Wednesday, January 19, 2011

ஒளி வட்டம்


மாற்றுத் திறனாளிகள் கொண்டாடினர்
கடவுளென்று அவனை
தம் துயரங்களை
விருதுக்குரிய வெற்றிப் படமாக்கி
உலகறியப் பதிந்ததற்காக!

அவன் தலைக்குப் பின்
சுழலத் தொடங்கியிருந்த
ஒளிவட்டத்தை நெருங்க முடியாமல்
விழுந்து மடிந்து கொண்டிருந்தன
விட்டில் பூச்சிகளாய்..

படமெங்கும்
தத்ரூபமாய் நடித்து ஒத்துழைத்த
மாற்றுத் திறனாளிகள்
சம்பளப் பாக்கிக் கோரி
அனுப்பிக் கொண்டிருந்த
விண்ணப்பங்கள்!
***

படம்: இணையத்திலிருந்து..

18 ஜனவரி 2011, கீற்று இணைய இதழில்..

59 comments:

 1. அண்மைய உண்மை நிகழ்வு போலவே இருக்குங்க ...

  ReplyDelete
 2. மாற்றுதிறனாளிகளின் வேதனை நிகழ்வை சொற்களால் படம்பித்த விதம் மிக நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. மாற்றுத்திறனாளிகள், மற்றும் மன நிலை குன்றிய ஆடிஸம் சிறுவர்கள்,
  அனாதை சிறுவர்கள், முதியோர் இல்லங்கள் என
  இவர்களையெல்லாம் முன்னுக்கு வைத்து ஏதோ அவர்கள் நன்மைக்காகத்தான் நடத்துவதுபோன்று
  பல அமைப்புகள் தோன்றிவிட்டன. இந்த அமைப்புகள் பெரும்பாலும் பொதுமக்களின்
  கருணை உதவியால் தான் நடைபெறுகின்றன. ஆனால், இவற்றினை
  உற்றுப்பார்ப்போமானால், வரும் வரவுத்தொகையில், இவற்றின் நிர்வாகச்செலவு மட்டுமே எழுபத்தி ஐந்து
  விழுக்காடுக்குமேல் இருக்கிறது. இந்த என்.ஜி.ஓ க்கள் என்ன செய்கிறார்கள் என்பது
  அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 4. சுத்தி வளைச்சு நமக்கும் சில சமயம் பொருந்துகிறது!

  ReplyDelete
 5. உண்மையை உரைக்கும்படி சொல்லி இருக்கிறிர்கள்.

  ReplyDelete
 6. அருமை ராமலஷ்மி.

  ReplyDelete
 7. ஹ்ம்ம் பிறரின் உழைப்பில் புகழ் பேரும் அற்பர்கள்

  ReplyDelete
 8. ம்ம்ம்ம்.... நிதர்சனம் உரைக்கும் கவிதை...

  ReplyDelete
 9. யோசிக்க வைக்கிறது...

  ReplyDelete
 10. "ஒளி வட்டம்"மின்னுகிறது!

  ReplyDelete
 11. அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 12. நன்றாக இருக்கிறது...

  ReplyDelete
 13. சற்றே பெரிய ஹைக்கூ...!

  அருமை.

  ReplyDelete
 14. நல்லாயிருக்கு அக்கா....

  ReplyDelete
 15. அருமை.

  தமிழ் மணத்தில் முதல் நூறு பதிவுகள் வெளியிட்டார்களே! அதில் முத்து சரம் 36ஆவது இடமா? வாழ்த்துகள் (நான் அவசரமாய் பார்த்துட்டு முத்து சரம் அதில் இல்லைன்னு நினைத்திருந்தேன்)

  ReplyDelete
 16. இப்படியும் மனிதர்கள் நடுவில் அப்படியும் மனிதர்கள் !

  ReplyDelete
 17. சி. கருணாகரசு said...
  //அண்மைய உண்மை நிகழ்வு போலவே இருக்குங்க ...//

  தங்கள் கணிப்பு சரியே. எழுத்தில் மட்டுமே நம் ஆதங்கம், வருத்தம் இவற்றைப் பதிய முடிகிறது.

  ReplyDelete
 18. ராம்ஜி_யாஹூ said...
  //nice//

  நன்றி ராம்ஜி.

  ReplyDelete
 19. சி. கருணாகரசு said...
  //மாற்றுதிறனாளிகளின் வேதனை நிகழ்வை சொற்களால் படம்பித்த விதம் மிக நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.//

  நன்றிகள் கருணாகரசு.

  ReplyDelete
 20. sury said...
  // ஆனால், இவற்றினை
  உற்றுப்பார்ப்போமானால், வரும் வரவுத்தொகையில், இவற்றின் நிர்வாகச்செலவு மட்டுமே எழுபத்தி ஐந்து
  விழுக்காடுக்குமேல் இருக்கிறது. இந்த என்.ஜி.ஓ க்கள் என்ன செய்கிறார்கள் என்பது
  அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!//

  எல்லோரும் அப்படி அல்ல எனினும் நீங்கள் சொல்வது போல நிறைய நடக்கவே செய்கிறது. ஏதோ ஒருவகையில் இவர்கள் பரமாரிக்கப் படுகிறார்களே என்கிற எண்ணத்துடன் இதை மக்களும் பெரிது படுத்தாமல் கடந்து விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

  வருகைக்கும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 21. ஈரோடு கதிர் said...

  //சுத்தி வளைச்சு நமக்கும் சில சமயம் பொருந்துகிறது!//

  நன்றி கதிர். ‘சுத்தி வளைச்சு’.. உண்மைதான். சமூக அவலங்கள் உலகின் கவனத்துக்கு வர ஏதோ ஒரு வகையில் பதியப் பட வேண்டியது அவசியமாவது ஒருபுறமிருக்க, முதல் பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம் அளவுக்கு மனசாட்சியை அடகு வைத்து நாம் தாழ்ந்து விடுவதில்லை என்பதும் உண்மை.

  ReplyDelete
 22. தமிழ் உதயம் said...
  //உண்மையை உரைக்கும்படி சொல்லி இருக்கிறிர்கள்.//

  நன்றிகள் தமிழ் உதயம்.

  ReplyDelete
 23. asiya omar said...
  //அருமை ராமலஷ்மி.//

  நன்றிகள் ஆசியா.

  ReplyDelete
 24. எல் கே said...
  //ஹ்ம்ம் பிறரின் உழைப்பில் புகழ் பேரும் அற்பர்கள்//

  உண்மைதான் எல் கே. ஒளி வட்டங்கள் மனிதரை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது! கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. கவிநா... said...
  //ம்ம்ம்ம்.... நிதர்சனம் உரைக்கும் கவிதை...//

  நன்றிகள் கவிநா.

  ReplyDelete
 26. goma said...
  //யோசிக்க வைக்கிறது...//

  நன்றிகள் கோமா.

  ReplyDelete
 27. அன்புடன் அருணா said...
  //"ஒளி வட்டம்"மின்னுகிறது!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 28. கோமதி அரசு said...
  //அருமையான கவிதை ராமலக்ஷ்மி.//

  நன்றிகள் கோமதிம்மா.

  ReplyDelete
 29. Priya said...
  //நன்றாக இருக்கிறது...//

  நன்றி ப்ரியா.

  ReplyDelete
 30. Chitra said...
  //Super!//

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 31. ஸ்ரீராம். said...
  //சற்றே பெரிய ஹைக்கூ...!

  அருமை.//

  நன்றிகள் ஸ்ரீராம்.

  ReplyDelete
 32. S.Menaga said...
  //நல்லாயிருக்கு அக்கா....//

  நன்றிகள் மேனகா.

  ReplyDelete
 33. கனாக்காதலன் said...
  //நல்லாருக்குங்க//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 34. மோகன் குமார் said...
  //அருமை.//

  நன்றி.

