புதன், 29 ஆகஸ்ட், 2012

70+

யார் தூரிகை செய்த ஓவியம்?
***


குமுதம் ஜங்ஷனில் எட்டு வருடங்களுக்கு முன் தனது 60+_ல் 50+_ல் இருப்பவர்களுக்காக இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்:
இப்போது 70+_லும் எந்தக் கலையையும் கற்றிட, அதில் ஆர்வத்துடன் ஈடுபட வயது ஒரு தடையல்ல என நிரூபித்திருக்கிறார். பள்ளி வயதில் கூட வரைதலில் அதிக நாட்டமோ ஆர்வமோ இல்லாதிருந்தவருக்குத் திடுமெனத் தூரிகை பிடிக்கும் ஆசை வர அரை வருடத்தில் கற்றுத் தேர்ந்து தீட்டிய ஓவியங்களில் ஒன்றே நீங்கள் முதலில் பார்த்த படம்.

பெரியவர்களிடம் கற்றிடவும் போற்றிடவும் எப்போதும் ஏதேனும் இருந்து கொண்டே இருக்கின்றன! திருமதி லோகா சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.
***
43 கருத்துகள்:

 1. 2001 ல் ஓய்வு பெறும் நேரம் ஒரு பொன்னாடை போற்றி நினைவுப்பரிசு எங்கள் நிறுவனத்தில் தந்தபின்,
  சுமார் 11 வருடம் கழித்து, சென்ற ஞாயிறு தான் அடுத்த பொன்னாடை எனக்கு கிடைத்தது. ஆம்.
  2012 ல் 70 ஐ கடந்தபின் எனக்கொரு பொன்னாடை போற்றி எனை தமிழ் வலை உலகம் சென்ற ஞாயிறு
  கௌரவித்தது. என்னைப்போல இன்னும் ஒரு பத்து வலைப்பதிவாளர்கள். மூத்த பதிவாளர்களை அவர்கள்
  வயதிற்காக மட்டும் அல்ல, இந்த வயதிலும் சமூக ஆர்வம் கொண்டு சமூகத்திற்கு தம்மால் இயன்ற பணியினை
  கணினி வழியாக, வலை வழியாகச் செய்கின்றனர் என்பதற்காக இந்த கௌரவித்தல் என்றனர்.

  எனது நண்பர் ஒருவர் தமது ஓய்வு பெற்று பாராட்டு பெறும் நேரத்தில் சொன்னார்: எனது வாழ்க்கையில் இனி
  அடுத்த அத்தியாயம் துவங்குகிறது. அந்த அத்தியாயம் முதல் அத்தியாயத்தை விட சிறப்பாக இருக்கும்படி
  செயல்படுவேன் என்றார். முழு நேரக் கல்விப்பணி துவங்கினார்.

  அது போன்று நீங்கள் சொல்லும் பெண்மணி இந்த வயதிலும் ரவி வர்மா ஓவியம் போல் வரைந்து ஒரு சாதனை
  செய்திருக்கிறார்.

  இந்த வயதினை ஒத்த மத்த பெண்டிர் கவனிக்கவேண்டியது இந்த பதிவே.'
  திருமதி லோகா சுப்பிரமணியன் அவர்களுக்குப் வாழ்த்துகளும் வணக்கங்களும்.
  on my behalf also.
  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 2. கற்றுக்கொள்ள வயது தடையில்லை என்பதை நிரூபித்துவிட்டார்!

  ஓவியம் பிரமிக்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 3. ஆச்சரியமும் நம்பிக்கையும் தந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. Seeking permission to reproduce this post on my blog... With all due credits :)

  பதிலளிநீக்கு
 6. அபூர்வமான அம்மா.
  எனக்குத்தெரிந்த ஒருவரின் அம்மாவோ என்று சந்தேகம் வருகிறது. கல்யாணி சங்கர் தன் நாத்தனார் என்று சொல்லி இருக்கிறாரே!!!!!

  படம் அற்புதமாகமாக வரைந்திருக்கிறார்.
  அதை நீங்கள் படம் எடுத்திருக்கும் விதமுன் அழகு. நன்றி ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான பகிர்வு அம்மா... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்… (TM 2)

  பதிலளிநீக்கு
 8. ஆச்சர்யம். கற்றுக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்திருக்கிறார். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான பகிர்வு. கற்றுக்கொள்ள வயது தடையே இல்லை..

  சமீபத்தில் தமிழகம் சென்று தில்லி திரும்பும்போது, 61 வயது சக பயணி ஒருவர் அவர் இரண்டு வருடங்களாக ஓவியம் வரைவது பற்றிச் சொன்னது மட்டுமன்றி அவர் வரைந்த ஓவியங்களைக் காட்டினார் [பேப்பரில் வரைந்து அவற்றை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்திருக்கிறார்]. அவரைப் பாராட்டினேன். அது நினைவுக்கு வந்தது....

  இனிய பகிர்வுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 10. சாதனைக்கு வயசில்லை என்பதை நடத்திக்காட்டி நிறையப்பேருக்கு உதாரணமாகி விட்டார். வாழ்த்துகள்.

  "கல்யாணி சங்கர்" எனக்கும் தெரிஞ்சவங்க பெயர் போல இருக்கு ;-)

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அருமையான ஓவியம்.

  //பெரியவர்களிடம் கற்றிடவும் போற்றிடவும் எப்போதும் ஏதேனும் இருந்து கொண்டே இருக்கின்றன! //

  திருமதி லோகா சுப்பிரமணியன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகளும் வணக்கங்களும்.
  vgk

  பதிலளிநீக்கு
 12. பெரியவர்களிடம் கற்றிடவும் போற்றிடவும் எப்போதும் ஏதேனும் இருந்து கொண்டே இருக்கின்றன!

  வியப்புடன் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 13. டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கு.
  உற்சாகம் தரும் செய்தி!
  பகிர்ந்தமைக்கு நன்றி.

  நானும், திருமதி லோகா சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. அருமை

  பதிவில் குறைவான பின்னூட்டங்கள் எனினும் பதிவின் தரத்தை அவை ஒவ்வொன்றும் சொல்கின்றன

  பதிலளிநீக்கு
 15. மலைப்பா இருக்கு பாக்க..

  அவங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும் :)

  பதிலளிநீக்கு
 16. அருமை! ரவிவர்மாவை இவர் வரைஞ்சுருக்கார்!!!!


  70 இங்கே முதியோர் பட்டியலில் இல்லை

  80 முடிஞ்சால்தான் ஓல்ட்.

  அதுவும் கோல்ட்!

  பகிர்வுக்கு நன்றிப்பா.

  பதிலளிநீக்கு
 17. அருமையான ஓவியம் அதுவும் தூரிகை பிடித்த விரல்களுக்கு வயது 70+ என்றால் ஓவியத்தின் அழகு பல மடங்கு உயர்ந்து விட்டது கட்டுரையை வாசித்த பின் இவர் போல் இன்னும் எத்தனை பேர் குடும்ப சூழ்நிலை காரணமாக குடத்திலிட்ட விளக்காக இருக்கின்றனரோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 18. //ஒவ்வொருவரிடமும் தனித்திறமைகள் இருக்கத்தான் செய்கிறது,அவற்றை வெளிப்படுத்த தகுந்த வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நம் மனதை என்றும் இளமையாக வைத்துக் கொண்டோமானால் வயது ஒரு பொருட்டல்ல.// எத்தனைச் சரியாக சொல்லியிருக்கிறார்.திருமதி லோகா சுப்ரமணியன் அவர்கள்.அவருடைய முயற்சியும் அனுபவமும் நிறைய பெண்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.நல்ல பகிர்வு ராமலஷ்மி.ஓவியம் மிகவும் நேர்த்தி.எங்க வீடும் பெருமாள்புரம் தான்.:)!

  பதிலளிநீக்கு
 19. எங்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை தருகிறார்.ஆசி கேட்டு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 20. 70 இங்கே முதியோர் பட்டியலில் இல்லை

  80 முடிஞ்சால்தான் ஓல்ட்.//கேட்டுக்கிட்டீங்களா.. :))

  நிச்சயமா பெரியவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கனும்.

  பதிலளிநீக்கு
 21. ஒரு மிகச்சிறந்த பெண்மணியைப் பற்றி பதிவினை இட்டுள்ளீர்கள்! மனமிருந்தால், எந்த வயதும் முதுமை அல்ல என்று சொல்லும் இவருக்கு பாராட்டுக்கள்!
  பகிர்வுக்கு உங்களுக்கு நன்றி!
  இந்தப் பெண்மணியைப் போன்றவர்கள் தான் உங்களின் முன்னோடிகள் என்று உங்கள் பன்முகத் திறமை பறை சாற்றுகிறது!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. பெரியவர்களிடம் கற்றிடவும் போற்றிடவும் எப்போதும் ஏதேனும் இருந்து கொண்டே இருக்கின்றன!//
  ஆம், உண்மை ராமலக்ஷ்மி.

  கற்றுக் கொள்ள ஆர்வமும் , மனமும் இருந்தால் வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு எடுத்துக் காட்டு லோகாசுப்பிரமணியன் அவர்கள்.
  அவர்கள் வரைந்த ஒவியம் அழகு.
  அவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 23. @Suryanarayanan Siva,

  வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கிறேன்.

  தங்களுக்குக் கிடைத்த கெளரவத்திற்கும் பரிசுக்கும் வாழ்த்துகள்! மிக்க மகிழ்ச்சி. விழா குழுவினருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 24. @Asiya Omar,

  நன்றி ஆசியா!

  /பெருமாள் புரம்/ ஆம் சொல்லியிருக்கிறீர்கள்:)!

  பதிலளிநீக்கு
 25. @Ranjani Narayanan,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin