இரு சிறிய சிறகுகள் எனக்கிருந்தால்
ஒரு புசுபுசுப் பறவையாக நானிருந்தால்
பறந்து உன்னிடம் வந்திடுவேன், என் அன்பே!
தெரிகிறது, இது போன்ற வீணான சிந்தனைகளால்
எந்தப் பிரயோசனமும் இல்லை
நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்.
ஆனால் என் தூக்கத்தில்
உன்னிடம்தான் பறந்து வருகின்றேன்
உன்னுடனேயேதான் எந்நேரமும் இருக்கின்றேன்
அந்தக் கனவு உலகம் நமக்கே நமக்கானது,
என்றாலும்
மீண்டும் விழிக்கும்போது எங்கே இருக்கின்றேன்?
தனியே.. தன்னந்தனியே.
பேரரசேக் கட்டளையிட்டாலும் தூக்கம் தொடராது:
ஆகவே பொழுது புலரும் முன் எழுந்திட விருப்பம்:
என் தூக்கம் கலைந்து விட்டாலும் கூட,
இருள் சூழும் நேரத்தில், இமைகள் மூடும் தருணத்தில்,
என் கனவுகள் தொடர்கின்றன.
***
மூலம் ஆங்கிலத்தில்:
Something childish, but very natural (1799).
By
Samuel Taylor Coleridge
படம் நன்றி: இணையம்
1 டிசம்பர் 2012, அதீதம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.
பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குமொழிப் பெயர்த்து பகிர்ந்தது அருமை!
பதிலளிநீக்குகனவின் சிக்கலான கற்பனை.
பதிலளிநீக்குThis is another Coleridge's poem . Will u mind translating this one.
பதிலளிநீக்கு//Do you ask what the birds say? The Sparrow, the Dove,
The Linnet and Thrush say, "I love and I love!"
In the winter they're silent -- the wind is so strong;
What it says, I don't know, but it sings a loud song.
But green leaves, and blossoms, and sunny warm weather,
And singing, and loving -- all come back together.
But the Lark is so brimful of gladness and love,
The green fields below him, the blue sky above,
That he sings, and he sings; and for ever sings he --
"I love my Love, and my Love loves me!" //
subbu rathinam.
கனவின் கற்பனை மிக அழகு,நன்றிக்கா!!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குசுப்பு தாத்தாவின் வேண்டுகோள் - என் சார்பிலும்.....
கவிதைய்ம் அதன் மொழிபெயர்ப்பும் பிரமாதம்.தேர்ந்துடுத்து போட்டு இருக்கும் படம் அழகோ அழகு
பதிலளிநீக்குகனவில் இனிமை காணும் போது கனவு தொடரட்டும்.
பதிலளிநீக்குகவிதை மொழிபெயர்ப்புக்கு வாழ்த்துக்கள்.
மொழிபெயர்புக் கவிதைக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபேரரசேக் கட்டளையிட்டாலும் தூக்கம் தொடராது:
பதிலளிநீக்குஅருமையான கவிதை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
அருமை அருமை. ஒவ்வொருவரும் தேடும் கனவு.நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு@புதுகைத் தென்றல்,
பதிலளிநீக்குநன்றி தென்றல்.
@semmalai akash,
பதிலளிநீக்குநன்றி ஆகாஷ்.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@sury Siva,
பதிலளிநீக்குசெய்கிறேன்:)! அதீதத்திலும் இங்கும் பகிர்ந்திடுகிறேன் விரைவில்.
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட். விரைவில் செய்கிறேன்:)!
@ஸாதிகா,
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி ஸாதிகா!
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி வல்லிம்மா.
அருமையாக மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி.கவியின் உணர்வுகளை சரியாக வடித்து விட்டீர்கள்.
பதிலளிநீக்கு@Asiya Omar,
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆசியா.