலாமா....எனக்கு என்னிக்கும் பூ தான் முதலிடம்.

  மற்ற படங்களும் ஜோர்.

  ReplyDelete
 42. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  //அருமையான படங்கள் ராமலக்ஷ்மி மேடம். வாழ்த்துகள்.//

  நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 43. கிரி said...
  //எண் 5 (இரண்டு படத்துக்கு 5 இருக்கு) //

  நன்றி:), சரி செய்து விட்டேன்.

  //சிவாய நமக படத்தில் நிஜமாகவே தண்ணீர் செல்கிறதா?//

  நிஜமாகதான். கங்கா ஸ்நானம் என அதனடியில் நின்று குளிப்பதற்குக் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  //எண் 13 அருமை.. குறிப்பா வண்ணம் :-)//

  இயற்கையின் ஆச்சரியமூட்டும் அதிசயங்கள்:). நன்றி கிரி.

  ReplyDelete
 44. Shakthiprabha said...
  //தூரிகை ஓவியம், சிந்தனை காவியம், பூக்களின் ராணி, எத்தனை அடுக்கு எண்ணலாமா....எனக்கு என்னிக்கும் பூ தான் முதலிடம்.

  மற்ற படங்களும் ஜோர்.//

  பிடித்த படங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஷக்தி.

  ReplyDelete
 45. எல்லா படங்களுமே கண்களைப் பறிக்கின்றன...பிரமாதம்.

  இந்த வார யூடான்ஸ் நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 46. @ கோவை2தில்லி,

  மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin