புதன், 11 நவம்பர், 2009

வெற்றியில் கிறக்கம் [யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில்]


லக்கைத்
தொட்டு விட்ட
புள்ளியில் நின்று
தன்னை மறப்பதும்
தற்பெருமை பேசுவதும்
சிறையில் இருப்பவன்
அறையின் விசாலத்தை
சிலாகிப்பதாகாதா?

டைந்த உயரம்
அளிக்கலாம் ஊக்கம்
ஆனால் அதுவே
தரலாமா தலைக்கனம்?
பரந்தது உலகம்
உணர்வது முக்கியம்;
வெற்றியில் கிறக்கம்
வீழவும் வைக்கும்.

த்தனை நேரம்தான்
ஏந்தியே நிற்போம்?
கிடைத்த கோப்பையை
கீழே வைத்துவிட்டு
வந்த பாதைக்குஒரு
வணக்கம் சொல்லிவிட்டு
இந்தப் பக்கம்
திரும்பினால்தானே-
தென்படும் தூரத்தே..
சவாலாய் நமக்குக்
காத்திருக்கின்ற
அடுத்த இலக்கு?!
*** *** ***


ந்வம்பர் 2009 மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்.




ஹலோ நான்தாங்க:

முத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து சரியாக ஒன்றரை ஆண்டுமுடிந்த நிலையில் சமீபத்தில் தொடருபவர் எண்ணிக்கை சதத்தைத் தாண்டி இருக்கிறது. கடந்த பதிவில் "நூறாவது நபராய் தொடர்வது சந்தோஷமாயிருக்கிறது." என்று பின்னூட்டமிட்டிருந்த பிரபாகருக்கும், அதைத் தொடர்ந்து அங்கே வாழ்த்தியிருந்தவர்களுக்கும், தொடர்கின்ற 102 பேருக்கும், follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வாசித்து வருபவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! தொடர்கின்ற உங்கள் ஆதரவுடன் தொடரும் என் பயணமும்...



110 கருத்துகள்:

  1. அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை! /தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!/

    அசத்தல் - மணிமகுடம்!!

    பதிலளிநீக்கு
  2. //அடைந்த உய்ரம்
    அளிக்கலாம் ஊக்கம்//

    தலைகனம் வந்துவிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கறது அழகா இருக்கு
    உயரம் மட்டும் சரி பண்ணீருங்க :)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்த வயதில்லை...என்றாலும் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமை. வாழ்த்துக்கள். என்னால் அலுவலகத்தில் இதனை டவுண்லோடு செய்யமுடியவில்லை. முடிந்தால் மின்னிதழை இமெயிலில் அனுப்பவும்.

    பதிலளிநீக்கு
  5. //வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!//

    சரிதான் கால்களை முன்னோக்கி வைத்தால்தானே தெரியும் எதிரே தெரியும் இலக்கு....

    நல்ல கவிதை....

    பதிலளிநீக்கு
  6. நிறைய பிளாகர்கள் யூத்ஃபுல் மின்னிதழில் கண்டேன். உங்களுக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.!!

    பதிலளிநீக்கு
  7. //கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு
    வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!//

    இளைப்பாறுதல்/களைப்பாறுதல் எல்லாம் முடித்து எதிர்காலம் நோக்கி விழிப்போடு பயணித்தல் அடுத்தடுத்த சாதனைக்களுக்கு அமர்க்களமான ஆரம்பம்!

    எதுவுமே முடிவு பெறுவதில்லை அடுத்த நிகழ்வுக்கு ஆரம்பமாய் இருக்கிறது :)


    போட்டோ போஸ் - அப்புறம் என்னன்னு அதட்டுற ஸ்டைல்ல இருக்கே ? :))

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் மேடம்

    போட்டோ போஸ் கூட வெற்றி களிப்பில் கொடுத்த மாதிரி இருக்கு :)

    தன்னம்பிக்கைக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. //இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?//

    அருமை அழகான வரிகள்

    பதிலளிநீக்கு
  10. அருமையான கருத்து
    அழகான வரிகள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. //வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..//


    வெற்றியின் மயக்கத்திலிருக்கும் போது அடுத்ததை நோக்கி துரத்தும் அற்புதமான வரி

    மின்னிதழ் பங்கேற்பிற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் தோழி என்னுடைய கவிதையும் வெளிவந்துள்ளது இதில்..

    பதிலளிநீக்கு
  13. ///கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு
    வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!///

    ஆமாம் வெற்றிக்கு பிறகான தற்காலிக ஆசுவாசம்கூட
    நம்மை பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது
    அருமை ...!

    பதிலளிநீக்கு
  14. அசத்தல் கவிதை...100 க்கு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அடுத்த இலக்கு ... ம்.. அருமை ராமலக்‌ஷ்மி..

    வாழ்த்துக்கள்..:)

    பதிலளிநீக்கு
  17. முதற்கண் வாழ்த்துக்கள். விரிவாகப் பிறகு பதிகிறேன் மறுமொழியை.

    பதிலளிநீக்கு
  18. தன்னம்பிக்கையூட்டும் வரிகள்கொண்ட கவிதை. வாழ்த்துகள் ராமல்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  19. சூப்பரோ சூப்பர்
    நிக்கிற போஸ் பார்த்தால் திரும்பிப் பாக்ற ஆள் மாதிரியே தெரியலையே ..எல்லாம் செவ்வனே முடித்த கான்ஃபிடெண்ட் லுக்கம்மா உங்கள் லுக்

    பதிலளிநீக்கு
  20. கவிதை அருமை..வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  21. //கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு...//
    ஷோகேஸில் வைங்க. இன்னும் நிறைய கோப்பைகள் கிடைக்கும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. மிக அருமையான படைப்புங்க... மின்னிதழில் உங்கள் படைப்பு வந்தமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. ஒரு "நிறைகுடம்"போல் உள்ளவர்கள்தான் இதுபோல் நிதானமாக சிந்திக்கமுடியும். அது இணையதளத்தில் அரிதிலும் அரிது!

    ஒருவேளை வெற்றியின் இலக்கை இமாலய உயரத்தில் வைத்தால் எந்த ஒரு "சிறிய வெற்றியும்" கிறக்கம் தராதோ? :)

    நல்ல கவிதை! திருக்குறள் லெவலுக்கு இருக்குங்க, ராமலக்ஷ்மி! :-) வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  24. சின்ன வயசு ஃபோட்டோவுலயே நிமிர்ந்த நன் நடையும், நேர்கொண்ட பார்வையுமாய்...

    சந்தோசமா இருக்குக்கா :)

    பதிலளிநீக்கு
  25. 'வெற்றியின் கிறக்கம்', தலைப்பே நல்லாயிருக்கு. கவிதையும்தான். மயங்கி நிற்காம தொடர்ந்து நடக்கச் சொல்லும் விதம் அருமை. உங்கள் வெற்றிகள் மேலும் மேலும் தொடரவும் 100-க்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள் அக்கா.

    அருமையான கவிதை.

    சொல் பேச்சு கேக்க மாட்டீங்களான்னு செல்லமாய் மிரட்டும் குட்டிப் பெண் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  27. கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு ராமலக்ஷ்மி!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. //இலக்கைத்
    தொட்டு விட்ட
    புள்ளியில் நின்று
    தன்னை மறப்பதும்
    தற்பெருமை பேசுவதும்
    சிறையில் இருப்பவன்
    அறையின் விசாலத்தை
    சிலாகிப்பதாகாதா?//

    இல‌க்கை அடைந்தாலும் இறுமாப்பு கொண்டு சிறைக்கைதி ஆகாம‌ல் இருப்போம் என‌ வ‌லியுறுத்தும் வ‌ரிக‌ள்.

    //அடைந்த உயரம்
    அளிக்கலாம் ஊக்கம்
    ஆனால் அதுவே
    தரலாமா தலைக்கனம்?
    பரந்தது உலகம்
    உணர்வது முக்கியம்;
    வெற்றியில் கிறக்கம்
    வீழவும் வைக்கும்.//

    அட‌ ... என‌ விய‌க்கும் வைக்கிறீர்க‌ள் இவ்வ‌ரிக‌ளில்.

    //எத்தனை நேரம்தான்
    ஏந்தியே நிற்போம்?
    கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு
    வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!//

    வெற்றியோடு தோல்விக்கும் இக்கருத்து பொருந்தும் அல்லவா ? எதுவும் சில காலமே என்று 'ந‌ச்'னு முடிச்சிருக்கீங்க.

    விகடன் மின்னிதழில் இக்கவிதை இடம் பிடித்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  30. //சிறையில் இருப்பவன்
    அறையின் விசாலத்தை
    சிலாகிப்பதாகாதா?//

    எத்தனை அழகான எடுத்துக்காட்டு.

    கவிதை அருமை.

    வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா!

    பதிலளிநீக்கு
  31. புதிய மாற்றங்களுக்கு யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்! அங்கு கவிதை வந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்....

    பதிலளிநீக்கு
  33. //follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வருகை தந்தபடி இருப்பவருக்கும் //

    ரைட்டு விடுங்க. :))

    ரெம்ப நாளாச்சு இங்க வந்து. யூத் விகடன்ல தான் நிரந்தரமா திண்ணை கட்டி வசித்து வரீங்களே அப்புறம் என்ன புதுசா? :))

    பதிலளிநீக்கு
  34. கவிதையின் முதல் பாரா ரெம்பவே ரசிச்சேன். சில சமயங்களில் இலக்கை அடைந்து விட்டால் சப்புனு போயிடுது இல்ல.

    தேடல் உள்ள உயிர்களுக்கே
    தினமும் பசி இருக்கும்.

    How True.. :)

    பதிலளிநீக்கு
  35. arumayaana kavithai. arputhamaana
    sollaadal. pathivukku nantri.
    Vazhga Valamudan.
    ivan. vi.en.thangamani

    பதிலளிநீக்கு
  36. //
    இலக்கைத்
    தொட்டு விட்ட
    புள்ளியில் நின்று
    தன்னை மறப்பதும்
    தற்பெருமை பேசுவதும்
    சிறையில் இருப்பவன்
    அறையின் விசாலத்தை
    சிலாகிப்பதாகாதா?
    //

    நல்ல உவமானம் சகோதரி! புள்ளியும், விசாலமும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வரிகளின் லயத்தை உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  37. //
    அடைந்த உயரம்
    அளிக்கலாம் ஊக்கம்
    ஆனால் அதுவே
    தரலாமா தலைக்கனம்?
    பரந்தது உலகம்
    உணர்வது முக்கியம்;
    வெற்றியில் கிறக்கம்
    வீழவும் வைக்கும்.
    //

    ஆமாம்! அந்த போதை இருக்கிறதே கரணம் தப்பினால் மரணம். அதல பாதாளத்தில் கொண்டு விட்டுடும்.

    அருமையான வரிகள். என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய வரிகள்!

    பதிலளிநீக்கு
  38. //
    எத்தனை நேரம்தான்
    ஏந்தியே நிற்போம்?
    கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு
    வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!
    //

    ஆமாம்! இப்படி ஒவ்வொரு இலக்காகத் தாண்டினாலும் நம் இலக்கை அடைய வெகு தூரம் போகணும் போல இருக்கே!

    அப்படி அந்த இலக்கை லாவகமாகத் தாண்டி விட்டால் அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது..

    வாழ்த்துக்கள்! உங்கள் கவிதை மிகவும் அருமை!

    அப்புறம்
    ========
    இடுப்பிலே கையை வைத்திக் கொண்டு ஒரு லுக் விடுறாங்களே அவங்க சூப்பர்.. அப்படீன்னு நான் சொன்னாதா சொல்லிடுங்க :)

    பதிலளிநீக்கு
  39. உங்களுக்கு வாழ்த்து சொல்ல எனக்கு வயசு இல்லை, அதனாலே வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  40. //அடைந்த உயரம்
    அளிக்கலாம் ஊக்கம்
    ஆனால் அதுவே
    தரலாமா தலைக்கனம்?
    பரந்தது உலகம்
    உணர்வது முக்கியம்;
    வெற்றியில் கிறக்கம்
    வீழவும் வைக்கும்.//

    அருமையான வரிகள்.

    வணக்கம்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. கவிதை படம் இரெண்டுமே நன்றாக உள்ளது!! வாழ்த்துக்கள். எவ்வளவு உண்மை! விளையட்டைப்போல் இல்லாமல் வாழ்கையின் இலக்கு அதை எட்டியவுடன் மாறுவதும் நகர்வதும் ஏனோ? The goal keeps on moving... hm...Hard work indeed.முடியும் வரை தொடரவே வேண்டும்:))

    பதிலளிநீக்கு
  42. //எத்தனைநேரம் தான்
    ஏந்தியே நிற்போம்?
    கிடைத்த கோப்பையை
    கீழே வைத்து விட்டு
    வந்த பாதைக்கு ஒரு
    வண்க்கம் சொல்லிவிட்டு
    இந்த பக்கம்
    திரும்பினால் தானே
    தென்படும் தூரத்தே-
    சவலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!

    அற்புதமான வரிகள்.

    சிறு வயது ராமலக்ஷ்மி படம்
    உணர்த்தும் கருத்து அடுத்தக் கட்ட
    வெற்றி பயணத்தை தொடர்ந்து விட்டேன் என்பது தான்.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  43. சந்தனமுல்லை said...

    // அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை!

    /தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!/

    அசத்தல் - மணிமகுடம்!! //

    மகுடமே சூட்டி விட்டீர்கள், நன்றி முல்லை முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

    பதிலளிநீக்கு
  44. சின்ன அம்மிணி said...

    //தலைகனம் வந்துவிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கறது அழகா இருக்கு
    உயரம் மட்டும் சரி பண்ணீருங்க :)//

    நன்றி சின்ன அம்மிணி. உடனேயே சரி செய்து விட்டேன்:)!

    பதிலளிநீக்கு
  45. நர்சிம் said...

    // வாழ்த்த வயதில்லை...என்றாலும் வாழ்த்துக்கள்..//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நர்சிம்.

    பதிலளிநீக்கு
  46. " உழவன் " " Uzhavan " said...

    //மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.//

    நன்றி உழவன். மின்னிதழில் உங்கள் கவிதையும் மின்னிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    //என்னால் அலுவலகத்தில் இதனை டவுண்லோடு செய்யமுடியவில்லை. முடிந்தால் மின்னிதழை இமெயிலில் அனுப்பவும்.//

    இமெயிலில் இதை அனுப்பத் தடை இருக்கிறது. நேரடியாக மட்டுமே டவுன்லோட் செய்ய இயலும். உங்களுக்கு இதை ஏற்கனவே தெரிவித்து விட்டிருந்தாலும் இங்கும் ஒரு தகவலாகப் பதிகிறேன்.

    உங்கள் கவிதையை பதிவிடக் காத்திருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  47. க.பாலாசி said...

    //சரிதான் கால்களை முன்னோக்கி வைத்தால்தானே தெரியும் எதிரே தெரியும் இலக்கு....

    நல்ல கவிதை....//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  48. ஆதிமூலகிருஷ்ணன் said...

    // நிறைய பிளாகர்கள் யூத்ஃபுல் மின்னிதழில் கண்டேன். உங்களுக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.!!//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதி! ஆம், வழக்கம்போலவே பதிவாளர்களை யூத்ஃபுல் விகடன் மின்னிதழிலும் ஊக்கப் படுத்தியிருக்கிறது:)!

    பதிலளிநீக்கு
  49. ஆயில்யன் said...
    //இளைப்பாறுதல்/களைப்பாறுதல் எல்லாம் முடித்து எதிர்காலம் நோக்கி விழிப்போடு பயணித்தல் அடுத்தடுத்த சாதனைக்களுக்கு அமர்க்களமான ஆரம்பம்!//

    அமர்க்களமாகச் சொல்லிவிட்டீர்கள் ஆயில்யன்:)!

    //எதுவுமே முடிவு பெறுவதில்லை அடுத்த நிகழ்வுக்கு ஆரம்பமாய் இருக்கிறது :)//

    மிகச் சரி. அருமையான கருத்துக்களுக்கு நன்றி ஆயில்யன்.

    //போட்டோ போஸ் - அப்புறம் என்னன்னு அதட்டுற ஸ்டைல்ல இருக்கே ? :))//

    சின்னக் குழந்தைங்க அது:)!

    பதிலளிநீக்கு
  50. பிரியமுடன்...வசந்த் said...

    //வாழ்த்துக்கள் மேடம்

    போட்டோ போஸ் கூட வெற்றி களிப்பில் கொடுத்த மாதிரி இருக்கு :)//

    அப்படியா சொல்றீங்க. சரிதான் இருக்கட்டுமே அப்படித்தான்:))!

    //தன்னம்பிக்கைக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டுக்கள்//

    மிக்க நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  51. ஆ.ஞானசேகரன் said...

    //அருமை அழகான வரிகள்.//

    வருகைக்கும் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  52. அமுதா said...

    //அருமையான கருத்து
    அழகான வரிகள்
    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  53. கதிர் - ஈரோடு said...

    ***? //வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..//


    வெற்றியின் மயக்கத்திலிருக்கும் போது அடுத்ததை நோக்கி துரத்தும் அற்புதமான வரி/***

    நன்றி கதிர்.

    //மின்னிதழ் பங்கேற்பிற்கு வாழ்த்துகள்//

    உங்கள் படைப்பையும் கண்டேன். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் கதிர்.

    பதிலளிநீக்கு
  54. தமிழரசி said...

    //வாழ்த்துக்கள் தோழி என்னுடைய கவிதையும் வெளிவந்துள்ளது இதில்..//

    பார்த்தேன் தமிழரசி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  55. ஜீவன் said...
    //ஆமாம் வெற்றிக்கு பிறகான தற்காலிக ஆசுவாசம்கூட
    நம்மை பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது
    அருமை ...!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்.

    பதிலளிநீக்கு
  56. மணிநரேன் said...

    //நன்றாக உள்ளது.//

    பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  57. நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    //அழகான கவிதை! வாழ்த்துக்கள்!!//

    நன்றி சரவணக்குமார்!

    பதிலளிநீக்கு
  58. அன்புடன் அருணா said...

    //அசத்தல் கவிதை...100 க்கு பூங்கொத்து!//

    பூங்கொத்துடனான பாராட்டுக்கு நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
  59. S.A. நவாஸுதீன் said...

    //அருமையான கவிதை//

    மிக்க நன்றி நவாஸுதீன்!

    பதிலளிநீக்கு
  60. வாத்துக்கோழி said...

    //வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.//

    இரட்டை வாழ்த்துக்களுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு
  61. புலவன் புலிகேசி said...

    //அருமை. வாழ்த்துக்கள்.//

    நன்றி புலிகேசி!

    பதிலளிநீக்கு
  62. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //அடுத்த இலக்கு ... ம்.. அருமை ராமலக்‌ஷ்மி..

    வாழ்த்துக்கள்..:)//

    நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  63. சதங்கா (Sathanga) said...

    // முதற்கண் வாழ்த்துக்கள். விரிவாகப் பிறகு பதிகிறேன் மறுமொழியை.//

    முதற்கண் அதே மின்னிதழில் வந்திருக்கும் உங்கள் அருமையான கதைக்கு என் வாழ்த்துக்களும்:)!

    பதிலளிநீக்கு
  64. ஷைலஜா said...

    //தன்னம்பிக்கையூட்டும் வரிகள்கொண்ட கவிதை. வாழ்த்துகள் ராமல்ஷ்மி!//

    பாராட்டுக்கு நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  65. goma said...

    //சூப்பரோ சூப்பர்
    நிக்கிற போஸ் பார்த்தால் திரும்பிப் பாக்ற ஆள் மாதிரியே தெரியலையே ..எல்லாம் செவ்வனே முடித்த கான்ஃபிடெண்ட் லுக்கம்மா உங்கள் லுக்//

    கவிதைக்கான பாராட்டுக்கும் தனிப்பட்டப் பாராட்டுக்கும்:) நன்றிங்க கோமா!

    பதிலளிநீக்கு
  66. அத்திரி said...

    // கவிதை அருமை..வாழ்த்துக்கள் அக்கா//

    ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அத்திரி.

    பதிலளிநீக்கு
  67. சகாதேவன் said...

    ***/ //கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு...//

    ஷோகேஸில் வைங்க./***

    :)))! ரைட்டு!

    ***/இன்னும் நிறைய கோப்பைகள் கிடைக்கும். வாழ்த்துக்கள்/***

    உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  68. ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

    //மிக அருமையான படைப்புங்க... மின்னிதழில் உங்கள் படைப்பு வந்தமைக்கு வாழ்த்துகள்.//

    முத்துச்சரத்துக்குத் தந்திருக்கும் முதல்வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  69. வருண் said...

    // ஒரு "நிறைகுடம்"போல் உள்ளவர்கள்தான் இதுபோல் நிதானமாக சிந்திக்கமுடியும். அது இணையதளத்தில் அரிதிலும் அரிது!

    ஒருவேளை வெற்றியின் இலக்கை இமாலய உயரத்தில் வைத்தால் எந்த ஒரு "சிறிய வெற்றியும்" கிறக்கம் தராதோ? :)//

    இலக்கை இமாலய உயரத்தில் வைக்கும்படி சொல்லாம சொல்லிட்டீங்க. நன்றி வருண்.

    வெற்றிகளை நம் முயற்சிகளுக்கான அங்கீகாரமாக மட்டுமே பார்க்கத் தெரிந்து கொண்டால் அங்கே கிறக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லைதானே?

    // நல்ல கவிதை! திருக்குறள் லெவலுக்கு இருக்குங்க, ராமலக்ஷ்மி! :-) வாழ்த்துக்கள்! :)//

    வழக்கமான பாணியிலிருந்து விலகி கவிதை சற்றே சிறிதாக அமைந்து போனதால் குறள் லெவலுக்குப் பெரிதாகச் சொல்லி விட்டீர்கள்:)! எனிவே, கேட்க நல்லாத்தான் இருக்கு, மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  70. எம்.எம்.அப்துல்லா said...

    //சின்ன வயசு ஃபோட்டோவுலயே நிமிர்ந்த நன் நடையும், நேர்கொண்ட பார்வையுமாய்...

    சந்தோசமா இருக்குக்கா :)//

    மிக்க மகிழ்ச்சி அப்துல்லா:)!

    பதிலளிநீக்கு
  71. கவிநயா said...

    // 'வெற்றியின் கிறக்கம்', தலைப்பே நல்லாயிருக்கு. கவிதையும்தான். மயங்கி நிற்காம தொடர்ந்து நடக்கச் சொல்லும் விதம் அருமை.//

    நன்றி கவிந்யா.

    //உங்கள் வெற்றிகள் மேலும் மேலும் தொடரவும் 100-க்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்!//

    உங்கள் தொடர் ஊக்கமே அத்தனைக்கும் காரணம்.

    பதிலளிநீக்கு
  72. சுசி said...

    //வாழ்த்துக்கள் அக்கா.

    அருமையான கவிதை.//

    நன்றி சுசி.

    //சொல் பேச்சு கேக்க மாட்டீங்களான்னு செல்லமாய் மிரட்டும் குட்டிப் பெண் சூப்பர்.//

    அப்படியா மிரட்டுது குட்டிப் பொண்ணு:)?

    பதிலளிநீக்கு
  73. பா.ராஜாராம் said...

    //கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு ராமலக்ஷ்மி!வாழ்த்துக்கள்!//

    தொடரும் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜாராம்.

    பதிலளிநீக்கு
  74. சதங்கா (Sathanga) said...

    ***/ //இலக்கைத்
    தொட்டு விட்ட
    புள்ளியில் நின்று
    தன்னை மறப்பதும்
    தற்பெருமை பேசுவதும்
    சிறையில் இருப்பவன்
    அறையின் விசாலத்தை
    சிலாகிப்பதாகாதா?//

    இல‌க்கை அடைந்தாலும் இறுமாப்பு கொண்டு சிறைக்கைதி ஆகாம‌ல் இருப்போம் என‌ வ‌லியுறுத்தும் வ‌ரிக‌ள்./***

    அதேதான் சதங்கா. எத்தனை பரந்தது இவ்வுலகம் எனப் புரிந்திடும் தன்மையின்றி, கம்பிக்குள் நின்று சிறை எத்தனை பெரிது என எண்ணுபவன் நிலைதானே?
    __________________________________

    ***/ //அடைந்த உயரம்
    அளிக்கலாம் ஊக்கம்
    ஆனால் அதுவே
    தரலாமா தலைக்கனம்?
    பரந்தது உலகம்
    உணர்வது முக்கியம்;
    வெற்றியில் கிறக்கம்
    வீழவும் வைக்கும்.//

    அட‌ ... என‌ விய‌க்கும் வைக்கிறீர்க‌ள் இவ்வ‌ரிக‌ளில்./***

    நன்றி. சாதிக்க எத்தனையோ இருக்கிறதுதானே?
    _______________________________

    ***/ //எத்தனை நேரம்தான்
    ஏந்தியே நிற்போம்?
    கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு
    வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-
    தென்படும் தூரத்தே..
    சவாலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!//

    வெற்றியோடு தோல்விக்கும் இக்கருத்து பொருந்தும் அல்லவா ? எதுவும் சில காலமே என்று 'ந‌ச்'னு முடிச்சிருக்கீங்க./***

    மிகச் சரி. நன்றி உங்கள் விரிவான கருத்துக்களுக்கு.
    ______________________________

    ***/ விகடன் மின்னிதழில் இக்கவிதை இடம் பிடித்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்க‌ள்./***

    நன்றி. நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வரும் விகடனுக்கும் நன்றிகள்:)!

    பதிலளிநீக்கு
  75. Seemachu said...

    //வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு..//

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  76. சுந்தரா said...

    ***/ //சிறையில் இருப்பவன்
    அறையின் விசாலத்தை
    சிலாகிப்பதாகாதா?//

    எத்தனை அழகான எடுத்துக்காட்டு./***

    நானும் சிலாகித்து எழுதிய வரிகள் சுந்தரா, குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி!

    //கவிதை அருமை.

    வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  77. தமிழ் பிரியன் said...

    //புதிய மாற்றங்களுக்கு யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்! அங்கு கவிதை வந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

    யூத் விகடன் பக்கம் வழக்கம் போலத் தொடர்கிறது தமிழ் பிரியன். இது அவர்களது புதுமுயற்சியாய் பத்திரிகை வடிவில் மின்னிதழ்! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  78. R.Gopi said...

    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்....//

    நன்றி கோபி:)!

    பதிலளிநீக்கு
  79. ஈ ரா said...

    // நன்று..பாராட்டுக்கள் //

    மிக்க நன்றி ஈ ரா!

    பதிலளிநீக்கு
  80. ambi said...

    ***/ //follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வருகை தந்தபடி இருப்பவருக்கும் //

    ரைட்டு விடுங்க. :))/***

    விடக் கூடாதே! எல்லோருக்கும் நினைவா நன்றி சொல்லணுமே:)!
    ---------------------------------

    //ரெம்ப நாளாச்சு இங்க வந்து. யூத் விகடன்ல தான் நிரந்தரமா திண்ணை கட்டி வசித்து வரீங்களே அப்புறம் என்ன புதுசா? :))//

    அது யூத் விகடன் இணையதளம். மின்னிதழ் புதுசு அம்பி புதுசு:)! லிங்கில் க்ளிக் செய்து போய் பாருங்க!

    பதிலளிநீக்கு
  81. ambi said...

    //கவிதையின் முதல் பாரா ரெம்பவே ரசிச்சேன். சில சமயங்களில் இலக்கை அடைந்து விட்டால் சப்புனு போயிடுது இல்ல.//

    முற்றிலும் உண்மை.

    //தேடல் உள்ள உயிர்களுக்கே
    தினமும் பசி இருக்கும்.

    How True.. :)//

    அழகாச் சொல்லிட்டீங்க. நன்றி அம்பி.

    பதிலளிநீக்கு
  82. வி.என்.தங்கமணி, said...

    // arumayaana kavithai. arputhamaana
    sollaadal. pathivukku nantri.
    Vazhga Valamudan.
    ivan. vi.en.thangamani//

    தங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்கமணி.

    பதிலளிநீக்கு
  83. கலகலப்ரியா said...

    //supernga..! vazhththukkal..!//

    நன்றி கலகலப்ரியா. உங்கள் கவிதையும் மின்னிதழில் கண்டேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  84. புதுகைத் தென்றல் said...

    //வாழ்த்துக்கள்//

    நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  85. RAMYA said...

    //நல்ல உவமானம் சகோதரி! புள்ளியும், விசாலமும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வரிகளின் லயத்தை உணர்த்துகிறது.//

    //ஆமாம்! அந்த போதை இருக்கிறதே கரணம் தப்பினால் மரணம். அதல பாதாளத்தில் கொண்டு விட்டுடும்.

    அருமையான வரிகள். என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய வரிகள்!//

    //ஆமாம்! இப்படி ஒவ்வொரு இலக்காகத் தாண்டினாலும் நம் இலக்கை அடைய வெகு தூரம் போகணும் போல இருக்கே!

    அப்படி அந்த இலக்கை லாவகமாகத் தாண்டி விட்டால் அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது..

    வாழ்த்துக்கள்! உங்கள் கவிதை மிகவும் அருமை!

    அப்புறம்
    ========
    இடுப்பிலே கையை வைத்திக் கொண்டு ஒரு லுக் விடுறாங்களே அவங்க சூப்பர்.. அப்படீன்னு நான் சொன்னாதா சொல்லிடுங்க :)//

    தங்கள் ரசனைக்கும் விரிவான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரம்யா. நீங்க சொன்னதை கண்டிப்பா அவங்ககிட்டே சொல்லிடறேன்:))!

    பதிலளிநீக்கு
  86. நசரேயன் said...

    //உங்களுக்கு வாழ்த்து சொல்ல எனக்கு வயசு இல்லை, அதனாலே வணங்குகிறேன்//

    உங்கள் அன்புக்கு நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  87. துபாய் ராஜா said...

    ***/அருமையான வரிகள்.

    வணக்கம்.வாழ்த்துக்கள்./***

    ரசித்த வரிகளைப் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  88. Jayashree said...

    //கவிதை படம் இரெண்டுமே நன்றாக உள்ளது!! வாழ்த்துக்கள். எவ்வளவு உண்மை! விளையட்டைப்போல் இல்லாமல் வாழ்கையின் இலக்கு அதை எட்டியவுடன் மாறுவதும் நகர்வதும் ஏனோ? The goal keeps on moving... hm...Hard work indeed.முடியும் வரை தொடரவே வேண்டும்:))//

    ரொம்பச் சரியா சொல்லிட்டீங்க ஜெயஸ்ரீ! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. படத் தேர்வுக்கான பாராட்டு விகடனுக்கே!

    பதிலளிநீக்கு
  89. கோமதி அரசு said...

    ***/ //எத்தனைநேரம் தான்
    ஏந்தியே நிற்போம்?
    கிடைத்த கோப்பையை
    கீழே வைத்து விட்டு
    வந்த பாதைக்கு ஒரு
    வண்க்கம் சொல்லிவிட்டு
    இந்த பக்கம்
    திரும்பினால் தானே
    தென்படும் தூரத்தே-
    சவலாய் நமக்குக்
    காத்திருக்கின்ற
    அடுத்த இலக்கு?!

    அற்புதமான வரிகள்./***

    நன்றிம்மா.

    // சிறு வயது ராமலக்ஷ்மி படம்
    உணர்த்தும் கருத்து அடுத்தக் கட்ட
    வெற்றி பயணத்தை தொடர்ந்து விட்டேன் என்பது தான்.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    ஆசிகளுடனான வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்:)!

    பதிலளிநீக்கு
  90. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  91. இந்த பதிவிற்கு பின்னூட்டம் போட்ட நியாபகம் இருக்கு, இருந்தாலும் நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  92. கவிதை(கள்) said...

    //நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  93. சிங்கக்குட்டி said...
    //இந்த பதிவிற்கு பின்னூட்டம் போட்ட நியாபகம் இருக்கு, இருந்தாலும் நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

    இல்லை, சிங்கக்குட்டி! பதிவைப் பார்த்து விட்டுப் போயிருந்திப்பீர்களாயிருக்கும்:)! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  94. அசத்திட்டீங்க. தொடர்ந்து அசத்துங்க.......
    "எத்தனை நேரம்தான்
    ஏந்தியே நிற்போம்?
    கிடைத்த கோப்பையை
    கீழே வைத்துவிட்டு
    வந்த பாதைக்குஒரு
    வணக்கம் சொல்லிவிட்டு
    இந்தப் பக்கம்
    திரும்பினால்தானே-"

    பதிலளிநீக்கு
  95. வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  96. வெற்றியில் மயங்காது அடுத்த இலக்கைப் பார்த்து முன்னேறு என்பது நல்ல சிந்தனை..

    பதிலளிநீக்கு
  97. @ சித்ரா,

    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  98. @ கடையம் ஆனந்த்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  99. ஸ்ரீராம். said...

    //வெற்றியில் மயங்காது அடுத்த இலக்கைப் பார்த்து முன்னேறு என்பது நல்ல சிந்தனை..//

    கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  100. Madam,

    நல்ல கவிதை . ரசித்தேன் .

    என்னோட கட்டுரை முதல் முறையா யூத் விகடனில் ஜாலி பஜாரில் வந்திருக்கு. (ka
    இந்த link -ல் படிக்கவும்.

    http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp

    To read it in my blog: http://veeduthirumbal.blogspot.com

    பதிலளிநீக்கு
  101. @Mohan Kumar,
    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மோகன் குமார். தங்கள் படைப்பை அவசியம் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  102. சதத்துக்கு வாழ்துக்கள்
    தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் :-))

    பதிலளிநீக்கு
  103. கார்த்திக் said...

    //சதத்துக்கு வாழ்துக்கள்
    தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் :-))//

    மிக்க நன்றி கார்த்திக்:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin