Friday, December 21, 2012

ஈரமாய் இருக்கட்டும் தூரிகை - பண்புடன் புகைப்படப் போட்டியில் முதல் பரிசு

நன்றி பண்புடன்!

கட்டற்ற சுதந்திரத்துடன் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவென 2005_ஆம் ஆண்டு ஆசிஃப் மீரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் மின்னஞ்சல் குழுமம்‘பண்புடன்’. இணைய இதழாகவும் இயங்கி வந்ததை அறிந்திருப்பீர்கள்.

தண்ணீர்’ என்ற தலைப்பில், குழுமம் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் அனுப்பிய படத்திற்கு முதல் பரிசு அறிவிப்பாகியுள்ளது:)!பண்புடன் குழுமத்துக்கும் நடுவர் விழியனுக்கும் என் அன்பு நன்றி!! ரூ. 500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இரண்டாம் மூன்றாம் பரிசுகளை வென்ற விக்னேஷ், அரசி ஆகியோருக்கு என் நல்வாழ்த்துகள்!
***

தூரிகை முக்கியமா?

PiT போட்டிகளை நான்கு வருடங்களாகத் தொடரும் அனுபவத்தில் அங்கே அடிக்கடி வாசகர் எழுப்பும் கேள்வி ஒன்றையும், சலிக்காமல் PiT உறுப்பினர் குழு வழங்கும் அந்தப் பதிலையும் இங்கே பகிர்ந்திடத் தோன்றுகிறது.

டி எஸ் எல் ஆர் படங்களுக்குத் தனியாகவும், பாயின்ட் அன்ட் ஷூட் படங்களுக்குத் தனியாகவும் போட்டியைப் பிரித்தால் என்ன என்பதே கேள்வி. ‘It's not the brush, it's the Painter' என்பதே குழு சொல்லும் பதில்.

எந்தத் தூரிகையை வைத்துத் தீட்டுகிறோம் ஓவியத்தை என்பது முக்கியமே இல்லை. இதோ இந்தப் படம் எனது Sony W80-ல் எடுத்ததே. இதிலும் Nikon E3700-லும் நான் எடுத்த பல படங்கள் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கின்றன. மேக் மை ட்ரிப் டாட் காம் உபயோகிக்கும் எனது படம் உட்பட இரண்டு முறை தமிழ்மணம் விருதுகளை வென்ற பதிவுகளின் படங்கள் யாவும் பாயின்ட் அன்ட் ஷூட்டில் எடுத்தவைதான். இரண்டு வருடங்களாக DSLR (Nikon D5000) உபயோகிக்க ஆரம்பித்த பின்னரும், அன்றாட வேலையாக எங்கே வெளியில் சென்றாலும் கூடவே எடுத்தச் செல்ல எளிதாக இருக்கிற வகையில் இப்போதும் P&S உபயோகிக்கவே செய்கிறேன். என்னதான் மொபைலில் அதிக மெகா பிக்ஸல், ஜூம் வசதி வந்து விட்டிருந்தாலும் கேமரா பிடித்து எடுப்பதில்தான் கிடைக்கிறது எனக்குத் திருப்தி:)!

சித்திரமும் கைப்பழக்கம். என்ன சொல்ல வர்றேன்னா தூரிகையைக் காய விடாதீர்கள்:)! எப்போதும் வண்ணங்களில் குழைந்து ஈரமாகவே இருக்கட்டும் அது. தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டே இருப்பதுதான் நம் திறனை வளர்க்க ஒரே வழி.

***


41 comments:

 1. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  முதல் பரிசு பெற்றதற்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  H E A R T Y

  C O N G R A T U L A T I O N S ! ;)

  ReplyDelete
 2. படம் மிக மிக அருமை!
  வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. அக்கா...
  ரொம்ப சந்தோஷம் அக்கா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அசையா மனங்களையும் அசைய வைக்கும், அசையாமல் இருக்கும் இந்த நீர்ப் புகைப்படம். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்ல படம். அதற்கேற்ற பரிசு. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.தூரிகையை நினைவு வைத்துக் கொள்கிறேன்.:)

  ReplyDelete
 6. முதல் பரிசை வென்றதற்கு இனிய வாழ்த்துகள். இன்னும் நிறைய பரிசுகள் உங்களைத்தேடி வரட்டும்.

  ட்ரீட் கிடையாதா??? :-))

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்
  தொடர்ந்து தூரிகைகள் ஈரமாகவே இருக்கட்டும்
  காய விட வேண்டாம்
  கவித்துவமான வரிகள் மனம் தொட்டது

  ReplyDelete
 8. முதல்பரிசு மிக்க மகிழ்ச்சி.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வாவ்.. முதல் பரிசு..கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. பண்புடன் குழுமப் போட்டியில் வென்ற முதல் பரிசுக்கு வாழ்த்துகள். புத்தகங்கள் வந்ததும் தலைப்புகளைப் பகிருங்கள்! :)

  தூரிகை முக்கியமா தலைப்பில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் நல்ல அறிவுரை.

  ReplyDelete
 12. எங்கே நிழல் தொடங்குகிறதேன்றே தெரியவில்லை. படம் விசேஷம்!

  ReplyDelete
 13. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  தொடர்ந்து தூரிகைகள் ஈரமாகவே இருக்கட்டும்
  காய விட வேண்டாம்//
  அருமை.

  சித்திரமும் கை பழக்கம் போல் காமிராவை வைத்துக் கொண்டு படம் எடுத்துக் கொண்டே இருக்க சொல்லும் குறிப்பு மிகச் சரியே!

  ReplyDelete
 14. முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 15. வாழ்த்துகள், வழக்கம்போல. :-))

  ReplyDelete
 16. @T.N.Elangovan,

  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. @அமைதிச்சாரல்,

  நன்றி சாந்தி. அடுத்த முறை நீங்கள் பெங்களூர் வரும் போது கண்டிப்பாக உண்டு:)!

  ReplyDelete
 18. @Ramani,

  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. @ஸ்ரீராம்.,

  நிச்சயமாக:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 20. @கே. பி. ஜனா...,

  பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @கோமதி அரசு,

  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 22. @ஹுஸைனம்மா,

  நன்றி ஹுஸைனம்மா. உங்களுக்கும் வாழ்த்துகள்:)!

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்.மிக அருமையான படம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin