Thursday, July 25, 2013

காவியமா.. ஓவியமா.. - நெல்லை மாரியப்பன் தூரிகை செய்கிற மாயம் - பெங்களூர் சித்திரச்சந்தை 2013 (பாகம் 4)

பெண் குழந்தைகளைப் போற்றும் விதமாகவும், மறந்தும், மறைந்தும் கொண்டிருக்கும் கிராமத்து அடையாளங்களை மீட்டெடுக்கும் விதமாகவுமே தன் அனைத்துச் சித்திரங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிற ஓவியக் கலைஞர் மாரியப்பனுக்கு மகளும் நண்பர்களின் குழந்தைகளுமே மாடல்கள். சென்ற சித்திரச்சந்தையில் அசத்தியது போலவே இவ்வருடமும் அசத்தியிருந்தார் ஐந்து அற்புதமான உயிரோவியங்களுடன். இச்சித்திரங்களில் ஒளி அமைப்புக்கு அவர் எடுத்துக் கொண்டிருந்த கவனம் என்னை வெகுவாகு ஈர்த்தது.

#1 ஒளியிலே தெரிவது..
தேவதையா..?
 #2 பூங்குழலி


#3 தண்ணீர்க் கரையில் தாமரை


#4 நிலவு ஒரு பெண்ணாகி..  


#5 செண்பகப்பூ போலே.. 
ஓவியரின் மகள்
#6 வாழ்த்துவோம் ஓவியரை! 
**

சென்ற வருடக் கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்களைக் காண இங்கே (படங்கள் 1, 17, 18, 19) செல்லலாம். அதையொட்டி ஓவியரை கல்கி ஆர்ட் கேலரிக்காக நான் கண்ட பேட்டியைக் காண இங்கே செல்லலாம்.
***

44 comments:

 1. தூரிகை என்னமா விளையாடுது.. நிழலும் ஒளியும் கூட தத்ரூபமா வந்திருக்கு. ஓவியருக்கும் கண்டறிந்த போட்டோகிராபருக்கும் வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 2. அனைத்தும் அற்புதம்...

  ஓவியக் கலைஞர் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அற்புதமான ஓவியம்... ஓவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. பிரமிக்க வைக்கும் தத்ரூபம். இவர் கையில் கேமிரா வேறு வைத்துக்கொண்டு 'போஸ்' கொடுக்கிறாரா, சந்தேகமாவே இருக்கு! :))

  ReplyDelete
 5. எதைக் குறிப்பிடுவது? எல்லாமே அழகோவியங்கள். தொடுத்திருக்கும் பூக்களிலேயே தூரிகை நயம் வியக்கவைக்கிறது. ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 6. இது ஓவியம் தானா. இல்லை படமா. !!இவ்வளவு விவரம் எப்படி ஒரு தூரிகையிலிருந்து வெளிவரமுடியும்.? அற்புதம் ராமலக்ஷ்மி.
  பகிர்வுக்கு மிக நன்றி.

  ReplyDelete
 7. புகைப்பட நுணுக்கம் தெரிந்தவர் ஆதலால் அழகாக அப்படியே தூரிகையால் பதிவு செய்கிறார் என்று நினைக்கிறேன். ஓவியம் வரையும் எல்லோருக்குமே இத்தகைய நுட்பம் அமையும் என்று சொல்ல முடியாது. முதல் படம் "ஒளியிலே தெரிவது.." ஒளி நுட்பத்திற்கு சான்று பகர்கிறது. வீட்டின் நடு முற்றத்தில் கூரை மேல் இருக்கும் கம்பி வலையின் ஒளி அமர்ந்திருக்கும் பெண் மேல் விழுகிறது. "பூங்குழலி" இதில் 3டி வடிவத்திற்கு மெருகூட்டுகிறது தொங்கும் ஒற்றை கயிறு. "தண்ணீர் கரையில் தாமரை" கைளில் வழிந்தோடு நீர்.

  ReplyDelete
 8. ஓவியங்கள் எல்லாம் காவியங்கள் தான் ராமல்க்ஷமி.
  வாழ்த்துக்கள் ஓவியருக்கு.
  நன்றி உங்கள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 9. அனைத்துப்படங்களும் அழகோ அழகு. பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

  எனக்கு மிகவும் பிடித்தது: பூக்களைத் தொடுக்கும் ‘பூங்குழலி’ என்ற படம்.

  ஓவியருக்குப் பாராட்டுக்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. உண்மையில் நான் புகைப்படம் என்றே நினைத்திருப்பேன். நீங்க சொல்லிஇருக்காவிட்டால்.. அற்புதம் அற்புதம். வாழ்த்துக்கள் ஓவியருக்கு.

  ReplyDelete
 11. கண்ணுலே ஒற்றிக்கலாம் போல இருக்கு!

  ஒற்றிக்கொண்டேன்.

  இருவருக்கும் இனிய பாராட்டுகள்.

  மாடல் பொண்ணு கொள்ளை அழகுப்பா!!!

  ReplyDelete
 12. ஒவ்வொன்றும் அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. இரண்டாவதில் மல்லிகைச் சரம் உள்பட....

  பாவாடை தாவணியை பார்க்கும் போதே மீண்டும் அந்த காலகட்டத்திற்குள் செல்ல தோன்றுகிறது....:))

  ReplyDelete
 13. ஒவியங்கள் அவ்வளவு தத்ரூபமா இருக்கு,பகிர்வுக்கு நன்றிக்கா& ஒவியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. படங்கள் அருமை.
  வரைந்த ஓவியருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. உயிருள்ள ஓவியங்கள் யாவும் அருமை....!

  ReplyDelete
 16. congratulations.. Nellai Mariappan
  your drawings definitely draw the
  attention of all who see it..
  R.THEETHARAPPAN

  ReplyDelete
 17. ஓவியங்கள் அழகு ராமலக்ஷ்மி, அதை நீங்கள் புகைப்படம் எடுத்த விதமும், அதற்கு அழகான கேப்ஷன் வைத்ததும்கூட அருமை. உங்களுக்கும் ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. ஓவியங்களே கவிதையாக/

  ReplyDelete
 19. என்னமா வரைகிறார்.... சிறப்பான ஓவியங்கள் - காட்சி அப்படியே கண்முன் தெரிகிறது.....

  ReplyDelete
 20. உயிர்கொண்ட ஓவியங்கள்.வாழ்த்துகள் ஓவியருக்கு.அக்கா நன்றி உங்களுக்கு !

  ReplyDelete
 21. @ஸ்ரீராம்.,

  /பிரமிக்க வைக்கும் தத்ரூபம்/ அதே. சந்தேகமே வேண்டாம். ஓவியத்தைத் தொட்டுப் பார்த்த நான் சொல்கிறேன்:)!
  [சென்ற முறை போலன்றி வாங்குகிறவர் தம் விருப்பத்திற்கேற்ப சட்டமிட்டுக் கொள்ளும் வகையிலே கேன்வாஸாகவே காட்சிக்குத் தொங்க விட்டிருந்தார். அதனால் மடிப்புகளோடு எனக்கு படம் எடுப்பதில் சிரமம் ஏற்பட
  இழுத்துப் பிடித்து உதவியும் செய்தார்.] நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 22. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா:)! ஊர் பக்கத்தில் அவரை ‘நெல்லை ரவிவர்மா’ என்றே புகழ்கிறார்கள்.

  ReplyDelete
 23. @கலாகுமரன்,

  ரசித்ததற்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கலாகுமரன்.

  ReplyDelete
 24. @வை.கோபாலகிருஷ்ணன்,

  ஆம். அருமையான ஓவியம் பூங்குழலி:). நன்றி vgk sir.

  ReplyDelete
 25. @கோவை2தில்லி,

  நானும் சென்று வந்தேன்:)! நன்றி ஆதி.

  ReplyDelete
 26. @Theetharappan R,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 27. ஓவியம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. பாராட்டுகள்.

  ReplyDelete
 28. அற்புதம்! ரவிவர்மாவின் ஓவியங்களை மீறும் தத்ரூபம்!

  வாழ்க! வளர்க!

  ஆகிரா
  மழலைகள்.காம்

  ReplyDelete
 29. அற்புதம்! ரவிவர்மாவின் ஓவியங்களை மிஞ்சும் அளவு தத்ரூபம்!

  வாழ்க! வளர்க!

  ஆகிரா
  mazhalaigal.com

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin