Sunday, June 30, 2013

பெங்களூர் சித்திரச் சந்தை 2013 - பத்தாவது பதிப்பு (பாகம் 1)

ஐந்து மாதங்களாயிற்று. ஜனவரி 2013, இதே போன்றதொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று கோலாகலமாக நடந்து முடிந்தது பெங்களூரின் “சித்திரச் சந்தை 2013 - பத்தாவது பதிப்பு” இலட்சக்கணக்கானப் பார்வையாளர்களையும் ஆயிரக் கணக்கானப் பங்கேற்பாளர்களையும் பெற்று.
#1

அனைவருக்கும் கலை” என்பதைக்  குறிக்கோளாகக் கொண்டு, கலைஞர்களுக்கும் இரசிகர்கர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பாலமாக அமைந்து, கடந்த பத்து ஆண்டுகளாகக்  கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் (CKP) நடத்தி வரும் திருவிழா இது. அசோகா ஓட்டலும், சித்ரகலா வளாகமும் அடுத்தடுத்து இருக்கிற குமர க்ருபா சாலையும் அதன் பக்கச் சாலைகளும் அன்றைய தினம் போக்குவரத்து தடுக்கப்பட்டு கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது, எப்போதும் போல.  [“சித்திரச் சந்தை 2012” பகிர்வு இங்கே.] சென்ற வருடம் 1260 ஸ்டால்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போகும் வரவேற்பினாலும், பங்கேற்க ஓவியர்கள் காட்டி வரும் ஆர்வத்தினாலும் இந்த முறை எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கப் பட்டிருந்தது.

#2

இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக,
கர்நாடகாவின் முக்கிய ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள் நூறு பேரின் ஓவியங்களுடன் வளாகத்தின் உள்ளே “பேராசிரியர். எம்.எஸ். நஞ்சுண்ட ராவ் நினைவு’ ஓவிய ஆசிரியர்கள் கண்காட்சி” முந்தைய தினமான ஜனவரி 26 முதல் 3 நாட்களுக்கு நடைபெற்றது. பேராசிரியர் பெயர் பெற்ற ஓவிய ஆசிரியர் மட்டுமல்ல, இந்தக் கலைக்கல்லூரியை நிறுவியரும்.


#3 சித்ரகலா பரிக்ஷத்
இன்னொரு சிறப்பம்சமாக,

கடந்து முப்பது ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய 10 ஓவிய ஆசிரியர்களுக்கும், இரண்டு ஓவிய விமர்சகர்களுக்கும் விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள்.

#4 நுழைவாயில்

#5 மக்களை வரவேற்கிறது கல்லூரியின் முன் நின்று..

காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டுமணி வரை நடைபெற்ற கண்காட்சியின் மாலை நான்கு மணி அளவில் தென்பட்ட நிலவரம். ஒன்றரை கிலோ மீட்டர் நீளும் சாலையின் கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். மனிதத் தலைகள் தவிர்த்து ஏதேனும் தென்படுகிறதா பாருங்கள் (ஐஸ் விற்கும் வண்டிகள் தவிர்த்து). இதனால்தான் வருவோரை வரவேற்கும் பொம்மை இத்தனை உயரமாக:)!
#6

#8 வாங்க, ஒரு துண்டு எடுத்து கடித்தபடியே உள்ளே போகலாம்:)!

#9  அழகிய ஓவியம் மீண்டும் உயிர் பெறுகிறது காகிதத்தில்..

#10 எத்தனையோ பேரின் முகங்களை வரைந்து கொடுத்து மகிழ்வித்தவரின் முகம் உங்களுக்கும் தெரிய வேண்டாமா?
ஒழுங்காக வரைகிறாரா என அண்ணன்காரர் அருகே நின்று கவனிக்கிறார்!
சுமார் 50 பேருக்கும் மேலானவர்கள் இதில் ஈடுபட்டிருந்தார்கள். இளைஞர்கள், யுவதிகள், சிறுவர் சிறுமியர் ஆவலோடு தங்களை வரைந்து வாங்கிக் கொள்ளப் பொறுமையாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

#11

இந்த ஓவியரின் முகத்தைக் காண்பிக்கவில்லையே எனக் கேட்காதீர்கள். “எள் விழ இடம் இல்லை” என்பதை நேரில் அன்றுதான் கண்டேன். சாட்சிக்கு இன்னொரு காட்சி:)!

#12

ஒரு மரை கழன்றால் ‘ஜெம்ஸ்’ விளம்பரத்தில் வருகிற மாதிரி ‘பொல பொல’வென உதிர்ந்திடுமோ எனத் தோன்ற வைத்தது முழுக்க முழுக்க nut,bolt, wheel bearing இத்யாதி இத்யாதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒட்டகம்.
 #13

#14 நிழற்படமோ என எண்ண வைக்கும் உயிர்ப்பான பழுப்புக் கண்களுடன்..வசந்தாவின் ஓவியங்கள்:

#14 சோவிகளை அழகு பார்க்கும் மங்கை
மரங்களில் மாட்டப்பட்டிருந்த, சரிவாக அடுக்கப்பட்டிருந்த, சட்டமிடாமல் மடிப்புகளுடன் தொங்கிக் கொண்டிருந்த, தரையில் விரிக்கப்பட்டிருந்த படங்களை நேர்கோணத்தில் முழுமையாகக் காட்டுவது பெரிய சவாலாகதான் இருந்தது. இயன்றவரை முயன்றும் கண்ணாடியில் அழகுபார்க்கும் முகம் சட்டத்துக்குள் வராது போயிற்று. அதை உங்கள் கற்பனைக்கு விட்டிடலாம்தானே:)?

 #15 கேரள நங்கையர்

ஆரோக்கிய ராஜின் ஓவியங்கள்:
#16


#17

சென்ற வருடம் எங்கும் காணாத ஒரு அறிவிப்பு இந்த வருடம் சில ஸ்டால்களில் இருந்தன. “No Photography" என்பதே அது. தங்கள் படைப்புகள் பலரைச் சென்றடைவதில் அவர்களுக்கு இதுகாலமும் தயக்கம் இருக்கவில்லை. ஆனால் சில நிகழ்வுகளால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.  

சித்திரச்சந்தை 2012-ல் நெல்லைக் கலைஞர் மாரியப்பனது ஓவியங்களைப் புகைப்படம் எடுத்துச் சென்ற ஒரு நபர் அதைத் தனது படமாக ஒரு சிறுபத்திரிகையின் அட்டையில் வெளியிட்டு விட்டார். அவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்த ஓவியர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, வரைந்த ஓவியங்களுடன் அவரை நிற்க வைத்து நான் போன வருடம் எடுத்த படத்தை உடனடியாக அனுப்பக் கோரினார் சிலகாலம் முன்னர். நானும் அனுப்பி வைத்தேன். இந்தக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தபோது அதுகுறித்துக் கேட்டேன். தவறு செய்து விட்டதாக உரியவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொன்னார். அவரும் இந்த முறை அறியாதவர்களைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. எனக்கு அளிக்கப்பட்டது விதிவிலக்கு:)! ‘கல்கி ஆர்ட் கேலரி’க்காக அவரை நான் கண்ட நேர்காணல் உங்களுக்கு நினைவிருக்கும். அவரது இவ்வருடப் புது ஓவியங்கள் தனிப்பதிவாக விரைவில். 

சென்ற முறையும் சரி, இப்போதும் சரி. படங்களை எவரும் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாதென்கிற கவனத்துடன் அவை சித்திரச் சந்தை படங்கள் என்பதை ஓவியங்களின் மேலேயே குறிப்பிட்டு விடுகிறேன். ஓவியர்களின் காப்புரிமைக்கு உட்பட்ட இவற்றை அவர்கள் அனுமதியின்றி மறுஆக்கம் செய்வதோ, தாங்கள் வரைந்ததாகப் பயன்படுத்துவதோ தவறு. இங்கே மனமுவந்து தங்கள் படைப்புகளைப் படம் எடுக்கப் பல ஓவியர்கள் அனுமதித்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களது பெருந்தன்மையையே காட்டுகிறது. அதை மதித்து அவற்றை இரசித்துப் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம்.

சில ஓவியர்கள் ஓவியத்திலேயே கையொப்பமிட்டிருக்க சிலர் அவ்வாறு செய்வதில்லை. பிரமிக்க வைத்த வித்தியாசமான ஓவியங்கள் சிலவற்றைப் படமாக்கி வந்தபிறகு பெயர் இல்லாதது வருத்தம் தந்தது. ஒவ்வொருவரிடம் பெயர் கேட்கும் சூழலும் அங்கில்லை. இலட்சக்கணக்கான பார்வையாளர்களில் வாங்கும் ஆர்வம் காட்டுகிறவர் தவிர்த்து இரசிக்க, வேடிக்கை பார்க்க, படம் எடுக்க வந்தவர்களிடம் அதிகம் பேச ஆர்வம் காட்டவில்லை ஓவியர்களும். பெரும்பாலான ஓவியர்கள் களைப்பாகக் காணப்பட்டார்கள். 

சென்ற வருடம் நண்பகலில் சென்றிருந்தேன். அப்போது கூட்டம் இருந்தாலும் இப்படி நடக்க வழியில்லாத அளவுக்கு இல்லை. வியாபாரம் சூடு பிடிப்பது இரவு ஆறு, ஏழுமணிக்கு மேல்தான் என்கிறார்கள். ஒரு சுற்று போய் வந்து, கண்காட்சி முடிகிற நேரம் பேரம் படிகிறதா எனப் பார்க்கிறார்கள். சாமான்யர்களும் வாங்கும்படி ரூ 100-ல் ஆரம்பிக்கிற விலை இலட்சத்தையும் தாண்டுகிறது. மிக அதிகமாக விற்றுத் தீர்ந்தவை சுமார் 8"x10"அளவிலான அகோரி ஓவியங்கள். அத்தனையும் விற்று விட்ட அறிவிப்புடன் இருக்க அவற்றைப் பார்க்கவும், விலை கேட்கவும், ஆர்டர் செய்யவும் கூட்டம் முண்டியடித்தது ஒரு ஸ்டாலில்.

இது ஒரு முன்னோட்டமே:)! மேலும் படங்களுடன் பதிவுகள் அடுத்தடுத்து அல்லது நேரமிருக்கையில் பகிருகிறேன். ஓவியம் சம்பந்தமான பதிவுகளை ‘சித்திரம் பேசுதடி’ எனப் பகுத்து வைக்கவும் உள்ளேன், கலை மீது ஆர்வம் கொண்டவர்களின் தேடுதல் வசதிக்காக.
***


பாகம் 2; பாகம் 3; பாகம் 4; பாகம் 5


27 comments:

 1. அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள். பயனுள்ள பதிவு. மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு பாராட்டுக்கள் + நன்றிகள்.

  ReplyDelete
 2. சித்திரங்கள் பேசின ! உண்மை.
  சித்திர சந்தை மிக அழகு.
  சீனாக்காரர்கள் நிறைய பேர் நியூயார்கில் உட்காந்து கொண்டு அரை மணி நேரத்தில் நம்மை படம் வரைந்து கொடுத்து விடுவார்கள். என் மகன், பேரன்,மருமகளை ஒரு இளைஞர் அழகாய் வரைந்து தந்தார். டெல்லியில் உள்ள பெரிய மால்களின் வாசல்களில் வரைந்து தருவார்கள்.

  ReplyDelete
 3. பழுப்புநிறக்கண் காரரின் ஓவியம் தத்ரூபம். எல்லாப் படங்களும் அருமை. இந்தக் கூட்டத்தில் கஷ்டப்பட்டுப் படங்கள் எடுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. ஓவியங்கள் அருமை, நுழை வாயில் பிரமாண்டமா இருக்கே....!

  ReplyDelete
 5. மனதை கவரும் ஓவியங்கள் அனைத்தும் அருமை... நன்றி...

  ReplyDelete
 6. அத்தனையும் அருமை..

  ஒட்டகத்தைப் பார்க்கும்போது transformers நினைவுக்கு வர்றதைத் தவிர்க்க முடியலை :-)

  ReplyDelete
 7. அத்தனையும் அருமையான ஓவியங்கள் ராமலக்ஷ்மி. படம் எடுத்து எங்களையும் பார்த்து ரசிக்க வைத்த உங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 8. மிக்க அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 9. படங்களுடன் அருமையான கட்டுரை...
  வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 10. அற்புதமான ஓவியங்களுடன், அழகான வரிகள்...

  ReplyDelete
 11. Unga punniyaththula yella photovum pakka mudinjathu! roomba nanri hai! :)

  ReplyDelete
 12. போட்டி போடுகின்றன... ஓவியங்களுடன் ...அவற்றை எடுத்த படங்கள் மற்றும் கட்டுரை வருணனைகள்... வாழ்த்துகள்.....

  ReplyDelete
 13. @கோமதி அரசு,

  பெரும்பாலும் தத்ரூபமாக வரைந்து விடுகிறார்கள். தங்கள் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 14. @Malini,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலினி:)!

  ReplyDelete
 15. @தக்குடு,

  வாங்க தக்குடு:)! நன்றி. இன்னும் பல ஓவியங்களை அடுத்தடுத்த பாகங்களாகப் பகிர உள்ளேன். நேரமிருக்கையில் பார்த்திடுங்கள்.

  ReplyDelete
 16. @Advocate P.R.Jayarajan,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 17. அனைத்தும் அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin