Wednesday, July 3, 2013

மீன்கள் நீந்தும் ஓவியங்கள் - பெங்களூர் சித்திரச்சந்தை 2013 (பாகம் 2)

ஒவ்வொரு ஓவியருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது என்பதை அறிவோம். வித்தியாசமான பாணியால் இந்த ஓவியர் நம் கவனத்தைப் பெறுகிறார்.  சமுத்திரத்திலும் ஆற்றிலும், ஏரியிலும் குளத்திலும் இவர் குழைத்தெடுத்தத் தூரிகையில் ஒட்டிக் கொண்டு வந்து உற்சாகமாய் நீந்துகின்றன இவர் தீட்டிய ஓவியங்களில் நூற்றுக்கணக்கில் மீன்கள்.

# 1
முதல் பார்வையில் முக்காடிட்ட பெண்ணோ எனத் தோன்றினாலும்.. உற்றுப் பாருங்கள் புரியும்..
முறுக்கிய மீசையுடன் கம்பளி போர்த்திய ஆண் என்பது. அந்த விழிகளில் தெரிவது அச்சமா? வியப்பா? யாருடைய கேள்விக்கோ பதில் சொல்ல வருகிற மாதிரி திறந்திருக்கின்றன உதடுகள்.


#2
கடல் தாய் ஏமாற்றவில்லை.  கூடை நிறைய மீன்கள். கழுவுகிறார் அம்மிணி. பின்னால் காத்திருப்பவர்கள் வாங்கிச் செல்ல வந்தவர்களோ?

#3
கடல் குதிரையைக் குழந்தை போல மடியில் ஏந்தி இடது கையால் அணைத்துப் பிடித்திருக்கும் இவள், கடற்கன்னியோ? சுற்றிலும் நண்பர்களான நண்டு, ஆக்டோபஸ், சுறா, திமிங்கலம். வலப்பக்கம் நிற்கிறது அழகான சங்கு. அணிந்திருக்கும் ஆடையிலும் எத்தனை சங்குகள், சிப்பிகள்...

#4

தீமூட்டி மீனை வாட்டியபடி ஊர்க்கதை பேசும் மீனவத் தம்பதியரோ?

#5

பிடிச்சாலும் பிடிச்சான். பெரிய மீனாப் பாத்துப் பிடிச்சான்..


#6
இந்தப் படத்தைதான் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கீழே இருக்கும் ஆமையை ஒரு கை தடவிக் கொடுப்பது போல் முதலில் தோன்றினாலும், உற்றுப் பார்த்தால் அதன் மேலேறி இன்னொரு ஆமை இடப்பக்கமாய் நீருக்குள் டைவ் அடிக்கிற மாதிரி இல்லை? அதற்கு சற்று மேலே கடல் குதிரை.., இன்னும் மேலே வலப்பக்கம் நண்டா? எப்படித் தெரிகிறது உங்களுக்கு:)?

படம் இரண்டைத் தவிர மற்ற எல்லா ஓவியங்களுமே சட்டமின்றித் தரையில் விரிக்கப்பட்டிருந்தன. கடைசி ஓவியத்தில் கிடைத்தது ஓவியரின் கையொப்பம்:)!

இவர்தான் அந்த திறமைசாலி இளைஞர் K. குபேரன்!


நல்ல எதிர்காலத்துக்கு வாழ்த்துவோம் ஓவியரை:)!

***
பாகம் 1 இங்கே.

49 comments:

 1. காணக்கிடைக்கா அரிய ஓவியங்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 2. வியக்க வைக்கிறது ஓவியங்கள்... 3D தொழிற்நுட்பம் போன்று பிரமாதம்...

  அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 3. திகைக்க வைத்த படங்கள். இளைஞர் சாதனை படைக்கட்டும்.

  ReplyDelete
 4. அற்புதம் ராமலக்ஷ்மி. என்ன ஒரு கற்பனை. 3டி ஓவியமா!!

  மிக மகிழ்ச்சி உங்கள் பகிர்வுக்கு. நன்றியும் கூட,.

  ReplyDelete
 5. ஹைய்யோ!!!! அட்டகாசம்!!!!

  முதல் படத்தில் அந்த ஆணின் தலையே ஒரு பெரிய மீன் தலையாகத்தான் தெரிகிறது. அந்த வாய்..... ஆச்சு அசல் மீன் வாய். சுவாசிக்க வாயைத் திறக்கும் ஸ்டைல்!

  அபாரம்!!!

  என்ன ஒரு கற்பனைப்பா!!!!

  ReplyDelete
 6. அருமையான படங்கள்...
  தூரிகையில் கற்பனை கலந்து கலக்கலாய் தீட்டியிருக்கும் ஓவியனுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. Wav.... அற்புதமான ஓவியம்... இப்படியும் வரையலாமா என்று மெய்சிலிர்க்க வைக்கிறது அவரது ஓவியம்...

  ReplyDelete
 8. ஒவ்வொரு படமும் வியக்கவும் பிரமிக்கவும் வைக்கிறது. என்ன ஒரு கற்பனை வளம்! என்ன ஒரு கலை நயம்! அசத்திட்டாரு ஓவியர்! பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

  ReplyDelete
 9. மிக அற்புதம்... பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க துடிக்கிறது இந்த ஓவியம்...

  ReplyDelete
 10. #6 ல் வலையுடன் மீன்பிடிக்கச் செல்லும் கணவன் தோள் மீது கைபோட்டு வழியனுப்பும் மனைவி. மீன் பிடித்து வரும் எண்ண அலைகள் மற்றும் வலை பின்புலத்தில் சிம்பாலிக்காக காட்டப்பட்டு உள்ளது. பெண்ணின் கைசொல்லும் சேதி.. ஆண்பெண் சிங்க முகமும், எறும்பு திண்ணியும்..நிலத்திற்கும் கடலுக்குமான உறவு, பிணைப்பு.

  http://eniyaoviya.blogspot.com/2013/07/mc.html

  ReplyDelete
 11. ஹைய்யோ.. ஜூப்பரா இருக்கு.

  ReplyDelete
 12. அழகோ அழகு. வித்தியாசமான பாணி. மனமார்ந்த வாழ்த்துகள் குபேரனுக்கு. நன்றி ராமலக்ஷ்மி மீன் ஓவியங்களை புகைப்படமாக அளித்தமைக்கு.

  ReplyDelete
 13. மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. வியக்க வைக்கும், அசர அடிக்கும் ஓவியங்கள். எப்படி நினைத்துப் அப்படி ஜாலம் காட்டுகின்றன. ஓவியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அபார கற்பனை.

  நீங்கள் சொல்லும் ஓவியத்தில் நீங்கள் சொல்லுவது போலவும் தெரிகிறது! :)))

  ReplyDelete
 15. wonderful.... i missed this in chitrasanthe...this time too much stalls...!

  thanks for sharing...!

  ReplyDelete
 16. கடல்வள செல்வத்தை வைத்து அள்ளி வழங்கி விட்டார் குபரேர் ஓவியங்களாய்.
  அவருக்கு வாழ்த்துக்கள்.
  அழகான ஓவியங்களை எங்களுக்கு அள்ளி வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 17. astonishing drawings indeed

  subbu thatha
  from
  boston

  ReplyDelete
 18. @Ramani S,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 19. @திண்டுக்கல் தனபாலன்,
  @அப்பாதுரை,

  இளைஞரை வாழ்த்தியிருப்பதற்கு நன்றி. அவரது பெயர் குபேரன். ஒரு படத்தில் கிடைத்து விட்டது அவரது கையொப்பம்:)!

  ReplyDelete
 20. @வல்லிசிம்ஹன்,

  3டி-யா என்பது தெரியவில்லை. ஆனால் கற்பனை பிரமிக்க வைக்கிறது. இரசித்ததற்கு நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 21. @துளசி கோபால்,

  நன்றி. ஆம். நீங்கள் சொல்லியிருப்பது போலவும் உள்ளது. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் பார்க்கப் பார்க்க விதம் விதமாய் தோன்றுகின்றது:).

  ReplyDelete
 22. @கலாகுமரன்,

  அட. உண்மைதான். ஆண் பெண் முகமெனவும் யோசித்தேன். தோள் என்பது அப்போது பிடிபடவில்லை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 23. @மதுமிதா,

  வாங்க மதுமிதா. இரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 24. @ஸ்ரீராம்.,

  கொஞ்சமாவது தெரிகிறதா:)? நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 25. @thamizhparavai,

  உண்மைதான். என்னாலும் முழுமையாக எல்லா ஸ்டால்களையும் பார்வையிட முடியவில்லை. நன்றி பரணி:)!

  ReplyDelete
 26. கடைசி படம் மாடர்ன் ஆர்ட்டோ??!! :-)))

  இந்த ஒரு ஸ்டாலில் உள்ள படங்கள் மட்டுமே இருக்கின்றனவே? மற்றவை இன்னொரு பதிவாக வருமோ! :-)

  ReplyDelete
 27. @ஹுஸைனம்மா,

  அப்படிதான் போலும்:).

  இது பாகம் இரண்டாயிற்றே. முதல் பாகம் இங்கே. பதிவின் இறுதியிலும் இணைப்பு உள்ளது. எடுத்த படங்களில் பாதியையேனும் இன்னும் 2,3 பாகங்களாகப் பகிர்ந்திட, பதிந்திட எண்ணம்:)! நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 28. வித்தியாசமான திறமை மிக்க ஓவியங்கள்! அனைவரும் ரசிக்க, இங்கே தந்ததற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!!

  ReplyDelete
 29. பிரமாதமான படங்கள். ஓவியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 30. வாவ்..அர்புதம்.ரொம்பவும் ரசித்தேன்

  ReplyDelete
 31. வித்தியாசமான படங்கள். ஓவியர் குபேரனுக்கு நல்ல கற்பனா சக்தி. பாராட்டுகள் - ஓவியங்களைப் படைத்தவருக்கும், எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கும்.....

  ReplyDelete
 32. வியக்க வைக்கும் சித்திரங்கள்....

  ReplyDelete
 33. @மனோ சாமிநாதன்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 34. @இரவின் புன்னகை,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin