தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் 2019 செப்டம்பர் மாத இதழில் நான் எடுத்த படங்களோடு வெளியாகியுள்ள இரு கவிதைகளில் ஒன்று..
துருவங்கள்
நெருப்பாய் அவனும்
அவனை இழுத்து மூழ்கடிப்பதில்
தீவிரமாய் அவளும்.
சிறிது தூரம் கூட
தாக்குப் பிடிக்க முடியாத
பயணத்தில்
விசும்புகிறாள் தன்னை அவன்
கொல்ல முயல்வதாக.
கூச்சலிடுகிறான் அவன்
தண்ணீருக்கடியில் தான்
மூச்சுத் திணறுவதாக.
*
தென்றல் இதழின் இணையதளத்தில் கணக்கை உருவாக்கிக் கொண்டு வாசிக்கலாம் இங்கே .
நன்றி தென்றல்!
**
ஒன்று இங்கே....
பதிலளிநீக்குஇன்னொன்று எங்கே?!!
விரைவில் பகிர்ந்திடுகிறேன் :).
நீக்குபருவ மயக்கத்தில் இணைந்து உருவ மயக்கத்தில் மூழ்கியபின் மூச்சுத்திணற வைக்கின்றன கிடைத்துவிட்ட பொருளின் சலிப்பும், உண்மை வாழ்வின் நிதர்சனமும்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகான படம். சிறப்பான கவிதை. தென்றல் வெளியீடு - வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅமெரிக்கா மாத இதழில் உங்களின் கவிதை இடம்பெற்றதற்கு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதுருவங்கள் இணைந்தால் அது அதிசயம்.
கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.
நீக்குஉணர்வுகள் அடங்கியபின்பே உண்மை அன்பு புரிகிறது. நெருப்பு - கனலென வார்த்தைகள்; பொருத்தமான உருவகம். தென்றல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
நன்றி.
நீக்கு