செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

எனதன்பும் உனதன்பும் - அதீதம் Feb 14 சிறப்பிதழில்..



எனதன்பு மெளனமானதே
எம்மொழியில் முயன்றாலும்
முழுமையாகப் புரியவைக்க
இயலாது போகுமோ
எனும் அச்சத்தால்
நான் அடை காக்கும்
அன்பு மெளனமானதே

ஆயினும்
உனதன்பை நீ சொல்லிக் கொண்டேயிரு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கக் காத்திராமல்
அடிக்கடி உனதன்பை நீ
வெளிப்படுத்தியபடி இருப்பது
உனக்கு மட்டுமின்றி
எனக்கும் பிடித்திருப்பதால்

தொடர்ந்து
உனதன்பை நீ சொல்லிக் கொண்டேயிரு.

எத்தனை நட்சத்திரங்கள்
வானத்தை நிறைத்தாலும்
எண்ணிக்கை அதிகமென
எண்ணுவதில்லை நிலவு

எத்தனை மலர்கள்
வனமெங்கும் பூத்தாலும்
பரவும் நறுமணத்தால்
திணறுவதில்லை காற்று

எத்தனை முறை உனதன்பை
நீ எப்படிச் சொன்னாலும்
ஒவ்வொரு சொல்லும்
பிரபஞ்சத்தையே பரிசாக
ஏந்தி வருவதாக
மெளனமாக மகிழ்ந்து கொண்டிருக்கும்
எனதன்புக்காக

உனதன்பை நீ சொல்லிக் கொண்டேயிரு.
***

அதீதம் காதல் சிறப்பிதழில்.
படம் நன்றி: MQN

55 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. //சந்தர்ப்பங்கள் வாய்க்கக் காத்திராமல்
    அடிக்கடி உனதன்பை நீ
    வெளிப்படுத்தியபடி இருப்பது
    உனக்கு மட்டுமின்றி
    எனக்கும் பிடித்திருப்பதால்//

    ம்... இதுதான் காதல்...
    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. இது நியாயமா என்ன...! நான் எனதன்பை வெளிப்படுத்தாமல் மெளனமாக இருப்பேன், உனதன்பை வெளிப் படுத்திக் கொண்டேயிரு என்று சொன்னால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அலுத்துப் போய் விடாதோ என்று எண்ண வைத்தது!

    :))

    ஆனாலும் சொல்லத் தயங்கும் நிறைய பேர் இருக்கிறார்கள்தான். நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  4. அன்பு எப்போதும் சொன்னாலும்,சொல்லாவிட்டாலும்
    பரவிக்கொண்டே இருக்கும். மலரின் நறுமணத்தைப் போன்றது

    அழகாகச் சொல்லி உள்ளீர்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான கவிதை வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. //திணறுவதில்லை காற்று//

    ஆஹா... அருமை! :)

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சரத்தில் காதல் முத்து முத்தாய்ப்பாக....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  9. கவிதை ரொம்ப அழகா இருக்கு எழுதி இருக்கீங்கக்கா!!!

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை. அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. காதலை உணர்த்திய. உணரச் செய்த அழகுக் கவிதை. நன்று.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப வித்யாசமா இருக்கு அக்கா..

    வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகள் .. கவிதை மிக அழகு ராமலக்ஷ்மி ! :)

    பதிலளிநீக்கு
  14. அன்பின் பெருமையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  15. இரவே அதீதத்தில் வாசித்துவிடேன்.உங்கள் பாணியில் அருமையான கவிதை முத்தக்கா.காதல் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  16. Asiya Omar said...
    //அருமையான கவிதை.வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  17. சமுத்ரா said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றி சமுத்ரா.

    பதிலளிநீக்கு
  18. தமிழ் உதயம் said...
    //காதலை பெருமை படுத்திய கவிதை.//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  19. மோகன் குமார் said...
    //Nice. Atheethathil veliyaanathukku vaazhthugal !//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  20. ஷைலஜா said...
    //கவிதை மிக அழகு!//

    நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  21. ஸாதிகா said...
    //கவிதை அருமை.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  22. குடந்தை அன்புமணி said...
    ***//சந்தர்ப்பங்கள் வாய்க்கக் காத்திராமல்
    அடிக்கடி உனதன்பை நீ
    வெளிப்படுத்தியபடி இருப்பது
    உனக்கு மட்டுமின்றி
    எனக்கும் பிடித்திருப்பதால்//

    ம்... இதுதான் காதல்...
    வாழ்த்துகள்.../***

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. Shakthiprabha said...
    //ரொம்ப நல்லா இருக்கு ராமலஷ்மி. :)//

    நன்றி ஷக்தி:)

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம். said...
    //இது நியாயமா என்ன...! நான் எனதன்பை வெளிப்படுத்தாமல் மெளனமாக இருப்பேன், உனதன்பை வெளிப் படுத்திக் கொண்டேயிரு என்று சொன்னால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அலுத்துப் போய் விடாதோ என்று எண்ண வைத்தது!

    :))

    ஆனாலும் சொல்லத் தயங்கும் நிறைய பேர் இருக்கிறார்கள்தான். நல்ல கவிதை.//

    உண்மையான அன்புக்கு அலுப்பு இருக்காது:))! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  25. தமிழ்த்தேனீ said...
    //அன்பு எப்போதும் சொன்னாலும்,சொல்லாவிட்டாலும்
    பரவிக்கொண்டே இருக்கும். மலரின் நறுமணத்தைப் போன்றது

    அழகாகச் சொல்லி உள்ளீர்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்த்தேனீ சார்.

    பதிலளிநீக்கு
  26. மதுமதி said...
    //சிறப்பான கவிதை வாழ்த்துகள்..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. kathir said...
    ***//திணறுவதில்லை காற்று//

    ஆஹா... அருமை! :)/***

    நன்றி கதிர்:)

    பதிலளிநீக்கு
  28. dhanasekaran .S said...
    //அருமையான கவிதை.வாழ்த்துக்கள்//

    நன்றி தனசேகரன்.

    பதிலளிநீக்கு
  29. ரசிகன் said...

    //நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.//

    நன்றி ரசிகன்.

    பதிலளிநீக்கு
  30. சக்தி said...
    //கவிதை மிக அழகு!//

    நன்றி சக்தி.

    பதிலளிநீக்கு
  31. பாச மலர் / Paasa Malar said...
    //சரத்தில் காதல் முத்து முத்தாய்ப்பாக....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  32. RAMYA said...//ரொம்ப அழகா இருக்கு எழுதி இருக்கீங்கக்கா!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்யா!

    பதிலளிநீக்கு
  33. கோவை2தில்லி said...//கவிதை அருமை. அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  34. Lakshmi said...
    //நல்ல கவிதைக்கு வாழ்த்துகள்//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. கணேஷ் said...
    //காதலை உணர்த்திய. உணரச் செய்த அழகுக் கவிதை. நன்று.//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  36. சுசி said...
    //ரொம்ப வித்யாசமா இருக்கு அக்கா..

    வாழ்த்துகள் :)//

    நன்றி சுசி:).

    பதிலளிநீக்கு
  37. James Vasanth said...
    //அருமையான வரிகள் .. கவிதை மிக அழகு ராமலக்ஷ்மி ! :)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜேம்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  38. அமைதி அப்பா said...
    //அன்பின் பெருமையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி!//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  39. ஹேமா said...
    //இரவே அதீதத்தில் வாசித்துவிடேன்.உங்கள் பாணியில் அருமையான கவிதை முத்தக்கா.காதல் வாழ்த்துகள் !//

    மகிழ்ச்சியும் நன்றியும் ஹேமா.

    பதிலளிநீக்கு
  40. அன்பை அழுத்தமாய் சொல்லும் அதீதத்தின் கவிதை..

    பதிலளிநீக்கு
  41. கே. பி. ஜனா... said...
    //அழகு வரிகள்!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. குமரி எஸ். நீலகண்டன் said...
    //அன்பை அழுத்தமாய் சொல்லும் அதீதத்தின் கவிதை..//

    நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  43. சொல்லாத அல்லது வெளிப்படுத்தப் படாத அன்பு அர்த்தமற்றுப் போய்விடும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  44. raji said...
    //சொல்லாத அல்லது வெளிப்படுத்தப் படாத அன்பு அர்த்தமற்றுப் போய்விடும் அல்லவா?//

    சொற்களால் மட்டுமே அன்பை வெளிப்படுத்த முடியுமென்பது இல்லையே. நன்றி ராஜி:)!

    பதிலளிநீக்கு
  45. சந்தர்ப்பங்கள் வாய்க்கக் காத்திராமல்
    அடிக்கடி உனதன்பை நீ
    வெளிப்படுத்தியபடி இருப்பது
    உனக்கு மட்டுமின்றி
    எனக்கும் பிடித்திருப்பதால்//

    ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டால் தான் அன்பு.
    அன்பை வெளிப்படுத்தினால் தான் நிலைக்கும்.

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin