இதுவரையிலும் போட்டியில் கலந்து கொண்டுள்ள திருமுகங்களைக் காணச் செல்லுங்கள் இங்கே!
தொடர் ஓட்டத்தில்.. இருத்தலின் அடையாளமாய்.. முதல் நான்கு படங்களில் ஒன்றைப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன். [படங்கள் இரண்டும் மூன்றும் கூட வலைப்பூவில் பதியாத படங்களே, அதே நபர்களை வேறு கோணத்தில் நீங்கள் பார்த்திருப்பினும்..]
நேரமிருப்பவர் பிடித்த படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்:)!
1.முதுமை வரைந்த சித்திரம்
2.மூப்பு தீட்டிய ஓவியம்
கண்ணெதிரே..
காலம் தீட்டிய சித்திரங்களாய்
முதுமையின் விளிம்பில்
இரண்டு முகங்கள்
தளர்வில் முழுதாய்
திறக்க இயலா விழிகள்
தொலைத்த இளமையில்
நரைத்து விட்ட முடிகள்
தோலின் சுருக்கங்களில்
வாழ்வின் அனுபவங்கள்
எல்லோரும் எய்துவோம்
ஓர் நாள் இந்நிலையை..
கற்க வேண்டிய பாடமாய்
கண்ணெதிரே முதியவர்கள்!!!
***
3.விழுதும் தளிரும்
முன்னொரு சமயம் பொம்மைகளோ விலங்குகளோ போட்டித் தலைப்பாக இருந்த வேளையில் “ஒரு மனுசப் பயலுவ மூஞ்சி கூட படத்துல தெரியப்படாது ஆமா” என [நானில்லைங்கோ] நடுவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது மாண்புமிகு விலங்குகள் 'முகம்' தெரியக் கூடாது என சொல்லவேயில்லை என்பதால் அவற்றையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொண்டு விட்டுள்ளேன்:)!
4.இரண்டு முகங்கள் இரண்டு உணர்வுகள்
பாரம் சுமக்கும் சோகத்தில்
கடிவாளத்துள் குதிரை முகம்
சவாரி போகும் குதூகலத்தில்
மினுங்கும் குழந்தை முகம்
***
5.பேசும் கண்
‘காசு எம்புட்டுக் கிடைக்கும்’
கண்மூடிக் கணக்குப்
போடும் பாகன்!
பிரமாண்ட உருவத்தின்
பெரும் வேதனை பேசுகின்ற
ஒற்றைச் சிறு கண்!
***
6.‘வயிறு நிரம்புச்சா தாயீ?’
#வாஞ்சை
7.‘வாழ்க்கை ஒரு சக்கரமாமே?’
#டவுட்டு
8.“நினைப்புல இருக்கா
டார்வின் த்யரி?”
#சவுண்டு
9.“ஆ.. ராசா..!!!”
‘இனிமேலே இந்த வேடம் போடக் கூடாதுடா சாமி’!!!
#டெசிஷன்
வியாபாரம்
10.பொரி பொரி..
11.கடல கடல..
12.‘அடடா வட போச்சே’
கடையை விரிக்க வேறிடம் பார்த்து
நடையைக் கட்டும் பெரியவர்.
பிள்ளை பொன் வண்டுகள்!!!
13.மகிழ்ச்சி நம் கையில்..
14a.இணைபிரியா தோழர்கள்
14b.அன்புச் சகோதரிகள்
15.விழி வண்ணமாய்..
16.கலை அன்னமாய்
17.முழு மதியாய்..
18.இளந்தென்றலாய்..
20.வளர் பிறையாய்..
இனிக்கும் கரும்புகளாய்..
மழலைச் செல்வங்கள்!!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
16.கலை அன்னமாய் :)
பதிலளிநீக்குநாலும், பதினாறும் ரொம்ப நல்லாயிருக்கு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎதைச் சொல்ல எதை விட...முதல் இன்டு முகங்களும் அருமை...மாட்டுப் பொங்கலை நினைவு படுத்தும் "வயிறு நிரம்புச்சா தாயீ", வாழ்க்கை ஒரு சக்கரமாமே", இதையெல்லாம் விட என் எப்போதும் ஃபேவரிட்டான யானை உள்ள பேசும் கண்...
பதிலளிநீக்குகுழந்தைகள் படங்கள் அழகோ அழகு...
@ ஆயில்யன்,
பதிலளிநீக்குநன்றி! கலை அன்னம் ‘கருப்பு வெள்ளை’ வண்ணமாய் ஒருமுறை போட்டியில் கலந்து கொண்டதாகையால் தர இயலாதே. பார்வைக்கே இங்கே:)!
புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிலளிநீக்கு//நாலும், பதினாறும் ரொம்ப நல்லாயிருக்கு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//
நாலு.. கவனத்தில் வைக்கிறேன்.
16.. முந்தைய பதிலே:)!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புவனா.
அனைத்து படங்களுமே கொள்ளை அழகு... அதிலும் இனிக்கும் கரும்புகளாய்..மழலைச் செல்வங்களளின் படங்கள் ச்சோ ஸ்வீட்!
பதிலளிநீக்குபிரமாண்ட உருவத்தின்
பதிலளிநீக்குபெரும் வேதனை பேசுகின்ற
ஒற்றைச் சிறு கண்!
// எனக்கு உங்கள் கமெண்ட்டுக்களின் மீது முதலில் விழுந்தது கண்.. அதனால் அதற்கு இந்த பின்னூட்டம்..
:)
ஆறு வாஞ்சையோடு நல்லா இருக்கு..
பதிலளிநீக்குஐந்தும், பதினொன்றும்...
பதிலளிநீக்குஆறு,
பதிலளிநீக்குரெண்டு,
பதினஞ்சு..
இந்த மூணும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-))
ஆஹா! படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. கை சப்பும் குழந்தை.... அழகோ அழகு.
பதிலளிநீக்குவிழுதும் தளிரும் என்னை மிகவும் கவர்ந்தது.அனைத்து படங்களும் அருமை.பொங்கல் நல் வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
பதிலளிநீக்குஎல்லாருமே.. எல்லாமுமே அழகா இருந்தாலும்..
பதிலளிநீக்கு15. குட்டிப்பாப்பா.. அச்ச்ச்ச்ச்சோ அவ்ளோ அழகு அக்கா.
16. வண்டுக்கண்ணி மயக்குறாங்க போங்க.
யானையும்,கை சூப்பினபடி குழந்தையும் அழகு.
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துகள் அக்கா !
Super! lovely photos..... awesome!
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு20 th
பதிலளிநீக்குyammadi... embuttu nalla iruku theriyuma :)
பதிலளிநீக்குஎனக்கு மூன்றாம் படம் பிடித்திருக்குங்க... (உங்க தேர்விலிருந்து)
பதிலளிநீக்குகீழே உள்ள பாப்பாக்கள் படம்தான் என் விருப்ப படங்கள் அதிலும் அந்த மொட்டை பாப்பா மிக அழகு......
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
படங்களெல்லாம் அற்புதமா, தெளிவா இருக்குங்கக்கா... அதிலும், ஒவ்வொன்னுக்கும் ஒரு தலைப்பும், செய்தியும் கொடுத்திருக்கீங்களே, அது ரசிக்கும்படியா இருக்கு.. அருமை....
பதிலளிநீக்குபுத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎல்லாம் அருமை
பதிலளிநீக்குஎதையும் விடுவதற்கு மனமில்லை.
அகம் இன்னும் இங்கே,மழலையின்
முகம் கண்ட பிறகு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆஹா! படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு .
pit thervai vida ungal padangalai thervu saivathil rompa kashtam polirukirathe............
பதிலளிநீக்குvalthukkal madam.......
iniya pongal valthukkal......
2,8,15 மூன்றும் ஓகே.
பதிலளிநீக்கு15வது படம் பின்னணி சுமார்.
8ம் 2ம் அசத்தல்
2ல் பின்னணியும் கொஞ்சம் காய்ந்த சருகும் பாறையுமாக அமைந்திருப்பது சிறப்பு.
நமது முன்னோர் மரத்தைப் பின்னணியாகக் கொண்டிருப்பது கவிதை
அழகான படங்கள். பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//எதைச் சொல்ல எதை விட...முதல் இன்டு முகங்களும் அருமை...மாட்டுப் பொங்கலை நினைவு படுத்தும் "வயிறு நிரம்புச்சா தாயீ", வாழ்க்கை ஒரு சக்கரமாமே", இதையெல்லாம் விட என் எப்போதும் ஃபேவரிட்டான யானை உள்ள பேசும் கண்...
குழந்தைகள் படங்கள் அழகோ அழகு...//
ரசித்து பதிந்திருக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
Priya said...
பதிலளிநீக்கு//அனைத்து படங்களுமே கொள்ளை அழகு... அதிலும் இனிக்கும் கரும்புகளாய்..மழலைச் செல்வங்களளின் படங்கள் ச்சோ ஸ்வீட்!//
வாங்க ப்ரியா:)! மிக்க நன்றி!!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு***பிரமாண்ட உருவத்தின்
பெரும் வேதனை பேசுகின்ற
ஒற்றைச் சிறு கண்!
// எனக்கு உங்கள் கமெண்ட்டுக்களின் மீது முதலில் விழுந்தது கண்.. அதனால் அதற்கு இந்த பின்னூட்டம்..
:)***
பாருங்களேன் நேரில்கூட நாம அதைக் கூர்ந்து கவனித்திருக்க வாய்ப்பில்லை. படத்தில் அப்படிப் பேசுது.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//ஆறு வாஞ்சையோடு நல்லா இருக்கு..//
நேரில நான் பார்த்த சில நிமிடங்களில் ரொம்ப ‘வாஞ்சையா’ய் இருந்தார் பசுவிடம். முரப்பநாடு ஆற்றங்கரையில் எடுத்த படம். மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//ஐந்தும், பதினொன்றும்...//
உங்களையும் பேசும் கண் பாதித்திருக்கிறது.
பதினொன்று ‘இந்த வார சிறந்த ஃப்ளிக்கர் படமாக’ ஒருமுறை தேர்வான ஒன்று. போட்டிக்கு கொடுக்கலாமா என்பது தெரியவில்லை. ஆக பார்வைக்கு:)! நன்றிகள் தமிழ் உதயம்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//ஆறு,
ரெண்டு,
பதினஞ்சு..
இந்த மூணும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-))//
ஆகா, மிக்க நன்றி சாரல்:)!
அம்பிகா said...
பதிலளிநீக்கு//ஆஹா! படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. கை சப்பும் குழந்தை.... அழகோ அழகு.//
ரொம்ப நன்றி அம்பிகா:)!
asiya omar said...
பதிலளிநீக்கு//விழுதும் தளிரும் என்னை மிகவும் கவர்ந்தது.அனைத்து படங்களும் அருமை.பொங்கல் நல் வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//
மிக்க நன்றி ஆசியா:)!
சுசி said...
பதிலளிநீக்கு//எல்லாருமே.. எல்லாமுமே அழகா இருந்தாலும்..
15. குட்டிப்பாப்பா.. அச்ச்ச்ச்ச்சோ அவ்ளோ அழகு அக்கா.
16. வண்டுக்கண்ணி மயக்குறாங்க போங்க.//
‘வண்டுக்கண்ணி’ அழகா வச்சீங்க பேரு. நன்றி சுசி:)!
ஹேமா said...
பதிலளிநீக்கு//யானையும்,கை சூப்பினபடி குழந்தையும் அழகு.
தமிழர் திருநாள் வாழ்த்துகள் அக்கா !/
மிக்க நன்றிஹேமா.
Chitra said...
பதிலளிநீக்கு//Super! lovely photos..... awesome!//
நன்றி சித்ரா:)!
யாதவன் said...
பதிலளிநீக்கு//பொங்கல் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி யாதவன்.
நசரேயன் said...
பதிலளிநீக்கு//20 th//
நன்றி நசரேயன். கவிதையான படம் அது. ஃப்ளிக்கரில் ‘மை சாய்ஸ்’ எனத் தலைப்பிட்டிருந்தேன், பலூனை பிடிக்க முடியாம பிடிச்சுக்கிட்டு பையன் சொல்றாப்ல:)!
naveen (தமிழமிழ்தம்) said...
பதிலளிநீக்கு//yammadi... embuttu nalla iruku theriyuma :)//
மிக்க நன்றி நவீன்:)!
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு//எனக்கு மூன்றாம் படம் பிடித்திருக்குங்க... (உங்க தேர்விலிருந்து)
கீழே உள்ள பாப்பாக்கள் படம்தான் என் விருப்ப படங்கள் அதிலும் அந்த மொட்டை பாப்பா மிக அழகு......
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.//
நல்லது:)! மிக்க நன்றி கருணாகரசு!
கவிநா... said...
பதிலளிநீக்கு//படங்களெல்லாம் அற்புதமா, தெளிவா இருக்குங்கக்கா... அதிலும், ஒவ்வொன்னுக்கும் ஒரு தலைப்பும், செய்தியும் கொடுத்திருக்கீங்களே, அது ரசிக்கும்படியா இருக்கு.. அருமை....//
நன்றிகள் கவிநா:)!
திகழ் said...
பதிலளிநீக்கு//புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் திகழ்!
திகழ் said...
பதிலளிநீக்கு//எல்லாம் அருமை
எதையும் விடுவதற்கு மனமில்லை.
அகம் இன்னும் இங்கே,மழலையின்
முகம் கண்ட பிறகு//
மழலையின் முகங்களில் அகங்களைத் தொலைத்து விடுகிறோம். பார்க்கப் பார்க்க பரவசம்தான். நன்றி திகழ்:)!
ஜெஸ்வந்தி - Jeswanthy said...
பதிலளிநீக்கு//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆஹா! படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு .//
மிக்க நன்றி ஜெஸ்வந்தி!
mervin anto said...
பதிலளிநீக்கு//pit thervai vida ungal padangalai thervu saivathil rompa kashtam polirukirathe............
valthukkal madam.......//
என்ன படம் அனுப்புவது என்பதை விட பதிவில் பொருத்தமாய் என்னென்ன.. எத்தனை படங்கள் தரலாம் என்பதே வரவர எனக்கு முக்கியமாகி வருவது போலுள்ளது:)! அது சரியல்லதான்.
//iniya pongal valthukkal......//
நன்றி மெர்வின்!!!
goma said...
பதிலளிநீக்கு//2,8,15 மூன்றும் ஓகே.
15வது படம் பின்னணி சுமார்.
8ம் 2ம் அசத்தல்
2ல் பின்னணியும் கொஞ்சம் காய்ந்த சருகும் பாறையுமாக அமைந்திருப்பது சிறப்பு.
நமது முன்னோர் மரத்தைப் பின்னணியாகக் கொண்டிருப்பது கவிதை//
கவனித்து அளித்திருக்கும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கோமா.
கனாக்காதலன் said...
பதிலளிநீக்கு//very nice !//
மிக்க நன்றி:)!
அமுதா said...
பதிலளிநீக்கு//அழகான படங்கள். பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!//
நன்றிகள் அமுதா:)!
தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 22 பேருக்கும் என் நன்றிகள்!!
பதிலளிநீக்குராமலக்ஷ்மி படங்களுக்காக மெனக்கெடுகிறீர்கள் என்பது உங்கள் படங்களைப் பார்த்தாலே தெரிகிறது :-) வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக உள்ளது.. இன்னும் மற்றவர்கள் அறியா வண்ணம் எடுக்க முயற்சி செய்யுங்கள் இன்னும் இயல்பாக இருக்கும். இவையே உங்களை (புகைப்படக்கலையில்) அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.