1.
கழுவ விரும்புகிறேன்
இவ்வுலகின் புழுதியை
பனியின் துளிகளால்.
2.
நிலவற்ற இரவு
பலமான காற்று தழுவுகிறது
ஆதிகாலத்தைய தேவதருவை.
3.
நாள் முழுவதும்-
ஆயினும் போதவில்லை வானம்பாடிக்கு,
பாடுகிறது, பாடுகிறது.
4.
பாடுவது வானம்பாடியானாலும்
ஒலிக்கிறது உள்ளுக்குள்
காட்டுக்கோழியின் சோகக் கதறல்.
5.
வழிகாட்டுங்களேன் என் குதிரைக்கு
இந்தப் பெருவெளியில் எங்கே
குயில் பாடுகிறதென்று.
6.
செம்பரத்தையின் நறுமணம்
தோட்டத்தில் ஒரு அறுந்த செருப்பு
காலடித் தோல் மட்டும்.
7.
நிலவு..
சுற்றிச் சுற்றி வந்தேன் குளத்தை
இரவு முழுவதும்.
8.
பிரகாசமான சிகப்பில்
இரக்கமற்ற சூரியன்
இலையுதிர்க்காலக் காற்று.
9.
இந்த வீதியின் வழியே
செல்கிறது யாரும் உடனற்று
இலையுதிர்க்காலத்து மாலை.
10.
வசந்தகாலம் விடைபெறுகிறது
பறவைகள் அழுகின்றன
மீன்களின் கண்கள் கண்ணீரால் ததும்புகின்றன.
***
மூலம்:
ஜப்பானிய மொழியில்: Matsuo Basho
2 டிசம்பர் 2013 அதீதம் இதழுக்காக ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.
***
மட்சுவோ பஷோ (1644 -1694) புகழ் பெற்ற ஜப்பானின் இடோ காலத்துக்கவிஞர். இவரது வாழ்க்கைக் காலத்திலேயே "ஹைக்காய் னொ ரெங்கா" என்னும் கவிதைவடிவத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுருக்கமானவையும் தெளிவானவையுமாகக் கொண்டாடப்படும் ஹைக்கூ கவிதைகளில் வல்லுனராக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆசிரியராகத் தொழில் புரிந்த இவரது கவிதைகள் ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும், மரபு சார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
இலக்கியத் துறையினரின் சமூக மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளி, எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தவர். இவர் பெற்ற நேரடி அனுபவங்களே இவரது கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். காட்சிகளையும் உணர்வுகளையும் எளிமையான கூறுகளில் அடக்கியவர்.
***
தண்ணீரில் மீன் அழுதால் -அதன்
பதிலளிநீக்குகண்ணீரை யார் அறிவார்..!!??
கவித்துளிகள் அனைத்தும் அருமை அக்கா.
பதிலளிநீக்குபல பாடல்கள் ஞாபகம் வந்தது...
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையாக உள்ளன. பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.
பதிலளிநீக்குகுதிரை தேடும் குயில்! அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குமுத்துக்கள் போன்ற கவித்துளிகள் அனைத்தும் அருமை!!
பதிலளிநீக்குவானம்பாடிக்கவிதையும், வசந்தகால விடைபெறுதலும் மெலிதாய் ஒரு உலுக்கு உலுக்குகிறதே மனத்தை. மனம் தொட்ட கவித்துளிகள். நேர்த்தியான மொழியாக்கம். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குஉண்மை. நல்ல வரிகள். நன்றி இராஜராஜேஸ்வரி.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குவாழ்க்கையில் பல விஷயங்களைச் சொல்லும் துளிகளாக இவை. நன்றி தனபாலன்.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir!
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குகற்பனையும் செய்ய முடிகிறது. இல்லையா:)? நன்றி ஸ்ரீராம்.
@Menaga sathia,
பதிலளிநீக்குநன்றி மேனகா.
@கீத மஞ்சரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா.
அருமையான பகிர்வு..... அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குத.ம. 4
அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குDecember 2, 2013 at 2:29 PM
மீன்களின் கண்ணீர் இராஜராஜேஸ்வரி சொல்வது போல த்ண்ணீரில் மூன் அழுதால் யாருக்கு தெரியும்? மீனுக்கும் சோகம் இருக்கும் என் சொல்லும் கவிதை அருமை.
பதிலளிநீக்குவசந்தகால விடைபெறும் போது இலைகளை உதிர்த்த மரங்களை பார்த்தும், அதில் தங்கும் பறவை கூட்டங்கள் எங்கும் தங்கும் என்று நினைத்து வருத்தபட்டு இருக்கிறேன்.
கவித்துளி பத்தும் அருமை.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@Kanchana Radhakrishnan,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குமிக்க நன்றி கோமதிம்மா.
இன்றைய வலைச்சரத்தில் இந்த கவிதை இடபெற்றுள்ளது ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வணக்கம் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_20.html
நன்றி.