ஞாயிறு, 14 ஜூலை, 2013

காஃபி பெயின்டிங் - “ஓம்” விநாயகர் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 3)

"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும், 
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும், 
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ" 

காஃபி பவுடரைக் கொண்டு, ‘ஓம்’ எனும் எழுத்தோடு, விதம் விதமாக அருள்பாலிக்கும் விநாயகர் சித்திரங்களைத் தீட்டி பலர் கவனத்தை ஈர்த்திருந்தார் சித்திரச் சந்தையில் ஓவியர் செல்வி.

#1 ஏக தந்தர்
ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம். 
#2 பால கணபதி
கணங்களிற்கு அதிபதி
#3 வக்ர துண்டர்
பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.
#4 வரதன்
வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.
 #5 சிந்தாமணி
சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.
[பெயர் விளக்கங்கள்: இணையத்திலிருந்து..] 

விநாயகரை மட்டுமின்றி அபிநய சரஸ்வதிகளையும், அன்னப் பறவை மற்றும் அழகு மயில்களையும் காஃபி நிறத்தில் கலைநயத்தோடு ஓவியமாக்கியிருந்தார்.

ஒற்றை வண்ணத்தில் ஓவியங்களை உயிர் பெற வைக்கும் சவால் என்னை அதிகம் ஈர்க்கிறது.” என ஓவியர் எனக்களித்த பேட்டி சென்ற வாரக் கல்கியில் வெளியாகியிருந்தது. இவர் வரைந்த மேலும் சிலபடங்களுடன் நேர்காணல் அடுத்த பதிவில்..
*** 

24 கருத்துகள்:

 1. ஓவியத்தில் உள்ள தொந்திப்பிள்ளையார் காவியம் படைக்கிறார். அருமையான படங்களுடன் அற்புதமான பதிவு. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. காஃபியில் புள்ளையார் ஓஹோன்னு இருக்கார்.

  இனி காலையில் எழுந்ததும் காஃபிப் புள்ளையார்தான்:-)

  பகிர்வுக்கு நன்றீஸ்.

  பதிலளிநீக்கு
 3. ஏக தந்தர் என்றால் இரண்டாவதாக சொல்லியிருக்கும் பொருள்தான் முதலில் தெரிகிறது.

  பால கணபதியின் சிரிக்கும் முகம் அழகு.

  வக்ரதுண்டரின் கண்களில் தெரியும் குறும்பைப் பார்த்தால் அந்த இன்னொரு கண் மூடி இருக்குமோ! (கண்ணடிக்கிறாரோ!!!)

  வரதர் ஏதோ சோதனைச்சாதனை நிகழ்த்திவிட்டு கெத்தாக அமர்ந்திருப்பது போல...

  சிந்தாமணி 'இதானே வேணாங்கறது' என்கிறாரோ நாட்டிய போஸில்!

  பொதுவாக 'ஆனைமுகத்தார்' எல்லோருக்கும் பிரியக் கடவுள் அல்லவா...! அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொன்றும் அற்புதம்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. eka thanthaaya vidhmahe
  mooshika vaahanaaya dheemahi.
  thanno vigneswara prachodayaath.

  subbu thatha.

  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 6. பால கணப்தி ரொம்பவும் கவர்ந்தார்.
  ம்ற்ற ஓவியங்களும் அழகு.

  பகிர்வுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 7. ஒற்றைக்கொம்பன் அதான் ஏகதந்தன் அழகாயிருக்கார்.

  காபி ஓவியம் புதுமை. கல்கி வெளியீட்டுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அருமையாக வரையப்பட்ட
  ஓவியங்கள் ! பகிர்வுக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 9. ஓங்காரத்தையும் ஐங்கரனையும் ஒருமித்த காஃபிச் சித்திரங்கள் மனம் கொள்ளை கொண்டன. தொடர்ந்து வரும் மற்ற ஓவியங்களுக்காகவும் ஓவியரின் நேர்காணலுக்காகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அழகிய ஓவியப் பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 10. @ஸ்ரீராம்.,

  ஏக தந்தர்.. ஆம் நாம் அறிந்த ஒன்றும்.
  சிந்தாமணி.. நன்றாகப் பாருங்கள். நானும் முதலில் நாட்டிய போஸ், கீழே உடையின் ஃப்ரில் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. தாமரை மேலிருக்கும் மெத்தையில் ஜம் என அமர்ந்திருக்கிறார்:)! நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 11. @அமைதிச்சாரல்,

  நன்றி சாந்தி. விரைவில் பகிருகிறேன்:)!

  பதிலளிநீக்கு
 12. @Ambal adiyal,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. @கீத மஞ்சரி,

  நன்றி கீதா. பகிர்ந்திடுகிறேன் சீக்கிரம்:).

  பதிலளிநீக்கு
 14. ஓம் விநாயகர் காஃபி பெயிண்டிங் அற்புதம். எல்லா விநாயகரும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தார்.
  பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 15. விநாயகரின் குறும்புப் பார்வை கொள்ளை கொள்கின்றது!... நேர்த்தியான தூரிகை. நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். மேலும் மேலும் வளர்க!..

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin