Sunday, June 9, 2013

தூறல்: 13 - காமிக்ஸ் இரசிகர்களா நீங்கள்..; குங்குமம் தோழி; கல்கி சிறுகதைப் போட்டி 2013; WTC பெங்களூரு

            இரும்புக்கை மாயாவி; ரிப் கெர்பி-டெஸ்மாண்ட்; மாண்ட்ரேக்-லொதார்-ஓஜோ, நர்தா-கர்மா; வேதாளம்-டயானா, குதிரை கேசரி-நாய் வாலி பொன்னிற முடிச் சிறுவன் ரெக்ஸ் இவர்களெல்லாம் யாரென்றே தெரியாதா? அப்போது உங்களுக்கானதல்ல சில தினங்களுக்கு முன் பெங்களூர் கோரமங்களா இன்டோர் ஸ்டேடியத்தில் கோலாகலமாய் நடந்து முடிந்து “காமிக் கான் 2013, பெங்களூர்”.
ஆனால் நிச்சயமாய் இந்நாளைய வீடியோ காமிக்ஸ், கேம்ஸ், மற்றும் தொடர்களில் வருகிற கதாபாத்திரங்களின் இரசிகர்களான உங்கள் குழந்தைகளுக்கானதுதான். அப்படி எண்ணிதான் மகளை அழைத்துச் சென்றிருந்திருக்கிறாள் என் தங்கை. பிறகுதான் தெரிய வந்திருக்கிறது இது அதி தீவிர காமிக்ஸ் இரசிகர்களான பெரியவர்களுக்குமானதாக இருந்ததை. எங்கள் காமிக்ஸ் பற்று, இரசனையைப் பற்றி ஏற்கனவே ‘கட்டிப் போட்டக் கதைகளில்’ பகிர்ந்திருக்கிறேன்.

75 கடைகள் பரப்பி வைத்த புத்தகங்களோடு, காமிக்ஸ் கதாபாத்திரங்கள் அச்சான டி-ஷர்ட்-கள், போஸ்டர்-கள், முகமூடிகள், வேடம் தரிக்க உடைகள் என எல்லாக் கடைகளிலும் விற்பனை தட்டுகள் வேகவேகமாகக் காலியானபடி இருந்திருக்கின்றன. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் எல்லாம் எழுபது, எண்பதுகளில் வந்த அதே வடிவில் பிரதிகள் கிடைத்திருக்கின்றன. பல பெரியவர்கள் முண்டியடித்தபடி ஆண்டு வரிசையின்படித் தேடித்தேடி அவற்றை அள்ளிச் சென்றிருக்கின்றனர்.

தொழில்ரீதியாக நிர்வாகிகளால் அமர்ந்தப்பட்டிருந்த வெளிநாட்டு, உள்நாட்டு கதாபாத்திர வேடதாரிகள் போக, அங்கேயே உடை வாங்கி அங்கேயே வேடம் தரித்துத் திரிந்த குழந்தைகள், யுவதிகள், இளைஞர்களை எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து படம் எடுத்தபடி இருந்தார்களாம். Batman, Star Wars கதாபாத்திர உடைகள் அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன. ‘விஐபி போல உணர்ந்தோம் தொடர்ந்து எங்கள் மேல் விடாமல் மின்னிய கேமரா ஃப்ளாஷ் ஒளியில்’ எனக் குதூகலமாய் சொல்லியிருந்தார் ஒரு கல்லூரி மாணவி, பத்திரிகைச் செய்தியில்.

நிகழ்வின் கடைசி தினத்தில் சென்றபடியாலும், இப்படியான ஒரு கொண்டாட்டத்தை எதிர்பாராததாலும் எனக்கு முன் கூட்டித் தெரிவிக்க முடியவில்லை என வருத்தப்பட்டாள் தங்கை. அப்படியே ஒரு கால்மணி நேரம் எங்கள் காமிக்ஸ் காலத்துக்கு தொலைபேசி உரையாடலிலேயே சென்று வந்து விட்டோம்:)! நிகழ்வு பெற்ற பெரும் வரவேற்பில் இதை வருடாந்திரக் கொண்டாட்டமாக்க முடிவு செய்திருக்கிறார் ஜாட்டின் வர்மா. ‘அடுத்த வருடம் பார்த்துக்கலாம்’ என்றேன்.

மேலும் செய்திகளில் கிடைத்த விவரங்கள். தில்லியில்(ரூ.3 கோடிக்கு விற்பனை) வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து சென்ற செப்டம்பரில் பெங்களூரில் சிறிய அளவில் காமிக் கான் எக்ஸ்ப்ரஸ் என நடத்தியது (விற்பனை ரூ.45 இலட்சம்) பரவலான பாராட்டைப் பெற இனி ஒவ்வொரு கோடையிலும் செய்ய முடிவெடுத்து ஜூன் 1,2 தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் அளிக்கப்பட்ட பேட்டியில் விற்பனை சென்றமுறையை விட இருமடங்காகும் என எதிர்பார்ப்பதாகச் சொல்லப்பட்டது.

‘மூச்சு விடக் கூட நேரமின்றித் தொடர்ந்து பில் போட்டபடியே இருந்ததுதான் தெரியும். இனிதான் பார்க்கணும் எவ்வளவு லாபமென’ எனக் களைப்பு நீங்காத நிலையில் ஆனால் களிப்புடன் தெரிவித்திருக்கிறார் ஹுஸ்டீரியா நிறுவனத்தின் மேலாளர். முதல்நாளின் பாதியிலேயே 20ஆயிரம் பார்வையாளர்களை நெருங்கிவிட, ஸ்டேடியம் தாங்காத கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அடுத்த வருடம் இன்னும் பெரிய அரங்காகத் தேவைப்படுமென்றும் தெரிவித்திருக்கிறார் ஜாட்டின். தில்லியில் என்னதான் நடக்கிறது? பார்க்கலாமே’ என வந்தவர்களே அதிகம். ஆனால் பெங்களூரில் முழுக்க முழுக்கத் தீவிர இரசிகர்கள், விரல் நுனியில் விவரங்கள் வைத்திருக்கும் அபிமானிகளின் வரவால் அசந்து போயிருக்கிறோம்’ என வியந்து கூறியிருக்கிறார்.

5 சிறந்த கதாபாத்திர வேடதாரிகளைத் (Cos players) தேர்வு செய்து கோவா சுற்றுலா முழுச்செலவைப் பரிசாகவும் வழங்கியிருக்கிறார்கள். அத்தோடு புத்தக வெளியீடுகளும் இந்தத் தினங்களில் நிகழ்ந்திருக்கின்றன. கேம்ப் ஃபயர் காமிக்ஸ், ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தைத் தழுவிய கிராஃபிக் நாவலையும்; ஹோலி கெள நிறுவனம் இந்திய புராணங்களின் அடிப்படையில் ‘அகோரி, இராவணாயன்’ ஆகிய இரு புத்தகங்களையும்;Manta Ray நிறுவனம் இந்திய இளைஞர்களின் கதைகளாக 12 புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றன. Tinkle தன் பங்கிற்கு ‘Tinkle Tall Tales' தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.

விரைவில் மற்ற நகரங்களிலும் இதை நிகழ்த்தத் தயாராகி வருகிறது காமிக் கான். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். நீங்களும் காமிக்ஸ் இரசிகர் எனில் தவற விடாதீர்கள் நிகழ்வை. எந்த வருடத்து புத்தகத்தையும் பெறமுடியுமென உத்திரவாதம் தருகிறார்கள். மொத்தத்தில், குழந்தைகளுக்குக் குதூகலமெனில்,  தொலைத்து விட்டக் குழந்தைமையை மீட்டெடுக்கும் பரவசம் பெரியவர்களுக்கு:)!

                ம்மாத குங்குமம் தோழியில், ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கேள்விகளை முன் வைத்து பதில் வாங்கி வெளியிடுகிற ஒரு கேள்வி ஒரு மனசு’ பகுதியில்...

**

மற்றும் நான் பகிர்ந்த சில நிலைத் தகவல்கள், குங்குமம் தோழியின்  FB பக்கத்தில்..,
நன்றி குங்குமம் தோழி:)!
 *** 

மரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2013

ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். பலரும் தங்கள் தளங்களில் பகிர்ந்திருந்தார்கள். சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் தேதி நெருங்குவதால் ஒரு நினைவூட்டலாக இங்கும்..:

கலந்து கொள்ள இருக்கிற அனைவருக்கும் வாழ்த்துகள்!டத்துளி:

உலக வர்த்தக மையம், பெங்களூரு
*, பெங்களூர் உலக வர்த்தக மையம் [World Trade Center (WTC)], நியூயார்க்கில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் World Trade Centers Association-ல் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது. 32 மாடிகளுடன் பெங்களூரின் தற்போதைய அதிஉயரக் கட்டிடமாகத் திகழும் WTC, ராஜாஜி நகரில், பிரிகேட் பில்டர்களால் கட்டப்பட்டு அவர்களது ‘பிரிகேட் கேட் வே’ வளாகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/8874656367/

* நேர்க் கோணத்தில் இன்னொரு படம்:
Frontal View 
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/8937608904/

* ‘நம்ம ஊரு நம்ம வாழ்க்க’ குங்குமம் தோழி FB ஆல்பத்திலும் வெளியான படம்.
***

28 comments:

 1. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

  தங்களின் படைப்புகள் பலவும் இதழ்களில் வெளியாகியுள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நான் இரும்புக்கை மாயாவி ரசிகன்! காமிக்ஸ் உலகம் தனி உலகம்! குங்குமம் தோழி பிரசுரங்களுக்கு வாழ்த்துகள். கல்கி சிறுகதைப்போட்டி நாள் நெருங்குகிறது! நான் ஏற்கெனவே சொன்னபடி பேப்பர், பேனா எல்லாம் ரெடி! கதை...கதை... அதுதான் கிடைக்கலே! (கடைசி வரியை காதலிக்க நேரமில்லை நாகேஷ் மாதிரி படிக்கவும்!) :))))

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 5. வணக்கம் மேடம்,

  குங்குமம் தோழியில் கடந்த மாத இறுதியிலேயே உங்கள் பதில் படித்தேன். கோவில் திருப்பணி வேலைகள் தற்போது சூடுபிடித்துள்ளதால் அப்போது மெயிலிட முடியவில்லை.

  வாழ்த்துக்கள்.

  நானும் 2000வது ஆண்டில் இருந்தே கல்கி சிறுகதைப்போட்டிக்கு தொடர்ந்து கதைகள் அனுப்பி வருகிறேன். ஆனால் பிரசுரத்துக்கு கூட ஒருமுறையும் தேர்வானதில்லை. ஆனால் மறுபடி அந்த கதைகளை வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமும் ஆகியிருக்கிறேன்.

  எந்த இடத்தில் கோட்டை விடுகிறேன் என்று தெரியவில்லை. இந்த வருடமும் நம்ம முயற்சி தொடரத்தான் போகிறது.

  ReplyDelete
 6. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வாழ்த்துகள் மேடம்..WTC பார்க்க ஜோரா இருக்கு..

  ReplyDelete
 8. இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ரிப் கெர்பி இவங்கல்லாம் என்னோட சின்ன வயசு ஹீரோஸ்! பெங்களூருக்கு அடுத்த வருஷம் தவறாம வந்துரணும்னு முடிவு பண்ணிட்டேன. அவசியம் நடக்கறப்ப ஒரு இன்டிமேஷன் கொடு்த்துருங்க! கல்கியில உங்க மொழிகளைப் பார்க்கறப்ப சந்தோஷமா இருக்கு. எல்லாமே நன்மொழிகள்! கல்கி...! ஸ்ரீராம் சொன்ன மாதிரிதான்... இந்த நேரம் பாத்து எனக்கு பாட்டெழுத வரலை... பாட்டெழுத வரலை... ஹி... ஹி...!

  ReplyDelete
 9. ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளுமிருக்கும் குழந்தைமையை வெளிக்கொணரும் காமிக் திருவிழாவுக்கு வாழ்த்துக்கள். குங்குமம், தோழி இதழ்களில் வெளியான படைப்புகளுக்காக தங்களுக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி. கல்கி சிறுகதைப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சிறு வயதில் காமிக்ஸ் புத்தகங்களை ரசித்ததுண்டு, என்றாலும் தற்போது அவ்வளவு ஈர்க்கவில்லை. டாம் & ஜெர்ரியையே, “அச்சச்சோ” என்று உச் கொட்டிப் பார்க்கிறேன் இப்போதெல்லாம்.

  பலரின் ஆர்வங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நிறைய காமிக்ஸ் பதிவர்களும் இருக்கிறார்கள் போல. எனில், காமிக்ஸுக்கென தனி விழா ஆச்சரியமல்லதானே.

  பெங்களூர் ட்ரேட் சென்டர் கம்பீரமாய் இருக்கீறது.

  ReplyDelete
 11. @ஸ்ரீராம்.,

  உங்கள் காமிக்ஸ் அனுபவத்தை விரைவில் பகிருங்கள்.

  கல்கி. இங்கும் அதே கதைதான்:)!சரியான கரு இன்னும் மாட்டவில்லை. அதுசரி, இன்னும் பேப்பர், பேனா உபயோகிக்கிறீர்களா என்ன:)?

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 12. @திருவாரூர் சரவணன்,

  நன்றி சரண். எந்தப் பத்திரிகையில் பார்த்தாலும் உடன் தகவல் தருவதற்கு. பலநேரம் நீங்கள் சொன்னபிறகே அறிய வந்திருக்கிறேன்.

  இந்த வருடப் போட்டியில் வெற்றிபெற என் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. @பால கணேஷ்,

  சொல்கிறேன் கணேஷ்:)! தினமொழிகள் குங்குமம் தோழி FB பக்கத்தில் வந்தவை. நன்றி.

  ReplyDelete
 14. @ஹுஸைனம்மா,

  எனது சென்ற காமிக்ஸ் குறித்த பகிர்வில் சொன்னதுதான். இப்போது ஈர்க்குமா எனத் தெரியவில்லை. இன்னும் முயன்று பார்க்கவில்லை. ஒரு காலத்தில் விரும்பிப் பார்த்த கிரிக்கெட், டிவியில் ஓடிக் கொண்டிருந்தாலும் திரும்பிக் கூடப் பார்க்கத் தோன்றுவதில்லை இப்போ:)! அதே ஆர்வத்துடன் இன்றும் இருக்கும் காமிக்ஸ் இரசிகர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். அவர்களை இரசிக்கவும் Cos players-யை கேமராவில் பிடித்து அடைக்கவும் முடிந்தால் போக நினைத்திருக்கிறேன் அடுத்த முறை. நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete

 15. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள் ராமலஷ்மி.

  ReplyDelete
 16. //துசரி, இன்னும் பேப்பர், பேனா உபயோகிக்கிறீர்களா என்ன:)?//

  இல்லைதான். அதுதான் கணினி இருக்கிறதே....!! சும்மா நயத்துக்குச் சொல்லத்தான்! :))

  ReplyDelete
 17. காமிக்ஸ் பற்றிய இந்தப் பதிவை எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் சொல்லித் தான் வந்து படிச்சேன். :))) நானெல்லாம் காமிக்ஸே படிச்சதில்லை. :)))))

  ReplyDelete
 18. @Geetha Sambasivam,

  அது ஒரு தனி உலகம்:)! வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 19. இரும்புக்கை மாயாவி - உள்ளம் கொள்ளை கொண்டவராயிற்றே.....

  தில்லியில் நடந்தது தெரியவில்லை எனக்கு.... :(

  நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. @வெங்கட் நாகராஜ்,

  வருடம் ஒருமுறை நடத்தும் திட்டத்தில் இருப்பதால் மீண்டும் தில்லியில் நடைபெறும் என நினைக்கிறேன். நன்றி வெங்கட்.

  ReplyDelete
 21. காமிக்ஸ் இரசிகர் என் கணவர் முத்து காமிக்ஸ் வந்தவுடன் வாங்கி விடுவார்கள். லேட்டாய் போனால் கிடைக்காது.
  நிறைய புத்தங்கள் எங்கள் வீட்டில் இருக்கிறது,
  குங்கமும் தோழியில் உங்கள் கருத்து இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  கல்கி கதை போட்டியில் வெற்றி பெற் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. @கோமதி அரசு,

  காமிக்ஸ் ஆர்வம் பலருக்கும் இருந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா. போட்டிக்கேற்ற கரு அமையாததால் கல்கி போட்டியில் கலந்து கொள்ளவில்லை:)! கலந்து கொண்டிருப்பவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin