லால்பாகில்.. (2011) |
முரப்பநாடு ஆற்றங்கரையோரம் (2010) |
கருங்குளம் குன்றில் சுக்கு வென்னீர் விற்பவர் (2010) |
வயிற்றுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர்; உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் மன பலத்துடன் வாழும் வரை தன் காலில் நிற்கவேண்டும் என்கிற உறுதியோடு சிலர்; தள்ளாத வயதிலும் குடும்பத்துக்கான தம் பங்களிப்பைக் கொடுத்தாக வேண்டிய சூழலில் சிலர் எனக் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாடெங்கிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கிறது.
இது குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிர்க்பெக் பல்கலைக் கழகம், லண்டன் மற்றும் மனித உரிமை காப்புறுதி ஆய்வு மையம், சென்னை ஆகியவற்றோடு கை கோர்த்து ‘தி ஹிந்து’ இப்போட்டியை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு உதவும் என நம்புகிறது.
பரிசு விவரங்கள்:
முதல் பரிசு ரூ.20000/-, இரண்டாம் பரிசு ரூ.10000/-; மூன்றாம் பரிசு ரூ. 5000/- மற்றும் 3 ஆறுதல் பரிசு பெறுகின்றவருக்குப் பாராட்டுப் பத்திரங்கள். நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி வந்தபடியே இருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் அதிக வாக்கு பெறும் ஒரு படத்துக்கு ரூ.5000/-.
உழைக்கும் முதியோர் நிலை குறித்த செய்தி எல்லோரையும் சென்றடைய வேண்டும், பலரும் படங்களை பார்வையிட வேண்டும் எனும் நோக்கத்துடன் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் அமைப்பாளர்கள் அதற்கானக் கடைசித் தேதி 28 ஜூலை இரவு 11 மணி வரையில் என அறிவித்து ஒருமாத காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். போட்டி முடிவுகள் 31 ஜூலை இணையத்திலும், 4 ஆகஸ்ட் பத்திரிகைகளிலும் வெளியாகும். விரிவாக இதைப் பற்றி அறிய இங்கேயும் விதிமுறைகளுக்கு இங்கேயும் செல்லலாம்.
விதிமுறைகள் தமிழில் இங்கே:
* படங்கள் அனுப்பக் கடைசித் தேதி நாளை ஜூலை 21 இரவு 11 மணி .
* படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* இந்தியாவுக்குள் கடந்த 12 மாதங்களுக்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* படங்களின் அளவு 1.5 MB-க்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். அவர்கள் கேட்கும் பட்சத்தில் அதிக ரெசலூஷனில் (பிக்ஸலில்) கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* உங்களுக்குப் பிடித்தமான எத்தனை படங்களுக்கும் வாக்களிக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு படத்துக்கே வாக்களிக்க இயலும்.
* இணையம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
மேலே உள்ள 3 படங்களை மாதிரிக்காகப் பகிர்ந்திருப்பினும் போட்டி விதிமுறைப்படி ஒருவருடத்தினுள் எடுத்த படங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டுமாகையால் கலந்து கொள்கிறார்கள் கபினிப் பெரியவரும், லால்பாகில் கடலை விற்கும் பெண்மணியும்.
"உப்புத்தாத்தா" பதிவிலிருந்து சில படங்கள்...
செல்கிறார் கூடவே, நடக்கவே தடுமாறினாலும், பிழைப்புக்காகப் பொது இடங்களில் காந்தியாகத் தோன்றுகிற இவரும்..
ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அலைமோதிய ‘பெங்களூர் சித்திரச் சந்தை 2013_ல்.. ‘இத்தகு நடிப்பு உழைப்பில் சேர்த்தியா? ’ எழுகிற கேள்வியை ‘எதனால் இந்தக் கட்டாயம் ?’ எனும் சிந்தனை பின் தள்ளி விடுகிறது. |
***
ஒரு நல்ல நோக்கத்திற்காக நடைபெறும் போட்டி பற்றிய அறிவிப்புக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
பதிலளிநீக்குஅசல் காந்தி போன்ற தோற்றத்துடன் காட்டப்பட்டுள்ள படமும் மற்ற படங்களும் அருமை.
வாழ்த்துகள்.
பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்குநேரம் மிகவும் கம்மியாக இருப்பதால் நான் கலந்து கொள்ளவில்லை! [நொ.கு.ச.வி.சா.] :)))
பதிலளிநீக்குஅருமையான படங்கள்...
பதிலளிநீக்குநல்லதொரு போட்டி பற்றிய அறிவிப்பு...
வாழ்த்துக்கள் அக்கா,
கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கூட கவிதையாக ரசிக்க வைக்கின்றன. உழைக்கும் முதியோரைப் பார்க்கையில் மனம் கனக்கிறது. எனக்கும் போட்டில கலந்துக்க ஆசைதான். ஆனா பல பேருக்கு பரிசு கிடைக்காம போறதுக்கு நான் காரணமாய்டுவேனோன்னு நெனச்சு கலந்துக்கலை. (கு.வி.மீ.ம.ஒ) நாங்களும் சுருக்கத்துல சொல்வோம்ல ஸ்ரீராம்...! ஹா... ஹா...!
பதிலளிநீக்குஎன்னுடைய இரண்டு படங்கள் கலந்துக்கிட்டிருக்கு.
பதிலளிநீக்குநல்ல போட்டி....
பதிலளிநீக்குஇங்கே தந்திருக்கும் படங்கள் அழகு....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....
நன்று. வெற்றிக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇயற்கையோடு ஒன்றிய அழகான படங்கள் .மனத்தைக் கவர்ந்த
பதிலளிநீக்குஇப் படப் பகிர்விற்கு என் இனிய வாழ்த்துக்கள் .போட்டியில்
வெல்லப் போவது யாரு ............!!!!
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குபாதி புரிகிறது:)! சா.போ.இ.வே. :)!
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குநன்றி கணேஷ். என் பதிலையும் பார்க்க:)!
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் சாந்தி!
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@Ambal adiyal,
பதிலளிநீக்குபொறுத்திருந்து பார்ப்போம். நன்றி:)!
நான் எழுதியது : நொண்டிக் குதிரைக்கு சறுக்கி விழுந்தது சாக்கு!
பதிலளிநீக்குஉங்கள் பதில் : சாக்கு,போக்குகள் இங்கு வேண்டாம்! சரியா?
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குவிழுந்ததைப் பிடிக்க முடியவில்லை:)! நொ.கு.சறுக்கியது.சா., எனப் புரிந்தது.
என் பதிலை ஊகித்தது சரியே. சின்ன திருத்தம். ‘இனி..’ வேண்டாம்:)!