ஞாயிறு, 8 ஜூலை, 2012

அக்காவின் ரீங்காரமும் அண்ணாவின் பாடலும்

ஞாயிறு வணக்கம். வாங்க, அக்காவின் ரீங்காரத்தைக் கேட்டு விட்டு அண்ணாவின் பாடலுக்குப் போகலாம்:)!

#1 ரீங்காரப் புறா / Cooing Pigeon
இளங்காலையில்
ஸ்ருதி பிசகாமல்
’பக்கூம் பக்கூம்’ என
முணுமுணுக்கையில்..


#2 சிறகு உலர்ந்தும் சின்னப்புறா / Puffy Pigeon
மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்..


#3 “காக்கை அண்ணாவே நீங்க
அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க..”
என் பாட்டைக் கேட்டுத் தன் பாட்டை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்த போது எடுத்த படம்:)!


#4 ‘சாதாரணமாய் காணக் கிடைத்தாலும் நான் அசாதாரணமானவனில்லையா....?’

நிச்சயமா!

இவரு ஒரு ஒப்பற்றத் துப்பரவுத் தொளிலாளி. சுற்றுப்புறச் சூழல் சேவகர்.


#5 “என்னைப் புகழ்ந்து பாராட்டிப் படம் பிடிச்சுப் போட்டதுக்கு தேங்ஸ்மா”

***

பறவை பார்ப்போம் (4)

தொடர்புடைய சில முந்தைய பதிவுகள்:

43 கருத்துகள்:

  1. காக்கை அண்ணாவின் படங்கள் அழகு.
    காக்கை எல்லாம் உண்மையில் நமக்கு நன்மையே செய்கிறது.

    கொஞ்நாளாய் காக்கை கூட ஊர் குருவி மாதிரி குறைந்து விட்டது போல் இருக்கிறது.
    மாடியில் தினம் காகத்திற்கு சாதம் வைப்பேன். என் தலையை கண்ட உண்டவுடன் காக்கை கூட்டம் நிறைய வரும். இப்போது தவிட்டு குருவிகள் தான் வருகிறது.
    காலையில் காகத்தின் கா கா என்னும் பாடல் ஒலி குறைந்து போய்விட்டது.

    காகத்தின் பாடலையும் அதனையும் உங்கள் பதிவில் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அதுக்கு தகுந்த கமெண்டும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. நல்ல படப்பிடிப்பு.வாழ்த்துக்கள்.மனம் கொள்ளை போகிறது.

    பதிலளிநீக்கு
  4. என்ன அழகு எத்தனை அழகு....!!!!!!!

    பதிலளிநீக்கு
  5. சிதம்பரம் ஜெயராமனின் பாடலுக்குப் பொருத்தமாகத்தான் காக்கையார் தெரிகிறார்! ரொம்பவும் ஸ்டைலான போஸ்!!

    பதிலளிநீக்கு
  6. அடடா..... எங்கூர்லே இல்லாதவைகளைப் போட்டுட்டீங்களே!!!!!

    நல்லா பார்த்து வச்சுக்கறேன்.
    கடல்புறாவும் கடல்காக்காவும்தான் இங்கே:(

    ஒரு நாள் கிழமைன்னா காக்காவுக்கு சோறு வைக்க முடியுதா?:(

    பதிலளிநீக்கு
  7. அக்காவை உடுங்க .. அண்ணாவை எப்படி இப்படி ... ? பொறுமையா ... கலையா ...

    பதிலளிநீக்கு
  8. இங்கே தில்லியில் பக்கூம் பக்கூம் மட்டும் தான் கேட்க முடியுது. அதுவும் ரொம்ப அதிகமாவே.

    காக்கையார் எப்போதாவது தென்படுவார்....

    நல்ல படங்கள் மற்றும் கமெண்ட்ஸ்...

    த.ம. 3

    பதிலளிநீக்கு
  9. நல்லா காக்கா புடிச்சிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  10. சிறகு உலர்த்தும் சின்னப்புறா வெகு அருமை. உங்களின் அழகான கமெண்டுகளும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் ரசித்தேன்....!

    பதிலளிநீக்கு
  12. அக்காவின் ரீங்காரமும் அண்ணாவின் பாடலும் அருமை....நன்றிகள் பல‌.......

    பதிலளிநீக்கு
  13. அருமை அருமை
    நேரடியாகக் கூட இத்தனை அழகாக ரசிக்க முடியுமா
    என சந்தேகமாக உள்ளது
    மனம் கவர்ந்த புகைப்படங்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. 4வது படத்தில் காக்காவிடம் ஒரு கழுகின் சாயல் தெரிகிறது பாருங்கள்.நிஜமாவே அப்படித்தானா, இல்லை உங்கள் கைவண்ணத்தில் இவ்வளவு கம்பீரமாக இருக்கிறாரா காக்கை அண்ணா? :-)))

    பதிலளிநீக்கு
  15. சாதாரண காக்கையைக் கூட இவ்வளவு அழகாக் காட்ட உங்க காமிராவால் மட்டுமே முடியும்.

    எங்கூட்டுப் பசங்களைக் காணலை. மழை ஆரம்பிச்சதுலேர்ந்து வீட்டுச்சாப்பாடு வேணான்னுட்டு வெளியில கிடைக்கிற மண்புழு பூச்சிகளை வேட்டையாடியாறது. அப்பப்ப தண்ணி குடிக்க மட்டும் வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடிப் போயிடுது எல்லாம் :-)))

    பதிலளிநீக்கு
  16. கலைக்கண்ணால் காணவைத்துவிட்டீர்கள் காக்கையையும் புறாவையும். அழகோ அழகு. அதற்கான கமெண்டுகளும் அருமை. ரசித்தேன். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  17. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா. இங்கே காகங்களுக்குக் குறைவில்லை. குருவிகள்தாம் காணக் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  18. @Lakshmi,

    ரசித்தமைக்கு நன்றி லஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  19. @மனோ சாமிநாதன்,

    காக்கையாருக்கான பாடல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவர் பாடலே. கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @துளசி கோபால்,

    மாடப்புறாக்களுக்கும் காகங்களுக்கும் குறைவில்லை இங்கே. கருத்துக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  21. @தருமி,

    மொத்தத்திலே கேமராவாலே வாழ்க்கையிலே பொறுமை கூடிப் போச்சு:). நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. @வெங்கட் நாகராஜ்,
    இங்கு அடுக்குமாடிகளில் கூட்டம் கூட்டமாகப் புறாக்களைப் பார்க்க முடியும். கருத்துக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  23. @kg gouthaman,
    பிடிச்ச காக்கா எல்லோருக்கும் பிடிச்சா மகிழ்ச்சி:). நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @ஹுஸைனம்மா,
    கம்பீரமாகத் தெரிந்தால் சரிதான்:)! நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  25. @அமைதிச்சாரல்,

    நன்றி சாந்தி. உங்கள் பறவைப் படங்களை தொடர்ந்து ரசித்து வருகிறேன் ஃப்ளிக்கரில். சமீபத்தில் மைனா படங்கள் அற்புதம். தண்ணீர் குடிக்க வரும் அண்ணாவை ஒரு பாட்டுப்பாடி மடக்கி விடுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  26. @கீதமஞ்சரி,

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  27. மிக அருமையான படங்களும் கமெண்ட்களும்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. அருமையான படங்களும் பின்னுட்டங்களும் வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin