பூனைக்குப் பயந்து
புதருக்குள் ஒளிந்த
எலியினைக் கண்டு
இரக்கம் கொண்டு
புசுபுசுப் பூனையாகிட
வழங்கினார் ஆசியை
வனத்திலிருந்த முனி.
புதுப்பிறவி எடுத்ததுமே
நடுநடுங்கத் தொடங்கியது
நாயினிடம் மாட்டினால்
என்னாவேன் என்று.
இதென்ன வம்பாயிற்று
சரி, போனால் போகட்டுமென்று
நாயாகும் வரம் தந்தார்.
வாலினை மடக்கி
நாலுகால் பாய்ச்சலில்
நாக்குத்தள்ள மூச்சிரைக்க
ஓடலாயிற்று-
எங்கோ தொலைவில்
உலாத்தும் புலிகள்
கண்ணில் பட்டாலே.
இனியாவது துணிவாக
வாழட்டும் கம்பீரமாக-
பொங்கும் கருணையுடன்
புலியாக்கிப் பார்த்துப்
புளங்காகிதம் அடைந்தார்.
'வேடன் பார்த்தால்
வேறு வினையே
வேண்டாம்'
வெருண்டு நின்றது
விலங்கு இப்போது.
‘புலியாகும் புண்ணியம்
கிடைத்தாலும் எலியின்
இதயத்துடனேதான்
இருப்பேன் என்கிறநீ
எலியாகவேதான்
மாறிப் போ!’
வரங்களைத் திரும்ப
வாங்கிக் கொண்டு
தன் தவத்திலே
மூழ்கிப் போனார் முனி.
*** *** ***
படம்: இணையத்திலிருந்து...
- 10 அக்டோபர் 2010 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!
கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கும் அதீதம் கட்டுரைக்கும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..
பதிலளிநீக்குகவிதை அருமையாயிருக்கு.. வெளித்தோற்றங்களை என்னதான் மாற்றிக்கொண்டாலும் அடிப்படைக்குணம் மாறாதுதான் :-))
பதிலளிநீக்குகவிதை மிக கலக்கல்.... விருதுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை எளிமையா ஒரு தத்துவத்தை ஒளித்து நல்ல நடைபோடுதுங்க.... பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஓ புலியாகியும் எலியா..
பதிலளிநீக்குசரியான தீர்ப்பு நாட்டாமை..:)
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கும் அதீதம் கட்டுரைக்கும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..//
மிக்க நன்றி தேனம்மை. சென்னை சங்கமத்தில் கவிபாடி வந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமையாயிருக்கு.. வெளித்தோற்றங்களை என்னதான் மாற்றிக்கொண்டாலும் அடிப்படைக்குணம் மாறாதுதான் :-))//
மிக்க நன்றி சாரல். உண்மைதான். ஆனால் வரமாய் வாய்ப்புகள் தேடி வருகையில், வகையாய் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் வானம் பார்த்த பூமியாகவேதான் முடிந்து போகும் வாழ்க்கை! பயங்கள் போகணும்:)! இல்லையெனில் எலியாகவே .. .. என்பதுதான் ‘நாட்டாமை’ தீர்ப்பு முத்துலெட்சுமி சொன்ன மாதிரி:))!
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு//கவிதை மிக கலக்கல்.... விருதுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள்.//
//கவிதை எளிமையா ஒரு தத்துவத்தை ஒளித்து நல்ல நடைபோடுதுங்க.... பாராட்டுக்கள்.//
நன்றிகள் கருணாகரசு:)!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//ஓ புலியாகியும் எலியா..
சரியான தீர்ப்பு நாட்டாமை..:)//
நல்லவேளை ‘நாட்டாமை, தீர்ப்பை மாத்து’ என்று சொல்லவில்லை. பிழைத்தேன். நன்றி முத்துலெட்சுமி:)!
survival of the fittest, சகா!
பதிலளிநீக்குgood!
கவிதை தந்த அருமையான நீதி... மனமிருந்தால்
பதிலளிநீக்குஎலி புலியாக வாழலாம். புலியே எலியாகவும் வாழலாம்.
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//survival of the fittest, சகா!
good!//
இரத்தினச் சுருக்கம், உங்கள் கவிதைகளைப் போல:)! நன்றி பா ரா.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//கவிதை தந்த அருமையான நீதி... மனமிருந்தால்
எலி புலியாக வாழலாம். புலியே எலியாகவும் வாழலாம்.//
கருத்துக்கு மிக்க நன்றி தமிழ் உதயம்.
கவிதை அருமை.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//‘புலியாகும் புண்ணியம்
பதிலளிநீக்குகிடைத்தாலும் எலியின்
இதயத்துடனேதான்
இருப்பேன் என்கிறநீ
எலியாகவேதான்
மாறிப் போ!//அழகான வார்த்தைக் கோவை கோர்த்த அருமையான கவிதை
க(வி)தை அருமை.
பதிலளிநீக்குபடமும் கவிதையும் வெகு பொருத்தம்.
பதிலளிநீக்குஇதே போல ஒரு கதை கேள்வி பட்டிருக்கேனே! அதை மிக சுருக்கமாக கவிதை ஆக்கி உள்ளீர்கள் !
பதிலளிநீக்குபடமும், கவிதையும் ரொம்ப நன்னா இருக்கு.
பதிலளிநீக்குகதையை அருமையான கவிதையாகப் படைத்துள்ளீர்கள்
பதிலளிநீக்குஅசத்துங்க!பூங்கொத்து!
பதிலளிநீக்குகவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..
பதிலளிநீக்குஆயிஷா said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை.வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி ஆயிஷா.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அழகான வார்த்தைக் கோவை கோர்த்த அருமையான கவிதை//
நன்றிகள் ஸாதிகா.
கனாக்காதலன் said...
பதிலளிநீக்கு//க(வி)தை அருமை.//
மிக்க நன்றி:)!
Chitra said...
பதிலளிநீக்கு//படமும் கவிதையும் வெகு பொருத்தம்.//
நன்றிகள் சித்ரா:)!
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//இதே போல ஒரு கதை கேள்வி பட்டிருக்கேனே! அதை மிக சுருக்கமாக கவிதை ஆக்கி உள்ளீர்கள் !//
ஒருகதை இல்லைங்க. இது போல பல உண்டு. அதில் ஒரு வடிவம்:)! நன்றி மோகன் குமார்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//படமும், கவிதையும் ரொம்ப நன்னா இருக்கு.//
மிக்க நன்றி லக்ஷ்மி.
அமுதா said...
பதிலளிநீக்கு//கதையை அருமையான கவிதையாகப் படைத்துள்ளீர்கள்//
நன்றி அமுதா.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//அசத்துங்க!பூங்கொத்து!//
மிக்க நன்றி அருணா.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை//
நன்றிகள் டி வி ஆர் சார்!
அம்பிகா said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..//
மிக்க நன்றி அம்பிகா:)!
nice!!
பதிலளிநீக்கு@ ஸ்ரீஅகிலா,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
கவிதை அருமை சகோ
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
எலியை எந்த ஒரு விலங்காக மாற்றினாலும், அது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று "பயந்த முனிவர்" எலியாகவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுவிட்டாரா! :)
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க, கவிதை, ராமலக்ஷ்மி! :)
கதையாய் ஒரு கவிதை.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு அக்கா !
kavithaikal muththuch saram, padiththu makilnthen, arumai, vaalththukkal raamalakshmi.
பதிலளிநீக்குகதையை அழகான கவிதையாக வடித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குபடம் அருமை.
எலியைக் கொண்டு வாழ்க்கையை எளிமையாகப் புரிய வைத்தமைக்கு
பதிலளிநீக்குஎனது நன்றி!
கவிதை கலக்கல்.
பதிலளிநீக்குவிஜய் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை சகோ
வாழ்த்துக்கள்//
நன்றிகள் விஜய்.
வருண் said...
பதிலளிநீக்கு//எலியை எந்த ஒரு விலங்காக மாற்றினாலும், அது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று "பயந்த முனிவர்" எலியாகவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுவிட்டாரா! :)
நல்லாயிருக்குங்க, கவிதை, ராமலக்ஷ்மி! :)//
உங்கள் பார்வை பிடித்துள்ளது:))! நன்றிகள் வருண்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//கதையாய் ஒரு கவிதை.
நல்லாயிருக்கு அக்கா !//
நன்றிகள் ஹேமா.
ஹேமா said...
பதிலளிநீக்கு//கதையாய் ஒரு கவிதை.
நல்லாயிருக்கு அக்கா !//
நன்றிகள் ஹேமா.
கோநா said...
பதிலளிநீக்கு//kavithaikal muththuch saram, padiththu makilnthen, arumai, vaalththukkal raamalakshmi.//
மிக்க நன்றி, முதல் வருகைக்கும்!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//கதையை அழகான கவிதையாக வடித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
படம் அருமை.//
நன்றி கோமதிம்மா. பொருத்தமாகக் கிடைத்தது இணையத்தில்:)!
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//எலியைக் கொண்டு வாழ்க்கையை எளிமையாகப் புரிய வைத்தமைக்கு
எனது நன்றி!//
மிக்க நன்றி அமைதி அப்பா:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//கவிதை கலக்கல்.//
மிக்க நன்றி குமார்.
இன்ட்லியில் வாக்களித்த 21 பேருக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும் என் நன்றிகள்!
பதிலளிநீக்குபடித்த கதைதான் எனினும் உங்கள் கைவிரல் ஸ்பரிசத்தில், அழகிய கவிதையாகிவிட்டது அக்கா....
பதிலளிநீக்குதமிழ்மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அக்கா....
@ கவிநா,
பதிலளிநீக்குகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
படமும் கவிதையும் அருமை.
பதிலளிநீக்குநன்றிகள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇதிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன ?
பதிலளிநீக்குஎப்பொழுதும் எலிமையாக இருப்பதே நன்று
சரிதானே ?
@ கோமா,
பதிலளிநீக்குஆமாங்க, பார்வைகளும் பாடங்களும் வந்து கொண்டே இருக்கும் இம்மாதிரியான கதைகளில். எலிமையான உருவத்திலேயே வலிமையாவும் வெளிப்படலாம். இதுவும் சரிதானே:)?
இரசித்தேன்
பதிலளிநீக்கு@ திகழ்,
பதிலளிநீக்குநன்றி திகழ்:)!
நன்று.
பதிலளிநீக்குபுலி வேடத்தில் எலியாகவும், எலி வேடத்தில் புலியாகவும் இருந்தால்தான் பிரச்சனை :-)
@ உழவன்,
பதிலளிநீக்குநன்றி! நீங்கள் சொல்வது ரொம்பச் சரி:))!
கவிதை மிக கலக்கல்.... விருதுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.
பதிலளிநீக்கு@ ஜெஸ்வந்தி,
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜெஸ்வந்தி:)!