Sunday, December 30, 2012

கொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்கள் : நிறைவுப் பாகம்


பாகம்: 1 [படங்கள் 23 ]
பாகம்: 2 [படங்கள் 18 ]

நூற்றுக்கும் மேலான கலைக்குழுவினர் உற்சாகமாக ஆடிப்பாடிச் சென்ற ஊர்வலத்தில் கொட்டு மேளங்கள் மட்டுமே எத்தனை வகை?

நடுநடுவே இடம் பெற்றிருந்தன புராணங்களை, கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் சிலைகளுடனான வாகனங்கள்.

இவற்றோடு ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள் ஆறும், இரு தினங்கள் கழித்து மைசூரிலிருந்து லாரிகளில் கிளம்பியக் காட்சியுடன் தசரா தொடரை நிறைவு செய்கிறேன், 27 படங்களுடன்.

#1

#2


#3

#4

அடுத்தடுத்து எடுக்க வேண்டியிருந்த சூழலில் சுமாராக வந்து விட்டிருக்கும் படங்களையும் காட்சியின் சுவாரஸ்யத்துக்காக, சும்மா இருக்கட்டுமெனப் பகிர்ந்து கொண்டுள்ளேன்:)!

 #5

#6
#7

#8

# 9

பெரிய சக்கரங்களைப் போல் இருந்த, உருட்டிச் செல்லப்பட்டக் கொட்டு வகைகள்:

 #10


#11

#12

#13#14 சட்டம் ஒழுங்கு


#15 கட்டுப்பாடில்..


வாகன வரிசை:
 # 16

 #17

#18


# 19

#20 குதிரை வீரர்
இன்னொரு கோணத்தில்..
#21 நாட்டியக் கலைஞர்


மயிலாட்டம், பொய்க்கால் குதிரை:
 #22


#23

 #24

இருட்டத் தொடங்கியதும் கிளம்பி விட்டோம். ஹோட்டலில் இருந்து பத்தே நிமிடத்தில் வந்த தூரத்தை மீண்டும் கடக்க 45 நிமிடங்கள் ஆகின. அந்த ஆறரை மணி அளவில், கலை நிகழ்ச்சிகளைக் காண மண்டபத்துக்குள் செல்வதற்காக அலைமோதிய கூட்டம் சொல்லி முடியாது. சட்டம் ஒழுங்கு சரியாகப் பேணப்பட்டதும், போலீசார் மக்களிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டதும் பாராட்டுக்குரியது.

ஹோட்டல் வரை வந்த பின்னர் ஒரு நப்பாசையில், மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளுடன் பார்த்திட அந்தப் பாதையில் காரைத் திருப்பினால்  வண்டிகள் நகரவேயில்லை.  ஒளிவெள்ளதில் முந்தைய விஜயங்களில் பார்த்திருந்தாலும் வந்த இடத்தில் மீண்டும் பார்க்கலாம், படம் எடுக்கலாம் எனும் ஆசைதான். எத்தனை நேரம் ஆகுமோ இப்படிச் சென்றால் என, கிடைத்த இடத்தில் யு டர்ன் அடித்து ஹோட்டலுக்கே வந்து விட்டோம்.
ஹோட்டலில் ஆங்காங்கே இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் கலை நிகழ்ச்சிகள் லைவ் ஆக ஓடிக் கொண்டே இருந்தன. Banni மண்டபத்தில் நடனமாடிக் கொண்டிருந்த பலரை நான் படமாக்கிய வகையில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது:)!

விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்றத் தீப்பந்த ஊர்வலத்தை இரவு 7 மணிக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தொடங்கி வைக்க மிக நேர்த்தியாக நூற்றுக்கணக்கான கலைஞர்களைக் கொண்டு நடந்தது தீப்பந்த ஊர்வலம்.

இடம் மாறி மாறி நின்று இறுதியில் பந்தங்களால் பெரிய அளவில் எழுத்துக்களை உருவாக்கினார்கள். முதலில் THANK YOU, அடுத்து SEE YOU IN - 2013 என பந்த ஒளியால் எழுதி வெற்றிகரமாய் விழாவை முடித்த அத்தனை கலைஞர்களையும் மக்கள் கரகோஷம் செய்து வாழ்த்தினார்கள்:

இந்தப் படம் மட்டும் இணையத்திலிருந்து எடுத்து இணைக்கிறேன், அனைவரும் ரசிக்க, குறிப்பாகப் பின்னூட்டத்தில் கேட்டுக் கொண்ட ஹுஸைனம்மாவுக்காக:

***

இரண்டு தினம் கழித்து காலையில் கபினிக்கு கிளம்பிச் செல்லுகையில் அரண்மனையைக் கடக்கும்போது தற்செயலாக இந்தக் காட்சியைக் காண நேர்ந்தது.

#25
அன்றைய தசரா விழாவில் ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்த மூன்று ஜோடி யானைகளும் ஊரைவிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தன.

பாகம் ஒன்றில் பகிர்ந்த மூன்று ஜோடிகளின் படங்களில் சில, கொலாஜ் ஆக:
Collage 1:

Collage 2:


#26  எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை மைல்கள் பயணித்து வந்தனவோ?

#27 பத்திரமாகச் சென்று சேர்த்திருக்கும் என நம்புவோம்.

தசரா பகிர்வு நிறைவுற்றது. மைசூரின் மற்ற சில இடங்கள், மற்றும் கபினியில் எடுத்த படங்களை நேரம் கிடைக்கும்போது பகிருகின்றேன். 
***

26 comments:

 1. அத்தனையும் அழகு.. குறிப்பாகக் கடைசிப்படம்.

  ReplyDelete
 2. மைசூர் தசரா படங்கள் எல்லாம் நேரிலே பார்த்த உணர்வை தந்தது ராமலக்ஷ்மி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. எல்லாப்படங்களுமே அழகுதான்.எனக்கும் கடைசிப்படம் மிகவும் பிடிச்சிருக்கு அக்கா !

  ReplyDelete
 4. எல்லாப்படங்களுமே சிறப்பாக உள்ளன. பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 5. செலவே இல்லாம மைசூர் தசராவை சுத்தி காட்டிடீங்க. நன்றி

  ReplyDelete
 6. யானையே எல்லொருக்கும் பிடித்த காட்சியா ராமலக்ஷ்மி:)

  ட்ரம்களின் எண்ணிக்கை அளவிடமுடியவில்லையே. அதிலும் எத்தனை வகைகள் மா.கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். மிகவும் நன்றி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அனைத்துப் படங்களும் அருமை. யானைகளின் படங்கள் மிக ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 8. படங்கள் அழகு. சக்கர மேளம் வியப்பாக இருக்கிறது. தீப்பந்த விழாவின் படங்களையும் தேடிப் பகிர்ந்திருக்கலாம், நாங்களும் பார்த்து ரசித்திருப்போமே. :-)))

  ReplyDelete
 9. முதல் படம் வெகு இயல்பு. அருமை!

  ReplyDelete
 10. நேரில் பார்த்தது போல அத்தனை படங்களும் அழகாக...

  ReplyDelete
 11. மைசூர் தசரா படங்கள் சிறப்பாக திருவிழாவில் கலந்துகொண்ட உணர்வினைத்தந்தன ..

  பாராட்டுக்கள்..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 12. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா:). தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. @ஹுஸைனம்மா,

  நான் எடுத்த படங்களைப் பகிரவென்று ஆரம்பித்த தொடர் என்றாலும், நீங்கள் சொன்னதற்காகவே தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நிறைவு செய்தவிதம் வியக்கிறபடி வெகு நேர்ந்தியாக இருந்தது. நன்றி ஹுஸைனம்மா:).

  ReplyDelete
 14. @கே. பி. ஜனா...,

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. @இராஜராஜேஸ்வரி,

  நன்றி. தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. படங்கள் அனைத்தும் நன்று.

  //பத்திரமாகச் சென்று சேர்த்திருக்கும் என நம்புவோம்.//

  படத்தைப் பார்க்கும் பொழுது, பத்திரமாக போய் சேரவேண்டும் என்று மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

  ReplyDelete
 17. @ஹுஸைனம்மா,

  /தீப்பந்த விழாவின் படங்களையும் தேடிப் பகிர்ந்திருக்கலாம், நாங்களும் பார்த்து ரசித்திருப்போமே. :-)))/

  கிடைத்தது இன்று:)! நீங்கள் கேட்டுக் கொண்டபடியே பதிவிலும் இப்போது சேர்த்திருக்கிறேன். நேரமிருக்கையில் பாருங்கள்.
  ReplyDelete
 18. / SEE YOU IN - 2013 என பந்த ஒளியால் எழுதி வெற்றிகரமாய் விழாவை முடித்த அத்தனை கலைஞர்களையும் மக்கள் கரகோஷம் செய்து வாழ்த்தினார்கள்./

  இணையத்திலிருந்து எடுத்து இணைத்திருக்கிறேன் பந்த ஒளிக் காட்சியை. இரசித்திடலாம் அனைவரும்:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin