அன்ன பட்சியாய்..
செல்கின்ற பாதையெல்லாம்
மலர்க் கம்பளம் சாத்தியமில்லை
தடுமாற வைக்கப் பாய்ந்து வரலாம்
எத்திசையிலிருந்தும் எறியப்பட்டு
கூரிய கற்களாய் விமர்சனங்கள்
உற்று நோக்கின் உதவக் கூடும்
படிந்திருக்கும் துகள்களில்
ஒளிந்திருக்கும்
நண்பர் மறைத்த நம் குறைகள்!
துவள வைக்கும்
தொடர் விமர்சன ஈட்டிகளாகட்டும்
உடல் காயமுறட்டும்
ஊசிமுனை வார்த்தைகள்
உள்ளம் மட்டும் துளைக்காதிருக்கட்டும்
வீதிகளில் போற்றிச் சிலைகள்
விமர்சகருக்கு அல்ல
விமர்சிக்கப் பட்டவருக்கே
நீரினை விலக்கிப் பாலினைப் பருகும்
அன்ன பட்சியாய்..
நல்லன எடுத்து அல்லாதது விலக்கி
வளைத்திடலாம் வில்லாய்
விமர்சனங்களை..
எய்திடலாம் இலக்கினை நோக்கி
அம்புகளை.
***
31 டிசம்பர் 2010, கீற்று மின்னிதழில்.., நன்றி கீற்று!
தட்சணை
கற்றுத் தந்தவனுக்கு
உற்ற காணிக்கை
காலமெலாம் அவன்
காலடியில் கிடப்பதல்ல
பெற்ற வித்தையில்
பெயரினை ஈட்டி
சுற்றம் போற்ற
வாழ்ந்து காட்டுவதே.
***
செப்டம்பர் 2010, ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள் - முதல் இதழில்.., நன்றி சுவடுகள்!
படங்கள்: இணையத்திலிருந்து..
மிகவும் அருமை சகோ !
பதிலளிநீக்குஇரண்டு கவிதைகளும் மிக எளிமை ஆனால்... மிக வலிமை... பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக..
பதிலளிநீக்குநிச்சயம் வெற்றி முனைந்து செயல்படுபவருக்கே..
ஆல் தி பெஸ்ட்
||படிந்திருக்கும் துகள்களில்
பதிலளிநீக்குஒளிந்திருக்கும்
நண்பர் மறைத்த நம் குறைகள்!||
அடடா!!!
அருமையான வரி!
பெயர் சொல்லும் சுவடுகள் கவிதை அற்புதம். துவண்ட மனத்திற்கு சாமரம் வீசுகிறது கீற்று கவிதை.
பதிலளிநீக்கு//விமர்சனங்களையே வில்லாய் வளைத்து
பதிலளிநீக்குஇலக்கினை நோக்கி எய்திடலாம் அம்புகள்//
அருமை.
/*உற்று நோக்கின் உதவக் கூடும்
பதிலளிநீக்குபடிந்திருக்கும் துகள்களில்
ஒளிந்திருக்கும்
நண்பர் மறைத்த நம் குறைகள்!
*/
/*வீதிகளில் போற்றிச் சிலைகள்
விமர்சகருக்கு அல்ல
விமர்சிக்கப் பட்டவருக்கே
*/
அருமை
ஒவ்வொரு வரியும் உண்மை உணர்வின் வெளிப்பாடு,அருமையாக அதனை வெளிக்கொணர்ந்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்.உங்கள் ஊக்கம் என்னைப் போன்ற எழுத்துலகில் புதியவர்களுக்கு மிக்க ஆர்வத்தை தருகிறது என்பது உண்மையிலும் உண்மை.
பதிலளிநீக்குஅக்கா ... அசத்துட்டீங்க ... வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது ராமலஷ்மி.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குமுதல்வரியிலேயே டாப்கியரில் எகிறுதுங்க கவிதை.. கடைசிவரை அதே வேகம் குறையாமல் :-)))
பதிலளிநீக்குபாராட்டுக்கள் ராமலஷ்மி :-))
//ஓடுகின்ற பாதையெல்லாம்
பதிலளிநீக்குமலர்க் கம்பளம் சாத்தியமில்லை
தடுமாற வைக்கப் பாய்ந்து வரலாம்
எத்திசையிலிருந்தும் எறியப் பட்டு
கூரிய கற்களாய் விமர்சனங்கள்//
ம்ம்
அருமையான கவிதை!
//வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக..//
யெஸ்
அருமை அக்கா. கூடவே வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குகவிதைகளில் பாதிக்கபட்டவரின் மன நிலையை சொல்லி மனச அள்ளி விட்டீர்கள்
பதிலளிநீக்குஉங்க ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லாயிருக்குங்க ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குமுதல் கவிதையில் விமர்சகர்களையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டீங்க! இனிமேல் ஒரு படைப்பாளியின் கடின உழைப்பை கண்டபடி விமர்சிக்க அஞ்சுவாங்க என்னைமாதிரி நுனிப்புல் மேயிறவங்க எல்லாம்!:))))
***வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக!***
ஏற்கனவே இந்த கவிதை எழுதி வெற்றி வாகை சூடிட்டீங்க, நீங்க! :)
வாழ்த்துக்கள்!
-----------------
***கற்றுத் தந்தவனுக்கு
உற்ற காணிக்கை
காலமெலாம் அவன்
காலடியில் கிடப்பதல்ல
பெற்ற வித்தையில்
பெயரினை ஈட்டி
சுற்றம் போற்ற
வாழ்ந்து காட்டுவதே.***
கற்றுத்தந்தவங்க புரிஞ்சுகிட்டா சரிதான்! :)))
கனாக்காதலன் said...
பதிலளிநீக்கு//மிகவும் அருமை சகோ !//
மிக்க நன்றி.
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு//இரண்டு கவிதைகளும் மிக எளிமை ஆனால்... மிக வலிமை... பாராட்டுக்கள்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//
நன்றியும் பொங்கல் நல்வாழ்த்துக்களும்!!
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக..
நிச்சயம் வெற்றி முனைந்து செயல்படுபவருக்கே..
ஆல் தி பெஸ்ட்//
மிக்க நன்றி!!
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு***||படிந்திருக்கும் துகள்களில்
ஒளிந்திருக்கும்
நண்பர் மறைத்த நம் குறைகள்!||
அடடா!!!
அருமையான வரி!***
மிக்க நன்றி கதிர்.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//பெயர் சொல்லும் சுவடுகள் கவிதை அற்புதம். துவண்ட மனத்திற்கு சாமரம் வீசுகிறது கீற்று கவிதை.//
நன்றிகள் தமிழ் உதயம்.
புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிலளிநீக்கு***//விமர்சனங்களையே வில்லாய் வளைத்து
இலக்கினை நோக்கி எய்திடலாம் அம்புகள்//
அருமை.***
நன்றி புவனேஸ்வரி.
அமுதா said...
பதிலளிநீக்கு***/அருமை/***
நன்றிகள் அமுதா!!
asiya omar said...
பதிலளிநீக்கு//ஒவ்வொரு வரியும் உண்மை உணர்வின் வெளிப்பாடு,அருமையாக அதனை வெளிக்கொணர்ந்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்.உங்கள் ஊக்கம் என்னைப் போன்ற எழுத்துலகில் புதியவர்களுக்கு மிக்க ஆர்வத்தை தருகிறது என்பது உண்மையிலும் உண்மை.//
மகிழ்ச்சியும் நன்றியும் ஆசியா.
Chitra said...
பதிலளிநீக்கு//அக்கா ... அசத்துட்டீங்க ... வாழ்த்துக்கள்!//
நன்றிகள் சித்ரா.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//நன்றாக இருக்கிறது ராமலஷ்மி.வாழ்த்துக்கள்.//
நன்றிகள் பவளா.
அம்பிகா said...
பதிலளிநீக்கு//மிக அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//
நன்றி அம்பிகா.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//முதல்வரியிலேயே டாப்கியரில் எகிறுதுங்க கவிதை.. கடைசிவரை அதே வேகம் குறையாமல் :-)))
பாராட்டுக்கள் ராமலஷ்மி :-))//
நன்றி சாரல்:)!
ப்ரியமுடன் வசந்த் said...
பதிலளிநீக்கு***/அருமையான கவிதை!
//வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக..//
யெஸ்/***
நன்றிகள் வசந்த்! சிறிய இடைவெளிக்குப் பிறகு திரும்பி வருகையில் பொலிவுடன் தொடங்க வாழ்த்துக்கள்:)!
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//மிக அருமை.//
நன்றி மேடம்.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//அருமை//
நன்றிகள் சார்!
சுசி said...
பதிலளிநீக்கு//அருமை அக்கா. கூடவே வாழ்த்துகளும்.//
மிக்க நன்றி சுசி!
யாதவன் said...
பதிலளிநீக்கு//கவிதைகளில் பாதிக்கபட்டவரின் மன நிலையை சொல்லி மனச அள்ளி விட்டீர்கள்//
நன்றிகள் யாதவன்.
வருண் said...
பதிலளிநீக்கு//உங்க ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லாயிருக்குங்க ராமலக்ஷ்மி.
முதல் கவிதையில் விமர்சகர்களையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டீங்க! இனிமேல் ஒரு படைப்பாளியின் கடின உழைப்பை கண்டபடி விமர்சிக்க அஞ்சுவாங்க //
விமர்சனங்கள் என்றைக்கும் தொடர்ந்தபடிதாங்க இருக்கும்:)! நாம் எடுத்துக் கொள்கிற விதத்தில்தான் வீழாமல் நிற்க இயலும்:)!
//***வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக!***
ஏற்கனவே இந்த கவிதை எழுதி வெற்றி வாகை சூடிட்டீங்க, நீங்க! :)
வாழ்த்துக்கள்!//
நன்றி வருண்:))!
-----------------
//கற்றுத்தந்தவங்க புரிஞ்சுகிட்டா சரிதான்! :)))//
குரு வணக்கத்துக்குரியவர். நன்றியும் மரியாதையும் என்றும் இருக்க வேண்டும் மனதில். மறுப்பதற்கில்லை. ஆனால் நல்ல குரு..
//பெயரினை ஈட்டி
சுற்றம் போற்ற// இதைத்தான் விரும்புவார். பெருமையாய் உணர்வார். உயர்ந்த தட்சணையாய் கருதுவார்:)! வித்தையக் கற்றவனும் புரிஞ்சுக்கணும்னு சொல்லியிருக்கிறேன்:))!
//நீரினை விலக்கிப் பாலினைப் பருகும்
பதிலளிநீக்குஅன்ன பட்சியாய்..
நல்லன எடுத்து அல்லாதது விலக்கிடத்
தெரிந்து விட்டால்..//
இந்தக் கருத்து பல விஷயங்களுக்கும் பொருந்தும்! அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
மாணவனின் கடமை பற்றியும் கச்சிதமாக...
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!
அருமையான கவிதை!
பதிலளிநீக்குபொங்கல் நல் வாழ்த்துக்கள்
//விமர்சனங்களையே வில்லாய் வளைத்து
பதிலளிநீக்குஇலக்கினை நோக்கி எய்திடலாம் அம்புகள்
வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமா//
வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
இரண்டு கவிதையும் அருமை.
சுற்றப் போற்ற வாழுங்கள்!
வாழ்க வளமுடன்.
மிகப்பிடித்திருந்தது.
பதிலளிநீக்குகவிநயா said...
பதிலளிநீக்கு***//நீரினை விலக்கிப் பாலினைப் பருகும்
அன்ன பட்சியாய்..
