ஓவியம் நன்றி: சந்திரமோகன்
உச்சிகால பூஜைக்குத்
தட்டிலே தங்கவெள்ளி மலர்களுடன்
உள் நுழைந்தவனை நிறுத்திக்
கடைசி முழம் பூவை
வாங்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள்
சுட்டெரித்த சூரியக் கதிரில்
சுருங்கிப் போயிருந்த கிழவி.
பலமான தலை அசைவில்
மறுப்பை உணர்த்தியவனிடம்
தன் காணிக்கையாகவேனும்
கடவுளிடம்
சேர்த்துவிடக் கோருகிறாள்.
ஒதுக்கிவிட்டு நகர்ந்தவனின்
அன்றைய பிரார்த்தனைகள் யாவும்
பலித்திருக்கவே கூடும்.
ஆயினும் அவன் தோட்டத்து
மல்லிகைச் செடிகள் மட்டும்
மொட்டு விட மறந்து போயின
அதன் பிறகு.
***
21 ஜூன் 2011 கீற்று இணைய இதழில்.., நன்றி கீற்று.
எதார்த்தம்..நாம் எங்கேயோ எப்போதோ சந்தித்த அனுபவம் போல் உள்ளது..வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு//தன் காணிக்கையாகவேனும்
பதிலளிநீக்குகடவுளிடம் சேர்த்துவிடக் கோருகிறாள்.//
ஆஹா, என்ன ஒரு நல்லெண்ணம் அந்தக்கிழவிக்கு.
//ஆயினும் அவன் தோட்டத்து
மல்லிகைச் செடிகள் மட்டும்
மொட்டு விட மறந்து போயின
அதன் பிறகு.//
பூவினால் கொடுக்கப்பட்ட சாபமல்லவா!
அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.
அருமை அக்கா... சிம்ப்ளி சூப்பர்ப்... படித்து முடித்த பின்னும் கடைசி வரிகள் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது...
பதிலளிநீக்குஅழகிய வரிகள்..
பதிலளிநீக்குஅருமை அக்கா!!
பதிலளிநீக்கும்...இதுதான் சாபம் !
பதிலளிநீக்குவரமாய் வாங்கும் சாபம்...!
பதிலளிநீக்குஅட்டகாசம் :-)
பதிலளிநீக்குஉண்மை. கொடுத்தால் தான் எதுவும் கிடைக்கும்.
பதிலளிநீக்குarumai... vaalththukkal
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குநல்ல கவிதை... வெப்ப மனதில் வெந்து போயின மலர்கள்
பதிலளிநீக்குஅருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎன்னமா யோசிக்கிறீங்க !!
பதிலளிநீக்குஎதார்த்தம்...
பதிலளிநீக்குகற்பனை செய்துக் கொண்டே படித்தேன் லஷ்மி..கவிதை அருமை...
பதிலளிநீக்குஅபாரம்!
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html
பதிலளிநீக்குதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு...
பதிலளிநீக்குகாட்சியைக் கண்முன் நிறுத்தி கருவைப் படம்பிடித்துக் காட்டிய கவிதை.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குtamilmanam- 7
நல்ல கவிதை!
பதிலளிநீக்குகோவிலும் கிழவியும் தங்கவெள்ளி மலர்களும் கண் முன் நிற்கின்றன. அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு--
ஆயினும் அவன் தோட்டத்து
பதிலளிநீக்குமல்லிகைச் செடிகள் மட்டும்
மொட்டு விட மறந்து போயின
அதன் பிறகு.
இப்படியே மலர்களும் மனிதனைத் தண்டிக்க முற்பட்டால்,வெறும் குச்சியும் மட்டையுமே மிஞ்சும்...அதற்குள் மனிதன் ,உண்மையான பக்தியை உணரட்டும்,
pookkalin saabham alla...pookkalin varuththam. very nice.
பதிலளிநீக்குமிக அருமையாக இருக்கிறது கவிதை. கடைசி வரிகள் சூப்பர் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை திருவாரூர் தேரோடும் வீதி ஒன்றில் சைக்கிளில் வேகமாக போய்க்கொண்டு இருந்தேன். வழியில் ஒருவர் லிப்ட் கேட்டார். என்னைய வெச்சு மிதிக்கிறதுக்குள்ளயே மூச்சு வாங்குது...இதுல எக்ஸ்ட்ரா லக்கேஜ் வேறயா என்று அலட்சியப்படுத்திவிட்டு அவரைக் கடந்த நொடிதான் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதைக் கண்டேன். சட்டென்று மனதில் உறுத்தல் ஏற்பட்டு அவரை அழைத்துக்கொள்ளலாம் என்று திரும்பிய போது யாரோ ஒருவர் தன் மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டதைப் பார்த்ததும் எனக்கு ஏமாற்றமாயிற்று. அடுத்த சில நாட்கள் அவருக்கு உதவ முடியாமல் போயிற்றே என்று வருத்தத்துடன் தான் கழிந்தது. நீ என்னத்த பெருசா கிழிச்சுட்ட என்று என் மன சாட்சி என்னை கேள்வி கேட்கக்கூடிய இந்த சம்பவத்தை தூசி தட்டி என் நினைவுக்கு கொண்டு வந்த ஆழமான கவிதை இது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
மிக அருமை ராமலெக்ஷ்மி. வாழ்த்துக்கள் கீற்று வெளியீட்டுக்கு..:)
பதிலளிநீக்குபாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//எதார்த்தம்..நாம் எங்கேயோ எப்போதோ சந்தித்த அனுபவம் போல் உள்ளது..வாழ்த்துகள்..//
நன்றி மலர்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.//
கருத்துப் பகிர்வுக்கு நன்றிங்க vgk.
பிரசாத் வேணுகோபால் said...
பதிலளிநீக்கு//அருமை அக்கா... சிம்ப்ளி சூப்பர்ப்... படித்து முடித்த பின்னும் கடைசி வரிகள் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது...//
நன்றி பிரசாத்.
சந்ரு said...
பதிலளிநீக்கு//அழகிய வரிகள்..//
நன்றி சந்ரு.
S.Menaga said...
பதிலளிநீக்கு//அருமை அக்கா!!//
நன்றி மேனகா.
ஹேமா said...
பதிலளிநீக்கு//ம்...இதுதான் சாபம் !//
கருத்துக்கு நன்றி ஹேமா.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//வரமாய் வாங்கும் சாபம்...!//
இதுவும் சரியே. நன்றி ஸ்ரீராம்.
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//அட்டகாசம் :-)//
நன்றி உழவன்:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//உண்மை. கொடுத்தால் தான் எதுவும் கிடைக்கும்.//
ஆம், நன்றி தமிழ் உதயம்/
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//arumai... vaalththukkal//
நன்றி சரவணன்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை//
நன்றி ஸாதிகா.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை... வெப்ப மனதில் வெந்து போயின மலர்கள்//
மிக்க நன்றி நீலகண்டன்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க லக்ஷ்மி.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//என்னமா யோசிக்கிறீங்க !!//
நன்றி மோகன் குமார்:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//எதார்த்தம்...//
நன்றி குமார்.
June 22, 2011 10:39 AM
பதிலளிநீக்குதமிழரசி said...
//கற்பனை செய்துக் கொண்டே படித்தேன் லஷ்மி..கவிதை அருமை...//
வாங்க தமிழரசி. மிக்க நன்றி.
kathir said...
பதிலளிநீக்கு//அபாரம்!//
மிக்க நன்றி கதிர்.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.//
அன்புக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
GEETHA ACHAL said...
பதிலளிநீக்கு//ரொம்ப நல்லா இருக்கு...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.
கீதா said...
பதிலளிநீக்கு//காட்சியைக் கண்முன் நிறுத்தி கருவைப் படம்பிடித்துக் காட்டிய கவிதை.//
வாங்க கீதா. மிக்க நன்றி.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//அருமை...
tamilmanam- 7//
நன்றி சசிகுமார், ஏழுக்கும்:)!
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை!//
நன்றி அமைதி அப்பா.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//கோவிலும் கிழவியும் தங்கவெள்ளி மலர்களும் கண் முன் நிற்கின்றன. அருமை ராமலக்ஷ்மி.//
மிக்க நன்றி வல்லிம்மா.
goma said...
பதிலளிநீக்கு//இப்படியே மலர்களும் மனிதனைத் தண்டிக்க முற்பட்டால்,வெறும் குச்சியும் மட்டையுமே மிஞ்சும்...அதற்குள் மனிதன் ,உண்மையான பக்தியை உணரட்டும்,//
உண்மைதான், ஏற்கனவே இயற்கை பலவிதங்களில் தன் மறுப்பைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. வானம் பொழியவும் பூமி விளையவும் மனிதன் மனதில் இருக்க வேண்டும் ஈரம். மிக்க நன்றி.
நானானி said...
பதிலளிநீக்கு//pookkalin saabham alla...pookkalin varuththam. very nice.//
இந்தப் பார்வை அருமை. மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு//மிக அருமையாக இருக்கிறது கவிதை. கடைசி வரிகள் சூப்பர் வாழ்த்துகள்..//
வாங்க மலிக்கா. மிக்க நன்றி.
சரண் said...
பதிலளிநீக்கு// என் மன சாட்சி என்னை கேள்வி கேட்கக்கூடிய இந்த சம்பவத்தை தூசி தட்டி என் நினைவுக்கு கொண்டு வந்த ஆழமான கவிதை இது.//
முதல் பின்னூட்டத்தில் பாசமலர் சொல்லியிருப்பது போல எல்லோருக்குமே எங்கோ சந்தித்த அனுபவம்தான்.
//வாழ்த்துக்கள்.//
நன்றி சரண்.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//மிக அருமை ராமலெக்ஷ்மி. வாழ்த்துக்கள் கீற்று வெளியீட்டுக்கு..:)//
மிக்க நன்றி தேனம்மை:)!
தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.
பதிலளிநீக்குஅருமையா கவிதை!... வாழ்த்துக்கள் உங்களுக்கு.......
பதிலளிநீக்கு@ அம்பாளடியாள்,
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல கவிதை :)
பதிலளிநீக்கு@ கவிநயா,
பதிலளிநீக்குநன்றி கவிநயா!
வித்தியாசமான சிந்தனையில் அருமை.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் மருந்தைஅடித்து பூக்கவைத்துவிடுவார்களே :))
தங்க,வெள்ளி பூக்களுடன் ஏழை பூக்கார அம்மாவின் பூவையும் கொஞ்சம் வாங்கி இறைவனுக்கு அர்ச்சனை செய்து இருந்தால் இறைவன் மகிழ்ந்து இருப்பார்.
பதிலளிநீக்குஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதை அறியாத மனிதன்.
கவிதை அருமை ராமலக்ஷ்மி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.
பதிலளிநீக்கு