ஆடுன காலும், பாடுன வாயும், பிட் போட்டிக்குப் பதிவு போட்ட கையும் நிற்காதுல்ல. ‘பிட்’டுக்கான மாதாந்திரப் பதிவு இனியும் தொடரும், உங்களுக்கு நினைவூட்ட.. உற்சாகமளிக்க.. மாதிரிப் படங்களுடன். விளம்பரமென்றும் கொள்ளலாம். அதிலும் இம்மாதத் தலைப்புக்கும் விளம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே. தமிழில் வெளியான
‘திரைப்படத் தலைப்பு’களுக்குப் பொருத்தமான நிழற்படங்கள் என்பதே இம்மாதப் போட்டி. சுவாரஸ்யம் இல்லையா?
போட்டி அறிவிப்பு
இங்கே. போட்டி விதிமுறை
இங்கே.
அட்டகாசமாய், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் போட்டிப் படங்களின் அணிவகுப்பு
இங்கே.
இனி என்னுடைய தயாரிப்பிலான படங்கள். டிக்கெட் இலவசமே:)!
இவற்றில் புது ரிலீஸ் 7. மற்றன தலைப்புக்குப் பொருத்தமாய்.
1.அழகர்சாமியின் குதிரை

2.வசந்த மாளிகை

3.தொட்டால் பூ மலரும்

4.கோபுரங்கள் சாய்வதில்லை

மாமல்லபுர கடற்கரைக் கோவில்
நூற்றாண்டுகள் பல கடந்து
சிற்பக்கலைக்கு சிகரமாக
5.பயணங்கள் முடிவதில்லை
6.அலைகள் ஓய்வதில்லை

7.தூங்காதே தம்பி தூங்காதே

8.வானமே எல்லை

9.புதிய பாதை

10.வாழ்க்கைப் படகு

11.கண்ணாமூச்சி ஏனடா?

12.தீபம்

13.இரு மலர்கள்

14.தவமாய் தவமிருந்து

15.தண்ணீர் தண்ணீர்

16.இயற்கை

17.மாட்டுக்கார வேலன்

18.மன்னாதி மன்னன்

19.கலைஞன்
இசைவெள்ளம் நதியாக ஓடும்..20.மேல்நாட்டு மருமகள்

சொந்த இடம் விட்டு
வந்த மண் வாழ
வனிதை காட்டும் அக்கறை
கைவழி தொங்கும் துணிப்பையில்..
சொல்லுவோம் நாமும்
‘நோ டு ப்ளாஸ்டிக்’
21.தில்லானா மோகனாம்பாள்

22.ஜகன் மோகினி

23.பக்த மீரா

30-35 வருடங்களுக்கு முன்னால் திரைப்படங்களை ‘ஈஸ்ட்மென் கலர் சித்திரம்’ என்றே விளம்பரம் செய்து கவர்ந்திழுப்பார்கள். எங்கள் ஊரில் வெளியாகும் வண்ணப்படங்களுக்கு மத்தியில் அன்றைய பிரபல ‘பா’ வரிசை பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு போன்ற கருப்பு வெள்ளைப் பழைய படங்களும் குறிப்பிட்ட அரங்குகளில் வெளியாகி சக்கைப் போடு போடும். எத்தனை முறை பார்த்திருந்தாலும் இன்றைக்கும் ‘எதிர் நீச்சல், பாமாவிஜயம்’ போன்ற படங்கள் ஒளிபரப்பானால் நம்மை இழுத்து தொலைகாட்சி முன் அமர்த்திக் கொள்கின்றன.
இதோ அந்த வரிசையில் ஒரு படம்.
நான் எடுத்த படம் அன்று. ‘ஓட்டைப் பல் சிறுமி’யாக தோன்றிய படம்:)!
‘
அன்பு’ தலைப்புக்காக என் அப்பா எடுத்த.., நான் அண்ணனுடன் இருக்கும் பழையபடம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்பாவின் அதே யாஷிகா-D கேமராவால் அவரது தங்கை எங்களை எடுத்த படம் இது. அந்தப் பதிவிலேயே ‘தான் எடுத்த படத்தைப் பகிர்ந்திட வேளை வரவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். இம்மாதப் போட்டிக்கு என் தொகுப்பிலே இடம் பெறச் செய்த பின் அனுப்பி வைக்கலாமெனக் காத்திருக்கிறார்.
படம் ப்ரிண்ட் ஆகி வந்ததும் பூரித்துப் போன என் அப்பா, இதை வைத்துப் பிரத்தியேகமாக ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அந்த ஆண்டு உறவினர் அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். இன்றளவிலும் எங்கள் குடும்பத்தினர் மனதில் மறக்க முடியாத படமான இது உங்கள் பார்வைக்கும்..
பாசப் பறவைகள்

ஒரு குழந்தையை சிரிக்கிற மாதிரி படம் பிடிப்பதே சிரமம். நான்கு சிறார்களை எப்படி சிரிக்க வைத்தாராம்? அங்குதான் இருக்கிறது இதை எடுத்தவர் யார் என்ற ரகசியம்:)! தான் ‘ஒன்.. டு.. த்ரீ..’ சொன்னதும், தொடர்ந்து எங்களை ‘ஹா.. ஹா.. ஹா..’ என மூன்று முறை தொடர்ந்து ஒலிக்குமாறு சொல்லச் சொல்ல, நாங்களும் அவ்வாறே செய்ய அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். இப்போது புரிந்திருக்குமே யார் என்பது? நீங்கள் யாவரும் ‘ஹா ஹா ஹா’ என சிரித்து மகிழ
ஹாஸ்யரசம் படைத்து வரும்
கோமா அவர்களே!
பிட் போட்டிகளில் ஆர்வமாகப் பங்கு பெற்று,
பலமுறை முதல் மற்றும் இறுதிச் சுற்றுக்கள் வரை வென்று அசத்தி வருபவரின் திறமையை 37 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் காட்டிய படம்.
நீங்காத நினைவுச் சித்திரத்துக்கும், இங்கு பதிய விரும்பி அனுமதித்ததற்கும் அன்பு கலந்த நன்றி அவருக்கு:)!
இம்மாத நடுவராகப் புதிதாகப் பொறுப்பு எடுத்திருக்கும், MQN என நண்பர்களால் அன்புடன் விளிக்கப்படும், MQ Naufal பற்றியும் சில வார்த்தைகள் சொல்லிக் கொள்ள விருப்பம். அனைவராலும் அறியப்பட்டவர் எனினும் தவறவிடக் கூடாத அவரது தளத்தை இங்கு அறிமுகப் படுத்த ஆவல். வாழ்க்கையை ரசனையுடன் பார்ப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் அதிர்வுகளையும், மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளையும் தன் படங்களில் பதிவு செய்கின்றவர். அவசியம் தொடருங்கள்:
Naufal Photography.
இன்னும் ஏன் காத்திருக்கீங்க? உங்க படங்களை சீக்கிரமா அனுப்புங்க.
இந்த லிங்கில் பத்து பத்து ஆண்டாக ரிலீஸ் ஆன தமிழ்படங்களின் பெயர் பட்டியல் கூட இருக்கு. அதையும் பாருங்க. கவித்துவமா யோசியுங்க. பிட் மல்டிப்ளெக்ஸ் உங்கள் படங்களைத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறது:)! முடிவுத் தேதி ஜூன் பதினைந்து. இன்னும் நாலு நாள் இருக்கு. நடுவிலே இதோ ஒரு ஞாயிறும் இருக்கு.
***