சனி, 5 ஜனவரி, 2013

சூரியனைக் கண்டாலே உற்சாகம் - குங்குமம் தோழியில்.. சுபா ஸ்ரீகுமாருடன் ஒரு கலந்துரையாடல்


 
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. அது அவரவர் செயல்களிலும், ஈடுபடும் கலைகளிலும் பிரதிபலிக்கிறது. “புகைப்படக் கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்று கூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழும்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்” என்கிற சுபா ஸ்ரீகுமாரின் உள் அரங்கு ஒளிப்படங்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. மகிழ்ந்து மகிழ்விக்கும் கலைஞர் இவரின் ஒளிப்பட அனுபவங்களைக் கேட்கலாம் வாருங்கள், அவர் எடுத்த படங்களையும் ரசித்தபடி...

#பக்கம் 11

#பக்கம் 12

#பக்கம் 14

# பக்கம் 15

வாழ்த்துகள் சுபா:)! 
*** 

 நன்றி குங்குமம் தோழி! 
*** 

32 கருத்துகள்:

  1. மன உணர்வைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள். தன் புகைப்படங்கள் பார்த்து யாரும் மனம் சோரக் கூடாது, என்னும் சுபாவின் வார்த்தைகள் 'அட' போட வைக்கின்றன. புகைப்படங்களும் அழகு. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் உற்சாகம் உங்கள் தோழி பத்திரிகையிலும் இன்னுமொரு கலைஞரின் மூலம் வெளிப்படுகிறது ராமலக்ஷ்மி. சக கலைஞரின் திறமிகளை வெளிக் கொணர்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
    தோழி சுபாவின் எண்ணங்கள் அவர் படங்களில் பிரதிபலிக்கின்றன.மனம் நிறைந்த வாழ்த்துகள் சுபா.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையூட்டும் காலை. செய்தி .கூடவே மனம் பூக்கும் மகிழும் வண்ணப்பதிவுகள் .
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா! இது மாதிரியெல்லாம் படங்களைப் பார்க்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.பகிர்வுக்கு நன்றி ராமலஷ்மி..!
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பகிர்ந்த இருவருக்குமே!

    பதிலளிநீக்கு
  5. சுபாவின் படங்களை ரசித்தது போலவே அதனுடன் இருக்கும் வரிகளையும் மிக ரசித்தேன். அருமையான ஒரு புகைப்படக் கலைஞரை அறிமுகம் செய்தமைக்கு நன்றியும் அநதக் கலைஞருககு என் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. மனதிற்கு மகிழ்வு தரும் வரிகள் சுமந்து வந்த படப்பகிர்வு நன்றிங்க இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கலந்துரையாடல்.
    பகிர்வுக்கு நன்றி.
    சுபா ஸ்ரீகுமாருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு அதுவும் மல்லிகை மொட்டூக்கள் சூப்பெர். நல்ல கலைஞரை அறிமுகம் செய்த்தற்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. சாமிகள் கைகளில் ஆயுதங்கள் யாரைப் பாதுகாக்க என்ற தலைப்பிலே இருக்கும் படத்தை
    ரசித்துப்பார்த்தேன்.

    அது சரி. அந்த பெண் கடவுள் கையிலே பூ தானே இருக்கிறது ?
    அது எப்படி ஆயுதமாகும் ?
    ஒஹோ ! பூவே ஒரு ஆயுதமாகவும் இருக்கலாமே !!
    மன்மதன் சிவனை நோக்கி ஒரு மலரை த் தானே எறிந்தான் இல்லயா !!

    அடுத்தது...

    இந்த இரண்டு சாமியும் வெவ்வேறு திசையை நோக்கி இருந்தது பார்த்தது
    கொஞ்சம் , என்ன கொஞ்சம் ? நிறையவே, மனசுக்கு கஷ்டமா இருந்தது.

    ஏதேனும் மனஸ்தாபமா ? ஊடலா !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  10. உற்சாகம் அளிக்கும் வார்த்தைகளும், ரசிக்க வைக்கும் புகைப்படங்களும் ஒரு நல்ல கலைஞரை தெரிந்து கொண்ட சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  11. அருமையான படங்கள்..
    வாழ்த்துகள் சுபா ..!

    பதிலளிநீக்கு
  12. நல்ல புகைப்படக்கலைஞரை அறிமுகம் செய்துள்ளீர்கள் அதே கலையில் ஆர்வம் உள்ள நீங்கள் இதை கூறி உள்ளது சிறப்பு

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு கலைஞரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஓலைப்பெட்டி, பனையோலை விசிறி, பித்தளைத் தம்ளர், அஞ்சறைப் பெட்டி, மொட்டு மொட்டா மல்லி..... ம்ம்.. நம்ம ஏரியா!! அழகு!!

    பதிலளிநீக்கு
  15. @Nellai.S.S.Mani,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @இராஜராஜேஸ்வரி,

    உங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. @ஹுஸைனம்மா,

    முடிந்தால் அவரது ஃப்ளிக்கர் தளம் சென்று பாருங்கள் ஹுஸைனம்மா:)! ரசிக்க இன்னும் ஏராளமாக உள்ளன, கல்லில் வார்க்கப்பட்ட தோசை உட்பட:
    http://www.flickr.com/photos/55960431@N06/7532336000/

    பதிலளிநீக்கு
  18. படங்கள் கண்ணையும் அதனுடன் உள்ள குறிப்புகள் மனத்தையும் கவர்ந்து விட்டது.

    வாழ்த்துக்கள் தங்களுக்கும், சுபாவிற்கும்.

    பதிலளிநீக்கு
  19. பகிர்வுக்கு நன்றி.
    சுபா ஸ்ரீகுமாருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin