அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது
பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றத்தான் செய்கிறது
கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது
பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,
புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.
ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***
படம்: இணையத்திலிருந்து..
16 ஜூன் 2011 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
மீண்டும் ஒரு முறை உங்கள் கவிதையில் என்னைப் பார்க்க முடிகிறது ராமலக்ஷ்மி....நன்று சொன்னீர்கள்
பதிலளிநீக்குவார்த்தைகளைக் கடந்த ஒரு உணர்வு வாக்கியமாய் வெளிப்பட்டிருக்கிறது உங்கள் கவிதையில்.. அருமை
பதிலளிநீக்குஅசத்தலான கவிதை ராமலஷ்மி..
பதிலளிநீக்குமனித மனதை அப்படியே கவிதையில் வடித்துள்ளீர்கள் ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குகவிதை அருமை akka
பதிலளிநீக்குகேள்வியும் கேட்டு பதிலும் தந்துவிட்டீர் அழகாக கவிதையில்.
பதிலளிநீக்குஅருமை. பலருக்கும் பொருந்தும்
பதிலளிநீக்கு//அதிகமாய் பேசுகிறேனோ
பதிலளிநீக்குஅடிக்கடி
சந்தேகம் வருகிறது//
//கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது//
இவைகள்,அதிகம் பேசுபவர்கள் மனதில் நிச்சயம் அடிக்கடி தோன்றும் என்பதை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.
கவிதை நன்று.
உண்மைதான் சில சமயம் நாம் நாமாய் இருக்கமுடிவதில்லைப்பா..:)
பதிலளிநீக்குநெல்லை பதிவர் சந்திப்புக்கு உங்களை எதிர்பார்த்தோம்..
பதிலளிநீக்குஃபோட்டோக்களில் 90 மார்க் என்றால் கவிதையில் 100 மார்க்
பேசுவதையும் இழந்துவிட்டால் நமக்கு என்று சொத்தென்று எதுவும் இல்லை அம்மா.
பதிலளிநீக்குமௌனம் காக்க நாம் முனிவர்கள் இல்லை.
நல் பேச்சு என்றும் வீண் போகாது.
அடடா நெல்லை சந்திப்பை மிஸ் பண்ணிட்டீங்களே.....!!!
பதிலளிநீக்குஉங்க கவிதை எப்பவுமே தனி சிறப்புதான் போங்க....!!!
பதிலளிநீக்குபேசாமல் இருப்பதே உசிதம்
பதிலளிநீக்குசமயத்தில்
தோன்றதான் செய்கிறது//
இந்த எண்ணம் எனக்குள் அடிக்கடி தோன்றும் ராமலக்ஷ்மி.
நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
அதிகமாய்ப் போனால் எல்லாமே கஷ்டம்தான். எல்லோரும் தான் பேசுவதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பதில் இருக்கும் முனைப்பு அடுத்தவரைக் 'கேட்பதில்' இல்லை...சிந்திக்க வைத்த கவிதை.
பதிலளிநீக்குஅருமையா சொல்லிட்டீங்க.
பதிலளிநீக்குநிறையவே பேசலாம், இந்த நல்ல கவிதை பற்றி!
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குபேசுகிறீர்களோ இல்லையோ,
சொல்லிக்கொண்டே இருங்கள்
இப்படியெல்லாம்.
அருமையான கவிதை
பதிலளிநீக்குதனித்துவமான கவிதை . கருத்தை அழகாகச் சொல்லிவிட்ட திறமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தோழி.
நல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
முன்பெல்லாம் அதிகம் பேசாமல் இருந்தேன்; அப்புறமாய்ப் பேச ஆரம்பித்தேன்; இப்போ மறுபடி ஜாஸ்தி பேசறதில்லை. பேசுவது ஒரு கலை; எல்லாருக்கும் வராது; சிலர் தான் அதில் வெற்றி அடைகின்றனர். பலருக்கும் அது கிடைப்பதில்லை. எனக்குப் பேசத் தெரியவில்லை என்பதே உண்மை. :)))))))))
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்கு||இதுகாலமும் பேசிய யாவும்
பதிலளிநீக்குஎனக்காகவே என்று.
||
ம்ம்ம்ம்ம்!
நிறையப் பேர் இப்டி இருக்காங்க.. சமயங்களில் நான் கூட :((((
பதிலளிநீக்கு//பேசுவது ஒரு கலை; எல்லாருக்கும் வராது;//
பதிலளிநீக்குஎனக்கும் வராது :)
நல்ல கவிதை.
கவிதை அருமை.
பதிலளிநீக்குநல்ல கவிதை... இந்த கவிதை எனக்கு மௌனத்தைப் பற்றி எழுத உந்துதலாக இருந்தது.
பதிலளிநீக்குபாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//மீண்டும் ஒரு முறை உங்கள் கவிதையில் என்னைப் பார்க்க முடிகிறது ராமலக்ஷ்மி....நன்று சொன்னீர்கள்//
நன்றி மலர்.
கவிதை காதலன் said...
பதிலளிநீக்கு//வார்த்தைகளைக் கடந்த ஒரு உணர்வு வாக்கியமாய் வெளிப்பட்டிருக்கிறது உங்கள் கவிதையில்.. அருமை//
மிக்க நன்றி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//அசத்தலான கவிதை ராமலஷ்மி..//
நன்றி சாரல்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//மனித மனதை அப்படியே கவிதையில் வடித்துள்ளீர்கள் ராமலக்ஷ்மி//
நன்றி ஸாதிகா.
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை akka//
நலமா ஆனந்த்:)? மிக்க நன்றி.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//கேள்வியும் கேட்டு பதிலும் தந்துவிட்டீர் அழகாக கவிதையில்.//
நன்றி தமிழ் உதயம்:)!
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//அருமை. பலருக்கும் பொருந்தும்//
உண்மைதான். நன்றி மோகன் குமார்.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//அதிகம் பேசுபவர்கள் மனதில் நிச்சயம் அடிக்கடி தோன்றும் என்பதை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.
கவிதை நன்று.//
கருத்துக்கு நன்றி அமைதி அப்பா.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//உண்மைதான் சில சமயம் நாம் நாமாய் இருக்கமுடிவதில்லைப்பா..:)//
ஆம் தேனம்மை:)! மிக்க நன்றி.
சி.பி.செந்தில்குமார் said...
பதிலளிநீக்கு//நெல்லை பதிவர் சந்திப்புக்கு உங்களை எதிர்பார்த்தோம்..
ஃபோட்டோக்களில் 90 மார்க் என்றால் கவிதையில் 100 மார்க்//
நன்றி செந்தில் குமார். வர இயலாது போயிற்று. சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//பேசுவதையும் இழந்துவிட்டால் நமக்கு என்று சொத்தென்று எதுவும் இல்லை அம்மா.
மௌனம் காக்க நாம் முனிவர்கள் இல்லை.
நல் பேச்சு என்றும் வீண் போகாது.//
நல்வாக்கின் படியே ஆகட்டும் வல்லிம்மா:)!
June 27, 2011 4:54 PM MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//அடடா நெல்லை சந்திப்பை மிஸ் பண்ணிட்டீங்களே.....!!!//
உங்கள் பதிவுகள் உட்பட பலரது பதிவுகள் வராத குறையைப் போக்கியது:)!
//உங்க கவிதை எப்பவுமே தனி சிறப்புதான் போங்க....!!!//
நன்றி மனோ:)!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு***/பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது//
இந்த எண்ணம் எனக்குள் அடிக்கடி தோன்றும் ராமலக்ஷ்மி.
நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்./***
மிக்க நன்றி கோமதிம்மா.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அதிகமாய்ப் போனால் எல்லாமே கஷ்டம்தான். எல்லோரும் தான் பேசுவதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பதில் இருக்கும் முனைப்பு அடுத்தவரைக் 'கேட்பதில்' இல்லை...சிந்திக்க வைத்த கவிதை.//
முற்றிலும் உண்மை. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//அருமையா சொல்லிட்டீங்க.//
மிக்க நன்றிங்க.
கே. பி. ஜனா... said...
பதிலளிநீக்கு//நிறையவே பேசலாம், இந்த நல்ல கவிதை பற்றி!//
மகிழ்ச்சியும் நன்றியும்.
இப்னு ஹம்துன் said...
பதிலளிநீக்கு//அருமை.
பேசுகிறீர்களோ இல்லையோ,
சொல்லிக்கொண்டே இருங்கள்
இப்படியெல்லாம்.//
நன்றி இப்னு:)!
VELU.G said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை//
மிக்க நன்றிங்க.
ஜெஸ்வந்தி - Jeswanthy said...
பதிலளிநீக்கு//தனித்துவமான கவிதை . கருத்தை அழகாகச் சொல்லிவிட்ட திறமை.
வாழ்த்துகள் தோழி.//
வாங்க ஜெஸ்வந்தி. மிக்க நன்றி.
Rathnavel said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க.
geethasmbsvm6 said...
பதிலளிநீக்கு//பேசுவது ஒரு கலை; எல்லாருக்கும் வராது; சிலர் தான் அதில் வெற்றி அடைகின்றனர். பலருக்கும் அது கிடைப்பதில்லை.//
அழகாய் சொல்லிவிட்டுள்ளீர்கள். நன்றி கீதாம்மா.
kathir said...
பதிலளிநீக்கு***/||இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.
||
ம்ம்ம்ம்ம்!/***
இல்லையா பின்னே:)? நன்றி கதிர்.
சுசி said...
பதிலளிநீக்கு//நிறையப் பேர் இப்டி இருக்காங்க.. சமயங்களில் நான் கூட :((((//
பொதுவாக ஏற்படக் கூடிய எண்ணமே சுசி. நன்றி.
கவிநயா said...
பதிலளிநீக்கு***//பேசுவது ஒரு கலை; எல்லாருக்கும் வராது;//
எனக்கும் வராது :)
நல்ல கவிதை.//***
நன்றி கவிநயா:)!
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை.//
நன்றி மேடம்.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை... இந்த கவிதை எனக்கு மௌனத்தைப் பற்றி எழுத உந்துதலாக இருந்தது.//
மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன். வாசிக்கக் காத்திருக்கிறேன்:)!