Monday, March 1, 2010

பூமேலே நேசம்'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே
புன்னகைத்தபடி இருப்பதுதான்.
இதுபுரியாதவர் என்னமனிதரோ?'

சிரித்துக்குலுங்கிய பவளமல்லிகளைப்
பார்த்ததும்கிடைத்த பரவசத்தை
அடுத்தநொடியே அலுப்பதில் தொலைத்தாலும்
கண்ணுங்கருத்துமாய்த் தன்தோட்டம்
பேணிவந்த கனகத்தின் கொள்கையிலே
தவறேதும் தெரியவில்லை.

அவர்நந்தவனத்தை அலங்கரித்து வந்தன
செவ்வரளி செம்பரத்தை சிவந்திசம்பங்கி
சிவப்பு மஞ்சள் ரோஜாக்கள்
மகிழம்பூ நந்தியாவட்டை
வண்ணவண்ண ஜினியாக்கள்.

இவற்றுக்குநடுவே புதிதாக உயர்ந்து
சுற்றுச்சுவரினை விடவும்வளர்ந்து
தெருவைஎட்டிப் பார்த்து
இதமாய்ச் சிரித்த
இருசூரியகாந்திகளைக் கண்டதும்
பூந்தோட்டக் காவல்காரம்மாவின்
கடுகடுப்பு மறந்தேதான் போனதுபாவம்
சிறுமி செண்பகத்துக்கு.

அச்சோலையைக் கடக்கும்போதெல்லாம்
கம்பிக்கதவுளின் ஊடாக
மெல்லிய ஏக்கப்பார்வையை படரவிட்டபடி
விடுவிடுவெனப் பயந்துநடப்பவளைத்
தயங்கித்தயங்கிக் கால்தேய்த்து
நிற்க வைத்தன
மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்.

ஆதவன் உதிக்கும் திசைநோக்கி
வந்தனம் பாடி அவைநிற்க
தன்னை எதிர்பார்த்தே
தவமிருப்பதாய் நினைத்து
தலையசைக்கும் தங்கமலர்களுக்குக்
கையசைத்துச் செல்லுவாள்
காலையிலே பள்ளிக்கு.

மணியடிக்கக் காத்திருந்து
மாலையில் திரும்புகையிலோ
மறையும் கதிரவனை
மறக்காமல் வழியனுப்பும் சூரியப்பூக்கள்
அவளைக்காணவே மேற்குத் திரும்பி
வட்டக்கருவிழி பூரிக்க
ஆவலாய்ப் பார்த்துநிற்பதாய்
எண்ணந்தனை வேறு
வளர்த்து விட்டிருந்தாள்!

உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை
அடைத்து வைக்கும் வித்தை
அறியாத பருவத்தினள்
கருணைகொள்வாள் கனகமெனக்
கனன்றெழுந்த கணநேரச்சிந்தனையில்
துணிந்துகை காட்டியேதான்விட்டாள்
ஒருமலரேனும் வேண்டுமென.

"செடியோடு அவையிருந்தால்
இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
உனக்காக நான்பறித்தால்
ஒரேநாளில் வாடிவிடும்"

மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
இந்தப்பக்கம்
வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.
***


படம்: இணையத்திலிருந்து..72 comments:

 1. மூடிக்கிடப்பது வாயிற்கதவுகள் மட்டுமா. தோட்டக்காரம்மாவின் மனசும்

  ReplyDelete
 2. Good imagination! But the end is... :( give her a chance next time.. :-)

  ReplyDelete
 3. சின்ன அம்மிணி said...

  //மூடிக்கிடப்பது வாயிற்கதவுகள் மட்டுமா. தோட்டக்காரம்மாவின் மனசும்//

  கொள்கையின் மீதான பிடிப்பை விடவே விடாதிருப்பார் சிலர் அல்லது
  தத்தமது செளகரியங்களுக்காக மட்டும் தாராளமாய் தளர்த்திக் கொள்வார்.

  வருகைக்கும் கருத்துக்கு நன்றி அம்மிணி.

  ReplyDelete
 4. தமிழ் பிரியன் said...

  //Good imagination! But the end is... :( give her a chance next time.. :-)//

  நன்றி தமிழ் பிரியன். கொடுத்திடலாம் வாய்ப்பு உங்கள் விருப்பம் போலவே அடுத்தமுறை!

  ReplyDelete
 5. அருமையான கவிதை ராமலட்சுமி மேடம்.

  ReplyDelete
 6. //மூடிக்கிடப்பது வாயிற்கதவுகள் மட்டுமா. தோட்டக்காரம்மாவின் மனசும்//

  காவல் காத்து கண்ணும் கருத்துமாய் பார்த்து பார்த்து ரசித்து வளர்த்திட்ட பூக்களை ஏனோ பிரித்துவிட மனம் வரமறுக்கும் தோட்டக்காரம்மாக்களும் உண்டிங்கே :)


  பட் டோட்டலி கவிதை அழகு - பூக்களோடு

  ReplyDelete
 7. "செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்//

  சிறப்பான சொல் கோர்ப்பு...

  கவிதை பூச்சரம்...

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. "செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"

  மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
  இந்தப்பக்கம்
  வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.


  ........ அருமையான கவிதை முத்துச்சரம்.

  ReplyDelete
 9. //மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
  இந்தப்பக்கம்
  வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.//

  செண்பகம் மட்டுமில்ல அக்கா.. நானும்தான்..

  குட்டிப் பொண்ணு கைல மட்டும் கிடைச்சிருந்தா சூரியகாந்தி இன்னும் அழகா ஆயிருக்கும்.

  அருமையா இருக்கு அக்கா.

  ReplyDelete
 10. /*செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"

  மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
  இந்தப்பக்கம்
  வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.
  */
  ஒரு கோணத்தில் சிறுமிக்கு கொடுத்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது... ஒரு கோணத்தில் , இந்த கோணமும் சிறுமி அறிய வேண்டும் என்று தோன்றுகிறது. அவரவர் எண்ண ஓட்டத்தை தூண்டுவதாக உள்ளது கவிதையின் முடிவு. அருமை.

  ReplyDelete
 11. எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கும் செம்பருத்திச் செடி புதர் போல் பரவி இருந்ததால் பாம்புகள் தொல்லை அதிகமாகி விட்டது. அதற்காக செடியை கழித்து விட வேண்டும் என்று சொன்னதற்கே என் அம்மா சம்மதிக்கவில்லை. பதினைந்து வருஷம் குழந்தை மாதிரி வளர்த்ததை கை காலை உடைச்சுப்போட சொல்றியா என்று என்கிட்டே சண்டைக்கு வந்துட்டாங்க. கம்பிக்கு பின்னால வாடிப்போன செண்பகம் என்ற வரிகளை படித்ததும் எனக்கு என் அம்மாவின் முகம்தான் நினைவுக்கு வந்தது.

  ******
  செம்பருத்தி செடியின் இலைகள் தலை முடிக்கு நல்லது என்பதால் ஒரு சிறுமி செடியை மொட்டை அடித்து விடுவாள். அதக் கண்டுபிடித்த ஆசிரியர், அவளுக்கு தண்டனை கொடுப்பார்.என்ன தண்டனை தெரியுமா?

  பள்ளிக்கூடத்தில் சில பூச்செடிகளை வைத்து தினமும் நீரூற்றி பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்த மாணவிக்கு தண்டனை.

  ஆனால் மலர்களை பறித்து வழிபாட்டுக்கும், திங்கள் கிழமைதோறும் தேசியக்கொடி ஏற்றும்போது அதில் வைத்துக் கட்டுவதற்கும் பூ பறித்து தருவது அவள் கடமை என்று ஆசிரியர் தெரிவித்து விடுவார்.இப்போது யாராவது செடியின் இலையை பறிக்க வந்தால் அந்த மாணவியே எதிர்ப்பதாககதையின் போக்கு இருக்கும்.

