Monday, March 2, 2009

முயற்சிகள் வெற்றிகள் விருதுகள் நன்றிகள்

'விகடனில் நானும்' என பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து யூத்ஃபுல் விகடனில் என் படைப்புகள் இடம் பெற்று வருகின்றன. இன்று எனது குறள் கதை வெளியாகியுள்ளது. நன்றி இளமை விகடன்!
அடுத்த மகிழ்ச்சி 'டாப் டென்னில் நானும்...!'

நமது வலைப்பூக்களாகிய செடிகளில் மொட்டு விடும் பதிவுகள் ஒவ்வொன்றும் மலருகையில் அதன் மணத்தைப் பரப்பி வரும் தோட்டம் இப்போது விருது விழா 2008 என்கிற மலர்க் கண்காட்சியை நடத்தி முடித்திருக்கிறது! நன்றி தமிழ்மணம்!

வெற்றி பெற்ற யாவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

முதல் சுற்றில் 'கலாச்சாரம்' பிரிவில் எனது "திண்ணை நினைவுகள்:கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்" மூன்றாவது இடத்தில்.

முத்துலெட்சுமி எழுதிய திண்ணை பதிவினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு வரையும் மடலாகவே நான் ரசித்து ரசித்து நினைவுகளில் மூழ்கி மூழ்கி எடுத்த முத்து.

'காட்சிப் படைப்பு' பிரிவில் "எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]" நாலாவது இடத்தில்.

மாதாமாதம் விதவிதமான தலைப்புகள் தந்து நமக்கு புகைப்பட போட்டிகள் நடத்தும் PiT குழுவினரால் எழும்பிய ஆர்வம். அவர்களுக்கு நன்றி ஏற்கனவே நவின்றாகி விட்டது எனது ஜனவரி மாத பிட் பதிவில்.டெக்னிக்கலாக அதிகம் தெரியா விட்டாலும் புகைப்படங்களை நான் கவிதையுடனும், ஒரு மெசேஜ் அல்லது கான்செப்டுடன் அளிக்கும் விதத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்கிறேன். இப்பதிவு வரிசையில் முந்தும் என என்னை விட ஆர்வத்துடன் ஆருடம் சொன்ன திகழ்மிளிருக்கும் நன்றி:)!

படைப்பிலக்கியப் பிரிவில் "'புகை'ச்சல்" கவிதை பதினைந்தாவது இடத்தில். ‘புகையைக் கை விடுங்களேன்’ என்று இதில் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் செய்தி மனதுக்குத் தருகிறது மகத்தான திருப்தி.

ஆக.. என் பதிவுகள் இவ்விடங்களுக்கு வரக் காரணமாய் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!

இந்த நேரத்தில் "For the coolest Blog I ever Know" எனும் மேலிருக்கும் பட்டாம்பூச்சி விருதை வரிசையாக எனக்கு வழங்கிய கடையம் ஆனந்த் [என் பதிவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகையில் 'எப்போது அடுத்தது' என எழுப்பிடுவார் கேள்வி], என் சிறுகதைகளையும் செய்தி சார்ந்த கவிதைகளையும் பாராட்டி வழங்கிய பாசமலர், டைமிங்காகக் கவிதைகள் போடுவதாய் சிலாகித்து, செல்லமாக ‘வலையுலகக் கவிக்குயில்’ என அழைப்பதில் மகிழும் புதுகைத் தென்றல், 'புகைப்படம், எனது கருத்து, தொடர்ந்த முயற்சிகளைப் பாராட்டி' வழங்கிய மதுமிதாவுக்கும் என் நன்றிகள்.

கூடவே, வழங்க விரும்புவதாகப் பதிவிட்ட அமுதா, சந்தனமுல்லை, தர விரும்புவதாக தனி மடல் அனுப்பிய ரிஷான் ஷெரீஃப் இவர்களுக்கும் என் நன்றி!  எங்கு திரும்பினும் திறமைகளாய் கொட்டிக் கிடக்கும் பதிவுலகில் எந்த மூவரை எனத் தேர்ந்தெடுப்பீர்களென அவருக்கு பெற்ற விருதினை அத்தனை பேருக்கும் பிரித்துக் கொடுக்குமாறுஅவருக்கு வழங்கிய ஆலோசனையை நானும் கடைப்பிடிக்கிறேன் இப்போது. 

உத்வேகம் தந்தவர்கள்:


நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் மூவர். முதலாவதாக நெல்லை சிவா.தமிழில் வலைப்பூ என்பதை இவரது மின்மினி மூலமே அறிந்தேன். அப்போது பதிவுலகினுற்குள் வராத காலமாகையால் பின்னூட்டங்கள் அதிகம் இட்டதில்லை. இருப்பினும் பல பதிவுகளை ரசித்துப் படித்திருக்கிறேன்.

அடுத்து நைன்வெஸ்ட் நானானி. இவரது பதிவுகளால் ஈர்க்கப் பட்டு இட ஆரம்பித்த பின்னூட்டங்களே என் பதிவுலகப் பிரவேசம்,தொடர்ந்து என் ஒவ்வொரு பதிவையும் உற்சாகப் படுத்தி வருபவர்.

வள்ளுவம் கோமா. நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை, திண்ணை இணைய இதழ் ஆகியவற்றில் வந்த என் எழுத்துக்கள் அத்தனையும் அறிந்தவர், அப்போதே ஊக்கம் தந்தவர், வலையிலும் வரவேற்பு கூறி என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டவர்.

இவர்களைப் போல நேரடியாக அன்றி, தன் எழுத்துக்களால் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தவர் இன்னும் தந்து கொண்டிருப்பவர் ஒருவர், சர்வேசன். எனது சமீபகால கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன் என்றால் அது மிகையாகாது. சர்வேசன்-ஆக்கியவன் அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது. சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. நன்றாயிருக்கிறது என்றதுமே தந்து விட்டார் என் வலைப்பூவுக்கு. எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன். ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகரல்லவா:)?

துளசி தளம் எல்லோருக்கும் கற்றிட பாடங்கள் கொண்ட நூலகம். பள்ளி நினைவுகள், வாழ்க்கையில் கடந்த வந்த பாதைகள் ['அக்கா’ தொடர்] ஆகியவற்றைப் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அது போல எழுத முடியுமா தெரியாது. ஆனால் அப்படி ஒரு ஆசை அடி நெஞ்சில் இருக்கிறது. ஒரு புகைப்படப் பதிவை எப்படி சுவாரஸ்யமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பொறியை இங்கிருந்தே பெற்றேன். எனக்கேற்றவாறு ஒருபாணியை அமைத்தும் கொண்டேன். அதே போல பின்னூட்டமிடுபவர் ஒவ்வொருவரையும் ‘வாங்க’ என அன்பாய் விளித்துப் பதிலளிப்பார். தனித்தனியாக பதில் தரவும் இவரிடமே கற்றேன்.


ஊக்கம் தந்தவர்கள்:


ஒருவரா இருவரா எத்தனை பேர். இருந்தாலும் சிலரைக் குறிப்பிட்டாக வேண்டும். இணைய இதழ்களில் எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த ரிஷான் ஷெரீஃப், கவிதைகளை எளிமையாய் எழுதுதிலும் இருக்கிறது ஒரு நன்மை, சுலபமாய் நுழைந்து விடும் பிறர் மனதிலே சொல்ல வந்த கருத்து எனப் புரிய வைத்த கிரி, தூரத்தில் இருந்தபடி வலைப்பூ அமைப்பில் என்ன சந்தேகம் வந்தாலும் உடனுக்குடன் தீர்த்து வைக்கும் தமிழ் பிரியன், எழுதுவோடு நின்றிடாமல் புகைப்படங்களிலும் கவனம் செலுத்துங்கள் என ஃப்ளிக்கர் தளத்தில் நுழையக் காரணமாய் இருந்த ஜீவ்ஸ், பத்திரிகைகளிலும் முயற்சிக்குமாறு அடிக்கடி ரிஷானைப் போலவே வலியுறுத்தி வரும் ஷைலஜா, தனிமடலில் இலக்கியம் பேசும் சதங்கா[இருவருக்கும் இருந்த ‘விகடனில் நுழையும் கனவு’ மெய்ப்பட்டது ஒரே சமயத்தில் என்பது உங்களுக்கு கூடுதல் தகவல்!].

வலைக்குள் வந்த சமயத்தில் பலவிதமானவர்களின் படைப்புகள் படிக்கக் கிடைத்தன். அச்சமயத்தில் நாம் இத்தனை எளிமையாய் எழுதுவதும் கவிதைதானா என்கிற மிரட்சியுடன் திருவிழாவில் தொலைந்த குழந்தை போலத் ‘திருதிரு’வென விழித்து நின்ற போது ‘வாங்க அப்படியெல்லாம் பார்த்தால் நம் எண்ணங்களை நாம் வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாது போகும். மற்றவர் சொல்வதைப் பற்றி நினையாமல் மனதுக்கு பிடித்ததை செய்யலாம்’ என அன்போடு முத்துச்சரத்தைக் கை பிடித்து அழைத்துச் சென்று தன் வலைப்பக்கத்திலே ஓர் இடமும் தந்தவர் கவிநயா. எப்போதும் இவர் என் 'நினைவின் விளிம்பில்’.

அடுத்து வலைச்சரம். அங்கு ஆயில்யன், தமிழ்பிரியன், நானானி, கவிஞர் N.சுரேஷ், ரிஷான் ஷெரீஃப், ரம்யா,கோமா ஆகியோர் எனக்களித்த பாராட்டு. அதற்குக் களம் தந்த சீனா சார். எனக்கு இவற்றால் அதிகரித்தது ஒரு பொறுப்புணர்வு.

உடன் வருபவர்கள்:


இவர்கள் உடன் மட்டும் வரவில்லை உத்வேகம் ஊக்கம் ஆகியவற்றோடு உற்சாகத்தையும் சேர்த்துத் தருபவர்கள். என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்த்த மறக்காத வல்லிம்மாவில் ஆரம்பித்து பலரும் இருக்கிறீர்கள். தனித்தனியாக யாரையும் குறிப்பிடவில்லை என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

வலைப்பூவைத் தொடருபவர்கள், follower ஆக இல்லாவிட்டாலும் தொடர்ந்து என் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து உள்ளார்த்தமான கருத்துக்களைப் பதிந்து செல்லுபவர்கள், 'பரவாயில்லை இனித் தொடர்ந்திடலாமோ முத்துச்சரத்தை' என இப்போது நினைக்கின்ற சில பேர்கள்.. இவர்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!105 comments:

 1. சும்மா கலக்கிறீங்க.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்துக்கள்கா.

  // எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த ரிஷான் ஷெரீஃப்,//

  :-))

  ReplyDelete
 3. நல்வாழ்த்துக்கள்...
  இன்னும் நிறைய சாதிப்பீர்கள்

  எட்டுகின்ற தூரத்தில்
  இன்னும் இருக்கின்றது
  வெற்றிகள் பல

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் மேடம்.. மேலும் மேலும் உங்களுடைய படைப்புகளின் மூலம் நீங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  பாராட்டுக்கள்

  ReplyDelete
 6. //இலக்கினை நோக்காமல்
  சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?//

  'நச்' கவிதை சூப்பர்! (இதே கருத்தில் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதினேன், அந்த காலத்துல).

  மென்மேலும் உயரங்களும் சிகரங்களும் தொட மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 7. /*இலக்கினை நோக்காமல்
  சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?*/

  சுருக்கமாம விளக்கம் வெற்றிக்கு... மிக அழகு. மேன்மேலும் தங்கள் எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டு மிளிர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கலைவாணியின் அருள் எப்போதும் உங்களுக்கு உடன் வரும்.
  மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ராம்லக்ஷ்மி.
  சும்மா வரவில்லை விருதுகளும் வெற்றிகளும். மனதும்,புத்தியும்,உண்மையும் இணைந்ததால் இந்தக் கணம் வாய்த்திருக்கிறது.
  எப்போதும் வளம் பெற என் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 9. ம்ம்ம் அடிச்சு விளையாடுங்க....
  வாழ்த்துக்கள்.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 10. மிகவும் மகிழ்ச்சியா இருக்கு! இன்னும் நல்லா அடிச்சு ஆடனும்.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தமிழ் பிரியன் said...
  \\
  மிகவும் மகிழ்ச்சியா இருக்கு! இன்னும் நல்லா அடிச்சு ஆடனும்.. வாழ்த்துக்கள்!
  \\

  ரிப்பீட்டு!!

  கலக்குங்க!

  ReplyDelete
 12. மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

  தமிழ்பிரியன் பின்னூட்டத்துக்கு ஒரு 'ரிப்பீட்டே'

  // எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த ரிஷான் ஷெரீஃப்,//


  அட, ரிஷானு... நல்லா இருடே!

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி

  ReplyDelete
 14. அன்பின் ராமலக்ஷ்மி,

  அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும் !

  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அக்கா. மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  மேலும் உங்களுடைய படைப்புகளின் மூலம் நீங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. நான் எல்லாத்தையும் உட்காந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன்! எல்லா வாழ்த்தையும்!
  நமக்கு தெரிஞ்சவங்க வாழ்த்து வாங்கும் போது நாம உக்காந்து பார்த்து கைத்தட்டுவது கூட சந்தோஷம் தானே!

  சந்தோஷம் பிரண்ட்

  அன்புடன்
  அபிஅப்பா

  ReplyDelete
 17. வாழ்த்துகள்!!

  இன்னும் பல சாதனைகள் உங்களை நோக்கி வரவிருக்கின்றன.

  இன்னும் பல பின்னுட்டங்களை பாரட்டுகளாக்கி கொடுக்க உள்ளோம்.

  வாழ்த்துக்கள், உங்கள் சந்தோசம் எங்களையும் தொற்றிக் கொண்டது.

  உங்கள் வெற்றி விளையாட்டு தொடர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!!

  ReplyDelete
 18. அடடா. என்னென்னமோ சொல்லிப்புட்டீங்க. என் எழுத்து பொறி தந்ததுன்னு படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு. தன்யனானேன் :)

  //ஆக்கியவன் அளப்பவன் அல்ல //
  ஹிஹி. ஆக்கியவன் அல்ல அளப்பவன்.
  தொழில்லையே கைய வச்சுட்டீங்களே ;)

  //ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகன்// - no no, always Raja Fan ;)
  but, i like AR too. Fanன்னு வந்துட்டா, ராஜா தான்.


  வாழ்த்துக்களும், நன்றீஸும். :)

  ReplyDelete
 19. விகடனைக் குத்தகை எடுத்துவிட்டீர்களா என்று யோசிக்க வைக்கும் அளவில் உங்கள் படைப்புகள். வாழ்த்துகள். இதன் பின் இருக்கும் உழைப்பும், நல்லுள்ளமும் நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இன்னும் மென்மேலும் சிறப்புற மிளிர்வதற்கு வாழ்த்துகள் சகோதரி.

  அனுஜன்யா

  ReplyDelete
 20. கவிதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!!

  சீமாச்சு..

  ReplyDelete
 21. சாதனைச் செல்விக்கு
  வாழ்த்துக்கள்!

  தேவா.

  ReplyDelete
 22. ரொம்ப...ரொம்ப...ரொம்பரொம்ப சந்தோஷமாயிருக்கு மருமகளே!!!!

  ReplyDelete
 23. உங்கள் கவிதைப் பயணம் வெற்றியுடன் மேலும் மேலும் தொடரட்டும்..

  மனமார்ந்த வாழ்த்துகள்:)

  ReplyDelete
 24. //எட்ட வேண்டிய
  இலக்கினை நோக்காமல்
  சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?
  //

  நிச்சயம் கிட்டாது!

  ReplyDelete
 25. எல்லாருடைய வாழ்த்து பின்னூட்டத்தை படிச்சுட்டு நான் எதை சொல்லி வாழ்த்துவதுனு தெரியலை.

  நட்பு பாராட்டும் மனதுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. மகிழ்ச்சி!

  வாழ்த்துக்கள்!

  பாராட்டுக்கள்!

  சந்தோசம்!

  ReplyDelete
 27. மிக்க மகிழ்ச்சி!

  மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. வாஆஆஆஅவ். கலக்கிட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. :-)

  ReplyDelete
 29. நட்புடன் ஜமால் said...

  //வாழ்த்துகள்//

  முதல் வாழ்த்துக்கு நன்றி ஜமால்!

  ReplyDelete
 30. goma said...

  //சும்மா கலக்கிறீங்க.
  வாழ்த்துக்கள்//

  நன்றி. வாழ்த்துக்களுடன் உங்கள் ஆசிகளும் தொடரட்டும் வழக்கம் போல.

  ReplyDelete
 31. கார்த்திக் said...

  //வாழ்துக்கள்கா.//

  நன்றி கார்த்திக், கூடவே ஃபிளிக்கரில் நீங்கள் தரும் தொடர் ஊக்கத்துக்கும்:)!

  \\// எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த ரிஷான் ஷெரீஃப்,//

  :-)) \\//

  அட எதற்கு இந்த ஸ்மைலிங்கறேன்:)? //‘இணைய இதழ்களில்’ எழுதுவதை...// எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள்:)!

  ReplyDelete
 32. தங்கராசா ஜீவராஜ் said...

  //நல்வாழ்த்துக்கள்...
  இன்னும் நிறைய சாதிப்பீர்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஜீவராஜ்.

  //எட்டுகின்ற தூரத்தில்
  இன்னும் இருக்கின்றது
  வெற்றிகள் பல//

  சுட்டுகின்ற விரலுக்கு என்றென்றும் என் நன்றிகள்! கருத்தினில் கொண்டேன்!

  ReplyDelete
 33. சந்தனமுல்லை said...

  //:-) வாழ்த்துகள்..!//

  நன்றி முல்லை.

  ReplyDelete
 34. கார்த்திகைப் பாண்டியன் said...

  //வாழ்த்துக்கள் மேடம்.. மேலும் மேலும் உங்களுடைய படைப்புகளின் மூலம் நீங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்..//

  நன்றி கார்த்திகைப் பாண்டியன். தொடர்ந்து உங்கள் படைப்புகளும் விகடனில் இடம் பெற என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. புதுகைத் தென்றல் said...

  //மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  பாராட்டுக்கள்//

  பாராட்டுக்களுக்கு நன்றி தென்றல். கண்டிப்பாக என் வளர்ச்சியில் நீங்கள் அடைவீர்கள் மகிழ்ச்சி எனத் தெரியும்.

  ReplyDelete
 36. நீங்க விரலைவிடுத்து இலக்கை நோக்கியதால் தான் கிட்டியது உங்களுக்கு இந்த வெற்றி :-)

  ReplyDelete
 37. நேற்று இருமுறை முயன்று பின்னூட்டமிட இயலவில்லை..

  முத்துச்சரம் விருதுச்சரம் அணிய வாழ்த்துக்கள்.. :)

  ReplyDelete
 38. //அவ்வப்போது கோரிக்கை வைக்கும் புதுகை எம்.எம்.அப்துல்லாவின் கருத்துக்குக் காத்திருக்கிறேன்:)!

  //

  அக்கா என்ன விளையாட்டு இது???
  கான மயிலாட கண்டிருக்கும் வான் கோழி நான்.

  ReplyDelete
 39. கவிதை சிறுத்தாலும் கருத்து சிறுக்கவில்லை.

  அழகு. எங்கெங்கு காணினும் சக்தியடாதான் நினைவுக்கு வருகின்றது. :)

  ReplyDelete
 40. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். ஆபீஸ் ரொம்பக் கெட்டுப்போச்சு, இப்பல்லாம் வேலை செய்யச் சொல்லுறாய்ங்க :)

  ReplyDelete
 41. கவிநயா said...

  \\//இலக்கினை நோக்காமல்
  சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?//

  'நச்' கவிதை சூப்பர்! (இதே கருத்தில் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதினேன், அந்த காலத்துல). \\

  எங்களுக்கும் அதைக் காணத் தாருங்களேன் கவிநயா, இங்கே!

  //மென்மேலும் உயரங்களும் சிகரங்களும் தொட மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

  கூடவே உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கையில் எதுவும் சாத்தியம்தான். நன்றி கவிநயா.

  ReplyDelete
 42. கோவி.கண்ணன் said...

  // வாழ்த்துகள் !//

  தமிழ் அமுதம் விரும்புபவராகத் தொடரும் உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் கோவி. கண்ணன்.

  ReplyDelete
 43. அமுதா said...

  //சுருக்கமாம விளக்கம் வெற்றிக்கு... மிக அழகு. மேன்மேலும் தங்கள் எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டு மிளிர வாழ்த்துக்கள்//

  தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அமுதா.

  ReplyDelete
 44. வல்லிசிம்ஹன் said...

  //கலைவாணியின் அருள் எப்போதும் உங்களுக்கு உடன் வரும்.
  மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ராம்லக்ஷ்மி.//

  உங்கள் ஆசிகளுக்கு நன்றி வல்லிம்மா.

  //சும்மா வரவில்லை விருதுகளும் வெற்றிகளும். மனதும்,புத்தியும்,உண்மையும் இணைந்ததால் இந்தக் கணம் வாய்த்திருக்கிறது.
  எப்போதும் வளம் பெற என் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  வெற்றி எப்படி வாய்க்கும் என்பதை அருமையாக உணர்த்தி விட்டிருக்கிறீர்கள். அதைப் பொறுப்புணர்வோடு தக்க வைத்துக் கொள்வதும் நம் கையில்தான் என்பதும் புரிகிறது. வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 45. அன்புடன் அருணா said...

  // ம்ம்ம் அடிச்சு விளையாடுங்க....
  வாழ்த்துக்கள்.
  அன்புடன் அருணா//

  கூட விளையாட வாழ்த்த நண்பர்கள் இத்தனை பேர் இருக்கிறீர்களே. பிறகென்ன எனக்கு, நன்றி அருணா:)!

  ReplyDelete
 46. தமிழ் பிரியன் said...

  //மிகவும் மகிழ்ச்சியா இருக்கு! இன்னும் நல்லா அடிச்சு ஆடனும்.. வாழ்த்துக்கள்!//

  "இன்னுமா" ? சரிசரி இதையும் கருத்தில் ஏற்றிக் கொண்டேன்:)! ஆடுகிறேன். வாழ்த்துக்களுக்கும் தவறாமல் தரும் ஊக்கத்துக்கும் நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 47. தமிழன்-கறுப்பி... said...

  // வாழ்த்துக்கள்!//

  என் நன்றிகள் தமிழன், தமிழ் பிரியனை வழி மொழிந்திருப்பதற்கும்.

  ReplyDelete
 48. இப்னு ஹம்துன் said...

  //மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

  தமிழ்பிரியன் பின்னூட்டத்துக்கு ஒரு 'ரிப்பீட்டே'//

  நன்றி. இப்னு. ’ரிப்பீட்டே’க்கும் சேர்த்து.

  \\// எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த ரிஷான் ஷெரீஃப்,//


  அட, ரிஷானு... நல்லா இருடே!//\\

  நம்மை நல்வழி நடத்துபவர் கண்டிப்பாக நன்றாகவே இருப்பார் இப்னு:)!

  ReplyDelete
 49. பாச மலர் said...

  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

  நன்றி பாசமலர், வழங்கிய பட்டாம்பூச்சி விருதுக்கும்:)!

  ReplyDelete
 50. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //அன்பின் ராமலக்ஷ்மி,

  அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும் !

  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !//

  நன்றி ரிஷான், வாழ்த்துக்களுக்கும் தொடரும் உங்கள் ஊக்கத்துக்கும்!

  ReplyDelete
 51. கடையம் ஆனந்த் said...

  // வாழ்த்துக்கள் அக்கா. மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  மேலும் உங்களுடைய படைப்புகளின் மூலம் நீங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்..//

  உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 52. அபி அப்பா said...

  //நான் எல்லாத்தையும் உட்காந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன்! எல்லா வாழ்த்தையும்!
  நமக்கு தெரிஞ்சவங்க வாழ்த்து வாங்கும் போது நாம உக்காந்து பார்த்து கைத்தட்டுவது கூட சந்தோஷம் தானே!//

  மகிழ்ச்சியுடன் இப்போது தட்டுகின்ற கரங்களுக்கும் வெற்றிக்கான ”இலக்கைப் பார்” என நட்புடன் சுட்டிய விரலுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஃப்ரென்ட்:)!

  ReplyDelete
 53. RAMYA said...

  //வாழ்த்துகள்!!

  இன்னும் பல சாதனைகள் உங்களை நோக்கி வரவிருக்கின்றன.

  இன்னும் பல பின்னுட்டங்களை பாரட்டுகளாக்கி கொடுக்க உள்ளோம்.

  வாழ்த்துக்கள், உங்கள் சந்தோசம் எங்களையும் தொற்றிக் கொண்டது.

  உங்கள் வெற்றி விளையாட்டு தொடர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!!//


  மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ரம்யா!!

  ReplyDelete
 54. SurveySan said...

  //அடடா. என்னென்னமோ சொல்லிப்புட்டீங்க. என் எழுத்து பொறி தந்ததுன்னு படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு.//

  உங்கள் பதிவுகளில் முன்பே சொல்லியிருந்தாலும் இப்போது எல்லோரும் அறியச் சொன்னதில் எனக்கொரு திருப்தி:)!

  // தன்யனானேன் :)//

  இதைத்தான் சொல்லுவீர்கள் இப்போதும் என்று தெரியும்:)!

  \\//ஆக்கியவன் அளப்பவன் அல்ல //

  ஹிஹி. ஆக்கியவன் அல்ல அளப்பவன்.
  தொழில்லையே கைய வச்சுட்டீங்களே ;)\\

  அதனாலென்ன. அளந்தவற்றைப் ’பிறர் அறியத் தரும் அருமையான பதிவுகள்’ எனும் படைப்புகளை ஆக்கியவன்” என்றும் கொள்ளலாமல்லவா? [ஹிஹி எப்படி என் சமாளிப்பு? நீங்கள் சுட்டிக் காட்டிய மறுகணமே பதிவினில் சரி செய்து விட்டேன்:)!]

  \\//ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகன்// - no no, always Raja Fan ;)
  but, i like AR too. Fanன்னு வந்துட்டா, ராஜா தான்.//

  ஆமாமாம். ராஜாவைப் பற்றி சமீபத்தில் நீங்கள் நெகிழ்ந்து இட்ட பதிவும் நினைவிருக்கிறது. ராஜா ரஹ்மானைப் பாராட்டுவதை எல்லோருக்கும் வழங்கி பரவசப் பட்டதையும் பார்த்தேன்:)! நான் உங்கள் தன்னடக்கத்தைப் பற்றிச் சொல்லக் குறிப்பிட்டதுதான் அது. ராஜாவுக்கு ஜெய் ஹோ:)!

  //வாழ்த்துக்களும், நன்றீஸும். :)//

  நன்றி எல்லாவற்றிற்கும்.

  ReplyDelete
 55. அனுஜன்யா said...

  //விகடனைக் குத்தகை எடுத்துவிட்டீர்களா என்று யோசிக்க வைக்கும் அளவில் உங்கள் படைப்புகள். வாழ்த்துகள். இதன் பின் இருக்கும் உழைப்பும், நல்லுள்ளமும் நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இன்னும் மென்மேலும் சிறப்புற மிளிர்வதற்கு வாழ்த்துகள் சகோதரி. //

  உங்களைப் போன்றவர்களின் தொடர் ஊக்கமே இதற்கெல்லாம் காரணம் அனுஜன்யா. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 56. Seemachu said...

  //கவிதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!!

  சீமாச்சு..//

  உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 57. thevanmayam said...

  //சாதனைச் செல்விக்கு
  வாழ்த்துக்கள்!

  தேவா.//

  வாழ்த்துக்களுடனும் இன்னொரு விருதுமல்லவா கொடுத்து விட்டீர்கள்! அன்புக்கு நன்றி!

  ReplyDelete
 58. திகழ்மிளிர் said...

  //வாழ்த்துகள்//

  வாழ்த்துக்களுக்கும் உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் என் நன்றிகள் திகழ்மிளிர்.

  ReplyDelete
 59. நானானி said...
  //ரொம்ப...ரொம்ப...ரொம்பரொம்ப சந்தோஷமாயிருக்கு மருமகளே!!!!//

  ஆனந்தத்தில் ‘அத்தைமடி மெத்தையடி’ என நான் 'ஆடி விளையாடி' வளர்ந்த கதையை அம்பலத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்:)! ஆசிகள் தொடரட்டும் அத்தை!

  ReplyDelete
 60. Poornima Saravana kumar said...

  //உங்கள் கவிதைப் பயணம் வெற்றியுடன் மேலும் மேலும் தொடரட்டும்..

  மனமார்ந்த வாழ்த்துகள்:)//

  வாழ்த்துக்களுக்கு நன்றி பூர்ணிமா.

  ReplyDelete
 61. Poornima Saravana kumar said...

  \\//எட்ட வேண்டிய
  இலக்கினை நோக்காமல்
  சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?
  //

  நிச்சயம் கிட்டாது!\\

  பதிலை அழகாய் ஆணித்தரமாய் உரைத்தது நீங்கள் ஒருவரே:)! பாராட்டுக்கள்:)!

  ReplyDelete
 62. sindhusubash said...

  //எல்லாருடைய வாழ்த்து பின்னூட்டத்தை படிச்சுட்டு நான் எதை சொல்லி வாழ்த்துவதுனு தெரியலை.

  நட்பு பாராட்டும் மனதுக்கு எனது வாழ்த்துக்கள்.//

  இணைய இதழ்களில் எழுதுவதற்கும் வலைப்பூவில் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் சிந்து. அங்கு நம் எழுத்து தனியே பலருடன் பயணப் படும். இங்கு நண்பர்களுடனும் நம் எழுத்துடனும் நாமும் பயணத்தில் இருப்போம். அவர்கள் தரும் ஊக்கம் மென்மேலும் ஆக்கங்களைத் தரவும் வழி செய்கிறது. அந்த நட்பை நல்ல உள்ளங்களைப் பாராட்டித்தானே ஆக வேண்டும்.

  ReplyDelete
 63. ஜீவன் said...

  //மகிழ்ச்சி!

  வாழ்த்துக்கள்!

  பாராட்டுக்கள்!

  சந்தோசம்!//

  நன்றி நன்றி நன்றி ஜீவன்:)!

  ReplyDelete
 64. வெயிலான் said...

  //மிக்க மகிழ்ச்சி!

  மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.//

  உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வெயிலான்.

  ReplyDelete
 65. Truth said...

  //வாஆஆஆஅவ். கலக்கிட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. :-)//

  உங்கள் சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்கிறது. நன்றி ட்ரூத். இங்கு நான் எனக்கு உத்வேகம் தந்தவர்களைப் பற்றிக் கூறியிருக்க, எனது எழுத்துக்கள் உங்களுக்கு உத்வேகம் தந்தாக நீங்கள் மறுபடி குறிப்பிட்டு எழுதிய பதிவினையும் இன்று பார்த்தேன். அதற்கும் என் நன்றிகள்:)!

  ReplyDelete
 66. வருண் said...

  //நீங்க விரலைவிடுத்து இலக்கை நோக்கியதால் தான் கிட்டியது உங்களுக்கு இந்த வெற்றி :-)//

  விரலுக்கு நன்றியைக் கூறி விட்டு:)!. உண்மைதான் வருண். இலக்கினிலே நம் பார்வையைப் பதித்தால்தானே வரும் வெற்றி!

  ReplyDelete
 67. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  //நேற்று இருமுறை முயன்று பின்னூட்டமிட இயலவில்லை..//

  நேற்று எனக்கும் இந்த அனுபவம் இருந்தது, சிலர் பதிவுகளில். கூகுளில் பிரச்சனை இருந்திருக்கலாம்.

  //முத்துச்சரம் விருதுச்சரம் அணிய வாழ்த்துக்கள்.. :)//

  நீங்கள் அத்தனை பேரும் இதோ வழங்கியிருக்கும் வாழ்த்துச் சரம்தான் எனக்குப் பெரிய விருதுச் சரம்! வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 68. எம்.எம்.அப்துல்லா said...

  //அக்கா என்ன விளையாட்டு இது???
  கான மயிலாட கண்டிருக்கும் வான் கோழி நான்.//


  ’சின்ன’ கவிதை விளையாட்டுத்தானே, விடுங்கள்:)! அதற்கு ஏன் மயிலு கோழி எல்லாம்? உங்கள் ஆழமான் கவிதைகளை விரும்பி வாசிப்பவள் நான்.

  ReplyDelete
 69. எம்.எம்.அப்துல்லா said...

  //கவிதை சிறுத்தாலும் கருத்து சிறுக்கவில்லை.

  அழகு. எங்கெங்கு காணினும் சக்தியடாதான் நினைவுக்கு வருகின்றது. :)//

  அப்பாடா நன்றி:)! எழுதி முடித்ததுமே உங்கள் நினைவுதான் வந்தது. கவிதைக்கு மேலும் சில வரிகளைச் சேர்க்கத் துடித்த விரல்களை மடக்கிக் கொண்டு விட்டேன்:))!

  ReplyDelete
 70. எம்.எம்.அப்துல்லா said...

  //தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.//

  இப்போதுதான் அமுதம் விரும்பி அன்புடன் தொடருபவர்களில் இணைந்து விட்டீர்களே:)! அதற்கும் என் நன்றிகள்!

  //ஆபீஸ் ரொம்பக் கெட்டுப்போச்சு, இப்பல்லாம் வேலை செய்யச் சொல்லுறாய்ங்க :)//

  "வேலைக்கு அப்புறம்தான் வலை
  இல்லாவிட்டால் எரியுமா
  வீட்டிலே உலை:)?"

  ReplyDelete
 71. அக்கா சக்தி விகடன் கட்டுரைக்குப் பாராட்டுகள்.

  ஷைலஜா அக்காவோட ஒரு பதிவுல நான் போட்ட பின்னூட்டத்த இங்க ரிப்பீடிக்கிறேன்.....

  எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..

  :)

  ReplyDelete
 72. எம்.எம்.அப்துல்லா said...

  //அக்கா சக்தி விகடன் கட்டுரைக்குப் பாராட்டுகள்.//

  நன்றி அப்துல்லா. அப்படியே நீங்கள் முன்னர் போட்ட பின்னூட்டத்தைப் பாருங்கள்: //எங்கெங்கு காணினும் சக்தியடாதான் நினைவுக்கு வருகின்றது.//

  நீங்கள் அப்படிச் சொன்ன வேளைதான் விகடனின் சக்தி 2009 திறந்தாலே எங்கெங்கும் நாங்கள் உங்கள் சகோதரிகளே நிரம்பி நிற்கிறோம்:)! தொடரும் உங்கள் அனைவரது ஊக்கத்துக்கும் நன்றி நன்றி:)!

  கட்டுரையுடன் கூடவே எனது கவிதையொன்றும் வெளியாகியுள்ளது. கவனியுங்கள்:)!

  ReplyDelete
 73. பாராட்டுக்கள்
  அனைத்து படைப்புக்களையும் விகடன் இணைய இதழில் வாசித்தபின் பாராட்ட வந்தேன் .

  ReplyDelete
 74. goma said...

  //பாராட்டுக்கள்
  அனைத்து படைப்புக்களையும் விகடன் இணைய இதழில் வாசித்தபின் பாராட்ட வந்தேன்.//

  பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி:)! எல்லோரும் அங்கே வாசிக்க விட்டு மெதுவாக இங்கே வலையேற்றிடலாமென்றிருக்கிறேன்:)!

  ReplyDelete
 75. தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கணும். ஆணிபுடுங்கி, அள்ளிக் கொட்டினு ஒத்தை ஆளா செஞ்சுகிட்டு இருக்கேன் :((

  நானும் ஏதாவது வித்தியாசமா சொல்லி உங்களைப் பாராட்டலாம்னு பார்த்தால், ஒரு பயபுள்ள உடமாட்டேங்கிதே !!!

  எல்லோருடைய வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்தையும் இங்கு பதிந்து / பகிர்ந்து கொள்கிறேன்.

  பதிவில் தான் உங்கள் உழைப்பு இருக்கிறதெனப் பார்த்தால், ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும், பொறுப்புடன் பதில் தருவதும் அற்புதம்.

  உங்கள் பதிவுகள் போ[ல|ட] யூத்புல் விகடனும் களைகட்டிருச்சே :)))

  ReplyDelete
 76. @ சதங்கா,
  உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் எனக்கு உண்டெனத் தெரியும். அப்துல்லாவுக்கு சொன்னதேதான் உங்களுக்கும், வேலைக்குப் பின்னரே வலை:)! என்றைக்கும் என் பதில்களையும் பாரட்டத் தவறியதில்லை நீங்கள். அதற்கும் நன்றி. விகடன் மகளிர் தினச் சிறப்பு மலர் சக்தி 2009 நம் பதிவர்கள் எல்லோராலும் களை கட்டி நிற்கிறது பாருங்கள்:)!

  ReplyDelete
 77. //நீங்கள் அப்படிச் சொன்ன வேளைதான் விகடனின் சக்தி 2009 திறந்தாலே எங்கெங்கும் நாங்கள் உங்கள் சகோதரிகளே நிரம்பி நிற்கிறோம்:)!

  //

  அட எனக்கே புல்லரிக்கிது. மனதாரச் சொல்லும் வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிமை!!!!

  ReplyDelete
 78. வாழ்த்துகள் அக்கா!

  ReplyDelete
 79. எம்.எம்.அப்துல்லா said...
  //நீங்கள் அப்படிச் சொன்ன வேளைதான் விகடனின் சக்தி 2009 திறந்தாலே எங்கெங்கும் நாங்கள் உங்கள் சகோதரிகளே நிரம்பி நிற்கிறோம்:)!

  //

  அட எனக்கே புல்லரிக்கிது. மனதாரச் சொல்லும் வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிமை!!!!
  //
  எப்படி இப்படியெல்லாம்? கலக்குங்க அப்துல்லா கலக்குங்க.

  ReplyDelete
 80. மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்!
  //
  கட்டுரை அருமை. எங்கோயோ போய்ட்டீங்க. வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 81. பாராட்ட வார்த்தைகளை கிடைக்க மாட்டுக்குதே. தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். ம்... அப்புறமா வர்ரேன் அக்கா.

  ReplyDelete
 82. சர்வதேச மகளிர் தின வாழ்த்து வாழ்த்துக்கள் சகோதரி!!!

  மகளிர் மலரில் கண்டேன் அதற்கும் என் வாழ்த்துக்கள்!!

  இன்னும் நீங்க நிறைய வாழ்த்து பெற என் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 83. எம்.எம்.அப்துல்லா said...
  //மனதாரச் சொல்லும் வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிமை!!!!//

  உண்மைதான்! நன்றி அப்துல்லா.

  ReplyDelete
 84. நிஜமா நல்லவன் said...

  //வாழ்த்துகள் அக்கா!//

  நன்றி நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 85. @ கடையம் ஆனந்த்,
  சக்தி 2009 கட்டுரைக்கான தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 86. RAMYA said...

  //சர்வதேச மகளிர் தின வாழ்த்து வாழ்த்துக்கள் சகோதரி!!!//

  உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் ரம்யா.

  //மகளிர் மலரில் கண்டேன் அதற்கும் என் வாழ்த்துக்கள்!!//

  அக்கட்டுரையை இங்கும் வலையேற்றி விட்டேன் இப்போது:)!

  //இன்னும் நீங்க நிறைய வாழ்த்து பெற என் வாழ்த்துக்கள்!!//

  நன்றி ரம்யா.

  ReplyDelete
 87. இப்போது நீங்க லிங்க் குடுத்தபிறகுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 88. மதுமிதா said...

  //இப்போது நீங்க லிங்க் குடுத்தபிறகுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  உங்கள் விருதையும் பதிவிலே இணைத்துக் கொண்டேன் சந்தோஷமாய்:)! வாழ்த்துக்களுக்கும் நன்றி மதுமிதா!

  ReplyDelete
 89. வாழ்த்துக்கள் & நன்றி
  அன்புடன் என் சுரேஷ்

  ReplyDelete
 90. N Suresh said...

  //வாழ்த்துக்கள் & நன்றி//

  வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேஷ்!

  ReplyDelete
 91. வாழ்த்துகள்..வாழ்த்துகள்..வாழ்த்துகள்..!
  :)

  ReplyDelete
 92. @ Karthik,

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

  ReplyDelete
 93. //சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?//

  :-))) நல்லா இருக்கு

  நல்ல செய்திகள் பல.. அசத்துங்க :-)

  ReplyDelete
 94. கிரி said...

  \\ //சுட்டுகின்ற விரலை
  மட்டுமே பார்த்துநின்றால்
  கிட்டுமா வெற்றி?//

  :-))) நல்லா இருக்கு\\

  நன்றி கிரி:)! அதில் எனக்குப் பாதை காட்டிய எல்லோரது விரல்களும் அடங்கும் உங்களது உட்பட:)!

  //நல்ல செய்திகள் பல.. அசத்துங்க :-)//

  ஊரிலிருந்து நீங்கள் வந்து பார்த்து பாராட்டவே காத்திருந்து சதம் போட்டிருக்கு இப்பதிவு:)!

  ReplyDelete
 95. வாழ்க வளமுடன்

  விருதுகள் வாங்கிக் குவித்ததற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 96. @ தமிழ்செஞ்சம்,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 97. ராமலக்ஷ்மி....

  உங்கள் வெற்றியில் மற்றும் ஒன்று.. இன்று வந்த தினமலர் கம்ப்யுட்டர் மலரில் இந்த கவிதை வந்துள்ளது....

  ReplyDelete
 98. ஸ்வர்ணரேக்கா said...

  //ராமலக்ஷ்மி....

  உங்கள் வெற்றியில் மற்றும் ஒன்று..//

  நீங்கள் சொல்லியிருக்கும் விதமே அழகு. நன்றி சுவர்ணரேக்கா உங்கள் முதல் வருகைக்கும்.

  //இன்று வந்த தினமலர் கம்ப்யுட்டர் மலரில் இந்த கவிதை வந்துள்ளது...//

  ஊருக்கு ஃபோன் செய்திருக்கிறேன் பத்திரிகையை எடுத்து வைக்குமாறு:)! தகவலுக்கு நன்றிங்க!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin