உல்லாசமாக உற்சாகமாகக் குரலெழுப்பி, உலகம் பிறந்தது தமக்காக என்பது போல் அங்கும் இங்குமாக விர் விர் எனப் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகள் இன்று எங்கே போயின? நம்புங்கள் அவற்றை நான் கண்ணால் கண்டு ஆயிற்று ஆண்டுகள் பல.
இந்தக் கூடு நான் பார்த்து வளர்ந்த சிட்டுக் குருவிகள் கட்டியதில்லை. தங்கை வீட்டு மாடித்தோட்டத்தில் புள்ளிச் சில்லைகள் கட்டிய ஒன்று.
சின்ன வயதில் எங்கள் வீட்டின் உள் முற்றத்துத் தூண்கள் இரண்டுக்கு நடுவே சின்னப் பரண் அமைத்திருந்தார்கள் குருவிகளுக்காக. வைக்கோல்களைக் கொண்டு வந்து அழகாகப் பரத்தி அப்பரணைத் தங்கள் கூடாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. தாய்க்குருவியும் குஞ்சுகளும் குதூகலமாக எழுப்பும் சத்தம் முற்றத்தையும் மனதையும் நிறைக்கும். அம்மாக் குருவி இரைதேடச் சென்றிருக்கும் சமயம் தூணுக்கு அருகே எங்கள் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியின் கைப்பிடியில் ஏறி, தூணின் மேல்பகுதியை வளைத்துப் பிடித்துக் கொண்டு குஞ்சுகளை எட்டிப் பார்த்து ‘ஹலோ ஹாய்’ சொல்வது பிள்ளைகள் எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை சிறகு முளைக்காத சின்னஞ்சிறு குஞ்சொன்று பரணிலிருந்து விழுந்து விட அந்தப் பட்டுக் குஞ்சினை செய்தித்தாளில் எடுத்து மீண்டும் தாத்தா கூட்டில் விட்டது நினைவில் நிற்கிறது.
கதை கேட்டுச் சும்மா சும்மா நச்சரிக்கும் சின்னக் குழந்தைகளைக் கலாட்டா செய்ய, வயதில் பெரிய குழந்தைகள் வழிவழியாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு: பாயாசம் பருக ஆசைப்பட்ட குருவிகள் ஒரு பாட்டியிடம் போய் உதவி கேட்டனவாம். “சரி நீங்கள் எனக்கு நெல்மணிகளைக் கொண்டு வந்து தாருங்கள். அவற்றைத் திருத்தி அரிசி எடுத்து வெல்லப் பாயாசம் செய்து தருகிறேன்” என்றாராம் பாட்டி. அருகே ஒரு வீட்டு முற்றத்திலேயே நெல் அவித்துக் காய வைத்திருந்தார்களாம். அந்த வீட்டுக்கு முதலில் ஒரு குருவி வந்துச்சாம். ஒரு நெல்லைத் தூக்குச்சாம். ஒருவரும் விரட்டவில்லை என்றதும் தைரியமா ரெண்டு குருவி வந்துச்சாம் ரெண்டு நெல்லைத் தூக்குச்சாம். அப்புறம் மூணு குருவி வந்துச்சாம் மூணு நெல்லை...! நாலு குருவி... நாலு நெல்லை...!! கண் அகலக் கேட்டபடி இருக்கிற குழந்தைகள் அஞ்சு நெல்லைத் தூக்க அஞ்சு குருவி வருகிற போது முழுசா முழிச்சுக்கிட்டு முகம் சிவக்க அடிக்க வருவார்கள்:)!
இன்று நமக்கு உணவு வேண்டுமே என விட்டு வைத்திருக்கிற கொஞ்ச நஞ்ச வயல்களால் நெல் இருக்கு. உலகம் எனும் கூடு இருக்கு. குருவிதான் இல்லை:(!
மானுடருக்கான கூடு மட்டும் இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காகப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்தான் பூமி பூமியாக இருக்க முடியும். வனங்களை அழித்தபடி வாழும் நகரிலிருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தபடி உருவாக்கிக் கொண்டிருக்கும் கான்க்ரீட் காடுகளைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்வதாக முடிவே கட்டி விட்டோமா?
என் அம்மா வீட்டுக்கு அடுத்த வீட்டு மொட்டை மாடியில் அலைபேசிக் கோபுரம் அமைக்க அந்த வீட்டினர் அனுமதி அளித்து அதற்காக ஒரு தொகையை வாடகையாகப் பெற்று வந்தனர். அப்போது வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் ஒரு பறவையைக் கூட காண முடியாது. இது மனிதரின் உடல் நலனுக்கும் தீங்குதான். குடியிருப்புப் பகுதியில் இருக்கக் கூடாதென யாரும் புகார் செய்தார்களா அல்லது வேறு காரணமா தெரியவில்லை, இரண்டு வருடங்கள் முன் அந்தக் கோபுரம் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது. கோபுரத்திலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளே அவற்றை அதுகாலமும் நெருங்க விடாமல் செய்திருக்கின்றன.
**
இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.
***
உண்மைதான் அக்கா சிட்டுக்குருவியை பார்த்தே பலவருடம் ஆகுது...இன்னிக்கு சிட்டுக்குருவிகள் தினமா,ஏதொதோக்கு ஒருதினம் கொண்டாடுகிறும்.இப்பறவைக்கும் கொண்டாடுவதில் சந்தோஷமே,இனிமேலாவது அவைகளை அழிக்காமல் வளர்ப்போமாக.
பதிலளிநீக்குஅன்பின் ராமலஷ்மி
பதிலளிநீக்குஅருமை.தங்கள் நினைவலைகள் படிக்கும் போதே சுகமான அனுபவம்... காலை நேரம் பறவைகளின் இனிய கீதமும், கணகளுக்கு குளிர்ச்சியான தரிசனமும் கிடைத்தால் அன்றைய பொழுது சுகமாக கழியும் அல்லவா.. நன்றி .
அன்புடன்
பவள சங்கரி.
குவிகள் தினத்தை நினவில் மட்டுமே வைத்திருக்கும் காலம் வரப்போகிறது.அழகான பட்மும் நினைவலைகளும் !
பதிலளிநீக்குஇன்று அலுவலகத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தேன். மாலைதான் எனக்கு சிட்டுக் குருவிகள் தினமென்று நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.அந்த நாள் நினைவலைகளை நினைவுகூர்ந்தது ரம்யமாக இருந்தது.
பதிலளிநீக்குசிட்டுக்குருவி பற்றி ஏனைய பதிவர்கள் இட்ட இட்கையை லின்குடன் அறிமுகப்படுத்தியமையும் மிக நன்று.
http://www.kousalyaraj.com/2012/03/blog-post_20.html கெளசல்யாவின் இந்த இடுகையும் பாருங்கள்.
எவ்வளவு அருமையான தலைப்பு. "கூடு இங்கே... குருவி எங்கே..." பேராசை கொண்ட மனிதர்கள் மத்தியில் சிட்டுக்குருவிகளுக்கு இடமும் இல்லை, சூழலும் இல்லை. இத்தனை பெரிய உலகில் இத்துணுண்டு குருவிகளுக்கு இடமில்லாமல் செய்து விட்டார்களே மனிதர்கள்.
பதிலளிநீக்குகுருவிகளின் சத்தங்களுடன் விடிகின்ற அந்தக் காலைப்பொழுதுகள்..சுகம் ராமலக்ஷ்மி...
பதிலளிநீக்குகுருவி நெல்லுக்கதை சொல்லி நான் அடிவாங்குவேன் எங்க வீட்டுக்குட்டீஸ்கிட்ட..:)
பதிலளிநீக்குதலைப்பே என்னையும் இழுத்து வந்தது. பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்களில் சிட்டுக் குருவியும் ஒன்று. இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் எத்தனை அழகு. மனிதன் விழித்துக் கொள்ள இந்த மாதிரி தினங்கள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. அருமையான மற்ற பதிவுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய இடுகை.. மனம் பதறுகிறது இந்தமாதிரி பறவை இனமெல்லாம் அழிந்துகொண்டுவருவதில்...நல்ல முயற்சி யாரும் எடுத்தால் கண்டிப்பாய் நாமும் நம்மாலான பணி செய்து ஒத்துழைப்போம். நன்றி ராமலஷ்மி எனது பதிவையும் இங்கே குறிப்பிட்டதற்கு
பதிலளிநீக்குஇப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது.//
பதிலளிநீக்குஎத்தனை இன்பங்களை அலைபேசி கோபுரங்கள் அழித்து இருக்கிறது!
பதிவு மிக அருமையாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
நான் பதிவு தாமதமாய் போட்டு விட்டேன் , அதனால் ராமலக்ஷ்மியின் பதிவில் என் பதிவு இடம் பெற முடியவில்லை.
எங்கள் ப்ளாக் சுட்டி கொடுத்ததற்கு எங்கள் நன்றி.
பதிலளிநீக்குதலைப்பும் பதிவும் மிக மிக அருமை
பதிலளிநீக்குமனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிறுவயதில் நெல்லுக் கதை கேட்ட நினைவு இருக்கிறது! மீட்டெடுப்போமா சிட்டுக்குருவி இனத்தை?
பதிலளிநீக்குசுத்திலும் மலை வாசஸ்தலங்கள் இருக்கறதுனாலயோ என்னவோ இங்கே குருவிகள் காணக்கிடைக்குது. ஆளு இல்லைன்னா எங்கூட்டு அடுக்களை ஜன்னல் சுவர்ல வந்து உக்காந்துக்கிட்டு வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்கற அழகே தனி.
பதிலளிநீக்குசுட்டி கொடுத்ததுக்கு நன்னிங்கோ..:-)
குருவிகள் இனம் அழிந்து வருவதில் எனக்கும் மிகமிக வருத்தம்தான். இதை மனதில் பதியும் வண்ணம் எழுதியதோடு, மற்றவர்கள் எழுதியவற்றின் சுட்டிகளையும் கொடுத்திருந்தது வெகு சிறப்பு.
பதிலளிநீக்குஉங்கள் போட்டோ சூப்பர். நீங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளைப் படித்துவிட்டேன். சிட்டுக் குருவியைப் பாதுகாப்போம்.
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குதேவையான இடுகை..
இதோ எனது இடுகை..
குருவிகளும் வாழட்டுமே..
http://gunathamizh.blogspot.in/2012/03/blog-post_20.html
நல்ல பகிர்வு. Photo super.
பதிலளிநீக்குஇவ்விடுகைக்கு என் வலையில் நன்றியோடு இணைப்பளித்துள்ளேன்..
பதிலளிநீக்குvery nice and heart touching post.
பதிலளிநீக்குAll the`sparrows are here in our`garden `
நல்ல பகிர்வு....
பதிலளிநீக்குகாலையில் குருவிகள், விதவிதமான பறவைகளின் சத்தம் கேட்டு எழுந்த நாட்கள் நினைவில் மட்டும்...
இப்போதோ அலாரம் அடித்து அலற வைக்கிறது.... :(
மிக நல்ல பகிர்வு.தொகுத்து கொடுத்தமை நன்று.
பதிலளிநீக்குஇங்கு அல் ஐனில் எங்கள் வீட்டு பின்புற பாலகனிக்கு சிட்டுக் குருவிகள் வருவதுண்டு.நான் படம் எடுப்பதற்குள் சிட்டாக பற்ந்து விடுகின்றன.பேரீச்சை தோப்பிற்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.எப்பவும் எங்கள் வீட்டில் இருந்து கேட்டாலே காலையும் மாலையும் கீச் கீச் என்ற குரலைக் கேட்கலாம்.
http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html
பதிலளிநீக்குசிங்காரச்சிட்டுக் குருவிகள்..
முத்துச்சரம் சூட அழைக்கிறார்கள்..
அலை பேசிக்கோபுரம் மனிதர்களுக்கும் ஆபத்துத்தானே...
பதிலளிநீக்குபுற்று நோய் , இதய நோய் போன்ற கொடிய நோய்களுக்கு வித்திடுமே !
//All the`sparrows are here in our`garden `//
பதிலளிநீக்குதுளசி கோபால் அவர்கள் சொன்னது போல எல்லாக்குருவிகளும் இருக்கு, ஊரில் உள்ள எங்க வீட்டில் நடுஹாலில் இப்பவும் குருவிக்கூடு கட்டியுள்ளது.
மேலும் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளப்பறவ்வையினமும் அல்ல, உலகில் மிக அதிகம் உள்ளப்பறவை கோழிகளே ,அதற்கு அடுத்த இடத்தில் சுமார் 2/3 உலக பரப்பில் எங்கும் காணப்படுவது சிட்டுக்குருவிகளே. மேலும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகள், நியுசியிலும் கூட அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பயிர்களை அழிப்பதாலும் பெஸ்ட் என வரையறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையம் கவலைப்பட தேவையில்லாத உயிரினம் என்றே வகைப்படுத்தியுள்ளது. நகர விரிவாக்கத்தின் காரணமாக கொஞ்சம் குறைந்திருக்கலாம் அவ்வளவே.இதெல்லாம் மயன் காலண்டர் படி உலகம் அழியும் என்று சொல்லி கிளப்பும் புரளியைப்போன்றது அல்லது சிலர் சுய விளம்பரத்திற்காக பரப்புவது.
மேலும் விரிவாக ஒருப்பதிவும் போட்டுள்ளேன்,
சிட்டுக்குருவி கட்டுக்கதைகள்
---
//Asiya Omar said...
மிக நல்ல பகிர்வு.தொகுத்து கொடுத்தமை நன்று.
இங்கு அல் ஐனில் எங்கள் வீட்டு பின்புற பாலகனிக்கு சிட்டுக் குருவிகள் வருவதுண்டு.நான் படம் எடுப்பதற்குள் சிட்டாக பற்ந்து விடுகின்றன.பேரீச்சை தோப்பிற்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.//
அரேபியா பகுதியில் நிறைய இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் ,காரணம் அங்கே தான் சிட்டுக்குருவிகள் முதலில் தோன்றின,அரேபியா ,ஆப்பிரிக்காவில் குருவிகள் அதிகமாக இருக்கின்றனவாம்.
கட்டுரையும் தொகுப்பும் அருமை. வாழ்த்துகள்.எனது பதிவையும் தொகுப்பில் இணைத்ததிற்கு நன்றி.
பதிலளிநீக்குசிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - என்றொரு பாட்டு வரும். ஆனால் இன்று சிட்டு குருவிக்குத் தட்டுப்பாடு என்றாகி விட்ட வருத்தமான நிலை!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு. சிட்டுக்குருவிகள் அழிந்து வருவது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
பதிலளிநீக்குநானும் குருவி பாயசம் குடித்த கதையை சொல்வதுண்டு. இப்போ ரோஷ்ணி எனக்கு இந்தக் கதையை சொல்கிறாள்...
S.Menaga said...
பதிலளிநீக்கு//உண்மைதான் அக்கா சிட்டுக்குருவியை பார்த்தே பலவருடம் ஆகுது.......இனிமேலாவது அவைகளை அழிக்காமல் வளர்ப்போமாக.//
நன்றி மேனகா.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//அருமை.தங்கள் நினைவலைகள் படிக்கும் போதே சுகமான அனுபவம்... காலை நேரம் பறவைகளின் இனிய கீதமும், கணகளுக்கு குளிர்ச்சியான தரிசனமும் கிடைத்தால் அன்றைய பொழுது சுகமாக கழியும் அல்லவா.. நன்றி .//
நன்றி பவளா.
ஹேமா said...
பதிலளிநீக்கு//குருவிகள் தினத்தை நினவில் மட்டுமே வைத்திருக்கும் காலம் வரப்போகிறது. அழகான படமும் நினைவலைகளும் !//
கருத்துக்கு நன்றி ஹேமா.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//இன்று அலுவலகத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தேன். மாலைதான் எனக்கு சிட்டுக் குருவிகள் தினமென்று நினைவிற்கு வந்தது.//
கருத்துக்கு நன்றி நீலகண்டன்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//நல்ல பகிர்வு.அந்த நாள் நினைவலைகளை நினைவுகூர்ந்தது ரம்யமாக இருந்தது.//
நன்றி ஸாதிகா. கெளசல்யாவின் இடுகையையும் இணைத்துக் கொண்டேன்.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//எவ்வளவு அருமையான தலைப்பு. "கூடு இங்கே... குருவி எங்கே..." பேராசை கொண்ட மனிதர்கள் மத்தியில் சிட்டுக்குருவிகளுக்கு இடமும் இல்லை, சூழலும் இல்லை. இத்தனை பெரிய உலகில் இத்துணுண்டு குருவிகளுக்கு இடமில்லாமல் செய்து விட்டார்களே மனிதர்கள்.//
உலகம் தமக்கானது எனும் மனிதனின் எண்ணமே காரணம். நன்றி ரமேஷ்.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//குருவிகளின் சத்தங்களுடன் விடிகின்ற அந்தக் காலைப்பொழுதுகள்..சுகம் ராமலக்ஷ்மி...//
அழகான காலைகள் அவை. நன்றி மலர்.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//குருவி நெல்லுக்கதை சொல்லி நான் அடிவாங்குவேன் எங்க வீட்டுக்குட்டீஸ்கிட்ட..:)//
குட்டீஸாக நாமும் அடிக்கப் பாய்ந்திருக்கிறோமே:). நன்றி முத்துலெட்சுமி.
கவிநயா said...
பதிலளிநீக்கு//தலைப்பே என்னையும் இழுத்து வந்தது. பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்களில் சிட்டுக் குருவியும் ஒன்று. இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் எத்தனை அழகு. மனிதன் விழித்துக் கொள்ள இந்த மாதிரி தினங்கள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது.//
நன்றி கவிநயா.
ஷைலஜா said...
பதிலளிநீக்கு//சிந்திக்க வேண்டிய இடுகை.. மனம் பதறுகிறது இந்தமாதிரி பறவை இனமெல்லாம் அழிந்துகொண்டுவருவதில்...நல்ல முயற்சி யாரும் எடுத்தால் கண்டிப்பாய் நாமும் நம்மாலான பணி செய்து ஒத்துழைப்போம். //
நன்றி ஷைலஜா.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//எத்தனை இன்பங்களை அலைபேசி கோபுரங்கள் அழித்து இருக்கிறது!
பதிவு மிக அருமையாக இருக்கிறது ராமலக்ஷ்மி.//
நன்றி கோமதிம்மா.
Kasu Sobhana said...
பதிலளிநீக்கு//எங்கள் ப்ளாக் சுட்டி கொடுத்ததற்கு எங்கள் நன்றி.//
வருகைக்கு நன்றி ஷோபனா.
Ramani said...
பதிலளிநீக்கு//தலைப்பும் பதிவும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//சிறுவயதில் நெல்லுக் கதை கேட்ட நினைவு இருக்கிறது! மீட்டெடுப்போமா சிட்டுக்குருவி இனத்தை?//
செய்ய வேண்டும். நெல்லுக் கதை எல்லா ஊர்களிலும் வழக்கில் இருந்த ஒன்று போலிருக்கே:)! நன்றி ஸ்ரீராம்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//சுத்திலும் மலை வாசஸ்தலங்கள் இருக்கறதுனாலயோ என்னவோ இங்கே குருவிகள் காணக்கிடைக்குது. ஆளு இல்லைன்னா எங்கூட்டு அடுக்களை ஜன்னல் சுவர்ல வந்து உக்காந்துக்கிட்டு வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்கற அழகே தனி.//
கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பகுதி மக்கள்:)! வாழட்டும் குருவிகள் நலமுடன் அங்கே. நன்றி சாந்தி.
கணேஷ் said...
பதிலளிநீக்கு//குருவிகள் இனம் அழிந்து வருவதில் எனக்கும் மிகமிக வருத்தம்தான். இதை மனதில் பதியும் வண்ணம் எழுதியதோடு, மற்றவர்கள் எழுதியவற்றின் சுட்டிகளையும் கொடுத்திருந்தது வெகு சிறப்பு.//
நன்றி கணேஷ்.
விச்சு said...
பதிலளிநீக்கு//உங்கள் போட்டோ சூப்பர். நீங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளைப் படித்துவிட்டேன். சிட்டுக் குருவியைப் பாதுகாப்போம்.//
மிக்க நன்றி.
guna thamizh said...
பதிலளிநீக்கு/அருமை..
தேவையான இடுகை..
இதோ எனது இடுகை..
குருவிகளும் வாழட்டுமே..//
பகிர்வுக்கு மிக்க நன்றி. இணைத்து விட்டேன் தொகுப்பில்.
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//நல்ல பகிர்வு. Photo super.//
நன்றி மேடம்.
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//very nice and heart touching post.
All the`sparrows are here in our`garden `//
கேட்கவே சந்தோஷமாக உள்ளது. நன்றி மேடம்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//நல்ல பகிர்வு....
காலையில் குருவிகள், விதவிதமான பறவைகளின் சத்தம் கேட்டு எழுந்த நாட்கள் நினைவில் மட்டும்...
இப்போதோ அலாரம் அடித்து அலற வைக்கிறது.... :(//
இங்கே கோடையில் மட்டும் மைனாக்கள் தேன் சிட்டுக்கள் பாடக் கேட்கலாம். நன்றி வெங்கட்.
Asiya Omar said...
பதிலளிநீக்கு//மிக நல்ல பகிர்வு.தொகுத்து கொடுத்தமை நன்று.
இங்கு அல் ஐனில் எங்கள் வீட்டு பின்புற பாலகனிக்கு சிட்டுக் குருவிகள் வருவதுண்டு.நான் படம் எடுப்பதற்குள் சிட்டாக பற்ந்து விடுகின்றன.பேரீச்சை தோப்பிற்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.எப்பவும் எங்கள் வீட்டில் இருந்து கேட்டாலே காலையும் மாலையும் கீச் கீச் என்ற குரலைக் கேட்கலாம்.//
மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஆசியா.
@ இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குகருத்துக்கும் தங்கள் சுட்டியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.
@ வவ்வால்,
பதிலளிநீக்குஉங்கள் பதிவு கண்டேன். பாதுகாப்பான பறவையினம் எனும் செய்தி ஆறுதல் தருகிறது. ஆனால் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த இடங்களில் வசித்தும் கடந்த இருபது வருடங்களாக ஒரு சிட்டுக்குருவியைக் கூட நான் பெங்களூரில் பார்த்ததில்லை என்பதும் உண்மை. அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது இன்றைய TOI செய்தி.
நீங்கள் சொன்னாற்போல் நகர விரிவாக்கம், செல்ஃபோன் டவர்கள் போன்றன அவை வாழ்வதற்கு உகந்த சூழலைத் தரவில்லை என்பதும் காரணம். இயற்கையின் ஆசி இன்னமும் இருக்கிற இடங்களில் அவை எப்போதும் போல் இருப்பதை துளசி மேடம் போலவே அமைதிச்சாரல், ஆசியா மற்றும் முனைவர். குணசீலன் ஆகியோரும் தெரிவித்திருக்கிறார்கள். காண இயலாதவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
அழிந்து வரும் பிற உயிரனங்களின் நிலைமையும் வருத்தம் தருபவைதான். இயற்கை ஆர்வலர்களின் செயல்பாடுகள் மக்களிடையே பொதுவாகவே இயற்கையின் மீதான அக்கறையை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதையும் மறுக்க இயலாது.
வின்சென்ட். said...
பதிலளிநீக்கு//கட்டுரையும் தொகுப்பும் அருமை. வாழ்த்துகள்.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தருமி said...
பதிலளிநீக்கு//சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - என்றொரு பாட்டு வரும். ஆனால் இன்று சிட்டு குருவிக்குத் தட்டுப்பாடு என்றாகி விட்ட வருத்தமான நிலை!//
அப்படிதான் ஆகி விட்டது. கருத்துக்கு நன்றி சார்.
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//அருமையான பகிர்வு.... நானும் குருவி பாயசம் குடித்த கதையை சொல்வதுண்டு. இப்போ ரோஷ்ணி எனக்கு இந்தக் கதையை சொல்கிறாள்...//
நன்றி ஆதி. நாம் சொன்ன கதையே நமக்குத் திரும்பி வருகையில் பொறுமையாகதான் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்:)!
//கூடு இங்கே குருவி எங்கே.. //
பதிலளிநீக்குபதிவு மற்றும் பின்னூட்டம் படித்தப் பிறகு, பலரது உள்ளத்தில் இருப்பது புரிகிறது.
நல்ல பதிவு.
@ அமைதி அப்பா,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
//மானுடருக்கான கூடு மட்டும் இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காகப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்தான் பூமி பூமியாக இருக்க முடியும்.//
பதிலளிநீக்குமனதில் பதிய வேண்டிய வரிகள்.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பகிர்விற்கு நன்றி
ராமலக்ஷ்மி படம் அருமை.
பதிலளிநீக்குசிட்டுக்குருவிகள் சத்தம் அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்மை எதோ காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். நீங்கள் கூறியது போல காந்த அலைகள் காரணமாக குருவிகள் அங்கே வராமல் இருந்து இருக்கலாம். எங்கள் வீட்டு அருகேயும் இது போல ஒரு கோபுரம் உள்ளது ஆனால் அங்கே உள்ள ஆலமரத்தில் மாலை வேளைகளில் குருவிகள் சத்தம் இருக்கும். காந்த அலைகள் இவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்.
சில வீடுகளில் குருவி சத்தமே இல்லாததால் செயற்கையாக குருவி சத்தம் வருவது போல தங்கள் வீட்டில் கருவியை வைத்து இருக்கிறார்கள்... அது குருவி போல இடைவெளிவிட்டு சத்தம் எழுப்பும். என்ன தான் இருந்தாலும் உண்மையான குருவிகள் கத்துவதைப் போல ஒரு திருப்தி வராது. ஒன்றும் இல்லாததற்கு இதை பயன்படுத்தலாம் :-)
எப்போது இது போல் ஒரு விசயத்துக்கு தினம் வருகிறதோ அதனுடைய முக்கியத்துவம் குறைந்து வருகிறது அதனால் அதை கூட்ட இப்படி ஒரு தினம் அமைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
சிட்டுக்குருவிகள் சத்தம் சிலருக்கு நாரசம் சிலருக்கு இனிமை :-)
@ கிரி,
பதிலளிநீக்குசெயற்கை சத்தத்தை எந்த அளவுக்கு ரசிக்க முடியுமெனத் தெரியவில்லை. ஆம், முக்கியத்துவத்தை அதிகரிக்கவே இத்தகு தினங்கள். ஓரளவேனும் விழிப்புணர்வு ஏற்படும்.
குருவிகளின் சத்தம் பிடிக்காதவர்களும் இருப்பாங்களா:)?
கருத்துக்கு நன்றி கிரி.
சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து....
பதிலளிநீக்குஅவசியமான பகிர்வு.காப்போம்.
raji said...
பதிலளிநீக்கு//நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பகிர்விற்கு நன்றி//
நன்றி ராஜி.
மாதேவி said...
பதிலளிநீக்கு//அவசியமான பகிர்வு.காப்போம்.//
நன்றி மாதேவி.
மீண்டும் படித்தேன் என் பதிவை , உங்கள் பதிவையும் மீண்டும் படித்தேன் நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா:).
நீக்கு