  இந்த விஷயத்தை மையமாக வைத்து நான் புனைப்பெயரில் எழுதிய கதை ஒரு நாளிதழில் பரிசு பெற்றது.

  பூக்களுக்கு வன்முறையை தவிர்க்கும் குணம் உண்டு என்பதை வைத்து நான் எழுதிய கதை.

  இப்படி பல விஷயத்தை எனக்கு நினைவூட்டிய கதை.

  ReplyDelete
 12. பூக்கள் செடியில் அசைவது தான் அழகு என்பேன் நானும்.
  கவிதையும், படமும் கொள்ளை அழகு.

  ReplyDelete
 13. எங்கம்மா அப்டித்தான்... கனகாம்பரம் பூ நெறய பூத்திருந்தாலும் யாருக்கும் அவ்வளவு சீக்கிரமா தரமாட்டாங்க...ஒண்ணு ரெண்டு நாள் அந்த செடியிலேயே பார்த்து ரசிச்சிட்டு பெறவுதான் எதாயிருந்தாலும்...

  கவிதையை படிச்சவுடனே எனக்கு எங்கம்மா ஞாபகம்தான் வந்தது...

  கவிதை பூவாய்...

  ReplyDelete
 14. அருமையான கவிதை. பறிக்க விரும்புவது ஒரு பருவமெனில் பூக்களை பறிக்க விரும்பாமலிருப்பது ஒரு பருவம்! :-)

  ReplyDelete
 15. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //அருமையான கவிதை ராமலட்சுமி மேடம்./

  நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 16. T.V.ராதாகிருஷ்ணன் said...

  //நல்லா இருக்கு//

  நன்றி T.V.R sir!

  ReplyDelete
 17. ஆயில்யன் said...

  ***/ //மூடிக்கிடப்பது வாயிற்கதவுகள் மட்டுமா. தோட்டக்காரம்மாவின் மனசும்//

  காவல் காத்து கண்ணும் கருத்துமாய் பார்த்து பார்த்து ரசித்து வளர்த்திட்ட பூக்களை ஏனோ பிரித்துவிட மனம் வரமறுக்கும் தோட்டக்காரம்மாக்களும் உண்டிங்கே :)/***

  அவங்களையும் குத்தஞ்சொல்ல முடியாதுன்னும் சொல்லிட்டேன்:)!

  ***/பட் டோட்டலி கவிதை அழகு - பூக்களோடு/***

  நன்றி ஆயில்யன்!

  ReplyDelete
 18. சி. கருணாகரசு said...

  // "செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்//

  சிறப்பான சொல் கோர்ப்பு...

  கவிதை பூச்சரம்...

  பாராட்டுக்கள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கருணாகரசு.

  ReplyDelete
 19. Chitra said...

  //"செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"

  மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
  இந்தப்பக்கம்
  வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.


  ........ அருமையான கவிதை முத்துச்சரம்.//

  ரசித்தமைக்கு நன்றி சித்ரா!

  ReplyDelete
 20. susi said...

  //செண்பகம் மட்டுமில்ல அக்கா.. நானும்தான்..

  குட்டிப் பொண்ணு கைல மட்டும் கிடைச்சிருந்தா சூரியகாந்தி இன்னும் அழகா ஆயிருக்கும்.//

  இருக்கும்தான். ஆனால் அவரவர் கொள்கை அவரவருக்கு என்றாகி விட்டதே சுசி. உங்கள் ஆசைக்கு இதோ நான் தருகிறேன் கொத்தாக சூரியப் பூக்களை:)!

  //அருமையா இருக்கு அக்கா.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 21. நல்லா இருக்குங்க.

  //வண்ணவண்ண ஜினியாக்கள்.
  //;)

  ReplyDelete
 22. சென்ற மாதம் நாங்கள் ஒரு கல்யாணத்திற்காக உசிலம்பட்டி வழியாக கம்பம் செல்கையில் நிறைய சூரியகாந்தி தோட்டங்கள் பார்த்தோம். பேத்தி ஷிவானி, 'தாத்தா எனக்கு ஒரு சன்ஃப்ளவர் வேண்டும்' என்றாள். இறங்கி பார்த்தால் சாலையை விட்டு இறங்க முடியாத விதமாக முள் செடிகள் வெட்டிப் போட்டிருந்தார்கள். சைக்கிளில் வந்தவரிடம் ஒரு பூ பறித்து தாங்களேன் என்றோம். 'முடியாதுங்க, தோட்டக்காரன் பார்த்தால் அடிக்க வருவான்' என்றார். எங்கள் செண்பகத்திற்கு ஒரே ஏமாற்றம். அங்கு கனகம் இருந்திருந்தால் தந்திருப்பாள்.

  ReplyDelete
 23. செடியிலேயே இருந்தாலும் அழகு; சிறுமியின் தலையில் இருந்தாலோ கொள்ளையடிக்கும் இரட்டை அழகு காணலாமே!! பூவும், அதனைச் சூடியதால் வரும் கூடுதல் அழகுடன் அந்தச் சிறுமியும்!!

  ReplyDelete
 24. I love your கவிதை "பூமேலே நேசம்" as I love flowers!

  பூக்களின் மனம்சூழ இக்க‌விதையை படித்துமுடித்தேன், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. "மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்."
  கவிதை அழகு.

  ReplyDelete
 26. //'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே
  புன்னகைத்தபடி இருப்பதுதான்.
  இதுபுரியாதவர் என்னமனிதரோ?'//

  அருமை!!.. அருமை ராமலஷ்மி மேடம்.

  பூக்களுக்காக செடி வளர்த்தாலும்,பூத்து நிற்கும்போது அதைப்பறிக்க மனசு வர மாட்டேங்கிறது.

  செடியில் பார்த்த ரசனை, கைகளிலும் வைத்துப்பார்க்க தூண்டுகிறது சிறுமியை.

  அவரவர் நிலையில், அவரவர் சரியே.. இல்லையா!!!

  ReplyDelete
 27. "பூமேல நேசம்,ஊரெல்லாம் பேசும்"

  ReplyDelete
 28. அழகாய் பூத்திருக்கு கவிப்பூ. அருமை மேடம்.

  ReplyDelete
 29. உங்க தலைப்பும், பூ படமுமே போதும்..:)

  ReplyDelete
 30. அழகு....அழகு...கவிதை...

  வாடிப்போனது எங்கள் மனசும்தான்..

  ReplyDelete
 31. //"செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"//

  உண்மைதான்

  ReplyDelete
 32. //மணியடிக்கக் காத்திருந்து
  மாலையில் திரும்புகையிலோ
  மறையும் கதிரவனை
  மறக்காமல் வழியனுப்பும் சூரியப்பூக்கள்
  அவளைக்காணவே மேற்குத் திரும்பி
  வட்டக்கருவிழி பூரிக்க
  ஆவலாய்ப் பார்த்துநிற்பதாய்
  எண்ணந்தனை வேறு
  வளர்த்து விட்டிருந்தாள்!

  உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை
  அடைத்து வைக்கும் வித்தை
  அறியாத பருவத்தினள்//

  நல்ல கற்பனை வளம் மேடம்
  விஷயம் கனமா இருந்தாலும்
  கவிதை அழகான வடிவம்...

  ராமலக்ஷ்மி B.E (Poem Engineer)

  :))

  ReplyDelete
 33. //"செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"//

  உங்கள் பூவுக்கான நேசம் அருமை ராமலெக்ஷ்மி

  ReplyDelete
 34. நல்லாயிருக்குங்க......

  ReplyDelete
 35. இளமை விகடனில் படித்தேன்...நன்றாக இருந்தது...

  ReplyDelete
 36. செண்பகத்தை மயக்கியது சூரியகாந்தி பூ.
  என்னை மயக்கியது ராமலக்ஷ்மி கவிதை.

  செண்பகத்திற்கு பூ மேலே நேசம்.
  கனகத்திற்கோ தோட்டத்தின் மேல் பாசம்.

  ReplyDelete
 37. //உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை
  அடைத்து வைக்கும் வித்தை
  அறியாத பருவத்தினள்//
   
  இந்த வரிகள் ரொம்ப அருமையா வந்திருக்கு.
   
  வாழ்த்துகள்!

  ReplyDelete
 38. அமுதா said...
  //ஒரு கோணத்தில் சிறுமிக்கு கொடுத்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது... ஒரு கோணத்தில் , இந்த கோணமும் சிறுமி அறிய வேண்டும் என்று தோன்றுகிறது. அவரவர் எண்ண ஓட்டத்தை தூண்டுவதாக உள்ளது கவிதையின் முடிவு. அருமை.//

  இல்லை என்பதையும் சிறுமி பழகத்தான் வேண்டுமெனும் உங்கள் கோணமும் சிறப்பு அமுதா. நன்றி.

  ReplyDelete
 39. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  //கம்பிக்கு பின்னால வாடிப்போன செண்பகம் என்ற வரிகளை படித்ததும் எனக்கு என் அம்மாவின் முகம்தான் நினைவுக்கு வந்தது.//

  தொடர்பான நினைவுகளையும், எழுதிய கதையினையும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சரவணன்!

  ReplyDelete
 40. அம்பிகா said...

  //பூக்கள் செடியில் அசைவது தான் அழகு என்பேன் நானும்.
  கவிதையும், படமும் கொள்ளை அழகு.//

  மறுக்க முடியாத உண்மையும் அதுவேதானே. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி அம்பிகா.

  ReplyDelete
 41. க.பாலாசி said...

  //எங்கம்மா அப்டித்தான்... கனகாம்பரம் பூ நெறய பூத்திருந்தாலும் யாருக்கும் அவ்வளவு சீக்கிரமா தரமாட்டாங்க...ஒண்ணு ரெண்டு நாள் அந்த செடியிலேயே பார்த்து ரசிச்சிட்டு பெறவுதான் எதாயிருந்தாலும்...//

  தவறில்லைங்க. ரசனையானவங்க. உங்கம்மா ரசிச்ச அந்தப் பூவின் பெயர்தான் கவிதையில் வரும் பெண்மணிக்கும்:)!

  //கவிதையை படிச்சவுடனே எனக்கு எங்கம்மா ஞாபகம்தான் வந்தது...

  கவிதை பூவாய்...//

  வருகைக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி பாலாசி!

  ReplyDelete
 42. சந்தனமுல்லை said...

  //அருமையான கவிதை. பறிக்க விரும்புவது ஒரு பருவமெனில் பூக்களை பறிக்க விரும்பாமலிருப்பது ஒரு பருவம்! :-)//

  சரியாகச் சொன்னீர்கள் முல்லை:)! கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 43. நர்சிம் said...

  //நல்லா இருக்குங்க.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நர்சிம்.

  **/ //வண்ணவண்ண ஜினியாக்கள்.
  //;)/**

  :))!

  ReplyDelete
 44. சகாதேவன் said...

  //பேத்தி ஷிவானி, 'தாத்தா எனக்கு ஒரு சன்ஃப்ளவர் வேண்டும்' என்றாள்.//

  //'முடியாதுங்க, தோட்டக்காரன் பார்த்தால் அடிக்க வருவான்' என்றார். எங்கள் செண்பகத்திற்கு ஒரே ஏமாற்றம்.//

  இந்தக் கவிதையே சம்பவங்களாய்!!

  //அங்கு கனகம் இருந்திருந்தால் தந்திருப்பாள்.//

  சுசிக்கு இங்கே தந்தது போலவே கொத்து தங்கமலர்கள் தருகிறேன், உங்கள் செல்ல செண்பகம் ஷிவானிக்கும்:)!

  ReplyDelete
 45. ஹுஸைனம்மா said...

  //செடியிலேயே இருந்தாலும் அழகு; சிறுமியின் தலையில் இருந்தாலோ கொள்ளையடிக்கும் இரட்டை அழகு காணலாமே!! பூவும், அதனைச் சூடியதால் வரும் கூடுதல் அழகுடன் அந்தச் சிறுமியும்!!//

  தலையில் வைக்கவோ தடவிப் பார்க்கவோ அறியாச் சிறுமி ஆசைப்பட்டு விட்டாள்.

  "செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"

  இந்த வரிகளும் உண்மையாய் இருக்க யாரை நோவது? நீங்களாய் இருந்தால் கொள்கையைத் தள்ளி வைத்து செண்பகத்தின் பூமனம் வாடாது பார்த்திருப்பீர்கள் என்பதில் மகிழ்ச்சி. செண்பகத்திடம் சொல்லுகிறேன்:)! நன்றி ஹூசைனம்மா!

  ReplyDelete
 46. Priya said...

  //I love your கவிதை "பூமேலே நேசம்" as I love flowers!//

  பூமேலே நீங்கள் கொண்டிருக்கும் நேசத்தை உங்கள் ப்ரொஃபைல் படமே சொல்கிறதே!

  //பூக்களின் மனம்சூழ இக்க‌விதையை படித்துமுடித்தேன், வாழ்த்துக்கள்!//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பிரியா!

  ReplyDelete
 47. மாதேவி said...

  // "மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்."
  கவிதை அழகு.//

  ரசித்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 48. அமைதிச்சாரல் said...
  //அருமை!!.. அருமை ராமலஷ்மி மேடம்.

  பூக்களுக்காக செடி வளர்த்தாலும்,பூத்து நிற்கும்போது அதைப்பறிக்க மனசு வர மாட்டேங்கிறது.

  செடியில் பார்த்த ரசனை, கைகளிலும் வைத்துப்பார்க்க தூண்டுகிறது சிறுமியை.

  அவரவர் நிலையில், அவரவர் சரியே.. இல்லையா!!!//

  அதேதான் அமைதிச்சாரல்:)! கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 49. ஜெரி ஈசானந்தா. said...

  //"பூமேல நேசம்,ஊரெல்லாம் பேசும்"//

  ஊரெல்லாம் பேசுகிறதோ இல்லையோ, ஒருவரியில் சொன்ன விதம் அழகு. ரசித்தேன். நன்றி சார்!

  ReplyDelete
 50. அக்பர் said...

  //அழகாய் பூத்திருக்கு கவிப்பூ. அருமை மேடம்.//

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அக்பர்!

  ReplyDelete
 51. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  //உங்க தலைப்பும், பூ படமுமே போதும்..:)//

  என்ன சொல்ல வர்றீங்க:))?

  நன்றி ஷங்கர்:)!

  ReplyDelete
 52. கண்ணகி said...

  //அழகு....அழகு...கவிதை...

  வாடிப்போனது எங்கள் மனசும்தான்..//

  உங்களுக்கும் பூ மனமேதான். ரசித்தமைக்கு நன்றி கண்ணகி.

  ReplyDelete
 53. நசரேயன் said...

  ***/ //"செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"//

  உண்மைதான்/***

  எப்படிங்க மறுக்க இயலும்?

  நன்றி நசரேயன்!

  ReplyDelete
 54. பிரியமுடன்...வசந்த் said...
  //நல்ல கற்பனை வளம் மேடம்
  விஷயம் கனமா இருந்தாலும்
  கவிதை அழகான வடிவம்...

  ராமலக்ஷ்மி B.E (Poem Engineer)

  :))//

  பாராட்டுக்கு நன்றி வசந்த். பட்டம்:))? நேற்று சித்ராவின் பதிவு வாசித்ததில் இருந்து எல்லோருக்கும் இது தொற்றிக் கொண்டதில்லையா:)?

  ReplyDelete
 55. thenammailakshmanan said...

  //உங்கள் பூவுக்கான நேசம் அருமை ராமலெக்ஷ்மி//

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தேனம்மை.

  ReplyDelete
 56. vidivelli said...

  //நல்லாயிருக்குங்க......//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விடிவெள்ளி.

  ReplyDelete
 57. புலவன் புலிகேசி said...

  //இளமை விகடனில் படித்தேன்...நன்றாக இருந்தது...//

  மிக்க நன்றி புலிகேசி.

  ReplyDelete
 58. கோமதி அரசு said...

  //செண்பகத்தை மயக்கியது சூரியகாந்தி பூ.
  என்னை மயக்கியது ராமலக்ஷ்மி கவிதை.//

  :)!

  //செண்பகத்திற்கு பூ மேலே நேசம்.
  கனகத்திற்கோ தோட்டத்தின் மேல் பாசம்.//

  அழகாய்ச் சொன்னீர்கள். பூவின்பெயர் கொண்ட இருவருக்கும் எப்படி அது இல்லாமல் போகும்?

  பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 59. "உழவன்" "Uzhavan" said...

  ***/ //உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை
  அடைத்து வைக்கும் வித்தை
  அறியாத பருவத்தினள்//

  இந்த வரிகள் ரொம்ப அருமையா வந்திருக்கு.

  வாழ்த்துகள்!/***

  தங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும், இளமை விகடனின் பகிர்ந்து கொண்ட கருத்துக்கும் சேர்த்து என் நன்றிகள் உழவன்!!!

  ReplyDelete
 60. மின்மடலில்..
  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'பூமேலே நேசம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st March 2010 11:42:02 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/194660

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷ் திரட்டியில் வாக்களித்த 24 பேர்களுக்கும், தமிழ் மணம் திரட்டியில் வாக்களித்த 14 பேர்களுக்கும் இங்கு என் நன்றிகள்!

  ReplyDelete
 61. கவிதையும் பூக்களும் அழகு அக்கா.

  எனக்கும் செடிகளிலிருந்து பூக்களைப்பிரிக்க மனமே வருவதில்லை.

  ஆனால்,பூ கிடைத்திருந்தால் செண்பகத்தின் முகமும்,
  சூரியகாந்தி மாதிரி மலர்ந்திருக்கும் இல்லையா...

  ReplyDelete
 62. சுந்தரா said...

  //கவிதையும் பூக்களும் அழகு அக்கா.//

  நன்றி சுந்தரா.

  //எனக்கும் செடிகளிலிருந்து பூக்களைப்பிரிக்க மனமே வருவதில்லை.//

  பலருக்கும்.

  //ஆனால்,பூ கிடைத்திருந்தால் செண்பகத்தின் முகமும்,
  சூரியகாந்தி மாதிரி மலர்ந்திருக்கும் இல்லையா...//

  நிச்சயமாய்.

  ReplyDelete
 63. இந்தப் பூவுக்காக வருந்துவதா...அந்தப் பூவுக்காக வருந்துவதா...
  பூவை பூ விரும்புவது இயற்கைதான் என்றாலும் அந்த அந்த பூ அந்த அந்த இடத்தில் இருப்பதே அழகு..

  ReplyDelete
 64. ரொம்ப அருமை,ராமலட்சுமி.

  ReplyDelete
 65. ***'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே
  புன்னகைத்தபடி இருப்பதுதான்.
  இதுபுரியாதவர் என்னமனிதரோ?'***

  பொதுவாக மனிதர்கள் தெரிந்தே செய்கிற (ஒரு கில்ட்டி ஃபீலிங்குடன்) தவறுகளில் இதுவும் ஒண்ணுனு நினைக்கிறேங்க.

  Human beings are highly selfish, self-centered and ignorant. They think God made everything for their benefit. They hardly care about any other living organism's feelings. If Godmade everything for humans, why does a turtle has a longer life than humans?

  பயந்திடாதீங்க!These are just my thoughts.

  அமெரிக்கன்ஸ்ட்ட இப்படியெல்லாம் பேசினால் என்னை வினோதமாப் பார்ப்பாங்க! நெஜம்மாவே அவங்களால இப்படியெல்லாம் யோசிக்க முடியாது. புத்தர், மஹாவீரர், காந்தி எல்லாம் நம்ம நாட்டிலேதானே உருவானாங்க. நம்மளால தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமோ என்னவோ :)

  ***செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"***

  இந்த ஒரு "பூக்கள்" விசயத்தில் பெண்கள்தான் ரொம்ப மோசமானவர் களாகிறார்கள்னு நினைக்கிறேன்.

  உன்னை சூடி முடித்தவளும் பெண் தானோ?

  பின்பு தூக்கி எறிந்தவளும் அவள் தானோ?

  னு கண்ணதாசன் "அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே" பாடலில் பெண்களை இஷ்டத்துக்குப் பழி வாங்கி இருப்பார்!

  *****************

  உங்க கவிதை மனிதர்களை நல்லா திட்ட வைக்குதுங்க, ராமலக்ஷ்மி! (என்னையும் சேர்த்துத்தான்)

  ReplyDelete
 66. //"செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"//

  அழகாயிருக்கு கவிதை. பூக்களும் :) வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 67. ஸ்ரீராம். said...

  //இந்தப் பூவுக்காக வருந்துவதா...அந்தப் பூவுக்காக வருந்துவதா...//

  இந்தக் கேள்வியை வாசிப்பவரிடமே விட்டு விட்டேன்!

  ஒவ்வொருவர் விடையும் அவரவர் பார்வையில்..

  //பூவை பூ விரும்புவது இயற்கைதான் என்றாலும் அந்த அந்த பூ அந்த அந்த இடத்தில் இருப்பதே அழகு..//

  அழகாய் சொல்லிவிட்டீர்கள், நன்றி ஸ்ரீராம்!

  ReplyDelete
 68. malarvizhi said...

  //ரொம்ப அருமை,ராமலட்சுமி.//

  மலரை பெயரில் கொண்ட உங்களுக்குப் பிடிக்காமல் போகுமா? மிகவும் நன்றி!

  ReplyDelete
 69. வருண் said...
  //பொதுவாக மனிதர்கள் தெரிந்தே செய்கிற (ஒரு கில்ட்டி ஃபீலிங்குடன்) தவறுகளில் இதுவும் ஒண்ணுனு நினைக்கிறேங்க.//

  ஆமாம் குற்ற உணர்வுடனே.

  /Human beings are highly selfish, self-centered and ignorant. They think God made everything for their benefit.//

  நான் கூட [இக்கவிதையில் வரும் அறியாச் சிறுமி போல இருக்கையில், ஆகையால் மன்னிக்கலாம்:)] பதினைந்து வயதில் என் முதல் கவிதையை இப்படித்தான் ஆரம்பித்திருந்தேன், கடவுளின் அத்தனை படைப்பும் நமக்கென. [அதைப் பெருமையா பதிவேற்றி கூட இருக்கிறேன். லிங்க் எல்லாம் தருவதாயில்லை:), முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்]. ஆனால் காலம் புரிய வைத்து விட்டது. அதுபோல செண்பகமும் புரிந்திடுவாள்.

  //உங்க கவிதை மனிதர்களை நல்லா திட்ட வைக்குதுங்க, ராமலக்ஷ்மி! (என்னையும் சேர்த்துத்தான்)//

  என்னையும் சேர்த்து திட்டலாம் ஆனால் மன்னித்தும் விடலாம் கேட்டுக் கொண்டது போல:)!

  உங்களின் இந்த வரிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.
  //They hardly care about any other living organism's feelings.//

  உங்கள் விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி வருண்!

  ReplyDelete
 70. கவிநயா said...

  ***/ //"செடியோடு அவையிருந்தால்
  இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
  உனக்காக நான்பறித்தால்
  ஒரேநாளில் வாடிவிடும்"//

  அழகாயிருக்கு கவிதை. பூக்களும் :) வாழ்த்துகள் ராமலக்ஷ்மி./***

  ரசித்தமைக்கு நன்றிகள் கவிநயா:)!

  ReplyDelete
 71. முத்துச்சரத்தில் ஒரு பூச்சரம் :))

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin