Tuesday, July 16, 2013

வண்ணத்தில் பிரதிபலிக்கும் வாழ்வு - கல்கி கேலரியில்..

ஓவியர் செல்வியின் பேட்டி, நான் எடுத்த அவரது ஓவியங்களின் படங்களுடன் சென்ற வாரக் கல்கி கேலரியில்..

நன்றி கல்கி!
ஓவியக் கலை மீதான ஆர்வம் செல்விக்கு சிறுமியாக இருந்தபோதே துளிர் விட்டிருந்திருக்கிறது.  பள்ளி வயதிலிருந்து பென்சில் ஸ்கெட்ச், வாட்டர் கலர், அனடமி, ஆயில் பெயிண்டிங், காட்சி அமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளை கற்றுக் கொண்டு இயற்கைக் காட்சிகள், உருவப்படங்கள், ஸ்டில் லைஃப் எனத் தொடர்ந்து பின் தஞ்சாவூர் ஓவியக் கலையையும் கற்று பல ஓவியங்களைப் படைத்திருக்கிறார்.

விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான இவருக்கு இளங்கலைப் படிப்பு வெளிநாட்டுக் கலைஞர்களின் படைப்புகள், ஓவியக் கலை குறித்த உலகளாவிய நிகழ்வுகள் எனக் கலையின் பல சாளரங்களைத் திறந்து விட்டிருக்கிறது.  நவீன ஓவியங்களும் அறிமுகமாகியிருக்கின்றன. நடப்பு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் யதார்த்த ஓவியங்களை அதிகம் விரும்பும் இவர் பயிற்சியாக்காக ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை மறுஆக்கம் செய்வதில் ஆரம்பித்து மனித முகங்கள், உருவங்களை வரைவதில் தேர்ச்சி பெற்று வருகிறார்.

#1 பாலக் கிருஷ்ணர்

#2 ரவிவர்மாவின் தமயந்தி

குழந்தைகளை ஓவியமாகத் தீட்டுவது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாயும் அவர்களது முக உணர்ச்சிகளைப் பதிவு செய்வது பேருவகையைத் தருவதாகவும் சொல்லும் இவருக்குப் பயிற்சியாக அமைந்து போயுள்ளன பிரபல ஓவியர் டொனால்ட் ஜோலனின் குழந்தைகள் ஓவியங்களை மறுஆக்கம் செய்வது.

#3 தோழர்கள்

#4 கம்பளிப்பூச்சியும் கண்மணியும்

#5 பூவும் பூவும்

#6 பாசமலர்கள்

புகைப்படக்கலை; துணி, கண்ணாடிகளில் ஓவியம்; மைசூர் ஓவியம்; மெழுகுவர்த்தி, ஃபர் பொம்மைகள் செய்தல்; களிமண் சிற்பக்கலை; சிப்பி கைவேலைகள், லீஃப் ஆர்ட் எனப் பலவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஆயில் பெயின்டிங்தான் இவரது முதல் சாய்ஸாக இருக்கிறது.

#7 பூங்காவனம்

#8 வசந்த காலம்

#9 இயற்கையின் வாசல்
     எப்போதும்
     திறந்தேதான் இருக்கிறது!

  #10 தாங்கி நிற்கும் பூமித்தாயை
         வணங்கிப் பூச்சொரிகிறதோ
         விருட்சம்?


காஃபி பெயின்டிங்கில் தனிக் கவனம் செலுத்தும் இவர் வரைந்த “ஓம்” விநாயர் சித்திரங்களை சென்ற பதிவில் பார்த்தோம்.  மேலும் ஒன்று பார்வைக்கு..

#11 பழுப்பின் அழகு

கலையில் சாதிக்க வாழ்த்துவோம் ஓவியரை.
*** 

32 comments:

 1. அனைத்துப் படங்களும் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஒவ்வொன்றும் மிகவும் அருமை... முக்கியமாக ரவிவர்மாவின் தமயந்தி அற்புதம்...!

  செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 3. அற்புதமான படங்கள். படத்தினை வரைந்த ஓவியர் செல்விக்கும் அவரை பேட்டி எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மிகக் நன்றி.

  ReplyDelete
 4. ஒவியர் செல்விக்கு வாழ்த்துக்கள்.நிறைய சாதனைகள் தொடரட்டும் வாழ்வில்.
  நீங்கள் அவரை பேட்டி எடுத்தது கல்கியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  அவரின் படங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.அழகான ஓவியங்கள்.

  ReplyDelete
 5. எதைச்சொல்ல எதை விட!!.. அத்தனையும் அருமை.

  பேட்டியெடுத்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ஓவியமும், படங்களும் அற்புதம்..

  ReplyDelete
 7. அடடா...... அருமை அருமை!

  அதிலுமந்த பால க்ருஷ்ணா அதி சூப்பர்.

  சட்னு பார்த்தால்..... ரவி வர்மான்னு நினைச்சேன்!

  தமயந்தி ரிப்ளிகா என்றாலும் அழகுதான்!

  செல்விக்கும் உங்களுக்கும் இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 8. எல்லாப் படங்களும் அருமை. கல்கியிலே படித்தேன். கல்கி வந்து நான் பார்க்கவேயில்லை. எப்பவுமே கொஞ்சம் மெதுவாகத்தான் பார்ப்பேன். கீதா மேடம் கூகிள் பிளாஸ்ல சொன்னதும்தான் எடுத்துப் பார்த்தேன். பாராட்டுகள். இதே இதழில் திரு ரிஷபன் அவர்களின் இரட்டைக் கதையும், (ஒரு தலைப்புக்கு இரண்டு கதைகள்) போகன் சங்கர் அவர்களின் கவிதையும், கே பாரதி அவர்களின் சிறுகதையும் இருந்தன.

  ReplyDelete
 9. அனைத்துப்படங்களும் அருமை. பாராட்டுக்கள். கல்கி வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அனைத்து ஒவியங்களும் கொள்ளை அழகு,செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. நம்பர் ஒன், கம்பிளி பூச்சும் குழந்தையும் கண்கொள்ளா காட்சி...!

  மற்ற ஓவியங்களும் அருமை....!

  ReplyDelete
 12. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம், மெதுவாகப் பார்த்தாலும் பார்த்ததும் தெரிவித்ததற்கு:)! மற்றவர் படைப்புகளும் வாசித்தேன்.

  ReplyDelete
 13. @goma,

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. அனைத்தும் அருமை + அழகு அக்கா.

  ReplyDelete
 15. மனம் கொள்ளை கொள்ளும் அற்புத ஓவியங்கள். காஃபி ஓவியங்கள் ஒருவகையில் ஈர்ப்பு என்றால் குழந்தை ஒவியங்கள் இன்னொரு வகை. ரவிவர்மாவின் ஓவியப் பிரதிகள் வேறொரு விதமான ரசனையோட்டம். ஓவியக்கலை மட்டுமின்றி, சிற்பக்கலை, புகைப்படக்கலை என கலையின் எல்லாவிதப் பரிமாணங்களிலும் கைவண்ணம் காட்டும் செல்வி அவர்களுக்கு இதயப்பூர்வ பாராட்டுகள்.

  அவரைப் பற்றிய அறிமுகத்துக்கும் அவரது ஓவியப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin