Friday, June 17, 2011

ஆடுகளம் - நவீன விருட்சத்தில்..


வாழ்க்கை ஏட்டின்
வாசித்த முடித்த பக்கங்கள்
காற்றில் படபடக்கையில்
கண்ணில் மாட்டுகிற
பரம பத ஏற்ற இறக்கங்கள்

தாய உருட்டல்களில்
வாங்கிய வெட்டுக்களாகச்
சில வருத்தங்கள்

இலகுவாய் தாவிக் கடந்த
பாண்டிக் கட்டங்களாகச்
சில சந்தோஷங்கள்

பல்லாங்குழியில்
வெற்றிடம் துடைத்தோ
‘பசு’வெனக் கூவியோ
வெள்ளைச் சோழிகளை
அள்ளிய குதூகலங்கள்

நேர்மைத் திறமற்ற
கண்ணாமூச்சித் துரோகங்கள்

பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக
நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்

விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
விரல்நுனியில் பிடி இருக்க
உலவ விட்டப் பட்டங்கள்

கணநேரக் களிப்பைத் தந்த
வெற்றிக்காகக்
கட்டம் கட்டமாகக்
காய்நகர்த்திய உறுத்தல்கள்

கல்லா மண்ணா..
வாழ்க்கை கல்லில் பொறிக்கப்படுமா
மண்ணோடு மறையுமா
கேள்வியில் தொடங்கிய வேள்விகள்

காலம் வர்ணனையுடன்
வரைந்து வைத்த குறிப்புகளில்
அடிக்கோடிட்டுப் போற்றியும்
அறவே மறக்க விரும்பியுமாய்
வாழ்க்கை வரிகள்...

எவற்றாலும் எவருக்கும்
வற்றுவதாகத் தெரியவில்லை
ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்

சிறப்பான
அல்லது
இன்னும் சிறப்பான
ஏதோ ஒன்று காத்திருக்கிறது
என்கிறதான எதிர்பார்ப்பில்.
*** ***

படம்: இணையத்திலிருந்து..

9 ஜுன் 2011 நவீன விருட்சத்தில்
.., நன்றி நவீன விருட்சம்!

42 comments:

 1. வெரி குட். ரொம்ப நல்லாயிருக்குங்க இந்த உங்களின் கவிதை. பழைய சின்னவயசு விளையாட்டுக்களைக் கோர்வையாக கொண்டுவந்து கண் முன் நிறுத்திவிட்டீர்கள். அவைகள் சின்னச்சின்ன ஆசைகள் அல்லவா!

  எனக்கு மிகவும் பிடித்தது:
  1)
  //விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
  விரல்நுனியில் பிடி இருக்க
  உலவ விட்டப் பட்டங்கள்//
  2)
  //பம்பரத் தலைக்குள்
  நுழைகிற ஆணிகளாக
  நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்//


  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எவற்றாலும் எவருக்கும்
  வற்றுவதாகத் தெரியவில்லை////

  உண்மை தான்.அருமை,

  ReplyDelete
 3. எவற்றாலும் எவருக்கும்
  வற்றுவதாகத் தெரியவில்லை
  ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
  அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்//

  Interesting.

  ReplyDelete
 4. ஆடுகளம் தலைப்பைக் கொடுத்து அதற்கேற்றமாதிரி நினவுகளையும்,விளையாட்டில்கூட வாழ்வின் தத்துவம் கண்டிருக்கிறீர்கள்.அருமை அக்கா !

  ReplyDelete
 5. //பம்பரத் தலைக்குள்
  நுழைகிற ஆணிகளாக
  நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்//

  அருமை ராமலெக்ஷ்மி..

  ReplyDelete
 6. //நேர்மைத் திறமற்ற
  கண்ணாமூச்சித் துரோகங்கள்//

  நன்று.

  ReplyDelete
 7. அருமை. அவரவர் அனுபவக் குறிப்பில் அவரவருக்கு பாதித்த வரிகளை தனித்தனியாய்ச் சொல்ல எடுத்தால் எல்லா வரிகளும் வரிசையில் வருமென்பதால் மொத்தமாய் எடுத்துச் சொல்லிப் பாராட்டுதலே சரியாக இருக்கும். வாசிக்க ஆர்வம் இருந்தாலும் இல்லா விட்டாலும் வந்தே தீரும் அடுத்த நாள்! நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கை கொள்வாயடா...

  ReplyDelete
 8. பகிர்வுக்கு ரொம்ப நன்றி....நல்லா இருக்கு...

  ReplyDelete
 9. பம்பரத் தலைக்குள்
  நுழைகிற ஆணிகளாக

  Great.!.!.!

  Wishes

  vijay

  ReplyDelete
 10. அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - வாழ்வின் வரிகள் என்றாவது மனதில் தோன்றும். சுகமானாலும் சரி வலியானாலும் சரி -திடீரென மனதில் தோன்றும். அழுதோ - மகிழ்ந்தோ - அசை போட்டுத்தான் ஆக வேண்டும். அடுத்தவருடன் பகிர முடியாத வரிகளும் வாழ்வினில் உண்டு - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. அப்புறம் நெல்லை பதிவர் சந்திப்பில் வெடி வால் சகாதேவனைச் சந்தித்தேன். ஜானகிராம் ஹோட்டல் மாடியில் இருந்து - சிவன் கோவிலை அடுத்த சந்தில் உள்ள 9west இல்லத்தினைப் பார்த்தேன். செல்ல இயல்வில்லை.

  ReplyDelete
 12. கவிதை வரிகளை வாசிக்க வாசிக்க ,கண் எதிரே குழந்தை ஒன்று வளர்வது போலிருக்கிறது...

  ReplyDelete
 13. பிரசாத் வேணுகோபால் said...
  //நல்லா இருக்கு அக்கா...//

  நன்றி பிரசாத்.

  ReplyDelete
 14. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //வெரி குட். ரொம்ப நல்லாயிருக்குங்க இந்த உங்களின் கவிதை.
  ...
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ரசித்த வரிகளுக்கும்.

  ReplyDelete
 15. தமிழ் உதயம் said...
  ***/எவற்றாலும் எவருக்கும்
  வற்றுவதாகத் தெரியவில்லை/

  உண்மை தான்.அருமை,/***

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 16. இராஜராஜேஸ்வரி said...
  ***/எவற்றாலும் எவருக்கும்
  வற்றுவதாகத் தெரியவில்லை
  ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
  அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்//

  Interesting./***

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 17. புதுகை.அப்துல்லா said...
  //நன்று.//

  நன்றி அப்துல்லா.

  ReplyDelete
 18. ஹேமா said...
  //ஆடுகளம் தலைப்பைக் கொடுத்து அதற்கேற்றமாதிரி நினவுகளையும்,விளையாட்டில்கூட வாழ்வின் தத்துவம் கண்டிருக்கிறீர்கள்.அருமை அக்கா !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 19. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ***//பம்பரத் தலைக்குள்
  நுழைகிற ஆணிகளாக
  நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்//

  அருமை ராமலெக்ஷ்மி../***

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 20. அமைதி அப்பா said...
  ***//நேர்மைத் திறமற்ற
  கண்ணாமூச்சித் துரோகங்கள்//

  நன்று./***

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 21. June 17, 2011 9:04 PM
  "உழவன்" "Uzhavan" said...
  //வாழ்த்துகள்!//

  நன்றி உழவன்.

  June 17, 2011 9:51 PM
  ஸ்ரீராம். said...
  //அருமை. அவரவர் அனுபவக் குறிப்பில் அவரவருக்கு பாதித்த வரிகளை தனித்தனியாய்ச் சொல்ல எடுத்தால் எல்லா வரிகளும் வரிசையில் வருமென்பதால் மொத்தமாய் எடுத்துச் சொல்லிப் பாராட்டுதலே சரியாக இருக்கும். வாசிக்க ஆர்வம் இருந்தாலும் இல்லா விட்டாலும் வந்தே தீரும் அடுத்த நாள்!//

  ஆம், நன்றி ஸ்ரீராம்.

  //நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கை கொள்வாயடா...//

  அதே:)!

  June 17, 2011 9:57 PM
  GEETHA ACHAL said...
  //பகிர்வுக்கு ரொம்ப நன்றி....நல்லா இருக்கு...//

  வருகைக்கு நன்றி கீதா.

  June 17, 2011 10:19 PM
  மதுரை சரவணன் said...
  //kavithai arumai.. vaalththukkal//

  மிக்க நன்றி சரவணன்.

  June 17, 2011 11:23 PM
  விஜய் said...
  ***/பம்பரத் தலைக்குள்
  நுழைகிற ஆணிகளாக

  Great.!.!.!/***

  நன்றி விஜய்.

  cheena (சீனா) said...

  //அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - வாழ்வின் வரிகள் என்றாவது மனதில் தோன்றும். சுகமானாலும் சரி வலியானாலும் சரி -திடீரென மனதில் தோன்றும். அழுதோ - மகிழ்ந்தோ - அசை போட்டுத்தான் ஆக வேண்டும். அடுத்தவருடன் பகிர முடியாத வரிகளும் வாழ்வினில் உண்டு - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

  நன்றி சீனா சார்.

  //அப்புறம் நெல்லை பதிவர் சந்திப்பில் வெடி வால் சகாதேவனைச் சந்தித்தேன். ஜானகிராம் ஹோட்டல் மாடியில் இருந்து - சிவன் கோவிலை அடுத்த சந்தில் உள்ள 9west இல்லத்தினைப் பார்த்தேன். செல்ல இயலவில்லை.//

  மிகுந்த மகிழ்ச்சி. அடுத்தமுறை முயன்றிடுங்கள்:)!

  June 18, 2011 8:25 AM
  goma said...
  //கவிதை வரிகளை வாசிக்க வாசிக்க ,கண் எதிரே குழந்தை ஒன்று வளர்வது போலிருக்கிறது...//

  கருத்துக்கு மிக்க நன்றி.

  திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

  June 18, 2011 8:

  ReplyDelete
 22. "உழவன்" "Uzhavan" said...
  //வாழ்த்துகள்!//

  நன்றி உழவன்.

  ReplyDelete
 23. ஸ்ரீராம். said...
  //அருமை. அவரவர் அனுபவக் குறிப்பில் அவரவருக்கு பாதித்த வரிகளை தனித்தனியாய்ச் சொல்ல எடுத்தால் எல்லா வரிகளும் வரிசையில் வருமென்பதால் மொத்தமாய் எடுத்துச் சொல்லிப் பாராட்டுதலே சரியாக இருக்கும். வாசிக்க ஆர்வம் இருந்தாலும் இல்லா விட்டாலும் வந்தே தீரும் அடுத்த நாள்!//

  ஆம், நன்றி ஸ்ரீராம்.

  //நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கை கொள்வாயடா...//

  அதே:)!

  ReplyDelete
 24. GEETHA ACHAL said...
  //பகிர்வுக்கு ரொம்ப நன்றி....நல்லா இருக்கு...//

  வருகைக்கு நன்றி கீதா.

  ReplyDelete
 25. மதுரை சரவணன் said...
  //kavithai arumai.. vaalththukkal//

  மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 26. விஜய் said...
  ***/பம்பரத் தலைக்குள்
  நுழைகிற ஆணிகளாக

  Great.!.!.!/***

  நன்றி விஜய்.

  ReplyDelete
 27. cheena (சீனா) said...

  //அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - வாழ்வின் வரிகள் என்றாவது மனதில் தோன்றும். சுகமானாலும் சரி வலியானாலும் சரி -திடீரென மனதில் தோன்றும். அழுதோ - மகிழ்ந்தோ - அசை போட்டுத்தான் ஆக வேண்டும். அடுத்தவருடன் பகிர முடியாத வரிகளும் வாழ்வினில் உண்டு - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

  நன்றி சீனா சார்.

  //அப்புறம் நெல்லை பதிவர் சந்திப்பில் வெடி வால் சகாதேவனைச் சந்தித்தேன். ஜானகிராம் ஹோட்டல் மாடியில் இருந்து - சிவன் கோவிலை அடுத்த சந்தில் உள்ள 9west இல்லத்தினைப் பார்த்தேன். செல்ல இயலவில்லை.//

  மிகுந்த மகிழ்ச்சி. அடுத்தமுறை முயன்றிடுங்கள்:)!

  ReplyDelete
 28. goma said...
  //கவிதை வரிகளை வாசிக்க வாசிக்க ,கண் எதிரே குழந்தை ஒன்று வளர்வது போலிருக்கிறது...//

  கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 29. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

  ReplyDelete
 30. ஆடுகளம் - புத்தகம், பாம்புக்கட்டம், தாயம், பாண்டி, பல்லாங்குழி, பம்பரம், சதுரங்கம், கல்லா மண்ணா? - நாம் ஆடிய இந்தகளங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லையே.

  நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் என்னை ராமலக்ஷ்மியின் சித்தப்பா என்றுதான் அறிமுகம் செய்து கொண்டேன்.
  எல்லோருக்கும் மகிழ்ச்சி.

  சீனா அவர்கள் என்னை முந்தி சந்திப்பை பற்றி சொல்லிவிட்டார்.

  சகாதேவன்

  ReplyDelete
 31. @ சகாதேவன்,

  ஆமாம், கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றின் பட்டியலில் சேர்ந்து விட்டன பல விளையாட்டுக்கள்:(! சதுரங்கம் மட்டுமே அறியப்பட்ட களமாக இன்னும்.

  /எல்லோருக்கும் மகிழ்ச்சி./

  எனக்கும் மகிழ்ச்சி:)! அந்த சமயம் நெல்லையில் இருந்திருந்தால் உங்களுடனேயே வந்து சந்திப்பில் கலந்து கொண்டிருந்திருப்பேன். இயலாது போயிற்று. சந்திப்பைப் பற்றி பதிவாகப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

  ReplyDelete
 32. அருமை ராமலெக்ஷ்மி.

  ReplyDelete
 33. @ Kanchana Radhakrishnan,

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 34. ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
  அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்

  சிறப்பான
  அல்லது
  இன்னும் சிறப்பான
  ஏதோ ஒன்று காத்திருக்கிறது
  என்கிறதான எதிர்பார்ப்பில்.//


  உண்மை உண்மை.

  ReplyDelete
 35. @ கோமதி அரசு,

  வாங்க கோமதிம்மா. நன்றி. நலமா:)? பதிவுலக விடுமுறை முடிந்ததா?

  ReplyDelete
 36. நல்மாக இருக்கிறேன் ராமலக்ஷ்மி. நேற்றுதான் மதுரையிலிருந்து வந்தேன், நீங்கள் நலமா?

  ஊருக்கு போய் கொண்டே இருக்கிறேன், இன்னும் தொடர்கிறது பயணம். இடை இடையே தான் பதிவுலகம் என்று ஆகி விட்டது.

  உங்களை எல்லாம் பார்த்து வெகு காலம் ஆனமாதிரி உள்ளது.

  நெட்டும் கொஞ்சம் நாள் வேலை செய்ய வில்லை.

  ReplyDelete
 37. @ கோமதி அரசு,

  //உங்களை எல்லாம் பார்த்து வெகு காலம் ஆனமாதிரி உள்ளது.//

  எங்களுக்கும் அப்படியே. ஊர் திரும்பிய பிறகு பதிவிட ஆரம்பியுங்கள். காத்திருக்கிறோம்:)!

  ReplyDelete
 38. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin