கடந்த சில மாதங்களாக டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. விழிப்புணர்வுக்காகப் பரவலாகப் பரிந்துரைப்பட்டு வரும் சில குறிப்புகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது நல்லது.
அறிகுறிகள்:
கொசுக்கடியால் தொற்றிக் கொள்கிற இந்த எலும்பு முறிவுக் காய்ச்சலின் அறிகுறி உடம்பில் தெரிய ஆரம்பிக்க ஐந்து முதல் ஏழுநாட்களாகின்றன.
104 F வரையிலான காய்ச்சல், கண்கள் சிவத்தல், வேகமான நாடித் துடிப்பு, தோல் பிசுபிசுப்பு, நிலை கொள்ளாதத் தவிப்பு ஆகியன அறிகுறிகள். இந்தத் தொற்றினால் குடல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கும் வாய்ப்புடன், இரப்பைக் குடலழற்சி (gastroenteritis) ஏற்படவும் கூடும்.
சிகிச்சை:
உடனடியாகக் குடும்ப மருத்துவரை அணுகவும். செல்லத் தாமதமாகும் பட்சத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்த முதலில் பாராசிடமால் எடுக்க வேண்டும்.
உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று தேய்ந்து வெதுவெதுப்பாக்கி அவற்றால் அவ்வப்போது கண்களுக்கு ஒருநிமிடம் வரை ஒத்தடம் கொடுப்பது இதம் அளிக்கும்.
ஆயுர்வேத மருந்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு: Tribhuvan Kirti, Kiratiktadi ஆகியவை பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. Kakamachi எனும் கஷாயத்தை இரண்டு நேரம் பருகுவது நச்சினை முறிக்கும் என்கிறார்கள். உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்ளும் அளவுகளைக் கேட்டறியவும்.
வீட்டில் இருக்கும் அனைவரது இரத்தப் பிரிவையும் அறிந்தும் குறித்தும் வைப்பது அவசர நேரத்தில் உதவும்.
எதிர்ப்பு சக்தி பெருக:
துளசி, இஞ்சி, தேன் இவை சரியான அளவில் சேர்க்கப்பட்ட கஷாயத்தை காலையில் அருந்துவது பலன் தரும்.
ஆரஞ்சு பழச்சாறு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விரைவில் நலம் பெற உதவும்.
மாதுளை, வாழைப்பழம், ப்ளம், சப்போட்டா, ஆப்பிள் ஆகியன நோயை எதிர்த்துப் போராட உதவும்.
இரண்டு மேசைக்கரண்டி பப்பாளிச் சாறு பச்சையாக தினம் ஒரு வேளை எடுத்தல் பயனளித்திருப்பதாகப் பலரும் பல தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலையை சமைப்பதோ, கொதிக்கும் நீரில் அலசுவதோ கூடாது, அப்படிச் செய்வது இலையின் மருத்துவக் குணத்தை போக்கி விடும் என்கிறார்கள். எப்போதும் நோயாளிகள் என்னென்ன சாப்பிடுகிறார்கள் என்பது மருத்துவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அவரைக் கலந்தாலோசித்தே செய்யலாம். அவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நமது நம்பிக்கைக்காக, தீங்கில்லை எனும் பட்சத்தில் உறுதி செய்வார்.
வரும் முன் காக்க:
வாட்டர் ப்யூரிஃபையர் இருந்தாலும் கூட இது போன்ற தொற்றுகள் பரவும் காலங்களில் நீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது பாதுகாப்பானது.
கொசு விரட்டத் தெளிக்கிற மருந்துகளில், இலேசான மஞ்சள் நிறம் கொண்ட DEET (N,N-Diethyl-meta-toluamide) எண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கொசுக்களை அண்ட விடாது என்கிறார்கள்.
சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்கி நிற்காமல் பார்த்திடல் அவசியம்.
வேப்பிலைகளை இட்டு கொதிக்க வைத்த நீரில் குளிப்பது பலன் தரும்.
அதிகமான கொசுத் தொல்லை இருப்பின் சாயங்காலம் இருட்டத் தொடங்கும் போது வேப்பிலைப் பொடியால் புகை மூட்டம் இடலாம்.
வலை அமைக்காத சன்னல்கள் எனில் அதன் கதவுகளை மாலையானதும் மூடி வைத்திடல் நல்லது.
சின்னச் சின்ன விசயங்கள்தான் என்றாலும் ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்வது, வரும் முன் காக்க உதவும்.
***
மழையும் மழையால் சாலையில் நீர் தேங்கும் நிலையும் காய்ச்சல் பரவும் அபாயத்தை அதிகரித்திருக்கிற இந்த வேளையில் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. காய்ச்சல் வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதே நேரம் வைரல் காய்ச்சலையும் டெங்கு என நினைத்துக் கலவரப்படாமல் மருத்துவரிடம் செல்லுங்கள்.
*****
அவசியமான, உபயோகமான குறிப்புகள். இது பெரும்பாலும் பகலில் கடிக்கும் கொசுக்களாலேயே நோய் வருகிறது என்கிறார்கள்.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல்! நன்றி!
பதிலளிநீக்குத.ம3
பயனுள்ள பதிவு
பதிலளிநீக்குவிரிவான பதிவாகத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தகவல்களுக்கு நன்றி. பெங்களூரில் டெங்கு பிரச்சனை அதிகம் இல்லை தானே?
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்...
பதிலளிநீக்குமிக்க நன்றி...
tm7
சரியான தருணத்தில் உங்களின் பதிவு எல்லோருக்கும் உபயோகமாய் இருக்கும் ,நன்றி
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள்.
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஎனக்குப் புதிய தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
@சுடர்விழி,
பதிலளிநீக்குநன்றி சுடர்விழி.
@மோகன் குமார்,
பதிலளிநீக்குபெங்களூரிலும் இருக்கிறது மோகன் குமார்.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@கவியாழி கண்ணதாசன்,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html
என்னும் இணைப்பில் தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.
நன்றி.
எல்லாரும் நலம்தானே அக்கா?
பதிலளிநீக்கு@முனைவர்.இரா.குணசீலன்,
பதிலளிநீக்குதகவலுக்கும் பதிவைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.
@ஹுஸைனம்மா,
பதிலளிநீக்குநலம். நன்றி.
எல்லோரும் நலமாய் இருக்க வேண்டி இந்தப் பதிவு. இன்றும் மதுரை மேலூரில் சிறுமி காலமான செய்தி. அதே பகுதியில் தற்போது தாய்வீட்டில் தங்கியிருக்கும் பெங்களூர் தோழி ஒருவர் தந்த தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் காலமானவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு டெங்கு என உறுதியானதாகவும், பிறருக்கு என்னவென்றே உறுதி செய்ய முடியாத மர்மக் காய்ச்சல் என்றும் சொன்னார் :(!
நல்ல பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குபகலில் கடிக்கும் கொசுவால் ஆபத்து என்பதால் இரவும் பகலும் ஓடோமாஸ் தேய்த்துக் கொண்டு இருந்தோம் போகும் ஊரில் எல்லாம்.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா. இந்தவார விகடனில் டெங்கு குறித்த கட்டுரை வாசித்தீர்களா?