ஞாயிறு, 12 ஜூன், 2011

‘அழகர்சாமியின் குதிரை’ முதல் அன்றைய ‘பா’ வரிசைப் படம் வரை..-பிட் மல்டிப்ளெக்ஸில்..-ஜூன் போட்டி

டுன காலும், பாடுன வாயும், பிட் போட்டிக்குப் பதிவு போட்ட கையும் நிற்காதுல்ல. ‘பிட்’டுக்கான மாதாந்திரப் பதிவு இனியும் தொடரும், உங்களுக்கு நினைவூட்ட.. உற்சாகமளிக்க.. மாதிரிப் படங்களுடன். விளம்பரமென்றும் கொள்ளலாம். அதிலும் இம்மாதத் தலைப்புக்கும் விளம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே. தமிழில் வெளியான ‘திரைப்படத் தலைப்பு’களுக்குப் பொருத்தமான நிழற்படங்கள் என்பதே இம்மாதப் போட்டி. சுவாரஸ்யம் இல்லையா?

போட்டி அறிவிப்பு இங்கே. போட்டி விதிமுறை இங்கே.

அட்டகாசமாய், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

இனி என்னுடைய தயாரிப்பிலான படங்கள். டிக்கெட் இலவசமே:)!

இவற்றில் புது ரிலீஸ் 7. மற்றன தலைப்புக்குப் பொருத்தமாய்.

1.அழகர்சாமியின் குதிரை


2.வசந்த மாளிகை


3.தொட்டால் பூ மலரும்


4.கோபுரங்கள் சாய்வதில்லை
மாமல்லபுர கடற்கரைக் கோவில்
நூற்றாண்டுகள் பல கடந்து
சிற்பக்கலைக்கு சிகரமாக

5.பயணங்கள் முடிவதில்லை

6.அலைகள் ஓய்வதில்லை


7.தூங்காதே தம்பி தூங்காதே


8.வானமே எல்லை


9.புதிய பாதை


10.வாழ்க்கைப் படகு


11.கண்ணாமூச்சி ஏனடா?


12.தீபம்


13.இரு மலர்கள்


14.தவமாய் தவமிருந்து


15.தண்ணீர் தண்ணீர்


16.இயற்கை


17.மாட்டுக்கார வேலன்


18.மன்னாதி மன்னன்


19.கலைஞன்
இசைவெள்ளம் நதியாக ஓடும்..

20.மேல்நாட்டு மருமகள்
சொந்த இடம் விட்டு
வந்த மண் வாழ
வனிதை காட்டும் அக்கறை
கைவழி தொங்கும் துணிப்பையில்..
சொல்லுவோம் நாமும்
‘நோ டு ப்ளாஸ்டிக்’


21.தில்லானா மோகனாம்பாள்


22.ஜகன் மோகினி


23.பக்த மீரா


30-35 வருடங்களுக்கு முன்னால் திரைப்படங்களை ‘ஈஸ்ட்மென் கலர் சித்திரம்’ என்றே விளம்பரம் செய்து கவர்ந்திழுப்பார்கள். எங்கள் ஊரில் வெளியாகும் வண்ணப்படங்களுக்கு மத்தியில் அன்றைய பிரபல ‘பா’ வரிசை பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு போன்ற கருப்பு வெள்ளைப் பழைய படங்களும் குறிப்பிட்ட அரங்குகளில் வெளியாகி சக்கைப் போடு போடும். எத்தனை முறை பார்த்திருந்தாலும் இன்றைக்கும் ‘எதிர் நீச்சல், பாமாவிஜயம்’ போன்ற படங்கள் ஒளிபரப்பானால் நம்மை இழுத்து தொலைகாட்சி முன் அமர்த்திக் கொள்கின்றன.

இதோ அந்த வரிசையில் ஒரு படம். நான் எடுத்த படம் அன்று. ‘ஓட்டைப் பல் சிறுமி’யாக தோன்றிய படம்:)!

அன்பு’ தலைப்புக்காக என் அப்பா எடுத்த.., நான் அண்ணனுடன் இருக்கும் பழையபடம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்பாவின் அதே யாஷிகா-D கேமராவால் அவரது தங்கை எங்களை எடுத்த படம் இது. அந்தப் பதிவிலேயே ‘தான் எடுத்த படத்தைப் பகிர்ந்திட வேளை வரவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். இம்மாதப் போட்டிக்கு என் தொகுப்பிலே இடம் பெறச் செய்த பின் அனுப்பி வைக்கலாமெனக் காத்திருக்கிறார்.

படம் ப்ரிண்ட் ஆகி வந்ததும் பூரித்துப் போன என் அப்பா, இதை வைத்துப் பிரத்தியேகமாக ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அந்த ஆண்டு உறவினர் அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். இன்றளவிலும் எங்கள் குடும்பத்தினர் மனதில் மறக்க முடியாத படமான இது உங்கள் பார்வைக்கும்..

பாசப் பறவைகள்
ஒரு குழந்தையை சிரிக்கிற மாதிரி படம் பிடிப்பதே சிரமம். நான்கு சிறார்களை எப்படி சிரிக்க வைத்தாராம்? அங்குதான் இருக்கிறது இதை எடுத்தவர் யார் என்ற ரகசியம்:)! தான் ‘ஒன்.. டு.. த்ரீ..’ சொன்னதும், தொடர்ந்து எங்களை ‘ஹா.. ஹா.. ஹா..’ என மூன்று முறை தொடர்ந்து ஒலிக்குமாறு சொல்லச் சொல்ல, நாங்களும் அவ்வாறே செய்ய அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். இப்போது புரிந்திருக்குமே யார் என்பது? நீங்கள் யாவரும் ‘ஹா ஹா ஹா’ என சிரித்து மகிழ ஹாஸ்யரசம் படைத்து வரும் கோமா அவர்களே!

பிட் போட்டிகளில் ஆர்வமாகப் பங்கு பெற்று, பலமுறை முதல் மற்றும் இறுதிச் சுற்றுக்கள் வரை வென்று அசத்தி வருபவரின் திறமையை 37 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் காட்டிய படம்.

நீங்காத நினைவுச் சித்திரத்துக்கும், இங்கு பதிய விரும்பி அனுமதித்ததற்கும் அன்பு கலந்த நன்றி அவருக்கு:)!


ம்மாத நடுவராகப் புதிதாகப் பொறுப்பு எடுத்திருக்கும், MQN என நண்பர்களால் அன்புடன் விளிக்கப்படும், MQ Naufal பற்றியும் சில வார்த்தைகள் சொல்லிக் கொள்ள விருப்பம். அனைவராலும் அறியப்பட்டவர் எனினும் தவறவிடக் கூடாத அவரது தளத்தை இங்கு அறிமுகப் படுத்த ஆவல். வாழ்க்கையை ரசனையுடன் பார்ப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் அதிர்வுகளையும், மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளையும் தன் படங்களில் பதிவு செய்கின்றவர். அவசியம் தொடருங்கள்:
Naufal Photography.


இன்னும் ஏன் காத்திருக்கீங்க? உங்க படங்களை சீக்கிரமா அனுப்புங்க. இந்த லிங்கில் பத்து பத்து ஆண்டாக ரிலீஸ் ஆன தமிழ்படங்களின் பெயர் பட்டியல் கூட இருக்கு. அதையும் பாருங்க. கவித்துவமா யோசியுங்க. பிட் மல்டிப்ளெக்ஸ் உங்கள் படங்களைத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறது:)! முடிவுத் தேதி ஜூன் பதினைந்து. இன்னும் நாலு நாள் இருக்கு. நடுவிலே இதோ ஒரு ஞாயிறும் இருக்கு.
***

56 கருத்துகள்:

  1. எல்லாமே டாப்பு...அதிலும் கடைசியாக பாசப் பறவைகள் தூள் ;)

    பதிலளிநீக்கு
  2. தலைப்புக்கு ஏற்றாற்போல அனைத்துப்படங்களுமே பேசுவதாய்த் தோன்றியது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. எல்லா படங்களுமே டாப். ஏற்கெனவே எடுத்த பல படங்களை அழகாக இங்கு பொருத்தி இருக்கிறீர்கள். ஆனாலும் இயற்கை, தண்ணீர் தண்ணீர், மேல் நாட்டு மருமகள், கண்ணாமூச்சி ஏனடா, வாழ்க்கைப் படகு, புதிய பாதை ஆகியவை இன்னும் டாப். கடைசி இரண்டும் ரொம்ப அருமை.

    உங்கள் அத்தையை கட்டிக் கொடுத்து விட்டீர்களே....!!

    பதிலளிநீக்கு
  4. பழைய நினவில் சிலிர்த்து போனேன்...

    பதிலளிநீக்கு
  5. புதிய பாதையில் வளரும், தென்னை ,என்னைக் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  6. வானமே எல்லை & தவமாய் தவமிருந்து - எனக்கு புடிச்ச கிளிக்ஸ்!


    பாசப்பறவைகள் தூள்!!!! பட் நீங்க கிளிக்கியது இல்லைத்தானே ? :)))

    பதிலளிநீக்கு
  7. அலைகள் ஓய்வதில்லை, தவமாய் தவமிருந்து நன்றாய் பிடித்தன.

    "பாசப்பறவைகள்" எம்மையும் சிரிப்பில் இழுத்துக்கொள்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  8. பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு. சந்தோஷமாகவும் இருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. நிறைய புது படங்களை இங்கு பார்க்கிறேன். அனைத்தும் அருமை.

    மேலும், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. எந்த தலைப்பு கொடுத்தாலும் உங்கள் ஆல்பத்தில் படங்கள் இருக்கும் போலிருக்கிறதே!

    பாசப்பறவைகள் அருமை.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  11. கோமா மேடத்தின் ட்ரிக் சமயோசிதம்!!

    //சகாதேவன் said...

    எந்த தலைப்பு கொடுத்தாலும் உங்கள் ஆல்பத்தில் படங்கள் இருக்கும் போலிருக்கிறதே!//

    ரிப்பீட்டு!!

    பதிலளிநீக்கு
  12. தவமாய் தவமிருந்து படம் பிரமாதம் கலக்குங்க

    பதிலளிநீக்கு
  13. அனைத்து படங்களும் அருமை. முதல் பத்து பன்னிரண்டு ரொம்பவே பிடித்தது. கடைசி படத்தில் பின்னலை முன்னே போட்டுள்ள பெண் பிரபலமானவர் என்று மட்டும் தெரிகிறது யாருங்க அது? :))

    நிற்க. பத்திரிக்கை புகை படக்காரர் ஆகும் அளவு திறமை வைத்து கொண்டு நீங்கள் இணையம் மட்டும் எப்போதேனும் பத்திர்க்கைகளில் மட்டும் வருகிறீர்களோ என்ற எண்ணம் இந்த படங்கள் பார்த்த போது வந்தது நிஜம்

    பதிலளிநீக்கு
  14. oru padaththai thaniyaaka eduththu arumainnu solla manasillai. hats off Goma.

    Heartfelt congrats Ramalakshmi.
    these pics fill the soul with happiness.

    பதிலளிநீக்கு
  15. http://stbjp.msn.com/i/E1/3781F9CCC83C47453A32116BBA.jpg

    இந்த படத்தோட தலைப்பு - வேட்டைக்காரன்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாப் படங்களையும் தலைப்புக்களையும் பாசப்பறவைகள் தட்டி எடுத்துக்கொண்டது !

    பதிலளிநீக்கு
  17. எல்லா படங்களும் அருமை.
    அந்த ரோஸ் பியோனி எங்க வீட்டில் இப்ப தான் பூத்திருக்கு. நல்ல பெரிய பூ. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் அத்தையை கட்டிக் கொடுத்து விட்டீர்களே....!!

    ஸ்ரீராம்
    நண்டு சிண்டுகள் நாலும் சேர்ந்து அத்தையைக் கட்டிக்கொடுத்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டனவே.....ஹ ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  19. கோபிநாத் said...
    //எல்லாமே டாப்பு...அதிலும் கடைசியாக பாசப் பறவைகள் தூள் ;)//

    மிக்க நன்றி கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //தலைப்புக்கு ஏற்றாற்போல அனைத்துப்படங்களுமே பேசுவதாய்த் தோன்றியது. பாராட்டுக்கள்.//

    நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //தலைப்புக்கு ஏற்றாற்போல அனைத்துப்படங்களுமே பேசுவதாய்த் தோன்றியது. பாராட்டுக்கள்.//

    நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். said...
    //எல்லா படங்களுமே டாப். ஏற்கெனவே எடுத்த பல படங்களை அழகாக இங்கு பொருத்தி இருக்கிறீர்கள். ஆனாலும் இயற்கை, தண்ணீர் தண்ணீர், மேல் நாட்டு மருமகள், கண்ணாமூச்சி ஏனடா, வாழ்க்கைப் படகு, புதிய பாதை ஆகியவை இன்னும் டாப். கடைசி இரண்டும் ரொம்ப அருமை.//

    ரசித்து அளித்திருக்கும் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    //உங்கள் அத்தையை காட்டிக் கொடுத்து விட்டீர்களே....!!//

    எத்தனை காலம்தான் பூட்டி வைப்பது:)? பதிவுலகம் வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டனவே!

    பதிலளிநீக்கு
  23. இராஜராஜேஸ்வரி said...
    //பாசப் பறவைகள் -- Very nice..//

    மகிழ்ச்சி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  24. goma said...
    //பழைய நினவில் சிலிர்த்து போனேன்...//

    நினைவை மீட்டெடுக்க எங்களுக்குத் தந்த பரிசு. [37 ஆண்டுகள் என திருத்தி விட்டேன்:)!]

    //புதிய பாதையில் வளரும், தென்னை ,என்னைக் கவர்ந்தது//

    எனக்கு பிடித்தமான படம் அது. மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  25. ஆயில்யன் said...
    //வானமே எல்லை & தவமாய் தவமிருந்து - எனக்கு புடிச்ச கிளிக்ஸ்!//

    நன்றி ஆயில்யன்.

    //பாசப்பறவைகள் தூள்!!!! பட் நீங்க கிளிக்கியது இல்லைத்தானே ? :)))//

    பெரிய எழுத்துக்களில் சொல்லியிருக்கிறேனே:)!

    பதிலளிநீக்கு
  26. மாதேவி said...
    //அலைகள் ஓய்வதில்லை, தவமாய் தவமிருந்து நன்றாய் பிடித்தன.

    "பாசப்பறவைகள்" எம்மையும் சிரிப்பில் இழுத்துக்கொள்கின்றார்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  27. தமிழ் உதயம் said...
    //பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு. சந்தோஷமாகவும் இருக்கு. வாழ்த்துகள்.//

    நன்றி தமிழ் உதயம்:)!

    பதிலளிநீக்கு
  28. Naufal MQ said...
    //நிறைய புது படங்களை இங்கு பார்க்கிறேன். அனைத்தும் அருமை.

    மேலும், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.//

    மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    பதிலளிநீக்கு
  29. சகாதேவன் said...
    //எந்த தலைப்பு கொடுத்தாலும் உங்கள் ஆல்பத்தில் படங்கள் இருக்கும் போலிருக்கிறதே!

    பாசப்பறவைகள் அருமை.//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  30. ஹுஸைனம்மா said...
    ***//கோமா மேடத்தின் ட்ரிக் சமயோசிதம்!!//***

    எங்களுக்கு நினைவில்லை. கேட்டுதான் தெரிந்து கொண்டேன்:)!

    ரிப்பீட்டுக்கும் நன்றி ஹுஸைனம்மா:)!

    பதிலளிநீக்கு
  31. சசிகுமார் said...
    //தவமாய் தவமிருந்து படம் பிரமாதம் கலக்குங்க//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  32. மோகன் குமார் said...
    //அனைத்து படங்களும் அருமை. முதல் பத்து பன்னிரண்டு ரொம்பவே பிடித்தது.//

    மகிழ்ச்சி.

    //கடைசி படத்தில் பின்னலை முன்னே போட்டுள்ள பெண் பிரபலமானவர் என்று மட்டும் தெரிகிறது யாருங்க அது? :))

    நிற்க. பத்திரிக்கை புகை படக்காரர் ஆகும் அளவு திறமை வைத்து கொண்டு நீங்கள் இணையம் மட்டும் எப்போதேனும் பத்திர்க்கைகளில் மட்டும் வருகிறீர்களோ என்ற எண்ணம் இந்த படங்கள் பார்த்த போது வந்தது நிஜம்//

    பிரபலமில்லா விட்டாலும் நீங்கள் அறிந்தவரே:)! நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  33. வல்லிசிம்ஹன் said...
    //oru padaththai thaniyaaka eduththu arumainnu solla manasillai. hats off Goma.

    Heartfelt congrats Ramalakshmi.
    these pics fill the soul with happiness.//

    மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  34. குணசேகரன்... said...
    //http://stbjp.msn.com/i/E1/3781F9CCC83C47453A32116BBA.jpg

    இந்த படத்தோட தலைப்பு - வேட்டைக்காரன்.//

    பார்த்தேன், அருமை:)!

    பதிலளிநீக்கு
  35. ஹேமா said...
    //எல்லாப் படங்களையும் தலைப்புக்களையும் பாசப்பறவைகள் தட்டி எடுத்துக்கொண்டது !//

    ரொம்ப சந்தோஷம்:)! நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  36. Vijiskitchencreations said...
    //எல்லா படங்களும் அருமை.
    அந்த ரோஸ் பியோனி எங்க வீட்டில் இப்ப தான் பூத்திருக்கு. நல்ல பெரிய பூ. சூப்பர்.//

    ‘பூவாய் மலர்ந்தது முகம்’ என இந்தப் பூவைப் பார்த்துதான் வர்ணிக்க ஆரம்பித்திருப்பார்களோ:)? நன்றி விஜி.

    பதிலளிநீக்கு
  37. சி.பி.செந்தில்குமார் said...
    //தவமாய் தவமிருந்து டாப்//

    நன்றி செந்தில்குமார்:)!

    பதிலளிநீக்கு
  38. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. அழகர் சாமியின் குதிரைக்கு சாப்பாடு சரியா கொடுக்கலை போல இருக்கே! ;-)

    ராமலக்ஷ்மி இனி குறை கூற வேண்டும் என்றே தேடினால் தான் ஏதாவது கூற முடியுமே போல இருக்கு. அசத்துங்க. அப்புறம் ஈஸ்ட் மென் படம் அற்புதம்..அட்டகாசமா இருக்கு. கோமா கலக்கிட்டாங்க போங்க.

    படம் பட்டாசா இருக்கு... :-)

    பதிலளிநீக்கு
  40. @ கிரி,

    உண்மைதான்:(! ‘கொள் உண்ணக் கூட குதிரைக்கு நேரமில்லை’ என்ற வரிகளுடனே படத்தை Sepia-வாக flickr-ல் பதிந்திருக்கிறேன்: பூங்காவில் குதிரை.. கோடை விடுமுறை... நேரமிருந்தால் பாருங்கள்.

    நன்றி கிரி. கோமாவுக்கான பாராட்டை அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  41. தலைப்பும் படமும் அருமை தயாரிப்பாளரே..:))

    பதிலளிநீக்கு
  42. பொருத்தமான தலைப்பு போற்றத்தக்கப் படங்கள்... இல்லை இல்லை தலைப்பிற்கு பொருத்தமான தலையாய கலை நயமான படங்கள்..

    பதிலளிநீக்கு
  43. நான் டைப் செய்ததில் இருந்ததில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனிக்கவே இல்லை!! அதைத் திருத்தி பதிலளித்தமைக்கு நன்றி! (கட்டி - காட்டி)

    பதிலளிநீக்கு
  44. சே.குமார் said...
    //எல்லா படங்களும் அருமை.//

    நன்றி குமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவுலகம் வந்துள்ளீர்கள். மறுபடி பதிவுகள் இட ஆரம்பியுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  45. குமரி எஸ். நீலகண்டன் said...
    //பொருத்தமான தலைப்பு போற்றத்தக்கப் படங்கள்... இல்லை இல்லை தலைப்பிற்கு பொருத்தமான தலையாய கலை நயமான படங்கள்..//

    பஞ்சமே இல்லாத தலைப்பாயிற்றே! அதனால் வஞ்சனையின்றி வரிசைப்படுத்தியாயிற்று:)! மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  46. @ ஸ்ரீராம்,

    அவசரத்தில் தட்டச்சுப் பிழை அனைவருக்கும் நிகழும் ஒன்றே:)!

    பதிலளிநீக்கு
  47. தவமாய் தவமிருந்து, தொட்டால் பூ மலரும், வானமே எல்லை என்னோட சாய்ஸ்.

    கோமா படம் கட்டாயம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள், இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  48. @ நானானி,

    விருப்பத் தேர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  49. பாசப் பறவைகள் அற்புதம்.

    **********************


    //சொந்த இடம் விட்டு
    வந்த மண் வாழ
    வனிதை காட்டும் அக்கறை
    கைவழி தொங்கும் துணிப்பையில்..
    சொல்லுவோம் நாமும்
    ‘நோ டு ப்ளாஸ்டிக்’//

    எங்கெங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் விழிப்புணர்வை உண்டுபண்ணும் உங்களைப் பாராட்ட வார்த்தையில்லை.

    *****************

    அத்தை கோமா அவர்களைப் பற்றி, இவ்வளவு நாள் வாய் திறக்கவில்லையே மேடம்!

    இன்னும் இணையத்தில் உள்ள உங்களின் மற்ற உறவுகளின் பட்டியல் தொடருமா:-))))?


    ************************

    //உங்கள் அத்தையை கட்டிக் கொடுத்து விட்டீர்களே....!!

    ஸ்ரீராம்
    நண்டு சிண்டுகள் நாலும் சேர்ந்து அத்தையைக் கட்டிக்கொடுத்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டனவே.....ஹ ஹா ஹா...//

    உங்கள் அத்தையின் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தேன்.

    கமென்ட் எழுதும் பொழுது மிகவும் நிதானமாக எழுத வேண்டும். ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறிவிடும் என்பதற்கு நல்ல உதாரணம் இது. ஆனால், நாம் அனைவரும் அவசராமாகத்தான் எழுத வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  50. ஸ்ரீராம்

    நான் டைப் செய்ததில் இருந்ததில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனிக்கவே இல்லை!!

    கவலையே படாதீங்க...இந்த ஆர்வ அவசரம் எல்லோருக்கும் பொது.....
    என் பின்னூட்டத்தில் ’நினைவு’என்பது. ’நினவாகி’யிருப்பதைப் பாருங்கள்.

    பழைய நினவில் சிலிர்த்து போனேன்.

    தவறு எல்லோருக்கும் பொது நானே சாட்சி.

    பதிலளிநீக்கு
  51. @ அமைதி அப்பா,

    மிக்க நன்றி.

    பட்டியல் தொடரும்:)!

    //நாம் அனைவரும் அவசராமாகத்தான் எழுத வேண்டியுள்ளது.//

    இதையும் அவசரமாகவே எழுதியுள்ளீர்கள்:)!

    அடுத்த பின்னூட்டமும் இது குறித்தானதே பாருங்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin