நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 15 செப்டம்பர், 2014
சனி, 13 செப்டம்பர், 2014
தூறல் 19: ‘சக்கர வியூகம்’ வெளியீடு; ஆறடி நிலம்; அடைக்கோழி; பாயுமொளி; மழை மாலை
தமிழில் புகைப்படக்கலை (PiT)
தளத்தை ஆரம்பித்தவரும், எழுத்தாளரும், கவிஞரும், அதீதம் மின்னிதழின்
ஆசிரியர்களில் ஒருவரும், ஜீவ்ஸ் என இணைய உலகில் அறியப்படுகிறவருமான ஐயப்பன்
கிருஷ்ணனின் முதல் நூலாக வெளியாகிறது “சக்கர வியூகம்”.
அகநாழிகைப் பதிப்பக வெளியீடான இந்த சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் பெங்களூரில் நடைபெற உள்ளது:
நாள் : 14.09.2014 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் :
![]() |
| சுடச் சுடப் பிரதியை வாங்கிட இங்கே செல்லலாம் :)! |
நாள் : 14.09.2014 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் :
வியாழன், 16 ஜனவரி, 2014
இரு நூல்கள் வெளியீடும்.. நட்புகளின் அன்பும்.. மனம் நிறைந்த நன்றியும்..
நேற்று மதியம் “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை சென்னைப் புத்தகக் கண்காட்சி புதுப்புனல்-அகநாழிகை அரங்கு எண்கள் 666,667-ல் வெளியிட்ட கவிஞர் மதுமிதாவுக்கும் பிரதியைப் பெற்றுக் கொண்ட கவிஞர் தி. பரமேஸ்வரிக்கும் நன்றி. கலந்து கொண்டு சிறப்பித்த ‘மலைகள்’ இதழின் ஆசிரியர் சிபிச் செல்வன், ‘உயிர் எழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்தில், கவிஞர் அய்யப்ப மாதவன் மற்றும் சூர்யா சுரேஷ் ஆகியோருக்கு அன்பு நன்றி.
#1
#2
சாந்தி மாரியப்பனின் (அமைதிச்சாரல்) ‘சிறகு விரிந்தது’ கவிதைத் தொகுப்பு வெளியீடும் நடைபெற்றது. வாழ்த்துகள் சாந்தி:)!
#3
மாலை ஐந்து மணி அளவில் இதே அரங்கில் “அடை மழை” சிறுகதைத் தொகுப்பை நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அன்புடன் சம்மதித்து, வெளியிட்ட எழுத்தாளர் சுகா அவர்களுக்கும் பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் தமிழ்நதிக்கும் நன்றி.
#4
#5
வியாழன், 9 ஜனவரி, 2014
இலைகள் பழுக்காத உலகம் - 2014 சென்னை புத்தகக் கண்காட்சியில்..
என் கவிதைகள் என் உணர்வுகள்! என் புத்தகங்கள் என் அடையாளங்கள்! “அடை மழை” யைத் தொடரும் “இலைகள் பழுக்காத உலகம்” என் முதல் கவிதைத்
தொகுப்பு. சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பக வெளியீடாக..
நாளெல்லாம் சிறகடித்து எங்கெங்கு சுற்றிப் பறந்தாலும் அந்தியில் ஆழ்ந்துறங்கக் கூடு திரும்பும் இந்தப் பறவைகளைப் போல், அலைபாயும் மனங்கள் இளைப்பாறி அமைதியுறக் கூடுகளைத் தாங்கி நிற்கின்றன கவிதை மரங்கள். குதூகலமோ குழப்பமோ ஆனந்தமோ அயர்ச்சியோ .. நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் நாள் தோறும் வழங்கும் அனுபவங்களால் எழும் எத்தகு உணர்வுகளையும் ஆற்றுப்படுத்தும் அல்லது கூடச் சேர்ந்து கொண்டாடும் கவிதையின் கருணை மிகு கைகளை நான் பற்றிக் கொண்டது பள்ளிப் பருவத்தில். நானே விட்டு விட நினைத்தாலும், முடியாது உன்னாலென்றபடி தோழமையுடன் தன் கரங்களுக்குள் என் கரத்தை இன்றளவும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற கவிதைக்கு நன்றி! இந்நூலினால் என்னை விட அதிக மகிழ்ச்சி அடைவது கவிதையாகவே இருக்க முடியும்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
வாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் குமாரின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை
‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’
செவ்வாய், 8 ஜனவரி, 2013
பெங்களூர் ‘வாகை’ முதல் சந்திப்பு - வா. மணிகண்டனின் ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ கவிதைத் தொகுப்பு வெளியீடு
கடந்த ஞாயிறு மாலை பெங்களூர் கப்பன் பார்க்கில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வாகை அமைப்பின் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இணையத்தில் வலைப்பூ மூலமாக இயங்க ஆரம்பித்த கடந்த நான்கரை வருடங்களில் சந்திப்புகள் சில நடந்திருக்கின்றன, இதே கப்பன் பூங்காவில். விரல் விட்டும் எண்ணும் அளவில், வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தபோது நிகழ்ந்தவை. (இன்னொரு சமயம் முந்தைய சந்திப்புகள் குறித்தும் பகிர்ந்திடுகிறேன்.) புகைப்பட ஆர்வலர்கள் சந்திப்பாக ஒருமுறை. இவை எல்லாமே பதிவுகள், மின்னஞ்சல், அலைபேசிகளின் வாயிலாக முன்னதாக அறிமுகமானவர்களின் சந்திப்பாக இருந்திருக்கின்றன. மாறாக முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘வாகை’.
லேபிள்கள்:
இலக்கியம்,
கட்டுரை/அனுபவம்,
சந்திப்பு,
நூல் வெளியீடு,
பெங்களூர்,
வாகை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

.jpg)
.jpg)