Thursday, June 2, 2011

இசைக்கு மொழி தேவையில்லை.. - மேடைப்படங்கள் (பாகம் 3)

ருஹானியத் என்பது ஒரு அற்புதமான இசைத் திருவிழா. இந்தியாவின் அத்தனை அதிகம் அறியப்படாத கிராமங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும், உலகின் பல பாகங்களைச் சேர்ந்த இசை மன்னர்கள் அவரவர் நாட்டு இசைக்கருவிகளுடனும் பக்கவாத்தியப் பரிவாளங்களுடனும் எழுப்பும் ஒரு இன்னிசை வேள்வி. அமைதி, ஒற்றுமை, நட்பு, அன்பு யாவும் ஐக்கியமாகும் அந்த வேள்வியில் கேட்பவரும் இசைப்பவரும் தம் ஆன்மாவை அடையாளம் காண இயலுகிறது.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பெங்களூரில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய ருஹானியத்தை இரண்டாவது முறையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மார்கழி குளிர் நடுக்குகிற இரவில், பெங்களூர் ஜெயமஹால் அரண்மனையின் திறந்த அரங்கம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது. பால் வெண்மையில் ஒருபக்கம் அரண்மனையும், பாலாய் பொழிந்தபடி வானிலே தேனிலாவும் கூடத் தயாராகின கானத்தில் நனைய. #படம் 1: ஜெயமஹால்

ஞ்சாப்பை சேர்ந்த பர்கத் சித்துவின் பாகிஸ்தானிய சூஃபி பாடல்களுடன் ஆரம்பமானது இசை விருந்து. இது போன்ற இசை நிகழ்ச்சிகள் ஏன் திறந்த அரங்கில் நடக்கின்றன என்பது அவரது குரல் வானெங்கும் எதிரொலித்துத் திரும்பி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்ததில் புரிந்தது. குழப்பமான கொந்தளிப்பான வாழ்வில் தொடர்ந்து நம்மை ஆனந்தமாக இருத்திக் கொள்ளும் ரகசியங்களைச் சொல்வதானதாய் இருந்தது அப்பாடல்.

இப்படி எதைப் பற்றி பாடுகிறார்கள் என முதலிலேயே ஆங்கிலதில் அறிவித்து விடுவதால், மொழி புரியாவிட்டாலும் அதன் உணர்வோடு ஒன்றி ரசிக்க இயலுகின்றது.

கிப்தைச் சேர்ந்த அரசு சூஃபி குழுவினர் ஷேக் அப்துல் ஹமீது அல்ஷரீஃப் மற்றும் முகமது ஃபர்கலி ஆகிய பாடகர்களுடன் மேடையேறினர். மூன்று வெவ்வேறு விதமான கம்போஸிஷன்களில் இடைவெளியின்றி பாடி அசத்தினார்கள். கடவுளுக்கான வாழ்த்தில் தொடங்கி பிரபல கவிஞர்களின் பாடல்களின் மூலமாக மகிழ்ச்சிக்கான செய்தியைப் பரப்பினார்கள். அந்த உயிர்ப்பான குரல்களில் மெய்மறந்திருந்த ரசிகர்களை அப்படியே எகிப்துக்கே கொண்டு சென்று விட்டனர் தம் அபாரமான வாசிப்பால் இசைக் குழுவினர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பார்வதி பவல்(Parvathy Baul) பற்றி அறியாத இசைப்பிரியர்கள் இருக்க முடியாது. இவர் பாடகி மட்டுமல்ல. சிறந்த ஓவியரும் கதைசொல்லியும் கூட. ரவீந்திரநாத் தாகூரின் சாந்தினிகேதன் கலாபவன் மாணவியாக இருந்தவர் பவல் சமூகத்தின் கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின் பழக்கவழக்கங்களுடனான இசைவழி செல்ல முடிவெடுத்தவர். #படம் 2:பார்வதி பவல்

இவர் பாடும் போது கூடவே இசைக்கப் பயன்படுத்துவது ஒற்றை நரம்பு கொண்ட எக்தாரா, ஒரு ஜோடி முரசு, மற்றும் காலின் சலங்கைகள்.# படம் 3 : எக்தாரா, முரசு [முதல் இம்மூன்று படங்கள் மட்டும் ஸோனி w80-ன் அதிகபட்ச ஜும் ஒத்துழைப்பில் நான் எடுத்தவை.]

ராஜஸ்தானைச் சேர்ந்த பெரியவர் கச்ராகானும், கோடாவைச் சேர்ந்த ஹிஃப்சுரேமான் ஹகிமியும் சிறப்பாகப் பாடினார்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்திருந்தது இறுதியாக வந்த டனோரா(Tannoura) நடனம். கலை என்பது தெய்வீகம் எனும் அர்ப்பணிப்புடன் வேகமாக ஒலித்த இசைக்கு சுறுசுறுவென சுழன்று சுழன்று இருபது நிமிடங்கள் ஆடி பார்வையாளர்களைக் கிறங்க வைத்து விட்டனர் முழுநீள பலவண்ண உடையிலிருந்த இருவர். மேலே குடை போல சுழற்றுவது ஆரம்பத்தில் இடுப்பில் அணிந்திருந்த பாவாடை போன்ற அங்கியின் மேல் அணிந்திருந்த ஒன்றே. ஹூலா ஹூப்ஸ் போல கொஞ்ச கொஞ்சமாக விரிந்து தலை வரை கொண்டு வந்து சுழற்றுகிறார்கள். கூட்டமே ஸ்தம்பித்து விட்டது.

கரகோஷம் விண்ணைப் பிளக்க, கடைசி ஐந்து நிமிடங்கள் அதை கையில் தூக்கிப்பிடித்து சுழற்றியவாறு கூட்டத்துக்குள் நடனமாடியபடியே வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். அற்புதமான காட்சிகள்தாம். படமெடுக்க அனுமதி இல்லாததால் வேறுவழியின்றி இணையத்திலிருந்து எடுத்து சிறிய அளவில் பகிர்ந்துள்ளேன். நன்றி:கூகுள்

நுழைவுச் சீட்டுகளிலேயே வீடியோ பதிவுக்கு அனுமதியில்லை என அச்சடிக்கப் பட்டிருக்கிறது. பங்கு பெறும் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தனித்தனி ஆடியோ வீடியோ சிடிகளாக அங்கேயே விற்கப்படுகின்றன, விருப்பமானவர் வாங்கிட வசதியாக. இடைவேளையில் நாங்களும் வாங்கினோம். வீடியோதானே கூடாதென பலர் தம் மொபைல் மற்றும் காமிராக்களில் மேடை நிகழ்வை அவ்வப்போது புகைப்படமாக க்ளிக்கிட்டபடி இருக்க நானும் தயக்கத்துடன் பார்வதி பவல் தோன்றும் போது ஒருசில படங்கள் எடுத்தேன். புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்கும்படியும், அது கலைஞர்களுக்கு இடைஞ்சலாக அமையுமென்றும் அடுத்து அறிவிப்பானது. காமிராவைப் பைக்குள் போட்டு மூடி விட்டேன். இதுவும் மேடை நிகழ்வுகளில் மதிக்கப்படவேண்டிய ஒரு புகைப்படப் பாடம்தானே:)?

ருஹானியத். நீங்கள் வசிக்கும் நகரில் நடைபெற்றால் தவறவிடாதீர்கள். பெரிய இசைஞானம் ஏதுமின்றி இரண்டுமுறையும் வெகுவாகு ரசிக்க முடிந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்:)! இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகை ஆதரவற்றோருக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.
***

எழுதி வைத்து, ரொம்ப காலமாக ட்ராஃப்டிலேயே இருந்து போனவற்றைத் தொகுத்து மூன்று பாகங்களாக வழங்கியாயிற்று! பொறுமையாய் கூட வந்தவருக்கு நன்றி:)!

18 comments:

 1. தகவல் புதுசா இருக்கே...!

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு.

  //இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகை ஆதரவற்றோருக்காகப் பயன்படுத்தப்பட்டு வ்ருகிறது என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.//

  நிச்சயம் நல்ல விஷயம், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. உங்கள் ரசனைக்குத்தான் என் பாராட்டுக்கள் !

  ReplyDelete
 4. அருமை
  படமும் விளக்கமும்

  ReplyDelete
 5. புகைப்படங்கள் அழகோ அழகு, உங்கள் வர்ணனைகள் அருமை.

  ReplyDelete
 6. //எழுதி வைத்து, ரொம்ப காலமாக ட்ராஃப்டிலேயே இருந்து போனவற்றைத் தொகுத்து மூன்று பாகங்களாக வழங்கியாயிற்று!//

  :))

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு அக்கா.

  ReplyDelete
 8. MANO நாஞ்சில் மனோ said...
  //தகவல் புதுசா இருக்கே...!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 9. அமைதி அப்பா said...
  ***/நல்ல பகிர்வு.

  //இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகை ஆதரவற்றோருக்காகப் பயன்படுத்தப்பட்டு வ்ருகிறது என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.//

  நிச்சயம் நல்ல விஷயம், பாராட்டுக்கள்./***

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 10. ஹேமா said...
  //உங்கள் ரசனைக்குத்தான் என் பாராட்டுக்கள் !//

  நன்றி ஹேமா:)!

  ReplyDelete
 11. ஈரோடு கதிர் said...
  //சூப்பர்!!!//

  நன்றி கதிர்:)!

  ReplyDelete
 12. goma said...
  //அருமை
  படமும் விளக்கமும்//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 13. தமிழ் உதயம் said...
  //புகைப்படங்கள் அழகோ அழகு, உங்கள் வர்ணனைகள் அருமை.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 14. மோகன் குமார் said...
  ***//எழுதி வைத்து, ரொம்ப காலமாக ட்ராஃப்டிலேயே இருந்து போனவற்றைத் தொகுத்து மூன்று பாகங்களாக வழங்கியாயிற்று!//

  :))//***

  இனி உடனுக்குடன் எதையும் பகிர்ந்து விட வேண்டும் எனத் தீர்மானித்தாயிற்று:)!

  ReplyDelete
 15. சுசி said...
  //நல்ல பகிர்வு அக்கா.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 16. தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  ReplyDelete
 17. வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin