செவ்வாய், 15 அக்டோபர், 2019

மல்லிகை மகள்: கறுப்பாட்டுக் குட்டியின் கனவினில்..


ங்கே எந்த
குட்டி விலங்குகளைக் கண்டாலும்
குஷியாகி விடுகிறாள் ஹிரண்மயி.
தினம் பக்கத்து வீட்டு நாய்க்குட்டியின்
பட்டுடலைத் தடவிக் கொடுத்த பின்னரே
பள்ளிக்குச் செல்வாள்.
                                                                                                                                                             
சென்றவார நெடும்பயணத்தில்
சாலையோரப் பெட்டிக்கடையில்
தண்ணீர் வாங்கச் சென்றபோது
உள்ளிருந்து எட்டிப் பார்த்தப்
பூனைக்குட்டியைப் பற்றித் தூக்கி
‘குட்டி மியாவ் குட்டி மியாவ்’ எனக்
கடையைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.

ன்று குலதெய்வம் கோயில் முன்
அரச மரத்தடி நிழலில்
துள்ளித் திரிந்திருந்த
கறுப்பாட்டுக்குட்டியைத்
தூக்க முடியாமல் தூக்கி விட்டாள்.
பூனைக் குட்டியைப் போல
நழுவ எத்தனிக்காமல்
அவளது பிஞ்சுக் கைகளுக்குள்
கால்களைப் பரப்பி
அடைக்கலமான ஆட்டுக்குட்டி
பரவசத்தில் மினுங்கிய
அவளது கண்களை
மிரளாமல் பார்த்திருந்தது.

ள்ளிரவில் தூக்கம் கலைந்து
‘குட்டி மேமே.. குட்டி மேமே..’ என
அரற்றியவளை
தட்டித் தூங்க வைக்கிறாள் அம்மா.
பல மைல்களுக்கு அப்பால்
பால்நிலா காய்ந்த  கோயில்நடையில்
படுத்திருந்த கறுப்பாட்டுக்குட்டியும்
தன்னைக் கொஞ்சித் தழுவிய
குட்டித்தாயின் நினைப்பில்
குரல் எழுப்புகிறது
‘ம்மே..’ என்று.
**

அக்டோபர் 2019, மல்லிகை மகள் இதழில்..,

நன்றி மல்லிகை மகள்!

***

12 கருத்துகள்:

  1. வேறுவகை முடிவை பதைப்புடன் எதிர்பார்த்த எனக்கு நிம்மதி.  நினைவுகளில் நண்பர்கள்.  ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.
    கருப்பாட்டுக்குட்டி குட்டித்தாயை நினைத்து குரல் எழுப்புவது அருமை.

    பதிலளிநீக்கு
  3. வீட்டு விலங்குகளை பராமரித்தால் அது உடலுக்கும் மனதுக்கும்நல்லதுஎன்று கூறக்கேள்வி

    பதிலளிநீக்கு
  4. ஹிரன்மயி கனவில் வழியும் அன்புக்குச் சற்றும் குறைந்தது அல்ல கறுப்பாட்டுக்குட்டியின் மறுமொழி. கவிதை மனதை மகிழ்வித்தது. அருமை.

    பதிலளிநீக்கு
  5. குட்டி இரண்டு உள்ளங்களின் அன்பான ஏக்கம்.அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin