பறவைகள் என்ன சொல்கின்றன, கேட்டிருக்கிறாயா?
குருவி, புறா, இசைக்கும், பாடும் பறவைகள் சொல்கின்றன:
“நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன்”
குளிர்காலத்தில் அவை மெளனமாக இருக்கின்றன
காற்று மிகப் பலமாக வீசுகிறது
அப்போது அவை என்ன சொல்கின்றன
எனக்குத் தெரியாது
ஆனால் சத்தமானப் பாடல்களைப் பாடுகின்றன.
பச்சை இலைகள் துளிர்க்க, பூக்கள் மலர
கதகதப்பான இளம்வெயிலுடன்
பாடுதல் நேசித்தல் எல்லாம் திரும்பி வருகின்றன.
பசும்வயல் கீழ் இருக்க, நீலவானம் மேல் இருக்கத்
ததும்புகிறது வானம்பாடி மகிழ்ச்சியினாலும் அன்பினாலும்.
பாடுகிறது, பாடுகிறது; பாடிக் கொண்டே இருக்கிறது --
‘என் அன்பை நான் நேசிக்கிறேன், என் அன்பு என்னை நேசிக்கிறது!”
***
மூலம் ஆங்கிலத்தில்:Answer To A Child's Question
By
Samuel Taylor Coleridge
படம் நன்றி: இணையம்
1 ஜனவரி 2013, அதீதம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.
எவ்வளவு அழகா எழுதி இருக்கீங்க. நன்றிங்க, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//என் அன்பை நான் நேசிக்கிறேன், என் அன்பு என்னை நேசிக்கிறது!”//
பதிலளிநீக்கு1957 க்கு நான் சென்றேன்.
இந்த வாக்கியத்தில் உருகிய எனது ஆங்கில ப்ரொஃபசர் ( அவர் ஃப்ரெஞ்சு )
ஃபாதர் பேஸ் முகமும் , அப்பறவையின் உள்ளத்தை எதிரொலித்த வர்ணனையும் என்
நெஞ்சை இன்னமும் அள்ளுகின்றது.
சுப்பு ரத்தினம்
வணக்கம் சகோதரி.
பதிலளிநீக்குகுளிர் காலத்தில் அவை மௌனமாக இருக்கின்றன.-
நான் நினைக்கிறேன் அவை தமது சக்தியைச் சேமிக்கின்றன என்று .
மிக மென்மையான ஓரு பதிவு. மிக்க நன்றி. முயற்சிக்கு இனிய வாழ்த்து.
(தங்கள் வலைக்கு இன்று முதலாக வந்துள்ளேன்)
இனிய 2013 புத்தாண்டு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
அழகியதொரு பாடலுக்கு அற்புதமானதொரு மொழிபெயர்ப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய் புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
இதமான கற்பனை.
பதிலளிநீக்குவெகு அழகு. அவர் கவிதை அழகு என்றால் உங்கள் மொழிபெயர்ப்பு மனதை எங்கோ இழுத்துச் செல்கின்றது. அந்தப் பறவை போல இனிமை நெஞ்சம் படைத்தவராக அன்று அன்று கிடைப்பதைப் பூரணமாக அனுபவித்துச் சந்தோஷமாக இருக்கக் கற்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.நன்றி.
பதிலளிநீக்குவெகு அருமை. குழந்தையின் கேள்விக்கு அன்பைப் போதித்த கவிதை மனதினைக் கொள்ளை கொண்டது. அழகா மொழிபெயர்த்திருக்கீங்க.
பதிலளிநீக்குஅன்பு கொடுக்க கொடுக்க தான் வளரும். இருபக்கமும் அனபு இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குமரம் செடி, கொடிகள தளிர்க்க ஆரம்பித்தவுடன் இவைகளும் பாட ஆரம்பித்து விடுகின்றன்.
வாழ்க்கையில் எல்லா உயினங்களுக்கும் வசந்தக்காலம் வந்தால் மகிழ்ச்சி தான்.
அழகிய கவிதை, அருமையான மொழிபெயர்ப்பு.
அருமையான பகிர்வு..ராமலஷ்மி.
பதிலளிநீக்குஅழகான கவிதை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிங்க.
பதிலளிநீக்கு/என் அன்பை நான் நேசிக்கிறேன், என் அன்பு என்னை நேசிக்கிறது!”//
பதிலளிநீக்குஅழகான அன்பான ஆக்கம்..
@பூந்தளிர்,
பதிலளிநீக்குநன்றி.
@sury Siva,
பதிலளிநீக்குமகிழ்ச்சி. மிக்க நன்றி.
@kavithai (kovaikkavi),
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்கு/அன்று கிடைப்பதைப் பூரணமாக அனுபவித்துச் சந்தோஷமாக இருக்கக் கற்க வேண்டும்./
ஆம் வல்லிம்மா. நன்றி.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குஅழகான கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
@Asiya Omar,
பதிலளிநீக்குநன்றி ஆசியா.
@Sasi Kala,
பதிலளிநீக்குநன்றி சசிகலா.