Wednesday, June 5, 2013

புகழ் ஒரு குதிரை.. பதவி ஒரு குதிரை..- ஒரு சிற்பம்.. பல கோணம்..

ஒரே சிற்பம்தான். ஆனால் ஒரே படத்தில் அதன் அழகையும் அமைப்பையும் இரசித்து விட முடியாது. பல கோணங்களில், வாழ்வியல் வரிகளோடு பார்த்த பிறகு எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த இடத்தில் இருக்கிறது என எவரேனும் சொல்ல முடிகிறதா பார்க்கலாம்.

#1
புகழ் ஒரு குதிரை 
பதவி ஒரு குதிரை

 #2
அடக்கி அடைந்திடும் துடிப்புடன்
துரத்தியபடி மனிதர்#3
திமிறும் குதிரைகள்
எட்டி உதைத்தாலும்..


#4
கீழே தள்ளி
ஏறி மிதித்தாலும்..

#5
மான அவமானங்களைத்
தூசுபோலத் தட்டிவிட்டெழுந்து#6
தொடருகிற போராட்டம்..
ஓய்வென்பதே இல்லாமல்.


சிற்பத்தைச் சுற்றி வந்து இரசித்தீர்களா? சிந்தனை வரிகளுக்காக மனிதரென்று குறிப்பிட்டிருந்தாலும், கவனித்தீர்களா அவர்கள் Mermen என்பதை. இல்லையெனில், மீண்டும் கடைசிப் படத்தைப் பாருங்கள். Mermaid-களை ஒத்து, ஆனால் இடுப்புவரை ஆண் உருவத்துடன், கீழே மீனின் வாலுடன் தோன்றுகிறார்கள் இக்கதாச்சித்திரங்கள். குறிப்பாகப் பின்லாந்து நாட்டுப் புராணக் கதைகளில்.

சிலை எங்கிருக்கிறது என ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விக்கு சரியான விடை கிடைக்கிறதா பார்க்கலாம். எவருக்கும் தெரியாத பட்சத்தில் பிறகொரு பதிவில் பகிருகிறேன்:)!
***

14 ஜூன் 2013
விடை இங்கே :)!

31 comments:

 1. இவ்ளோ லந்து கொடுக்குதே தாய்லந்து.. ஐமீன் தாய்லாந்துலேதானே இருக்குது??

  ReplyDelete
 2. மிகவும் அருமையான சிற்பங்கள்.
  அதற்கேற்ற வரிகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. சிற்பங்கள் அருமை... பிறகு வந்து தெரிந்து கொள்கிறேன்...

  ReplyDelete
 4. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப் படும்போது எவ்வளவு வித்தியாசம்? அருமை.

  //சிலை எங்கிருக்கிறது என ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விக்கு சரியான விடை கிடைக்கிறதா பார்க்கலாம்.//

  இவ்வளவு நேரம் உங்கள் பதிவில் (மட்டும்) இருந்தது, இப்போது எங்கள் மனதில் இருக்கிறது!!! ஹிஹிஹி...

  ReplyDelete
 5. ஜெர்மனியின் குதிரை ?சரியான்னு சொல்லுங்க அம்மணி !

  ReplyDelete
 6. வெகு அழகாகச் செதுக்கப்பட்ட குதிரைகள்.
  குதிரைகள் மட்டும் இருந்தால் உங்கள் ஊராகக் கூட இருக்கலாம். பின்னால் தெரியும் மரங்கள் உங்கள் ஊரில் நிறையப் பார்த்திருக்கிறேன்.
  அடக்கும் மனிதனும் ,மார்பிளில் வடிவாகி இருக்கிறான்.இத்தாலியாக இருக்குமோ.அழகுக்க்கு எந்த இடமாயிருந்தால் என்ன.

  ReplyDelete
 7. அழகிய சிற்பங்கள்.அருமையான சிந்தனை.பாராட்டுக்கள்

  ReplyDelete
 8. ஐந்தாவது படத்தில் பின்னால் குழந்தைகள் விளையாட்டுப் பொருள் ஒன்று தெரிகிறது.. பெங்களூர்? எந்த ஊராக இருந்தாலும் படங்கள் அருமை..

  ReplyDelete
 9. அழகு சிற்பங்கள்..இத்தாலி என நினைக்கிறேன் அக்கா!!

  ReplyDelete
 10. @அமைதிச்சாரல்,

  இல்லை சாந்தி. சரியான விடையை வல்லிம்மா ஊகித்து விட்டார்கள்:)! தியானாவும்.

  ReplyDelete
 11. @Bagawanjee KA.

  நம் நாட்டுக் குதிரைகள்தாம்:). வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 12. @வல்லிசிம்ஹன்,

  உங்கள் முதலாவது ஊகம் சரியே. மரங்களை வைத்தே விடையை நெருங்கிய விதம் அருமை:)! பெங்களூரில் எந்த இடத்தில் என்பதை இன்னொரு பதிவாக விரைவில் பகிருகிறேன். நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 13. @தியானா,

  சரியே தியானா:)! நன்றி.

  ReplyDelete
 14. @S.Menaga,

  பெங்களூரில் உள்ள சிற்பமே:)! நன்றி மேனகா.

  ReplyDelete
 15. ஆஹா.

  கண் சரியாகத்தான் தெரிகிறது என்ற மகிழ்ச்சியைவிட எனக்குப் பங்களூரு

  ரொம்பவே பிடித்த நகரம் என்பதே உண்மை. மகன் வீட்டுப் பால்கனியிலிருந்து பார்க்கும்போது இந்த மரங்கள் நிறைய தென்படும். நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 16. @வல்லிசிம்ஹன்,

  உண்மைதான். இந்த வகை மரங்கள் அதிகமே இங்கு. நன்றி வல்லிம்மா:)!

  ReplyDelete
 17. வெவ்வேறு கோணங்களில் சிலைகள் அற்புதம்.

  சிறப்பான படங்களை எடுத்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 18. குதிரை படங்கள் மிக அருமை.
  உங்கள் ஊர் தானே !

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin