வியாழன், 23 பிப்ரவரி, 2012

BSNL-ன் சிறப்பான சேவையும், ஒரு தபால் அலுவலகத்தின் கடுப்பான சேவையும்



ரு அரசு அலுவலகம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் அது அவர்களின் கடமை. இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது’ எனக் கேட்கலாம். பல அரசு அலுவலகங்கள் பொதுமக்களை அலட்சியப் படுத்துபவர்களாக, பிரச்சனையுடன் செல்லுபவர்களை அலைக்கழிப்பவர்களாக இருந்து வருகையில் மாற்றாக ஒரு நிறுவனம் செயல்படும்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சுமார் கடந்த பத்துப் பனிரெண்டு வருடங்களாகவே BSNL-லின் சேவை நான் இருக்கும் பகுதியில் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக லான்ட் லைன் தொலைபேசி அவுட் ஆஃப் ஆர்டர் ஆனது விரல் விட்டு எண்ணும்படி மூன்று நான்கு தடவைகளே. புகார் பதிவு செய்தால் மறுநாள் காலை பத்துமணிக்குள் சரி செய்துவிட்டு, அழைத்து உறுதிப் படுத்தியும் கொள்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் பெருமழையினால் குடியிருப்பின் அருகே கேபிள்கள் பாதிக்கப்பட்டபோது சரி செய்ய நாலைந்து தினங்கள் ஆகுமோ என்றே மக்கள் நினைத்திருக்க வேகவேகமாக செயல்பட்டு ஒன்றரை நாட்களில் சரி செய்து முடித்தார்கள். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயம் வேறு.

இவர்களின் இன்முக சேவை. நாலைந்து வருடங்களுக்கு முன்னால் மீட்டர் எகிறுவது போல தவறாக எங்களுக்கு பில் வர, லோகல் அலுவலகத்தினர் தலைமை அலுவலகத்தை அணுகச் சொன்னார்கள். அங்கே காத்திருந்தபோது இதே போன்ற பிரச்சனையுடன் வந்திருந்த ஒருவர் கட்டிடமே கிடுகிடுக்கக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அதிகாரியோ அவரை ஆசுவாசப்படுத்தி ஆவன செய்யப்படுமென மிக அமைதியாகப் பதிலளித்தது ஆச்சரியத்தையே தந்தது. நான் கொண்டு சென்றிருந்த பிரச்சனையையும் சுமுகமாகத் தீர்த்து வைத்தார்கள்.

ங்கு போலவே வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் விதத்தில் தனியார் நிறுவனங்களை தோற்கடிக்கும் விதமாகவே செயல்படுகிறது எங்கள் பகுதி பி எஸ் என் எல். இணைய இணைப்புத் திட்டத்தில் மாற்றம் வேண்டி சில தடவைகள் சென்ற போது இந்த மேசையிலிருந்து அந்த மேசைக்கும், ஒன்றாம் மாடியிலிருந்து நாலாவது மாடிக்கும் அனுப்பினாலும், பேப்பர்களை சமர்ப்பித்து இரண்டுநாள் கழித்து நிலவரம் அறியப் போனால் ‘மேடம் ப்ளீஸ், இது ரெண்டாவது மாடிக்குச் செல்ல வேண்டிய பேப்பர், சாரி’ என எரிச்சலூட்டினாலும் கூட அந்த பணிவான ‘சாரி, ப்ளீஸ்’ சிரமங்களை மறக்கச் செய்து விடுகிறது. வருத்தம் தெரிவிப்பதோடு நின்றிடாமல் கூடவே வந்திருந்து வேலையை உடனடியாக முடிக்க உதவித் தவறைத் திருத்தியும் கொள்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி அனைவரின் சேவையுமே மெச்சத் தகு வகையில் உள்ளது.

15 வருடங்களுக்கு முன் பெங்களூரின் ஒரு பகுதியிலிருந்து இந்தப்பகுதிக்கு மாறுகையில், ஃபோனை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டி இதே பி எஸ் என் எல்லை அணுகிய போது. அதிகாரி ஏறெடுத்துக் கூட பாராமல் அலட்சியமாக லெட்டரை டேபிளில் வைத்து விட்டுப் போகுமாறு சொன்னது மறக்கவில்லை. அப்போது வேறொரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இப்போதும் கட்டிடம்தான் 4 மாடிக்கு உயர்ந்து நிற்கிறதே தவிர, உட்கார்ந்தால் எங்கே விழுந்து விடுவோமோ என ஆட்டம் காண்பிக்கும் ஆதிகால வயர் சேர்கள், ஸ்டீல் மேசைகள், தூசுபடிந்த ஃபைல்கள் நிரம்பிய ஸ்டீல் ஷெல்ஃப்கள், பெயிண்ட் போன ஸ்டீல் பீரோக்கள் எனத் தோற்றத்தில் எந்த மாறுபாடும் இல்லை மேசைக்கு மேசை கணினி முளைத்திருப்பதைத் தவிர. ஆனால் தங்கள் சிறப்பான செயல்பாட்டினாலும், வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளை இன்முகமாக அணுகுகின்ற பண்பினாலும், அதிகாரி முதல் வயர்களை சரிபார்க்க வரும் அடிப்படை ஊழியர் வரை எவரும் எந்த சேவைக்கும் ‘எதை’யும் எதிர்பார்க்காத நேர்மையினாலும் மக்கள் மனதில் நெம்பர் 1 ஆக நிற்கிறது பி எஸ் என் எல். இதில் உங்களுக்கு வேறுவிதமான அனுபவங்களோ மாற்றுக்கருத்தோ இருப்பின் மன்னிக்க. இருக்கவும் கூடும். ஆனால் இது என் அனுபவத்தில் கண்டது. என் அனுபவம் மட்டுமேதானா என்றும் எண்ணி, பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் நண்பர்கள் சிலரிடம் விசாரித்ததில் அவர்களும் இதே பாராட்டினை வழங்கினார்கள்!

நினைத்தால் அடுத்த அரைமணியில் அலைபேசி இணைப்பு எனப் போட்டிகள் பெருகி விட்ட ஒன்றையே இதற்குக் காரணமாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் ஃபோனைப் போட்டால் வீட்டுக்கே வந்து கொரியர் வாங்கிச் செல்லும் வசதிகள் பெருகி விட்ட நிலையில் தபால் அலுவலகங்களும் அப்படி நடக்க வேண்டுமே.

மேற்சொன்ன ஆதிகால அலுவலகத் தோற்றத்துடனே இருந்து வந்த எங்கள் பகுதி தபால் அலுவலகம் திடுமென மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு வங்கியைப் போல் பளபள கண்ணாடி கவுன்டர்கள், வாடிக்கையாளர் காத்திருக்க அழகான இருக்கைகள், ஊழியர்களுக்குப் புத்தம்புது கணினிகள் எனத் தன் கெட் அப்பை மாற்றிய போது மக்கள் எல்லோருமே ‘அட’ என வியந்தார்கள். மகிழ்ந்தார்கள். ஆனால் கெட் அப்புதான் மாறியதே தவிர செட் அப் மாறவில்லை:(. அதே ஊழியர்களே தொடர்ந்த நிலையில் கணினியை இயக்க சரியான பயிற்சி தரப்பட்ட மாதிரித் தெரியவில்லை.

கால்கடுக்க நின்று மின்சார, தொலபேசிக் கட்டணங்கள் கட்டிய, ரெயில்வே டிக்கெட் எடுத்த காலமெல்லாம் போன ஜென்மம் போலாகி இப்போது நுனியில் வேலைகளை முடிக்கப் பழகிவிட்ட மக்கள் அதே வசதியை அனைத்து இடங்களிலும் எதிர்பார்ப்பதைத் தவறாகச் சொல்லவும் முடியாது. இங்கே ஊழியர்கள் ‘தடவித் தடவி’ ஒவ்வொருவருக்காக மனி ஆர்டர், பார்சல் என்ட்ரி போடும் வேகத்தைப் பார்க்கையில் வரிசையில் நிற்பவர்கள் பொறுமை இழக்கத் தொடங்கி விடுகிறார்கள். நீண்ட வரிசைகள் ஆமை வேகத்தில்தான் நகரும். சில சிற்றிதழ்களுக்கு இணையம் மூலமாக சந்தா கட்டும் வசதியில்லாதிருக்க, அதற்காக சென்ற போது கவனித்ததே இது. ஏதேனும் விவரங்கள் சந்தேகங்கள் கேட்கிற பொதுஜனங்கள், ஏறெடுத்துப் பாராமல் ஊழியர்கள் வீசும் பதில்களைதான் பெறுகின்றார்கள். இதெல்லாம் கூடப் போகிறதெனச் சகித்துக் கொள்ளலாம்.

ஏழை எளியவருக்கும் சரி, வங்கிகளை விட அதிக வட்டி தருவதிலும் சரி, பாதுகாப்பான முதலீடு என்ற வகையிலும் சரி, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுவதை மறுப்பதற்கில்லை. வருந்தி உழைத்துச் சம்பாதித்தப் பணத்தை வட்டிக்கு ஆசைப்பட்டுச் ‘சீட்டு’ப் போட்டு ஏமாந்து நிலைகுலைந்து போகும் அடித்தட்டுப் பெண்களுக்கு நான் காட்டும் வழி தபால் நிலைய சேமிப்புதான். என் ஆலோசனையில் அப்படி இணைந்து மாதாமாதம் பணம் சேர்த்து வரும் (ரெகரிங் டெபாசிட்) ஒரு பெண் சில காரணங்களால் சென்ற மாதம் சரியான நேரத்தில் கட்ட முடியாது போய் விட்டது. சரி அதற்கான அபராதம் 40, 50ரூபாய் இருக்கும் போல என நினைத்து கட்டவேண்டிய இருமாதத் தொகையோடு கூட ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அபராதமோ 8 ரூபாய். 4 ரூபாய் மட்டுமே சில்லறையாய் பஸ்ஸுக்கென வைத்திருந்தது இருந்திருக்கிறது. ரொம்ப தொலைவில் இருந்து வருவதைச் சொல்லி இந்த முறை மன்னிக்குமாறு நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்கவும் நோட்டை அவள் முகத்தில் விசிறியடித்த அலுவலக ஊழியர் “எப்படியாவது மாற்றிக்கிட்டு வா” எனச் சொல்ல இவளும் அங்கிருந்த பலரிடம் ஓடியாடி சில்லறை கேட்பதை வேடிக்கை பார்த்திருக்கிறார் ஊழியர். எவரேனும் சும்மாவேனும் நான்கு ரூபாய் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் அப்படிக் கேட்க இப்பெண்மணிக்கு சுயகெளரவம் தடுத்திருக்கும் இல்லையா?

வெளியில் போய் கடையில் எதையாவது வாங்கிச் சில்லறை மாற்றும் வசதியும் மனமும் இன்றி மறுபடி ஊழியரிடமே வந்து கெஞ்சியிருக்கிறார். அடுக்கிய ஐம்பது, இருபது, பத்துகள் மற்றும் சில்லறைகள் அடங்கிய டிராயரை கண்ணில் படும்படியாக விரியத் திறந்து வைத்துக் கொண்டே, அவளது சேமிப்புப் புத்தகத்தினுள் இருந்த ‘பே இன் ஸ்லிப்’பைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு “போ..போ.. எப்போ 8 ரூவாய் சில்லறையா கொண்டு வர முடியுதோ, அப்போ வந்துக் கட்டு” என அனுப்பி விட்டிருக்கிறார் அந்த “பெண்” ஊழியர்.

பிற இடங்களில் எப்படி எனத் தெரியாது. ஒரு ஊழியரின், ஒரு அலுவலகத்தின் செயல்பாட்டினை வைத்து ஒட்டு மொத்த தபால் சேவையையும் குறை சொல்லவும் கூடாது. அதனால்தான் தலைப்பில் “ஒரு” தபால் அலுவலகத்தின் எனக் குறிப்பிட்டுள்ளேன். இன்றைக்கும் வேகாத வெயிலிலும், மழைநீர் வழுக்கும் சாலைகளிலும் சைக்கிளை மிதித்து வந்து தபால் பட்டுவாடா செய்கிற தபால்காரர்கள் மதிப்பிற்குரியவர்களே.நான் சொல்ல வருவதெல்லாம், வாடிக்கையாளர்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதே. 'நான்கு ரூபாய் சில்லறைக்கு நூறு ரூபாயை எல்லோரும் நீட்டினால் நாங்கள் என்ன செய்வோம்' என நியாயம் பேசுவார்களேயானால் அதைச் சொல்ல ஒரு முறை இல்லையா? மனம் வைத்திருந்தால் விதிவிலக்காக உதவியிருக்கலாம். சரி, முடியாதா? அந்த மனிதாபிமானம் இல்லையா? பணிவாகவேனும் மறுத்திருக்கலாம்.

ப்போது மாறுவார்கள்? வாடிக்கையாளர் சேவை என்றால் என்னவென யார் எப்போது இவர்களுக்கு பயிற்றுவிப்பார்கள்? ஏற்கனவே சென்றமாதம் வடக்குவாசல் இதழில் வெளியான எனது பெங்களூர் குறித்த கட்டுரையில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும் இவர்களது சேவை என பி எஸ் என் எல்-லைப் பாராட்டி ஒரு பத்தி எழுத இருந்தேன். அக்கட்டுரை நீளமாகி விட்டபடியால் தவிர்க்க நேர்ந்து விட்டது. இப்போது இந்தத் தபால் ஊழியரின் செயல் BSNL-யைப் பாராட்டியே தீர வேண்டுமென்கிற உந்துதலைத் தந்து விட்டது.

பாராட்டுகளுடன், முகப்புத்தகத்தில் கண்ட BSNL-லின் வித்தியாசமான விளம்பரம் ஒன்றையும் இங்கு பகிந்து கொள்கிறேன்:
***

58 கருத்துகள்:

  1. Interesting invitaion.

    //இதில் உங்களுக்கு வேறுவிதமான அனுபவங்களோ மாற்றுக்கருத்தோ இருப்பின் மன்னிக்க. //

    I have very bitter experience with BSNL. Our landline gets repaired every month and line man gets money every time. The BSNL mobile that we have does not have clarity at all in our place due to weak signal :((

    பதிலளிநீக்கு
  2. நல்ல நிறுவனத்திற்கு மோசமான தொழிலாளர்களால் கெட்ட பெயர் தான். ஒருவரின் தவறான செயலால், "ஒட்டு மொத்த நிறுவனமும் அவ பெயர் சுமக்க நேரும்" என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பதிவில் நீங்கள் சொல்லியிருப்பது நூறு சதவிகிதம் சரியே. அதிலும் பெங்களுர் பி எஸ் என் எல் சேவை மிகவும் சரி. பெங்களூரில் போஸ்ட் ஆஃபீஸ் பக்கம் அதிகம் சென்றதில்லை. கோரமங்களா போஸ்ட் ஆஃபீஸ் ஓரிருமுறை சென்றதுண்டு. சேவை ஒன்றும் சுகமில்லை என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் எங்கள் ஊர் BSNLன் சேவையும் நன்றாக உள்ளது. போஸ்ட் ஆபிஸ் பற்றித்தெரியவில்லை. ஆனால் சிலரின் செய்கையால்தான் கெட்ட பெயர்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வது சரி சிலரின் மோசமான
    நடவடிக்கைகளைவைத்து மொத்த நிறுவனத்தையும்
    குற்றம் சாட்ட முடியாது என்றாலும்
    ஒரு சிலரின் சிறந்த சேவைகளைக் கொண்டுதானே
    மொத்த நிறுவனத்தையும் பாராட்டியும் பேசுகிறோம்
    என்வே ஒவ்வொரு ஊழியரும் இதை உணர்ந்து நடந்தால் நல்லது
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. /குறிப்பாக லான்ட் லைன் தொலைபேசி அவுட் ஆஃப் ஆர்டர் ஆனது விரல் விட்டு எண்ணும்படி மூன்று நான்கு தடவைகளே. புகார் பதிவு செய்தால் மறுநாள் பத்துமணிக்குள் சரி செய்துவிட்டு, அழைத்து உறுதிப் படுத்தியும் கொள்கிறார்கள்/
    ஐய்யய்யோ ! இதென்ன கலாட்டா? எனக்கு மயக்கம் மயக்கமா வருது!

    பதிலளிநீக்கு
  7. பொதுவாய் உடனுக்குடன் புகார்களை சரி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் சரி செய்ய வ‌ருபவர்களுக்கு பணம் கொடுக்காமல் வேலை நடப்பதில்லை என்பது தான் உண்மை!!

    பதிலளிநீக்கு
  8. BSNL சேவையும், தபால் அலுவலகத்தின் சேவையும் அருமையாக இருக்கிறது. நல்ல மாற்றம்.

    பதிலளிநீக்கு
  9. // அவளது சேமிப்புப் புத்தகத்தினுள் இருந்த ‘பே இன் ஸ்லிப்’பைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு “போ..போ.. எப்போ 8 ரூவாய் சில்லறையா கொண்டு வர முடியுதோ, அப்போ வந்துக் கட்டு” என அனுப்பி விட்டிருக்கிறார் அந்த “பெண்” ஊழியர்.//

    பொது நிறுவனங்கள் 1970 முதல் 1990 வரை இருந்ததை விட இப்பொழுது பரவாயில்லை . இப்பொழுதும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில்
    இது போன்ற அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வளசரவாக்கத்திற்கு எனது வங்கிக் கணக்கை மாற்றிக்கொடுங்கள் என்ற விண்ணப்பத்தை அம்பத்தூர் அலுவலகத்திற்கு மே மாத வெய்யிலில் காய்ந்து சென்றேன். அந்த விண்ணப்பத்தில் வளசரவாக்கம் என்ற கிளையின் கோட் நம்பரைக் குறிப்பிட்டுத் தாருங்கள் என்றார் கிளை மேலாளர். (உதவி) . நான் என்னிடம் அந்த நம்பர் இல்லையே, உங்கள் மானீடரில் உள்ளதே, அதைச் சொல்லுங்களேன் என்றேன். அது என் வேலையல்ல, நீங்கள் வளசரவாக்கம் அலுவலகத்திற்கே போய் அந்தக்கிளை கோட் என்னவென்று வாருங்கள் என்றார். நான் காலை 9 மணிக்கு வளசரவாக்கத்திலிருந்து கிளம்பி இரண்டு பஸ் மாற்றி இங்கு 12 மணிக்கு வந்திருக்கிறேன். திரும்பவும் போய் விட்டு இங்கு திரும்ப வர இயலாது. எனக்கு 70 வயதாகி விட்டது. இந்த கோட் எண்ணை உங்கள்
    டேடா பேஸில் பார்த்து சொல்லக்கூடாதா !! என்றேன்.

    உங்களுக்கு பதில் சொல்ல என்னால் முடியாது என்றார். அந்த மனித நேயக் காப்பாளர்.

    திரும்பி வந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெப் ஸைட்டுக்குச் சென்று ஒரு புகார் எழுதினேன். அதற்கு இன்று வரை பதில் இல்லை.

    அடுத்த வாரம் திரும்பவும் சென்றேன். இப்பொழுதோ உங்கள் கணக்கு இப்பொழுது டெட் அகௌன்ட் ஆகிவிட்டது. என்றார்கள்.

    எந்த மயானத்தில் எரிக்கப்பட்டது என்று கேட்க நினைத்தேன். ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பொது நிறுவனத்தில் மனித நேய மேலாளராக இருந்த நான் அவ்வாறு பேசுதல் முறையல்ல என்று மரியாதை நிமித்தமாக, பதில் சொல்லாது திரும்பி வந்துவிட்டேன்.

    பொது நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும்போலும்.

    போனால் போகட்டும் போடா.. இந்த புவியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா !! என்ற பாடல் நினைவுக்கு வந்தது.



    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  10. சில நேரங்களில், சில இடங்களில், சில அலுவலகங்களில், சில மனிதர்கள், சில அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
  11. இப்போதெல்லாம் அரசு, தனியார் என்ற பேதமே இல்லாது ஒருவகையான அபேத ரீதியில் விஷயங்கள் செல்கின்றன. டெல்லியில் ஒருமுறை ஒரு தனியார் கைப்பேசி நிறுவனத்தில் சற்றுப் பொறுமை இழந்து பேசிய வாடிக்கையாளரை அடிக்க எழுந்து வந்த அதிகாரியை பார்த்து இருக்கிறேன். டெல்லி விமானநிலையத்தில் சில தனியார் விமானங்களில் இருக்கை ஒதுக்கும் அலுவர்கள் நம்மைப் பார்த்தால் நாம் ஏதோ அந்நிய கிரகத்தில் இருந்து வந்து படையெடுத்து, போர் தொடுத்து அவர்களுடைய நிறுவனத்தைக் கைப்பற்ற அதிகாலையில் அவர்கள் முன்னர் நிற்பது போல நடந்து கொள்வார்கள். பல நேரங்களில் நம்முடைய உடை, அதிகார தோரணை, தோற்றம், உடைகள், பந்தா போன்றவை தனியார் மற்றும் அரசு நிறுவன சேவைகளை சரியான முறையில் அமையும் அபாக்கியமான நிலையில் நம்மைப் போன்ற வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். நாளாக நாளாக நிலைமை இன்னும் மோசமாகத் தான் போகும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. பிஎஸ் என் எல்லுடன் ஆன எனது அனுபவங்களும் மிகவும் நன்றாகவே இருந்தது; இருக்கிறது. அதே சமயம் தபால் அலுவலகத்தோடு கசப்பான அனுபவங்கள் நிறையவே. :(((((

    பதிலளிநீக்கு
  13. நானும் பி எஸ் என் எல் லாண்ட் லைன்தான் மாசாமாசம் தகராருதான் லைன்மேனுக்கு காசு கொடுக்காம வேலையே ஆகாது.

    பதிலளிநீக்கு
  14. ***அவளது சேமிப்புப் புத்தகத்தினுள் இருந்த ‘பே இன் ஸ்லிப்’பைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு “போ..போ.. எப்போ 8 ரூவாய் சில்லறையா கொண்டு வர முடியுதோ, அப்போ வந்துக் கட்டு” என அனுப்பி விட்டிருக்கிறார் அந்த “பெண்” ஊழியர்.***

    கிழித்து எறிவதெல்லாம் சட்டப்படிக் குற்றம்ங்க. அதென்னவோ இந்த கண்டக்டர், போஸ்ட் ஆஃபிஸ் ஊழியர் எல்லாம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துக்கிறாங்கனு தெரியலை.

    She is a customer and she has rights.

    ரெண்டு பேரை பொறுப்பான உயர் அதிகாரிகள் இதுபோல் செய்யும்போது, கண்டித்து வேலையை விட்டு தற்காலியமாக ரெண்டுநாள் வீட்டுக்கு அனுப்பினால், இப்படியெல்லாம் நடக்க மாட்டாங்க.

    8 ரூபாய்தானே? அடுத்த மாதம் கட்டினால்கூட 12 ரூபாய்தான். யாரிடமும் போய் கெஞ்சுவதற்கு அவங்க திரும்பி வந்திருக்கலாம். சில்லரை கொடுப்பதுகூட ஏதோ பேருதவினுதான் நெனச்சுக்கிறாங்க

    என்னவோ போங்க இதுபோல் ஏழை எளியவரை இதுபோல் அறிவில்லாத இரக்கமில்லாத "வலியவர்" ஏறி மிதிப்பதில் மட்டும்தான் இந்திய சுதந்திரம் தலைவிரித்தாடுது! :(

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு அலசல் பதிவு.
    பாராட்டுக்கள்.

    வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    அன்புடன் vgk 24.02.2012

    பதிலளிநீக்கு
  16. அன்பின் ராமலக்ஷ்மி - உண்மை - பி எஸ் என் எல் - சேவை பாராட்டத்தக்கது - எனது அனுபவத்தில் கடந்த ஆறாண்டுகளாக - சேவை அருமை. உடனுக்குடன் இணையத் தொடர்பான பிரசனைகளைத் மகிழ்வுடன் சரி செய்து கொடுக்கும் அவர்களின் சேவை மனப்பான்மை தொடரட்டும். என்ன ஒரு சிறு குறை. பில்லு அனுப்பும் போது ஒரு பககத்துக்கு விளக்கமா ( ?? ) நெரெய கணக்கெல்லாம் போட்டு அனுப்பறாங்க - அது என்ன எழவுன்னே புரிய மாட்டேங்குது - பேசாம கடசில கேக்கற பணத்தக் கட்டிடறது - அVளோ தான்.

    பதிலளிநீக்கு
  17. நாங்களும் அந்தக் காலத்திலேயே (2005) பி எஸ் என் எல் பத்தி நல்லா சொல்லிருக்கோம்ல .. பாருங்க ... அப்போது வந்த பின்னூட்டங்கள் மாதிரியெல்லாம் இப்போ வர்ரது இல்லியோன்னு தோணுச்சு ..ம்ம்.. .ம்.. அதெல்லாம் அந்தக் காலம்!!!

    பதிலளிநீக்கு
  18. அண்ணே தரும் அண்ணே - துளசி கொடுத்த கொழுக்கட்டைக்கு நாட்டு மருந்தா - சரி சரி - தயா இப்ப என்ன பண்றாரு ....

    பதிலளிநீக்கு
  19. தபால் அலுவலகங்கள், வங்கிகள் இவற்றில் சில அலுவலர்கள் , ஊழியர்கள் வாடிக்கையாளர்க்ளை
    கொடுமைப்படுத்தும் விதம் நம்ப இயலாத அளவுக்கு உள்ளது. இது அவர்களுடைய வேலை பளுவின்
    காரணமாக இருக்கலாம். ஒரே வேலையைத் திருப்பி திருப்பிச் செய்வதால், அதையே நாள் முழுவதும்
    செய்வதால் அவர்களுடைய மனம் சோர்வடைகிறது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்ற வாதமும்
    இல்லாமல் இல்லை.

    எனது நண்பர் ( இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டில் கமிஷணர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர் ) கடந்த‌
    ஆண்டு ஸ்டேட் பாங்க் வங்கியில் செக் புக் வாங்கச் சென்றார். அதற்கான விண்ணப்பத்தைக் கொடுத்து
    விட்டுச் சென்றார். ஒரு வாரம் கழித்து சென்றபொழுது அவருக்கு செக் புக் தரப்பட்டது. இப்பொழுதெல்லாம்
    செக் புக்கில் பெயர், அகௌன்ட் எண் அடித்துக் கொடுக்கிறார்கள். அவருடைய பெயர் சரியாக இல்லை,
    சரியாக இல்லை என்று சொன்னபொழுது, அதை அடித்து எழுதுங்கள் என்றார்களாம். அடித்தால் மறுபடியும்
    கையெழுத்து போடவேண்டுமே என்றதற்கு, போடுங்களேன் என்றாராம். இவரோ, பெயரையோ, அகௌன்ட்
    எண்ணையோ அடிக்கக்கூடாது அடித்துத் திருத்தினால், செக் செல்லாதே என்றதற்கு, செக் புத்தகத்தைப்
    பிடிங்கி, தானே அடித்துத் தந்தாராம். இது எப்படி சரி என்று கேட்டதற்கு, உங்களை எல்லாம், இங்கே
    அகௌன்ட் ஒபன் செய்யுங்கள் என்று நாங்கள் உங்களிடம் வந்து சொன்னோமா என்று கேட்டாராம்.

    இவருடைய அனுபவம் ஒருவாறு இருக்க, எனது இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, விருகம்பாக்கம் அனுபவம்
    ஒன்று அண்மையில்.

    எனது பாஸ் புத்தகத்தில் பதிவு செய்யச் சென்ற பொழுது, அதைப் பார்த்த அலுவலர் ஒருவர், நீங்கள்
    சீனியர் சிடிஸன் அகௌன்ட் 9 விழுக்காட்டில் அல்லவா தொடர்கிறீர்கள். இப்பொழுது 10.3 விழுக்காடு கிடைக்கிறதே.
    உங்களுக்கு வருடத்திற்கு 1400 ரூபாய் கூடக்கிடைக்கும். இந்த கணக்கை முடித்துவிட்டு, புதிதாக துவங்குங்கள்
    என்றார். அது மட்டுமல்ல, அதற்கான பாரத்தையும் கொடுத்து, அதை பூர்த்தியும் செய்து தர உதவினார்.
    இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

    பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் இளைய தலைமுறையினர் குறிப்பாக மகளிர் அலுவலர்கள் வாடிக்கையாளரின்
    குறைகளை நன்றாக கேட்டு, புரிந்து செயல்படுவது சிறப்பாகத்தான் உள்ளது.
    மீனாட்சி பாட்டி.
    http://mymaamiyaarsongs.blogspot.com

    பதிலளிநீக்கு
  20. எங்கியுமே இப்படி ஒன்னு ரெண்டு பேர் செய்யற தப்புகளால மொத்த நிறுவனத்துக்கும் கெட்ட பேர்.. என்ன செய்யறது!!. இதனால உண்மைக்குமே சேவை செய்யறவங்க பேரும் சேர்ந்துல்ல கெடுது.

    பதிலளிநீக்கு
  21. இந்தப் பதிவை, நேற்று மாலை வீட்டுக்கு வந்த சம்பந்திக்கு (அவர்களும் பி எஸ் என் எல் அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள்) படித்துக் காட்டினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு BSNL WLL Phone வயர்லெஸ் போன் மற்றும் இணைய இணைப்பு வாங்கியிருந்தேன். வயர்லெஸ் போனை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விட்டு 250 ரூபாய் பணம் கேட்டார் அந்த ஊழியர். பணம் கொடுக்குற சூழ் நிலையில நான் இல்லை அப்படின்னு சொன்னேன். எதுவும் பேசாம முறைச்சுகிட்டே போயிட்டார். நமக்கு காசு குடுக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதுக்கு போன் அப்படின்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே போயிருக்கலாம்.

    இதே மாதிரில் மின்வாரியத்துல பணம் கட்டும்போது நான் ஒரு முறை அவதிப்பட்டிருக்கேன். ஒவ்வொரு முறையும் மிகச்சரியாக சில்லரை எடுத்துகிட்டுதான் போவேன். அதிலும் ஒரு குறிப்பிட்ட கவுண்டரில்தான் கட்டுவேன். பல ஆண்டுகளாக ஒரே ஊழியர்தான். ஒரே ஒரு முறை எதிர்பாராத சூழ் நிலையில் நான்கு ரூபாய் சில்லரை இல்லை. ஆறு ரூபாய் மீதம் தர விருப்பம் இல்லாமல் பட்டென்று அட்டையை விசிறி எறிந்தார். எதிர்ல உள்ள கடையில டீ குடி இல்லன்னா தம் அடிச்சுட்டு சில்லரை மாத்திட்டு வா அப்படின்னார்.

    ஏற்கனவே அவர் கணக்கீட்டு அட்டையை விசிறி எறிஞ்சதுல கோபமா இருந்த நான் 'அதான் சில்லரை இல்லைன்னு சொல்லிட்டீல்ல...நான் டீ, காபி குடிக்க மாட்டேன். தம் அடிக்க மாட்டேன். இதை செய்ய சொல்றதுக்கு நீ யாரு...ஏடி எம், இண்டர் நெட்ல பணம் கட்டுற வசதி செஞ்சு குடுத்துட்டு உங்களை எல்லாம் வீட்டுக்கு விரட்டுனாதான் சரிப்படும்னு கத்திட்டு வந்துட்டேன்.

    அடுத்த சில மாதங்கள்ல மின் வாரிய அலுவலகத்துல இணைய இணைப்பு மூலமா பில் போட ஆரம்பிச்சதும் அந்த ஆளை தவிர்த்து வேற கேஷியர்கிட்ட பணம் கட்டிட்டு வருவேன்.

    நான் இண்டர்னெட் பேங்க் வசதி வாங்கினதும் ஆன்லைன்மூலமாத்தான் பணம் கட்டுறேன். மின்வாரிய அலுவலகத்துக்கு போறது இல்லை. ஆனா அப்பப்போ அதுக்கும் ஒரு ஆப்பு வெச்சிகிட்டுதான் இருக்காங்க.

    எங்க வீட்டு வாசல்லேயேதான் மீட்டர் இருக்கு. ஆனா அதுல ரீடிங் எடுக்காம போயிடுறாங்க. வாசலுக்கு கேட் கிடையாது. அப்புறம் ஏன் இப்படி செய்யுறாங்கன்னு தெரியலை.

    Door Lock அப்படின்னு குறிச்சா, வீட்டோட அமைப்பை ஒரு போட்டோ எடுத்து கேஸ் போட்டுடலாம்னு பார்க்குறேன். ஆனா அவங்க எதுவுமே குறிக்கிறது இல்லை.

    இதனால நான் மின்வாரிய அலுவலகத்துக்கு போய் எங்க வீட்டு மீட்டர்ல இருக்குற ரீடிங் நம்பர் இது அப்படின்னு சொல்லி எண்ட் ரி போட சொல்லி அப்புறம் பணம் கட்டுறேன். என்ன கொடுமை சரவணன் அப்படின்னு என்னை நானே கேள்வி கேட்டுக்க வேண்டியதுதான்.

    இதுக்கு முதல்ல ஒரு கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதணும்.

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு மட்டுமல்ல, பின்னூட்டங்களும்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. நல்லதொரு பகிர்வுங்க.

    நாங்கள் முன்பிருந்த வீட்டில் லாண்ட் லைன் வாரத்தில் இரண்டு நாள் வேலை செய்யாது. வந்து சரி பார்த்து சென்ற அடுத்த நாளே ரிப்பேர் ஆகி விடும். அதனாலேயே அங்கு சரண்டர் செய்து விட்டோம்...

    இப்போ இருக்கும் பகுதியில் அப்ளை செய்த அன்றே வந்து கனெக்‌ஷன் கொடுத்தார்கள். இண்டர்நெட்டும் அடுத்த நாளே ... நெட் கனெக்ட் ஆகாவிட்டால் போன் செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் போன் செய்து சரியாகி விட்டதா என்று இரு முறை கேட்கிறார்கள்....

    இரண்டு விதமான அனுபவங்கள்...

    பதிலளிநீக்கு
  25. // நானும் பி எஸ் என் எல் லாண்ட் லைன்தான் மாசாமாசம் தகராருதான் லைன்மேனுக்கு காசு கொடுக்காம வேலையே ஆகாது. //

    இந்த லைன் மேன்கள் எல்லோருமே பாவம். இவர்களுக்கு அலுவலகத்திலே சம்பளம் என்று ஒன்றே இல்லையாம்.
    நாம் கொடுக்கும் அன்பளிப்பில் தான் காலட்சேபம் நடத்துகிறார்களாம். இதே போல் தான் காஸ் சிலின்டர் தரும்
    லைன் மேன் ஆவார். ஒவ்வொரு தடவையும் இவருக்கு கொடுக்கும் இனாமும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
    ஏங்க ! போன் தடவை 15 ரூபாய் தானே கேட்டீங்க..இப்ப 20 ரூபாய் கேட்கிறீங்களே என்றதற்கு, போன தடவையை விட‌
    இப்ப கேஸ் விலை கூடிப்போச்சுல்லே !! அதுக்குத் தக்கபடி தானே இதுவும் என்று லாஜிக் பேசுகிறார்.

    பி.எஸ்.என்.எல். , போஸ்ட் ஆஃபீஸ், வங்கி, மின்சாரக் கட்டண வசூலிப்பாளர் , என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவேண்டாம். இன்றைய சமூகம் புறையோடிப் போய் இருக்கிறது.

    ஒரு ஆடோவில் சென்று கொண்டிருந்தேன். இந்த லஞ்சப்பிரச்னை பேச்சு வாக்கில் வந்தது. அந்த ஆடோ டிரைவர்
    பி.ஏ. படித்தவராம். பாட்டி அம்மா !! இது இப்படித் தான் இருக்கும்... என்றார். ஏன் என்றேன்.
    அரசாங்கம் செய்யவேண்டியதை தனியார் செய்கிறார்கள். தனியார் செய்யவேண்டியதை அரசாங்கம் செய்கிறது. என்றார்.

    என்ன அது என்று ஆவலுடன் கேட்டேன்.

    கள், சாராயம் தயாரிப்பதை விற்பனை செய்வதை பொதுத்துறை நிறுவனம்அரசாங்கம் செய்கிறது. .
    கல்வித் துறையை பெரும்பாலும் தனியாருக்கு பெரும்பாலும் தாரை வார்த்துவிட்டார்கள்.

    மீ. பா.

    பதிலளிநீக்கு
  26. ராமலக்ஷ்மி, எங்கள் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை. போன் வாரம் முதல் நேற்றுதான் வந்து சரிசெய்தார்கள்.BSNL BROAD BOND தான். அடிக்கடி வேலை செய்ய மறுக்கிறது.

    ஒவ்வொரு முறையும் புகார் செய்தால் ஒருவாரம் ஆகி விடுகிறது. வந்தால் சரி செய்த உடன் பணமும் தரவேண்டி உள்ளது.


    பெங்களூரில் நன்றாக நடைபெறுவது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  27. மோகன் குமார் said...
    //Interesting invitaion.

    I have very bitter experience with BSNL. Our landline gets repaired every month and line man gets money every time. The BSNL mobile that we have does not have clarity at all in our place due to weak signal :((//

    வருத்தமே. மாற்றுக் கருத்துகளும் இது போல் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  28. தமிழ் உதயம் said...
    //நல்ல நிறுவனத்திற்கு மோசமான தொழிலாளர்களால் கெட்ட பெயர் தான். ஒருவரின் தவறான செயலால், "ஒட்டு மொத்த நிறுவனமும் அவ பெயர் சுமக்க நேரும்" என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.//

    உண்மை. முதலில் தாங்களும் பொதுஜனங்களில் ஒருவர் என்கிற எண்ணமும் வர வேண்டும். நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  29. kg gouthaman said...
    //பதிவில் நீங்கள் சொல்லியிருப்பது நூறு சதவிகிதம் சரியே. அதிலும் பெங்களுர் பி எஸ் என் எல் சேவை மிகவும் சரி. பெங்களூரில் போஸ்ட் ஆஃபீஸ் பக்கம் அதிகம் சென்றதில்லை. கோரமங்களா போஸ்ட் ஆஃபீஸ் ஓரிருமுறை சென்றதுண்டு. சேவை ஒன்றும் சுகமில்லை என்பதுதான் உண்மை.//

    ஆம், பெங்களூரைப் பொறுத்தவரை நான் விசாரித்ததில் இதே கருத்தையே பலரும் சொன்னார்கள். நீங்களும் சொல்லியிருப்பது மகிழ்ச்சி.

    //இந்தப் பதிவை, நேற்று மாலை வீட்டுக்கு வந்த சம்பந்திக்கு (அவர்களும் பி எஸ் என் எல் அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள்) படித்துக் காட்டினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.//

    இன்னும் மகிழ்ச்சி. புகார் பாடியே பழகி விட்ட நமக்கு ஒரு பொது நிறுவனத்தைப் பாராட்டும் வாய்ப்பு:)!

    பதிலளிநீக்கு
  30. விச்சு said...
    //உண்மைதான் எங்கள் ஊர் BSNLன் சேவையும் நன்றாக உள்ளது. போஸ்ட் ஆபிஸ் பற்றித்தெரியவில்லை. ஆனால் சிலரின் செய்கையால்தான் கெட்ட பெயர்.//

    அறிய மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. Ramani said...
    //...ஒரு சிலரின் சிறந்த சேவைகளைக் கொண்டுதானே
    மொத்த நிறுவனத்தையும் பாராட்டியும் பேசுகிறோம்
    என்வே ஒவ்வொரு ஊழியரும் இதை உணர்ந்து நடந்தால் நல்லது
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. அன்புடன் அருணா said...

    ***/...சரி செய்துவிட்டு, அழைத்து உறுதிப் படுத்தியும் கொள்கிறார்கள்/

    ஐய்யய்யோ ! இதென்ன கலாட்டா? எனக்கு மயக்கம் மயக்கமா வருது!/***

    நம்புங்க அருணா:)!

    பதிலளிநீக்கு
  33. மனோ சாமிநாதன் said...
    //பொதுவாய் உடனுக்குடன் புகார்களை சரி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் சரி செய்ய வ‌ருபவர்களுக்கு பணம் கொடுக்காமல் வேலை நடப்பதில்லை என்பது தான் உண்மை!!//

    இங்கு வேலை முடிந்ததும் நன்றி சொல்லும் முன்னரே திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். அடிப்படையில் இதற்கு இவர்கள் எச்சரிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப் பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. எல்லா ஊர்களிலும் மாற்றம் வர வேண்டும். கருத்துக்கு நன்றி மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  34. Rathnavel Natarajan said...
    //BSNL சேவையும், தபால் அலுவலகத்தின் சேவையும் அருமையாக இருக்கிறது. நல்ல மாற்றம்.//

    நல்லது. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  35. sury said...
    //பொது நிறுவனங்கள் 1970 முதல் 1990 வரை இருந்ததை விட இப்பொழுது பரவாயில்லை . //

    ஆம், கடந்த பத்து பனிரெண்டு ஆண்டுகளாக..

    //இப்பொழுதும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இது போன்ற அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ... .. பொது நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும்போலும். ////

    சுற்று வட்டத்திலிருக்கும் வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் மட்டுமே சேமிப்புக் கணக்கிற்கு குறைந்தபட்ச வைப்பு நிதி ரூ 500 என்பதால் இங்குதான் இப்பெண்ணுக்கு முதல் சேமிப்பை தொடங்கிக் கொடுத்திருந்தேன். படித்தவர்களுக்கே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இவருக்கு அங்கு தொடர்வதில் சிரமம் ஏற்படவேதான் அடுத்த சேமிப்புக்குத் தபால் அலுவலகத்தைக் கைகாட்டினேன். அவமதிப்புகள், சங்கடங்கள் அங்கும் தொடருகின்றன.

    தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீராம். said...
    //சில நேரங்களில், சில இடங்களில், சில அலுவலகங்களில், சில மனிதர்கள், சில அனுபவங்கள்.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  37. VADAKKU VAASAL said...
    //இப்போதெல்லாம் அரசு, தனியார் என்ற பேதமே இல்லாது ஒருவகையான அபேத ரீதியில் விஷயங்கள் செல்கின்றன. ........நம்மைப் போன்ற வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். நாளாக நாளாக நிலைமை இன்னும் மோசமாகத் தான் போகும் என்று தோன்றுகிறது.//

    தனியார் ஓரளவு பரவாயில்லை என நினைத்திருந்தேன். உங்கள் அனுபவம் இல்லை என்கிறது. பெருகி வரும் போட்டிகளுக்காகவாவது மாறினால்தான் உண்டு போலும் :(! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  38. கீதா சாம்பசிவம் said...
    //பிஎஸ் என் எல்லுடன் ஆன எனது அனுபவங்களும் மிகவும் நன்றாகவே இருந்தது; இருக்கிறது. அதே சமயம் தபால் அலுவலகத்தோடு கசப்பான அனுபவங்கள் நிறையவே. :(((((//

    சென்னை BSNL குறித்தே மாறுபட்ட கருத்துகள். என் அனுபவமே தங்களுக்கும் எனத் தெரிகிறது. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  39. Lakshmi said...
    //நானும் பி எஸ் என் எல் லாண்ட் லைன்தான் மாசாமாசம் தகராருதான் லைன்மேனுக்கு காசு கொடுக்காம வேலையே ஆகாது.//

    லைன்மேன் குறித்து பலரும் இதே கருத்தை சொல்லியுள்ளார்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  40. வருண் said...
    //கிழித்து எறிவதெல்லாம் சட்டப்படிக் குற்றம்ங்க. //

    அதுதான் எனக்கும் வருத்தம். பாமர மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லையென்ற திமிரான செயலாகவே தோன்றியது. சில்லறை கொடுக்கும் கடமையும் உள்ளது. பொதுவாக இங்கே மேலிடமும் இதே மனப்போக்கில் இருப்பதால் எவருக்கும் தம் நடத்தை குறித்த குற்ற உணர்வே இருப்பதாகத் தெரியவில்லை.

    கருத்துக்கு நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  41. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //நல்லதொரு அலசல் பதிவு.
    பாராட்டுக்கள்.

    வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

    நன்றி vgk சார்.

    பதிலளிநீக்கு
  42. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்ஷ்மி - உண்மை - பி எஸ் என் எல் - சேவை பாராட்டத்தக்கது - எனது அனுபவத்தில் கடந்த ஆறாண்டுகளாக - சேவை அருமை. உடனுக்குடன் இணையத் தொடர்பான பிரசனைகளைத் மகிழ்வுடன் சரி செய்து கொடுக்கும் அவர்களின் சேவை மனப்பான்மை தொடரட்டும். //

    அறிய வருவதில் மகிழ்ச்சி. பில் கணக்கை ஒருமுறை அவர்கள் அலுவலகம் போய் கேட்டறிந்திடலாமே. நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு
  43. தருமி said...
    //நாங்களும் அந்தக் காலத்திலேயே (2005) பி எஸ் என் எல் பத்தி நல்லா சொல்லிருக்கோம்ல .. பாருங்க ... //

    வாசித்தேன். ப்ராட் பேண்ட் கிடைத்த போது எல்லோருக்குமே ஒரு பரபரப்புதான்:).

    //அப்போது வந்த பின்னூட்டங்கள் மாதிரியெல்லாம் இப்போ வர்ரது இல்லியோன்னு தோணுச்சு ..ம்ம்.. .ம்.. அதெல்லாம் அந்தக் காலம்!!!//

    அந்த பொற்காலத்தின் பிற்பாகத்தில் வந்து இணைந்தேன் என்பதில் மகிழ்ச்சியும், முடிந்து போனதில் சற்று ஆதங்கமும் உண்டு எனக்கும். பெரும்பாலோனோர் ஜாகையை FB, Buzz-யை தொடர்ந்து Plus, twitter என மாற்றிக் கொண்டு விட்டதுடன், “இன்னுமா blog-ல் எழுதிக்கிட்டிருக்கீங்க” என பரிதாபப்படுகிறார்கள் நம் போன்றவரைப் பார்த்து:). ஆனால் நம் எண்ணங்களை ஓரிடமாகச் சேமிக்க (கூகுள் மனசு வைக்கிற வரை) Blog-தான் சிறப்பு என்பது என் கருத்து. பின்னூட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடருவோம்:)!

    பதிலளிநீக்கு
  44. cheena (சீனா) said...
    //அண்ணே தரும் அண்ணே - துளசி கொடுத்த கொழுக்கட்டைக்கு நாட்டு மருந்தா - சரி சரி - தயா இப்ப என்ன பண்றாரு ....//

    முதலில் என்ன கொழுக்கட்டை, என்ன மருந்து என ஒன்றும் புரியவில்லை. இப்போது புரிந்து விட்டது:)!

    பதிலளிநீக்கு
  45. meenakshi said...
    //அவர்களுடைய வேலை பளுவின் காரணமாக இருக்கலாம். ஒரே வேலையைத் திருப்பி திருப்பிச் செய்வதால், அதையே நாள் முழுவதும் செய்வதால் அவர்களுடைய மனம் சோர்வடைகிறது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்ற வாதமும்இல்லாமல் இல்லை. //

    அதை வாடிக்கையாளர்களிடம் காட்டுவது தவறானது என்பது கடுமையாக உணர்த்தப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டாக வேண்டும்.

    //பி.எஸ்.என்.எல். , போஸ்ட் ஆஃபீஸ், வங்கி, மின்சாரக் கட்டண வசூலிப்பாளர் , என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவேண்டாம். இன்றைய சமூகம் புறையோடிப் போய் இருக்கிறது. //

    உண்மை. தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. அமைதிச்சாரல் said...
    //எங்கியுமே இப்படி ஒன்னு ரெண்டு பேர் செய்யற தப்புகளால மொத்த நிறுவனத்துக்கும் கெட்ட பேர்.. என்ன செய்யறது!!. இதனால உண்மைக்குமே சேவை செய்யறவங்க பேரும் சேர்ந்துல்ல கெடுது.//

    உண்மை. சில இடங்களில் ஒட்டுமொத்தமாக இப்படி அலட்சியப் போக்கில் இருப்பது அயர்ச்சியை அளிக்கிறது. நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  47. திருவாரூர் சரவணன் said...
    //......அடுத்த சில மாதங்கள்ல மின் வாரிய அலுவலகத்துல இணைய இணைப்பு மூலமா பில் போட ஆரம்பிச்சதும் அந்த ஆளை தவிர்த்து வேற கேஷியர்கிட்ட பணம் கட்டிட்டு வருவேன்.//

    இதைத்தான் செய்ய முடிகிறது. வாடிக்கையாளர்களிடம் நடக்கும் விதத்தை கண்காணிப்பு கேமரா வைத்துக் கவனித்து மேலிடம் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.

    // என்ன கொடுமை சரவணன் அப்படின்னு என்னை நானே கேள்வி கேட்டுக்க வேண்டியதுதான்.

    இதுக்கு முதல்ல ஒரு கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதணும்.//

    எழுதிப் போடுங்கள். உங்கள் பெயரே சரவணன் என்பதால் சொல்லிக் கொள்ள வசதியாயிற்று. நாங்கள் அவரவர் பெயரை போட்டுக் கொள்ளுகிறோம், அதுதான் வித்தியாசம்:).

    பதிலளிநீக்கு
  48. அம்பிகா said...
    //அருமையான பதிவு மட்டுமல்ல, பின்னூட்டங்களும்.
    வாழ்த்துக்கள்//

    வேலை பளுவுக்கு நடுவிலும் வாசித்து அளித்த கருத்துக்கு நன்றி அம்பிகா. நலம்தானே? விரைவில் மீண்டும் எழுத வாருங்கள்!

    பதிலளிநீக்கு
  49. கோவை2தில்லி said...
    //நல்லதொரு பகிர்வுங்க.

    நாங்கள் முன்பிருந்த வீட்டில் லாண்ட் லைன் வாரத்தில் இரண்டு நாள் வேலை செய்யாது. வந்து சரி பார்த்து சென்ற அடுத்த நாளே ரிப்பேர் ஆகி விடும். அதனாலேயே அங்கு சரண்டர் செய்து விட்டோம்...

    இப்போ இருக்கும் பகுதியில் அப்ளை செய்த அன்றே வந்து கனெக்‌ஷன் கொடுத்தார்கள். இண்டர்நெட்டும் அடுத்த நாளே ... நெட் கனெக்ட் ஆகாவிட்டால் போன் செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் போன் செய்து சரியாகி விட்டதா என்று இரு முறை கேட்கிறார்கள்....

    இரண்டு விதமான அனுபவங்கள்...//

    இதே நிறுவனத்துடன் 12 வருடங்களுக்கு முன்னர் எனக்கும் நேர்மாறான அனுபவங்களே இருந்தன ஆதி. இப்போது மாறி இருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்ததாலேயே பகிர்ந்து கொண்டேன், மற்ற நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக இருக்கட்டுமே என்றும். தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  50. கோமதி அரசு said...
    //ராமலக்ஷ்மி, எங்கள் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை. போன் வாரம் முதல் நேற்றுதான் வந்து சரிசெய்தார்கள்.BSNL BROAD BOND தான். அடிக்கடி வேலை செய்ய மறுக்கிறது.

    ஒவ்வொரு முறையும் புகார் செய்தால் ஒருவாரம் ஆகி விடுகிறது. வந்தால் சரி செய்த உடன் பணமும் தரவேண்டி உள்ளது.

    பெங்களூரில் நன்றாக நடைபெறுவது அறிந்து மகிழ்ச்சி.//

    வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு இடத்திலுள்ளவர் அனுபவங்களும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளன. நல்ல சேவை நாடெங்கிலும் ஒரே மாதிரியாகக் கிடைத்தாலே சிறப்பு. கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  51. பி.எஸ்.என்.எல் பற்றி பாராட்டியமைக்கு நன்றி. தங்களின் பாராட்டு எந்தப்பகுதி ஊழியர்களுக்கு உரியது என்பதை அறிவித்தால் மிகவும் நன்று. மற்றும் என்னுடைய வித்தியாசமான விளம்பரத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  52. பகிர்வுக்கு நன்றி, வரவேற்கப்படவேண்டிய பதிவு...சேவை தனியாரிடம் ஒப்படைத்தபின்னர் தான் சேவை மேலோங்கி இருப்பதாக என்னுடைய நண்பர்கள் தரப்பில் அளிக்கப்படும் தகவல்.

    சேவை இரண்டாவதாக இருக்கட்டும்,முதலில் மனிதனை மனிதனாக அரசு அலுவலகங்கள் மதிக்கட்டும்...இன்னும் தேசியமயமாக்கப்பட்ட அரசாங்க வங்கிகளில் மக்கள் படும் துன்பம் மிகவும் வேதனையை அளிக்கின்றது. நீ,வா போ என்ற ஒருமையில் அழைக்கும் பண்பு முதலில் மாறவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...ஏழையோ பணக்காரரோ,படித்தவரோ படிக்காதவரோ மனிதர்கள் மதிக்கப்படவேண்டும். மிதிக்கப்படவேண்டாம்

    நன்றி இராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  53. ராமலக்ஷ்மி நீங்க கூறியபடி இது ஒவ்வொருவரின் அனுபவத்தை சார்ந்தது.. பொதுவாக நீங்கள் கூறியபடியும் இருக்கிறார்கள் ரொம்ப மோசமாகவும் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களிலும் நடக்கிறது ஆனால் இந்த அளவிற்கு நடந்து கொள்ள முடியாது.

    நான் சென்னையில் இருந்த போது அப்போது BSNL மொபைல் வைத்து இருந்தேன் மாதாமாதம் BILL கட்டுவதற்குள் பெரும்பாடாகி விடும்.. பிறகு பொறுமை இழந்து Electronic Transfer முறையில் பதிவு செய்து விட்டேன். இதன் பிறகு எந்த தொல்லையும் வரவில்லை..அரசு அலுவலங்களுக்கு முடிந்த வரை போகாமல் இணையத்திலே அனைத்தையும் செய்யும் வசதி இருந்தால் இதையே பயன்படுத்துவது நல்லது.

    ஒரு வேலை முடிக்க பணம் கேட்பார்கள் அது தான் செம கடுப்பாக இருக்கும். உங்கள் பகுதியில் உள்ளவர்கள் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைக்கிறேன் :-)

    @சுப்புரத்தினம்

    சார் உங்க அனுபவம் படித்து மனது கனத்து விட்டது. உங்கள் வயதை கூட கருத்தில் கொள்ளாது இது போல பேசுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் சுளுக்கெடுக்கணும் சார்.

    இவருக்கும் இது போல நிலை வேறு வடிவில் வரும்.. என்ன.. இதை நம்மால் காண முடியாது.

    பதிலளிநீக்கு
  54. Vijayendran said...
    //பி.எஸ்.என்.எல் பற்றி பாராட்டியமைக்கு நன்றி. தங்களின் பாராட்டு எந்தப்பகுதி ஊழியர்களுக்கு உரியது என்பதை அறிவித்தால் மிகவும் நன்று. மற்றும் என்னுடைய வித்தியாசமான விளம்பரத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.//

    தாங்கள் வடிவமைத்த விளம்பரம் என அறிவதில் மகிழ்ச்சி. பெங்களூர் வடபகுதி ஊழியர்களுக்கானது. பரவலாக மற்ற பகுதிகளிலும் சேவை நன்றெனத் தெரிய வந்தது. சென்னை சேவை குறித்த சில நண்பர்களின் வருத்தங்களைக் களைய ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  55. Nithi Clicks said...
    //பகிர்வுக்கு நன்றி, வரவேற்கப்படவேண்டிய பதிவு...சேவை தனியாரிடம் ஒப்படைத்தபின்னர் தான் சேவை மேலோங்கி இருப்பதாக என்னுடைய நண்பர்கள் தரப்பில் அளிக்கப்படும் தகவல்.//

    உண்மைதான். தனியாரிடம் சென்றாலும் பிரச்சனை என வருகையில் நாம் அணுக வேண்டியிருப்பது இவர்களையே அல்லவா?

    //நீ,வா போ என்ற ஒருமையில் அழைக்கும் பண்பு முதலில் மாறவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...ஏழையோ பணக்காரரோ,படித்தவரோ படிக்காதவரோ மனிதர்கள் மதிக்கப்படவேண்டும். மிதிக்கப்படவேண்டாம்//

    சரியாகச் சொன்னீர்கள். மற்றவரை மதிக்கக் கற்றிட வேண்டும்.

    நன்றி நித்தி.

    பதிலளிநீக்கு
  56. கிரி said...
    //தனியார் நிறுவனங்களிலும் நடக்கிறது ஆனால் இந்த அளவிற்கு நடந்து கொள்ள முடியாது.//

    ஆம் உடனுக்குடன் மேலதிகாரியிடம் நாம் புகார் செய்யலாம். செய்ததும் உண்டு. பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ ஓரிருவர் எதிர்ப்பு தெரிவித்தால்தான் ஓரளவேனும் மதித்து நடக்கிறார்கள்.

    இப்போது அநேகம் பேர் இணையம் மூலமாகதான் கட்டணங்களை செலுத்துகிறார்கள்.

    //அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைக்கிறேன் :-)//

    எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் அப்படிதான் நினைக்கத் தோன்றுகிறது.

    //@சுப்புரத்தினம்

    சார் உங்க அனுபவம் படித்து மனது கனத்து விட்டது. உங்கள் வயதை கூட கருத்தில் கொள்ளாது இது போல பேசுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். //

    வயதுக்குக் கூட மரியாதை தராத கனிவு காட்டாத இரக்கமற்ற அரக்க குணம் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் உண்டு பண்ணுவதாக இருக்கின்றன:(! கடைசியாக நீங்கள் சொல்லியிருப்பதும் நிஜம்.

    பதிலளிநீக்கு
  57. //ஒரு நிறுவனம் செயல்படும்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.//

    பாராட்டு என்பது நன்றாக ஓடிக கொண்டிருக்கும் வண்டியை சர்விஸ் செய்வது போல்! அடிக்கடி இப்படி பாராட்டுக் கிடைத்தால், அந்த ஊழியர்கள் தொடர்ந்து சிறப்பான சேவையை அளிப்பார்கள்.

    மிக நல்ல பதிவு தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin