ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

அவிச்ச கடல.. இந்திய சாலையோர உணவு.. - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (7)

#1
அவிச்ச கடல..
ஆவி பறக்க.. ஆரோக்கியம் பெருக.. 


வேர்க்கடலையைப் பிடிக்காதவர்கள் உண்டா? வறுத்த கடலை, அவித்த கடலை, அதுவும் தோலோடு அவித்த வறுத்த கடலைகளை ஒன்றொன்றாக உடைத்துச் சாப்பிடுவது சுவாரஸ்யமான டைம் பாஸ். கடற்கரையாகட்டும், மக்கள் கூடும் பூங்காங்கள், பொருட்காட்சிகள், பொது இடங்களிலாகட்டும் கடலை விற்பவர்கள் இல்லாதிருக்க மாட்டார்கள். இந்தப் படம் பெங்களூர் குமரக்ருபா சாலையில், சித்திரச் சந்தை கண்காட்சியில் எடுத்த படம்.

ஓரிரு வாரங்களுக்கு முன் டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் ‘என் படம்’ பகுதிக்கு அறிவித்திருந்த தலைப்பு,  “இந்திய சாலையோர உணவு”. சட்டெனக் கைகொடுத்தது... எப்போதோ எடுத்துப் பகிர்ந்திருந்த “அவிச்ச கடல” படம் :)! தேர்வான 5 படங்களில் ஒன்றாக.. இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில்..


**

நன்றி டெகன் ஹெரால்ட்!
***

5 கருத்துகள்:

  1. படங்கள் அருமை.  அவிச்சக்கடலை அருமையான உணவு!

    பதிலளிநீக்கு
  2. அதுவும் பெங்களூரில் கோட்சூட அணிந்தவர்கள்பைகளில் கட்டாயம் கடலைஇருக்குமென்றுபார்த்த நினைவு 1960 களில் இன்னும் அதிகம்

    பதிலளிநீக்கு
  3. இன்று நவராத்திரி பிரசாதம் வேர்கடலை சுண்டல்தான்.
    அவித்த கடலை மிகவும் சுவை. ஆனால் கொஞ்சம் தான் சாப்பிட முடியும்.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin