ஞாயிறு, 18 நவம்பர், 2012

இருளில் ஒளி



1. தடையாய் நிற்கும் பெரிய மலையை அகற்றுவது சிறிய கற்களைச் சுமப்பதிலேயே தொடங்குகிறது.

2. கோபங்களையும் வருத்தங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டே இருப்பதால் வீணாவது நம் சக்தியே.

3. கோபத்தால் ஏற்படும் சங்கடங்கள், கோபத்தை ஏற்படுத்தியக் காரணங்களை விடத் தாங்க முடியாததாகி விடுகின்றன.

4. சாதனைகளை விடப் பெருந்தன்மைக்காக, ஈட்டிய பொருளை விடப் பழகும் பாங்கிற்காக, பெற்ற வெற்றிகளை விடச் செய்த உதவிகளுக்காக நினைவு கூரப்பட வேண்டும் மனிதர்கள்.

5. இருளில் தெரியும் ஒளி பிரகாசமானது. சூழும் பிரச்சனைகளுக்கு நடுவே விட்டு விடாத நம்பிக்கை வலிமையானது.

6. இக்கணம் தவிர்த்து எக்கணமும் நம் கையில் இல்லை. உணர்வோம் அதன் மதிப்பினை.

7. பார்ப்பதை விட அவதானிக்கவும், கேட்பதை விட செவிமடுக்கவும், செவிமடுப்பதோடு புரிந்து கொள்ளவும் அக்கறை காட்டுவோம்.

8. நன்கு சிந்தித்த பின்னரே சொல்ல வேண்டியவற்றில் முக்கியமான ஒன்று, நம்மால் சாத்தியமில்லை என்பது.

9. எவரது இலக்குகளும் எவர் கண்ணுக்கும் புலப்படுவதில்லை. வெற்றித் தருணங்கள் மட்டுமே அவற்றை வெளிக் கொண்டு வருகின்றன.

10. எங்கு காத்திருக்க வேண்டும், எப்போது முன் செல்ல வேண்டும் என்பதை அனுபவம் கற்றுத் தருகிறது.

***
(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)




சென்ற தொகுப்பில் பகிர்ந்த நிலைமொழி ஃபேஸ்புக் பரணில் வெளியாகி, 5 நவம்பர் 2012, குங்குமம் வலைப்பேச்சிலும்:
நன்றி FB பரண்! நன்றி குங்குமம்!
***




28 கருத்துகள்:

  1. அனைத்தும் முத்துக்கள்... சேமித்துக் கொண்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறப்பான அறிவுரைகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. போன்மொளிகளைப்போல பொக்கிஷமான கருத்துக்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே, குறிப்பாக 2 மற்றும் 3 மிக அருமை.

    குங்கும வெளிச்சத்துக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே மிகவும் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்ரி

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே ரொம்ப நல்லாருக்கு. குங்குமத்தில் வெளியானதற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் எல்லாமே வாழ்வியல் முத்துக்கள் அக்கா !

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள்...ஒரு புக் விடாம வறீங்க...

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள்

    குங்குமம் சர்க்குலேஷன் லைப்ரரி மூலம் வாசிக்கிரேனே. இந்த இதழ் புத்தகம் இன்னும் எங்களுக்கு வரலை போலும்

    பதிலளிநீக்கு
  10. அருமையான அறிவுரைகள். குங்குமத்தில் வெளியானதற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து மொழிகளும் அருமை .குங்குமத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. @மோகன் குமார்,

    இது வெளியாகி 2 வாரங்கள் ஆகிவிட்டன:). கவனித்திருக்க மாட்டீர்கள். நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  13. நான்காவது மிக அருமை. குங்குமத்தில் வத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin