“புன்னகை , சோகம், குழந்தை, பெரியவர்கள், இப்படி முகம் எந்த மாதிரி வேண்டுமானாலும் இருக்கலாம்.. முடிந்த அளவு முகம் தெளிவாக இருக்கட்டும்..” என்கிற அறிவிப்பு
இங்கே.
இதுவரையிலும் போட்டியில் கலந்து கொண்டுள்ள திருமுகங்களைக் காணச் செல்லுங்கள்
இங்கே!
தொடர் ஓட்டத்தில்.. இருத்தலின் அடையாளமாய்.. முதல் நான்கு படங்களில் ஒன்றைப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன். [படங்கள் இரண்டும் மூன்றும் கூட வலைப்பூவில் பதியாத படங்களே, அதே நபர்களை வேறு கோணத்தில் நீங்கள் பார்த்திருப்பினும்..]
நேரமிருப்பவர் பிடித்த படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்:)!
1.முதுமை வரைந்த சித்திரம்

2.மூப்பு தீட்டிய ஓவியம்
கண்ணெதிரே..
காலம் தீட்டிய சித்திரங்களாய்
முதுமையின் விளிம்பில்
இரண்டு முகங்கள்
தளர்வில் முழுதாய்
திறக்க இயலா விழிகள்
தொலைத்த இளமையில்
நரைத்து விட்ட முடிகள்
தோலின் சுருக்கங்களில்
வாழ்வின் அனுபவங்கள்
எல்லோரும் எய்துவோம்
ஓர் நாள் இந்நிலையை..
கற்க வேண்டிய பாடமாய்
கண்ணெதிரே முதியவர்கள்!!!
***
3.விழுதும் தளிரும்
முன்னொரு சமயம் பொம்மைகளோ விலங்குகளோ போட்டித் தலைப்பாக இருந்த வேளையில் “ஒரு மனுசப் பயலுவ மூஞ்சி கூட படத்துல தெரியப்படாது ஆமா” என [நானில்லைங்கோ] நடுவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது மாண்புமிகு விலங்குகள் 'முகம்' தெரியக் கூடாது என சொல்லவேயில்லை என்பதால் அவற்றையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொண்டு விட்டுள்ளேன்:)!
4.இரண்டு முகங்கள் இரண்டு உணர்வுகள்

பாரம் சுமக்கும் சோகத்தில்
கடிவாளத்துள் குதிரை முகம்
சவாரி போகும் குதூகலத்தில்
மினுங்கும் குழந்தை முகம்
***
5.பேசும் கண்

‘காசு எம்புட்டுக் கிடைக்கும்’
கண்மூடிக் கணக்குப்
போடும் பாகன்!
பிரமாண்ட உருவத்தின்
பெரும் வேதனை பேசுகின்ற
ஒற்றைச் சிறு கண்!
***
6.‘வயிறு நிரம்புச்சா தாயீ?’

#வாஞ்சை
7.‘வாழ்க்கை ஒரு சக்கரமாமே?’

#டவுட்டு
8.“நினைப்புல இருக்கா
டார்வின் த்யரி?”
#சவுண்டு
9.“ஆ.. ராசா..!!!”
‘இனிமேலே இந்த வேடம் போடக் கூடாதுடா சாமி’!!!
#டெசிஷன்
வியாபாரம்
10.பொரி பொரி..
11.கடல கடல..
12.‘அடடா வட போச்சே’
கடையை விரிக்க வேறிடம் பார்த்து
நடையைக் கட்டும் பெரியவர்.
பிள்ளை பொன் வண்டுகள்!!!
13.மகிழ்ச்சி நம் கையில்..
14a.இணைபிரியா தோழர்கள்
14b.அன்புச் சகோதரிகள்

15.விழி வண்ணமாய்..
16.கலை அன்னமாய்

17.முழு மதியாய்..
18.இளந்தென்றலாய்..
19.வான் நிலவாய்..
20.வளர் பிறையாய்..
இனிக்கும் கரும்புகளாய்..
மழலைச் செல்வங்கள்!!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!