கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஊட்டியை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகளைக் குஷிப்படுத்த எப்போதும் போலவே, இவ்வருடமும் மே இருபதாம் தேதி முதல் மலர்கண்காட்சி நடைபெற்றது.'ஊட்டியில்' கோடையில் என்றால் 'பெங்களூரில்' வருடந்தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களையொட்டி பத்து நாட்கள் போல லால்பாக் தோட்டத்தில் நடக்கும் மலர் கண்காட்சிகள் உலகப் பிரசித்தமானவை.
கோடையில் கண்காட்சி ஊட்டியில் என்பது, பெங்களூரில் நடந்ததாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. ஆகவே கோடையிலன்றி லால்பாக் கண்காட்சியை ரசிக்க ஜனவரி அல்லது ஆகஸ்டில் பெங்களூர் வர வேண்டும். இன்னும் சில தகவல்கள் சற்றே விரிவாக:
டொர்னட்டோவில் வசிக்கும் வயதான பெரியவர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு வருடமும் தவறாமல் மலர்கண்காட்சியைக் காண இந்தியா வருவதாகக் குறிப்பிட்டிருந்தது சுவாரஸ்யம். ஆம், இப்படியான ஆசையுடன் எத்தனை பெரியவர்கள்?
நாங்கள் காரை பார்க் செய்யும் போது இளைஞர் ஒருவர் தன் காரில் இருந்து மடக்கு சக்கர நாற்காலியை இறக்கிக் கொண்டிருந்தார். மைதானத்தினுள் ஆறேழு நாற்காலிகளைப் பார்க்க முடிந்தது. 460 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாயிற்றே லால்பாக். அப்பெரிய தோட்டத்தில்.., அலைமோதும் கூட்டத்தில்.. வீட்டுப்பெரியவர்களை நடக்க வைக்க வேண்டாமென நாற்காலிகளில் வைத்துத் தள்ளியபடி அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்.
“அழகாய்ப் பூத்திருக்கு” தலைப்பிற்கு ஏற்ப பூக்களின் வண்ணங்கள் வனப்பாய் தெரியுமாறு படங்களை வெளியிட்டிருக்கும் இவள் புதியவளுக்கு நன்றி:)!
பத்திரிகையில் வந்த படங்களை பெரிய அளவில் மறுபடியும் இங்கே கண்டு களியுங்கள்:
1. குதும்ப்மினார்
2. பெங்களூரின் அந்நாளையத் தொடக்கமான கெம்பகெளடா மண்டபமும். பின்னால் இந்நாளையத் தொடக்கமான மெட்ரோவும்
3. அன்னை காவேரி
4. டிமோத்தி, கற்றாழை வகை கள்ளிச்செடி:
5. அன்தூரியம் செடிகளின் அணிவகுப்பு
செந்நாரை மலர்
‘சிகப்பு’ தலைப்புக்காக PiT போட்டிப் பதிவொன்றில் இம்மலரின் க்ளோஸ் அப் ஷாட்டை பகிர்ந்து கொண்டிருந்தேன். பல பேரின் கவனத்தை ஈர்த்தது. ‘இதன் பெயர் என்ன’ என என் flickr தளத்திலும் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். பின்னரே இணையத்தில் தேடி அறிந்தேன். Anthurium எனப்படும் இம்மலர் பெரும்பாலும் குளிர் பிரதேசங்களிலேயே செழித்து வளருகிறது. அந்த வண்ணத்தினால் Flamingo(செந்நாரை) Flower என்றும் அழைக்கப்படுகிறது.
6. உயர்ந்த தூணில் மெகா மலர் பந்து
பார்க்கப் பார்க்க ஆசை வருகிறதா:)?
பத்திரிகை கட்டுரையின் கடைசி பத்தியை மீண்டும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்: “வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று மலர் கண்காட்சி” :)!
*****

nice pics..
பதிலளிநீக்குகண்கொள்ளாக்காட்சி தான். அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்குBeautiful pictures Ramaluxmi. Thanks for sharing.
பதிலளிநீக்குஅன்பின் ராமலக்ஷ்மி - அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும், கண்களைக் கவரும், வண்ண வண்ண மலர்கள் அணிவகுத்து இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்கிறது. நிச்சயம் காண வேண்டும். எங்கு முடிகிறது. ஏதேனும் ஒரு வேலை வந்து கொண்டே இருக்கிறது. ( பணி நிறைவு செய்து விட்டு இல்லத்தில் தான் இருக்கிறேன். ) ம்ம்ம்ம் - பார்க்கலாம். பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா
பதிலளிநீக்குnice clicks.
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.நானும் இவள் புதியவளில் பார்த்தேன்.
பதிலளிநீக்குNice Pictures..!!
பதிலளிநீக்குகண்டிப்பா பார்க்க வருவோம், படங்கள் பிரமாத கலக்கல்....!!
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மிகவும் கண்ணுக்கு விருந்தாய் இருக்குங்க.
பதிலளிநீக்குஅருமை சகோதரி...இவள் புதியவள் திருப்பூரில் இல்லையே! இது என்ன பெங்களூரில் மட்டும் வருகிறதா?அந்தோரியம் மலரின் பெயர் புதிதாக தெரிந்து கொண்டேன்.. நன்றி..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநாளைக்கே இவள் புதியவள் இல்லம் வருவாள்
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அருமை... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎவ்வளவு அழகு.ஐரோப்பியர்கள் பார்த்தான் அங்கேயே இடம் பிடித்துப் படுத்துக்கொள்வார்கள்.அதோடு ஒற்றைப்பூவுக்கு இங்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் !
பதிலளிநீக்குசமுத்ரா said...
பதிலளிநீக்கு//nice pics..//
நன்றி சமுத்ரா, தங்கள் முதல் வருகைக்கும்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//கண்கொள்ளாக்காட்சி தான். அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். மிக்க நன்றி.//
மிக்க நன்றி vgk.
ஜெஸ்வந்தி - Jeswanthy said...
பதிலளிநீக்கு//Beautiful pictures Ramaluxmi. Thanks for sharing.//
மகிழ்ச்சி ஜெஸ்வந்தி:)! நன்றி.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலக்ஷ்மி - அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும், கண்களைக் கவரும், வண்ண வண்ண மலர்கள் அணிவகுத்து இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்கிறது. நிச்சயம் காண வேண்டும். எங்கு முடிகிறது. ஏதேனும் ஒரு வேலை வந்து கொண்டே இருக்கிறது. ( பணி நிறைவு செய்து விட்டு இல்லத்தில் தான் இருக்கிறேன். ) ம்ம்ம்ம் - பார்க்கலாம். பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா//
அவசியம் முயன்றிடுங்கள். மிக்க நன்றி சீனா சார்.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//nice clicks.//
நன்றி டி வி ஆர் சார்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அருமையான படங்கள்.நானும் இவள் புதியவளில் பார்த்தேன்.//
நன்றி ஸாதிகா:)!
வெங்கட் said...
பதிலளிநீக்கு//Nice Pictures..!!//
நன்றி வெங்கட், தங்கள் முதல் வருகைக்கும்.
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//கண்டிப்பா பார்க்க வருவோம், படங்கள் பிரமாத கலக்கல்....!!//
நல்லது, நன்றி மனோ:)!
சி.கருணாகரசு said...
பதிலளிநீக்கு//படங்கள் அனைத்தும் மிகவும் கண்ணுக்கு விருந்தாய் இருக்குங்க.//
மிக்க நன்றி கருணாகரசு.
ESWARAN.A said...
பதிலளிநீக்கு//அருமை சகோதரி...இவள் புதியவள் திருப்பூரில் இல்லையே! இது என்ன பெங்களூரில் மட்டும் வருகிறதா?//
பெங்களூரில்தான் இன்னும் கிடைக்க ஆரம்பிக்கவில்லை. பத்திரிகையிலிருந்து இதழை அனுப்பியிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைப்பதாகவே அறிய வந்தேன். கடைகளில் கேட்டுப் பாருங்களேன்.
//அந்தோரியம் மலரின் பெயர் புதிதாக தெரிந்து கொண்டேன்.. நன்றி..//
மகிழ்ச்சியும் நன்றியும்:)!
goma said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி:)!
//நாளைக்கே இவள் புதியவள் இல்லம் வருவாள்//
வரவேற்றிடுங்கள்:)! பல பயனுள்ள தகவல்களைத் தருகிறாள்.
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//புகைப்படங்கள் அருமை... வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சரவணன்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//எவ்வளவு அழகு.ஐரோப்பியர்கள் பார்த்தான் அங்கேயே இடம் பிடித்துப் படுத்துக்கொள்வார்கள்.அதோடு ஒற்றைப்பூவுக்கு இங்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் !//
உண்மைதான் ஹேமா:)! இது போன்ற மலர் அலங்காரங்களுக்கு(விழாக்கள் உட்பட) மலர்கள் வளர்ப்பதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நன்றி.
வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
“வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று மலர் கண்காட்சி”
பதிலளிநீக்குலால் பாக் பார்த்திருக்கிறேன். மலர் கண்காட்சி பார்த்ததில்லை.
பார்க்கலாம்
சகாதேவன்
குளு குளு பெங்களூரு ., மலரு !!
பதிலளிநீக்குநேரில் பார்க்க வாய்ப்பில்லாத என்னைப் போன்றவர்ளின் கண்களுக்கு உங்கள் புகைப்படங்கள் அரிய விருந்து! நன்றி ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குbeautiful and colourful flowers very very nice.
பதிலளிநீக்குThanks for sharing such a beautiful snaps.
வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)
பதிலளிநீக்குஉங்களை வலைச்சரத்தில்
பதிலளிநீக்குஅறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html
கல்கியில் வந்துள்ள உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபடங்கள் பார்க்க ரெண்டு கண் போதலை.. பெங்களூரில் இப்படி நடப்பது நான் அறியாத விஷயம்... உண்மைய சொல்லணும்னா நான் பெங்களூர் போனதில்ல இதுவரை... அடுத்த முறை இந்தியா வர்றப்ப கண்டிப்பா போகணும்னு நினைச்சுட்டு இருக்கேன்... ஜனவரி அல்லது ஆகஸ்ட் ப்ளான் பண்ணனும்னு இப்ப தோணுது... ரெம்ப அழகா இருக்குங்க எல்லா படங்களும்...
பதிலளிநீக்குசகாதேவன் said...
பதிலளிநீக்கு//“வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று மலர் கண்காட்சி”
லால் பாக் பார்த்திருக்கிறேன். மலர் கண்காட்சி பார்த்ததில்லை.
பார்க்கலாம்//
பார்க்க வாருங்கள்:)! நன்றி.
ஷர்புதீன் said...
பதிலளிநீக்கு//குளு குளு பெங்களூரு ., மலரு !!//
நன்றி:)!
கவிநயா said...
பதிலளிநீக்கு//நேரில் பார்க்க வாய்ப்பில்லாத என்னைப் போன்றவர்ளின் கண்களுக்கு உங்கள் புகைப்படங்கள் அரிய விருந்து! நன்றி ராமலக்ஷ்மி!//
மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.
Vijiskitchencreations said...
பதிலளிநீக்கு//beautiful and colourful flowers very very nice.
Thanks for sharing such a beautiful snaps.//
நன்றி விஜி:)!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)//
மிக்க நன்றி தேனம்மை:)!
Lakshmi said...
பதிலளிநீக்கு//உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html//
பார்த்தேன். மகிழ்ச்சியும் நன்றியும் லக்ஷ்மி.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//கல்கியில் வந்துள்ள உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.வாழ்த்துகள்.//
மிக்க நன்றி டி வி ஆர் சார்:)!
அப்பாவி தங்கமணி said...
பதிலளிநீக்கு//படங்கள் பார்க்க ரெண்டு கண் போதலை.. பெங்களூரில் இப்படி நடப்பது நான் அறியாத விஷயம்... உண்மைய சொல்லணும்னா நான் பெங்களூர் போனதில்ல இதுவரை... அடுத்த முறை இந்தியா வர்றப்ப கண்டிப்பா போகணும்னு நினைச்சுட்டு இருக்கேன்... ஜனவரி அல்லது ஆகஸ்ட் ப்ளான் பண்ணனும்னு இப்ப தோணுது... ரெம்ப அழகா இருக்குங்க எல்லா படங்களும்...//
மகிழ்ச்சி. ப்ளான் பண்ணுங்க புவனா. கருத்துக்கு நன்றி:)!
தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும், fb, buzz-ல் பதிவை விரும்பியிருந்தவர்களுக்கும் என் நன்றி.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி & வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.. கண்காட்சியைக் கண்டவர்களும் காண வேண்டும் உங்களின் அற்புதமான இந்த புகைப்படக் கண்காட்சியையும்...
பதிலளிநீக்குபூக்களின் அலங்காரமும் அதை படம் எடுத்திருக்கும் விதமும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் - முத்துமணி
பதிலளிநீக்குJames Vasanth said...
பதிலளிநீக்கு//மிக்க மகிழ்ச்சி & வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//
நன்றி ஜேம்ஸ்:)!
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நன்றி ராமலக்ஷ்மி.. கண்காட்சியைக் கண்டவர்களும் காண வேண்டும் உங்களின் அற்புதமான இந்த புகைப்படக் கண்காட்சியையும்...//
பாராட்டுக்கு நன்றி நீலகண்டன்:)!
Muthumani said...
பதிலளிநீக்கு//பூக்களின் அலங்காரமும் அதை படம் எடுத்திருக்கும் விதமும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் - முத்துமணி//
நன்றி தங்கள் முதல் வருகைக்கும்:)!
பிரம்மாண்டமாக அமைத்துள்ளார்கள்.. நீங்கள் கூறியது போல ஒருமுறையாவது பார்க்க வேண்டும் போல இருக்கே! :-)
பதிலளிநீக்குஉங்கள் படங்களும் நேர்த்தியாக உள்ளன.
@ கிரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி. வருடந்தவறாமல் நடப்பதால் முயன்றிடுங்கள் எப்போதேனும்:)!