நல்லன எடுத்து அல்லாதது விலக்கிடத்
தெரிந்து விட்டால்..//
இந்தக் கருத்து பல விஷயங்களுக்கும் பொருந்தும்! அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.***
ஆம் கவிநயா, பல விஷயங்களுக்கும்:)!
//மாணவனின் கடமை பற்றியும் கச்சிதமாக...
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//
நன்றி கவிநயா:)!
ஆயிஷா said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை!
பொங்கல் நல் வாழ்த்துக்கள்//
நன்றி ஆயிஷா, அன்பான வாழ்த்துக்களுக்கும். உங்களுக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//இரண்டு கவிதையும் அருமை.
சுற்றப் போற்ற வாழுங்கள்!
வாழ்க வளமுடன்.//
ஆசிகளுக்கு நன்றி கோமதிம்மா.
நர்சிம் said...
பதிலளிநீக்கு//மிகப்பிடித்திருந்தது.//
மிக்க நன்றி நர்சிம்.
மிகவும் அருமை.
பதிலளிநீக்கு@ குமார்,
பதிலளிநீக்குமிக்க நன்றி!
//வீதிகளில் போற்றிச் சிலைகள்
பதிலளிநீக்குவிமர்சகருக்கு அல்ல
விமர்சிக்கப் பட்டவருக்கே//
//பெற்ற வித்தையில்
பெயரினை ஈட்டி
சுற்றம் போற்ற
வாழ்ந்து காட்டுவதே.//
நல்ல நம்பிக்கைக் கவிதை அக்கா... படித்ததில் மகிழ்ச்சி...
இந்த நன்நம்பிக்கையுடன், எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா....
@ கவிநா,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் பொங்கல் நல்வாழ்த்துக்களும் கவிநா:)!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதிரி. வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டும் அருமை....இரண்டாவது ரொம்ப அருமை.
பதிலளிநீக்குபொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதிரி. வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.//
நன்றி ஆனந்த். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்:)!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//இரண்டும் அருமை....இரண்டாவது ரொம்ப அருமை.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஸ்ரீராம்:)! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//
நன்றியும் பொங்கல் நல்வாழ்த்துக்களும்:)!
கலக்கல்...கலக்கல்... விமர்சனமில்லாத எதுவுமே உப்புச்சப்பில்லாத பண்டம்போலதானே.. அன்ன பட்சியானால் அதுவும் தரம்பிரிக்கலாம்... நல்ல கவிதை..நல்ல வரிகள். வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்குஇரு கவிதைகளும் அருமை
பதிலளிநீக்குஉடல் காயமுற்றாலும்
பதிலளிநீக்குஊசிமுனை வார்த்தைகளை
உள்ளந் துளைக்க விடாதீர்//
அவசியமான ஆலோசனை மேடம். நன்றி!
க.பாலாசி said...
பதிலளிநீக்கு//கலக்கல்...கலக்கல்... விமர்சனமில்லாத எதுவுமே உப்புச்சப்பில்லாத பண்டம்போலதானே.. அன்ன பட்சியானால் அதுவும் தரம்பிரிக்கலாம்... நல்ல கவிதை..நல்ல வரிகள். வாழ்த்துக்களும்...//
நன்றிகள் பாலாசி:)!
திகழ் said...
பதிலளிநீக்கு//இரு கவிதைகளும் அருமை//
மிக்க நன்றி திகழ்!
மணி said...
பதிலளிநீக்கு***//உடல் காயமுற்றாலும்
ஊசிமுனை வார்த்தைகளை
உள்ளந் துளைக்க விடாதீர்//
அவசியமான ஆலோசனை மேடம். நன்றி!***
நன்றிகள் மணி, முதல் வருகைக்கும்!
தமிழ்மணத்தில் வாக்களித்த 17 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 24 பேருக்கும் என் நன்றிகள்!
பதிலளிநீக்குஅருமையான கவிதைகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா!
@ சுந்தரா,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!
// விமர்சகருக்கு அல்ல
பதிலளிநீக்குவிமர்சிக்கப் பட்டவருக்கே//
இது பிடித்திருந்தது.