  //தமிழ் மணத்தில் முதல் நூறு பதிவுகள் வெளியிட்டார்களே! அதில் முத்து சரம் 36ஆவது இடமா? வாழ்த்துகள் (நான் அவசரமாய் பார்த்துட்டு முத்து சரம் அதில் இல்லைன்னு நினைத்திருந்தேன்)//


  உங்கள் நூறாவது இடத்துக்கு வாழ்த்து தெரிவித்தபோது நான் வேடிக்கையாய் சொன்னது: ‘இனி என்னை பிரபலம் என அடிக்கடி குறிப்பிட மாட்டீர்கள்தானே’. அது நிஜமே மோகன்குமார்:)! நூறுக்குள் இல்லை. இது ட்ராஃபிக் ரேங்க். கடந்த 90 நாட்களைக் கணக்கில் எடுத்து இயங்கும். ட்ராஃபிக்கை பொறுத்து மாறிக் கொள்ளவும் செய்யவும். பாருங்கள் நேற்று 36. இன்று 35. தமிழ்மணம் நமக்காக சமீபத்தில் தந்த இன்னொரு சேவை. பலருக்கும் இன்னும் தெரியவில்லை என எண்ணுகிறேன். தமிழ்மணம் முகப்பில் இதற்கான அறிவிப்பு உள்ளது. அல்லது இங்கு சென்று http://www.tamilmanam.net/blog_ranking.php இச்சேவையைப் பெறலாம்.

  ReplyDelete
 35. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //superb//

  நன்றி சார்.

  ReplyDelete
 36. Sriakila said...
  //nice, very nice!//

  நன்றி ஸ்ரீஅகிலா.

  ReplyDelete
 37. ஹேமா said...
  //இப்படியும் மனிதர்கள் நடுவில் அப்படியும் மனிதர்கள் !//

  இதுதான் உலகம் என்றாகி விட்டது. நன்றி ஹேமா.

  ReplyDelete
 38. புதிய தகவலுக்கு நன்றி. வீட்டுக்கு சென்றதும் பார்க்கிறேன்

  ReplyDelete
 39. @ மோகன் குமார்,
  நல்லது:)!

  ReplyDelete
 40. என் ராஜலக்ஷ்மி சார்பாக வாழ்த்துகிறேன் =ராம்ஸ்

  --

  ReplyDelete
 41. @ ramalingams,
  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. வேதனை அக்கா. அப்படியே கோவமும் வருகிறது.

  ReplyDelete
 43. @ சுசி,
  ஆம் சுசி. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 44. கோவமும் ஆத்திரமும் சேர்ந்தே வருது.
  இதுதான் உங்க எழுத்துக்குக்கிடைத்தவெற்றி

  ReplyDelete
 45. Manathai Varudukindrathu..
  Thodarattum Unngal KAviya NAdai..
  Endrum Nattpudan...
  Sukreevan.K.Ananth.

  ReplyDelete
 46. @ Lakshmi,
  கருத்துக்கு மிக்க நன்றிங்க லக்ஷ்மி.

  ReplyDelete
 47. @Karuppasamy Ananth,
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுக்ரீவன் கே. ஆனந்த்.

  ReplyDelete
 48. தமிழ் மணத்தில் வாக்களித்த 11 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 23 பேருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 49. @ ஆதிமூலகிருஷ்ணன்,
  நன்றி ஆதி.

  ReplyDelete
 50. அண்மையில் ஒரு டைரக்டர் ஒரு மாற்றுத் திறனாளியை தவிக்க விட்ட செய்தி படித்தேன். அதை ஒட்டி ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன். கவிதை வடிவில் தாங்கள் சிறப்பாக எழுதிவிட்டீர்கள்.

  அந்த செய்தி படிக்கும் வரை அந்த டைரக்டர் மீது எனக்கு மரியாதை உண்டு. அதுவும் அன்றோடு முடிந்துவிட்டது.எது எப்படியோ புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

  யாரைத்தான் நம்புவது...?!

  ReplyDelete
 51. @ அமைதி அப்பா,

  நீங்கள் எழுத நினைத்ததை பதிவர் வருண் இடுகை மூலமே நானும் அறிய வந்தேன்.

  //புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.//

  எப்படியேனும் பாதிக்கப்பட்டவருக்கு நல்லது நடந்தால் சரி. நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 52. ம்ம்..

  //நிர்வாகச்செலவு மட்டுமே எழுபத்தி ஐந்து விழுக்காடுக்குமேல்//

  அட!! :-(

  ReplyDelete
 53. வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin