கடந்த ஞாயிறு மாலை பெங்களூர் கப்பன் பார்க்கில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வாகை அமைப்பின் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இணையத்தில் வலைப்பூ மூலமாக இயங்க ஆரம்பித்த கடந்த நான்கரை வருடங்களில் சந்திப்புகள் சில நடந்திருக்கின்றன, இதே கப்பன் பூங்காவில். விரல் விட்டும் எண்ணும் அளவில், வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தபோது நிகழ்ந்தவை. (இன்னொரு சமயம் முந்தைய சந்திப்புகள் குறித்தும் பகிர்ந்திடுகிறேன்.) புகைப்பட ஆர்வலர்கள் சந்திப்பாக ஒருமுறை. இவை எல்லாமே பதிவுகள், மின்னஞ்சல், அலைபேசிகளின் வாயிலாக முன்னதாக அறிமுகமானவர்களின் சந்திப்பாக இருந்திருக்கின்றன. மாறாக முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘வாகை’.
‘வாகை’
அமைப்பின் சந்திப்புகள் informal ஆகவே அமையும் என அறிவிப்பானதே ஒரு
ஆரோக்கியமான வரவேற்கத் தக்க ஆரம்பமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல்
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை நடைபெறும் வாகை சந்திப்புகள்.
#2
#3
வரிசையாக அவரவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ‘ஓ இவரா அவரு’ என எங்கேனும் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும் கூட, தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் போதே அடையாளம் தெரிந்தது சிலரை. கலந்து கொண்டவர்களில் நினைவிலிருந்த சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்: ‘வடக்குவாசல்’ ஆசிரியர் பென்னேஸ்வரன்; ஷைலஜா; வா. மணிகண்டன்; ஐயப்பன் கிருஷ்ணன்; பிரசாத் வேணுகோபால்; பா.வெங்கடேசன்; தூரன் குணா; ஸ்ரீனி, (சுஜாதா) தேசிகன்; அருளினியன்; சுஜாதா செல்வராஜ், ந. பெரியசாமி, மதியழகன், ராம் சின்னப்பயல், ‘கற்போம்’ பிரபு, பவளராஜா.
#4
ஓங்கி நின்ற மரங்களின் நிழலில், பச்சைப்பசும் புல்வெளியில், மார்கழிக் குளிரை நெருங்க விடாமல் மாலையை இதமாக்கிக் கொண்டிருந்த சூரியக் கதிர்களின் ஒத்துழைப்பில், இயற்கையின் மடியில், இறுக்கங்கள் ஏதுமற்ற இயல்பான சூழலில் வெளியானது வா.மணிகண்டனின் ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ கவிதைத் தொகுப்பு.
#5
பா.வெங்கடேசன் அவர்கள்(வலப்பக்கம் நிற்கிறார்) வெளியிட தூரன் குணா அவர்கள் பெற்றுக் கொள்கிறார். நடுவில் கவிஞர். |
வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் அவர்களுக்கு (இடது பக்கம் நிற்கிறார்) ஸ்ரீனி அவர்கள் வழங்குகிறார் |
காலச்சுவடு பதிப்பக வெளியீடான இந்நூல் கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. தொகுப்பிலிருந்த கவிதைகள் குறித்து பா.வெங்கடேசனும், தூரன் குணாவும் உரையாற்றினார்கள். பா.வெங்கடேசன் தனக்குப் பிடித்தமான மூன்று கவிதைகளை வாசித்துக் காட்டியபோது அதில் அக்கவிதைகள் குறித்தான அவரது உணர்வுகளும் பிரதிபலித்தன.
வாழ்த்துகள் மணிகண்டன்! |
சிங்கம், புலியைக் கூட அச்சப்படாமல் எதிர்கொள்ளலாம் போலும். ஆறுமணி தாண்டி, இருட்டத் தொடங்குகையில் கொசுக்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, டெங்கு பயத்தில் எழுந்து கொள்ள ஆரம்பித்தார்கள் நண்பர்கள். பெரிய வட்டமாக அமைந்து விட்டதில் மறுமுனையிலிருப்பவர்கள் பேச்சைக் கேட்க சற்றே சிரமப்பட வேண்டியிருந்திருக்கலாம். மூட்டுவலி காரணமாய்க் கீழே அமர இயலாத ஓரிருவர் நின்றபடியே கலந்து கொண்டோம். சின்னச் சின்ன அசெளகரியங்களை வரும் நாளில் கலந்தாலோசித்துக் களைந்திடலாம். ‘மாதத்தின் முதல் ஞாயிறு, மாலை நான்கு மணி’ என்பதில் மாற்றம் இல்லாவிட்டாலும் சந்திப்புகள் நடைபெறும் இடம் மாறலாம். தில்லியில் இருந்து தன் சொந்த ஊர் கிருஷ்ணகிரிக்கு வந்திருந்த திரு பென்னேஸ்வரன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது போல, அவ்வப்போது பெங்களூர் வந்து செல்லும் முக்கிய ஆளுமைகளைச் சிறப்பு விருந்தினராகக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்கலாம் எனத் தன் நன்றியுரையில் தெரிவித்தார் வா. மணிகண்டன். எல்லோராலும் எல்லா மாதங்களிலும் தவறாமல் கலந்து கொள்வது சாத்தியப்படாவிட்டாலும், இருவரேயானாலும் இருக்கிற நபர்களோடு தொடர்ந்து நடத்திட வேண்டும் என்கிற முனைப்பும் ஆர்வமும் கொண்ட வாகையின் நோக்கம், முதல் நிகழ்வைப் போலவே வெற்றி வாகை சூடும் எனும் நம்பிக்கை இருக்கிறது.
***
பகிர்ந்திருக்கும் படங்கள்: நான் மற்றும் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்தவை.
படங்களுடன் விளக்கமும் வாகைச் சந்திப்பு குறித்து
பதிலளிநீக்குதெளிவாக புரிந்து கொள்ளமுடிந்தது.நானும் இரண்டு
மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூர் வருகிறவன்
என்கிற முறையில் வாய்ப்புக் கிடைத்தால் கலந்து கொள்கிற
எண்ணமும் இருக்கிறது.நல்ல முயற்சி.தொடர வாழ்த்துக்கள்
ஓஹோ, இங்கே இருக்கு பேரெல்லாம்! :))))
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குசுவாரஸ்யமான கூடங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! தொடரட்டும்.
பதிலளிநீக்குவாகைக்கு வாழ்த்துகள்..:)
பதிலளிநீக்குபார்க் .. ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே!!
வாகை சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சந்திப்பு தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவா. மணிகண்டன அவர்களின் கவிதை தொகுப்புக்கு வாழ்த்துக்கள்.
ராமலக்ஷ்மி, கப்பன் பார்க்கில் நம் சந்திப்பு நினைவு வந்தது.
வாகை சந்திப்புக்கு வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமன்னிக்கவும், கூட்டங்கள் கூடங்களாகி விட்டது. :)))
இது போன்ற சந்திப்புகள் கருத்துக்கள் பரிமாறலுக்கான வெளி ... அருமை ..தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅழகிய சந்திப்பு படங்கள் மனதை கவர்ந்தன. பசும்புல் தரையில் அழகான நிகழ்வு வாழ்த்துக்கள் தொடருங்கள்.
பதிலளிநீக்குசந்திப்பு பற்றிய படங்களும், விவரங்களும் மனதைக் கவர்ந்தன.
பதிலளிநீக்குபுத்தகம் வெளியிட்ட நண்பருக்கு வாழ்த்துகள்.
'வாகை' மேலும் வளரட்டும் :-)
பதிலளிநீக்குபோட்டோக்கள் அருமை...
பதிலளிநீக்குவாகை மேலும் வளர வாழ்த்துக்கள்...
ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அவசியமான சந்திப்புதான் தொடரட்டும் தோழி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபதிவும், படங்களும் அருமை.வாகை பற்றி எனக்கு விளக்க முடியுமா? நானும் பெங்களூரில்தான் இருக்கிறேன்.இதில் கலந்து கொள்ளலாமா?
பதிலளிநீக்குகவிதை தொகுப்புக்கும் 'வாகை' அமைப்புக்கும் வாழ்த்துக்கள்! ஷைலஜா அக்கா மைசூர்பா கொண்டு வந்தாங்களா?? :)
பதிலளிநீக்குHappy to know that there are so many bloggers in Bangalore. Congrats to Manikandan.
பதிலளிநீக்குவாகை சந்திப்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் .திரு.மணிகண்டன் நூல் வெளியீட்டுக்கும் வாழ்த்துகள். இது போல சந்திப்புகள் வளரட்டும்.
பதிலளிநீக்குஷைலஜாவைத் தெரிகிறது. மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை.
திருமதி ரமா ரவி கேட்ட கேள்வியையே நானும் கேட்கிறேன்.
பதிலளிநீக்குகொஞ்சம் 'வாகை' பற்றி சொல்லுங்களேன். அடுத்தமுறை நானும் இதில் கலந்து கொள்ளுகிறேன்.
நிறைய பதிவர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
தகவல்களும் படங்களும் நன்று!
பதிலளிநீக்கு//எல்லோராலும் எல்லா மாதங்களிலும் தவறாமல் கலந்து கொள்வது சாத்தியப்படாவிட்டாலும், இருவரேயானாலும் இருக்கிற நபர்களோடு தொடர்ந்து நடத்திட வேண்டும் என்கிற முனைப்பும் ஆர்வமும் கொண்ட வாகையின் நோக்கம், முதல் நிகழ்வைப் போலவே வெற்றி வாகை சூடும் எனும் நம்பிக்கை இருக்கிறது.//
யதார்த்த மனிதர்களின் யதார்த்த சந்திப்பில் யதார்த்த சிந்தனையோடு 'வாகை' வளரும் என்பதும் யதார்த்தம்.
@Ramani,
பதிலளிநீக்குஅவசியம் கலந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@geethasmbsvm6,
பதிலளிநீக்கு:)!
நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குகூட்டங்கள் எனப் புரிந்தது:). நன்றி ஸ்ரீராம்.
@முத்துலெட்சுமி/muthuletchumi,
பதிலளிநீக்குஎனக்கும் வந்தது அந்நாளின் நினைவுகள்:)! நன்றி முத்துலெட்சுமி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
முன்னர் நிகழ்ந்த சந்திப்புகள் எதையும் முத்துச்சரத்தில் பகிர்ந்ததில்லை. ஓரிரு படங்களுடன் பகிர்ந்திடும் எண்ணம் வந்திருக்கிறது. செய்யலாம்தானே:)?
@பூந்தளிர்,
பதிலளிநீக்குமிக்க நன்றி பூந்தளிர்.
@ezhil,
பதிலளிநீக்குநன்றி எழில்.
@Sasi Kala,
பதிலளிநீக்குநன்றி சசிகலா.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி:).
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@கோவை மு சரளா,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@RAMVI,
பதிலளிநீக்குநிச்சயம் கலந்து கொள்ளலாம். பதிவில் சொல்லியிருப்பதே. மாதத்தின் முதல் ஞாயிறு, மாலை நான்கு மணி. எப்போதும் கப்பன் பார்க்கில் என முதலில் திட்டமிட்டிருந்தாலும் அதில் மாறுதல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. http://www.nisaptham.com/ தளத்தில் அந்தநாளையொட்டி அறிவிப்பு வெளியாகும்.
நன்றி.
@தக்குடு,
பதிலளிநீக்குநன்றி தக்குடு. பெங்களூர் செய்திகள் உங்களை அழைத்து வந்து விடுகிறது:)! நலம்தானே?
நீங்கள் கலந்து கொள்வதாய் இருந்தால் கொண்டுவருவார்கள்:)!
@மோகன் குமார்,
பதிலளிநீக்குநன்றி மோகன் குமார். வந்தவர் அனைவருக்கும் blog உண்டா எனத் தெரியாது. பதிவர் சந்திப்பு என்பதை விட வாசகர் சந்திப்பு என்பது சரியாக இருக்குமெனத் தோன்றுகிறது.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா. நானும் முன் சந்தித்திராத பலரை அறிந்து கொண்டேன் அன்று.
@Ranjani Narayanan,
பதிலளிநீக்குதாரளமாய் கலந்து கொள்ளலாம்:)! ‘நிசப்தம்’ தளத்தில் அறிவிப்புகள் வெளியாகும். நன்றி ரஞ்சனிம்மா.
@அமைதி அப்பா,
பதிலளிநீக்குஅழகாய்ச் சொல்லிவிட்டுள்ளீர்கள்:)! நன்றி அமைதி அப்பா.