செவ்வாய், 10 ஜூலை, 2012

இரவோடு இரவாக.. பெங்களூரு கோரமங்களாவில்..

#1 ரவோடு இரவாக இருக்கிற மரங்களை வெட்டிச் சாய்க்கிற பெங்களூரு மாநகராட்சி, வேரற்ற மரத்தை அழகுச் சிலையாக வேறோர் இடத்தில் எழுப்ப வெட்கப்படவில்லை. சின்னஞ்சிறுவர்களின் கைச்சங்கிலி வளையத்துக்குள் சிறைப்பட்டு ”மரங்களைக் காக்க வேண்டும்” எனச் சேதி சொல்லி நிற்கும் காட்சியைப் பார்த்து சிரிக்கவா அழவா? முடிவு செய்யும் முன் எம்.ரிஷான் ஷெரிஃபின் இந்த வரிகளுடனான அருமையான கட்டுரையை வாசியுங்கள்:

இனி வரும் நாட்களில் வனங்களின் படங்களைக் கொண்டே காடென்பது யாதென, வரும் சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது. விடுமுறை நாட்களில் ஏதேதோ விளையாட்டு உலகங்களுக்கு நம் குழந்தைகளை அழைத்து செல்லும் நாம் காடுகளுக்கும் அழைத்துச் சென்று காடென்பதைக் காட்டி வருவோம்.
-எம். ரிஷான் ஷெரீப்

#2 வனத்தில் மிதக்கும் விருட்சங்களின் பாடல்கள்வடக்கு வாசல் தளத்தில் வாசிக்க:
http://vadakkuvaasal.com/component/content/article/550.html


#3 ஜூன் இதழ்இக்கட்டுரைக்காக எனது கீழ்வரும் இரண்டு படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

#4 அடர்ந்த வனம்



#5 பரந்த மரம்



ஆரம்பித்த கதைக்கு வருகிறேன்.

பாரதி சிமெண்டின் விளம்பரத்துக்குக் கைகோர்த்து முக்கிய சந்திப்புகளில் சிங்கம், புலி என விதம் விதமான சிலைகளை எழுப்பி வருகிறது பெங்களூரு மாநகராட்சி ‘காசுக்கு காசும் ஆச்சு, நகரை அழகு படுத்துனாப்லயும் ஆச்சு’ என. அப்படியாகப் பேலஸ் க்ரவுண்ட் அருகிலிருக்கும் மெஹ்க்ரி சர்க்கிள் சந்திப்பில் திடுமென ஒரு நாள் தோன்றிய சிலைகள் இவை:

#6 “வெட்ட விட மாட்டோம்.. நட்டு வைத்தும் வளர்ப்போம்..”
[படம் ஒன்றும் இதுவும் விரையும் வாகனத்தினுள் இருந்து எடுத்தவை]

நல்ல கருத்தை வலியுறுத்துகிறதுதான். ஆனால், இந்த இடத்திலிருந்து சில பர்லாங்கு தூரத்தில், சென்ற வருடம் மாதக் கணக்கில் மரங்களைக் காக்கக் கோரி பெரியவர்களோடு பள்ளிச் சிறுவர்களும் களமிறங்கிப் போராடியபோது அதற்கு மதிப்புக் கொடுக்காத மாநகராட்சி அதே காட்சியை சிலையாக எழுப்பினால் சலிப்போடு சிரிப்பும் எழுகிறது.

விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றது இழந்ததும்.. , ஜனவரி 2012 வடக்குவாசல் இதழில் வெளியான என் கட்டுரையிலிருந்து:

மல்லேஷ்வரம் சாங்கிடேங்க் முனையில் அமைந்த கோட்டையின் மேல் குதிரை மேல் வீற்றிருக்கும் வீரசிவாஜி சிலை நேர்கொண்டு பார்க்கும் சாலை ‘சாங்கி ரோட்'.
#7 அகன்ற இச்சாலையின் இருபுறமும் அடர்ந்துயர்ந்த அழகு மரங்கள் வரிசைகட்டி நிற்பது பார்ப்பவர் மனதை அள்ளும். மெட்ரோவுக்காக இவற்றை வெட்டிச்சாய்க்க ஒன்றரை வருடம் முன் அரசு முடிவெடுத்த போது பதைப்புடன் வீதிக்குப் போராட வந்த பொதுமக்களில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களும் அடக்கம். ஞாயிறு காலைகளில் அந்தப் பக்கம் சென்றால் ‘மரங்களைக் காப்போம்’, ‘இயற்கையைப் போற்றுவோம்’ போன்ற வாசகங்களைத் தம் கைப்பட எழுதிப் பிடித்தபடிப் பள்ளிச் சிறுவர்கள் சிவாஜி சிலைமுன் நிற்பதைக் காண முடிந்தது மாதக்கணக்கில். பலனாக நீதிமன்றம் விதித்த தடை உத்திரவு அரசு கொடுத்த அழுத்தத்தில் திரும்பப் பெறப்பட்டு விட்டது நவம்பரில். டிசம்பரில் கோடாரியின் முதல் வெட்டுக்குப் பலியான மரத்தின் கீழ் மெட்ரோவுக்கான பூஜை போடப்பட்டபோது மனம் வெதும்பி எவரும் அப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. விரல் விட்டு எண்ணுமளவில் ஏழெட்டு பேர்களே நின்றிருந்ததைப் பத்திரிகையில் படமெடுத்துப் போட்டிருந்தார்கள்.”

பார்த்தது மாநகராட்சி. ‘முன்னறிவிப்பு செய்து விட்டு கோடாரியை இறக்கினால்தானே போராட்டம் எதிர்ப்பு எல்லாம்? இரவோடு இரவாகப் போட்டுத் தள்ளிவிடலாம் இனி’ என்று முடிவெடுத்து விட்டது போலும்.

25 மே 2012, அதிகாலை அதிர்ச்சிகரமாக விடிந்தது கோரமங்களா பகுதி மக்களுக்கு. முக்கிய சந்திப்பில் முறையே நான்கு கிமீ நீளங்களில் நான்கு பைபாஸ் கட்டுவதற்காக செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை முன்னிருக்கும் சாலையின் 46 மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்து விட்டது மாநகராட்சி. இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழுந்ததுமே பகுதி மக்கள் எதிர்ப்பைப் பல்வேறு அமைப்புகள் மூலமாகப் பதிவு செய்ததோடு வழக்கு தொடர்ந்து ஸ்டே ஆர்டர் வழங்கச் செய்திருந்தார்கள். 29 மே, வழக்கு விசாரணைக்கு வர இருக்கையில், முதலமைச்சரிடம் கொடுத்த மனுவும் பரிசீலிக்கப்பட்டு உரிய பதிலளிக்குமாறு உத்திரவாகியிருந்த வேளையில் இப்படியொரு வேலையை செய்து விட்டிருந்தது மாநகராட்சி.

500-க்கும் அதிகமான பேர் ஊர்வலமாகச் சென்றும், வீழ்ந்து கிடந்த மரங்களை அள்ளிச் செல்ல விடாமல் அவற்றின் மீது ஏறி அமர்ந்தும் தங்கள் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் மக்கள் அரசுக்குத் உணர்த்தியதன் பலன் உயர்நீதி மன்றத் தீர்ப்பில் எதிரொலித்தது.

ரூ.129 கோடி மக்கள் வரிப்பணத்தை குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு வாரிவழங்குவதே திட்டத்தின் அஸ்திவாரம் எனும் குற்றச்சாட்டுக்கும், இந்த பைபாஸ் வரவால் பெரிய நன்மை விளையப் போவதில்லை எனும் வாதத்திற்கும் வலு சேர்ப்பவையாக இருந்தன அப்பாதைகளில் பொதுப்போக்குவரத்து தடையாவது, பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்படுவது, பாதசாரிகள் சாலையைக் கடக்க இயலாது போவது போன்றன.

‘பைபாஸ் அமைக்க 188 மரங்கள் பலிகொடுக்கப்பட வேண்டியிருந்ததில் 88 மரங்களை பிடுங்கி எறிய தங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று மாநகராட்சி நீட்டிய காகிதங்களைப் புறந்தள்ளிய உயர்நீதிமன்றம், ‘வெட்டிய மரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஈடாகப் பத்து மரக்கன்றுகளை வைப்போம்’ எனும் உறுதிமொழியையும் ஏற்கவில்லை. எந்த விதத்திலும் அது சாய்க்கிற விருட்சத்துக்கு ஈடாகாது எனச் சொன்னதோடு, சரியான சிந்தனையோடு செயல்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து விட்டதாகவும் நீதிமன்றம் அரசு அதிகாரிகளைக் கண்டித்திருக்கிறது தனது அறிக்கையில்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டிருப்பது தற்காலிகமாக ஆறுதலைத் தந்தாலும் மல்லேஸ்வரம் போராட்டம் முடிந்த விதத்தை நினைத்து ஒரு அச்சம் எழாமல் இல்லை.

செய்திகளாக ஒவ்வொன்றையும் நாம் கடந்து நாம் போய்க் கொண்டே இருக்கிறோம். மேகங்களும் நமட்டுப் புன்னகையுடன் நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கின்றன:

#8 மேகம் கொட்டட்டும்அக்னி நட்சத்திரம் முடிகிற சமயம், மே மூன்றாம் வாரத்திலிருந்தே அடைமழையால் நனைய ஆரம்பித்து விடுகிற பெங்களூர் சில வருடங்களாகவே ஆகாயம் பார்த்துக் காத்தே கிடக்கிறது. இந்த வருடம் ஜூலை பிறந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அவ்வப்போது சின்னத் தூறல், அபூர்வமாய் அரைமணி, போனால் போகிறதென எப்போதாவது ஒருமணி ஊற்றிவிட்டு ஓடி விடுகின்றன மேகங்கள். மக்களின் இந்த விழிப்புணர்வு இனியேனும் இருக்கிற மரங்களைக் காக்கட்டும். மின்னல் வெட்டி மேகங்கள் கொட்டட்டும்.


5 ஜூன், சுற்றுப்புற சூழல்தினத்தையொட்டி ஃப்ளிக்கரில் நான் பதிந்த படம்:

நினைவில் கொள்வோம்!
***


இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக அதீதம் ஃபோட்டோகார்னருக்கு நான் தேர்வு செய்த படங்கள்:
பசுமை காப்போம் - ஜேம்ஸ் வஸந்த்
நீர் சேமிப்போம் - ஆன்டன் க்ருஸ்
வாழ விடுவோம் (1) - குரு
வாழ விடுவோம் (2) - குரு
***

46 கருத்துகள்:

  1. படிக்கிறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோவில் என்ற கதையால்லே இருக்கு:(

    படங்கள் எல்லாமே அருமை!

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...இராமலஷ்மி

    பதிலளிநீக்கு
  3. நல்ல விழிப்புணர்வு பதிவு! படங்கள் கண்களுக்கு விருந்து! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பள்ளிச் சிறுவர்களும் களமிறங்கிப் போராடியபோது அதற்கு மதிப்புக் கொடுக்காத மாநகராட்சி அதே காட்சியை சிலையாக எழுப்பினால் சலிப்போடு சிரிப்பும் எழுகிறது.//

    சிரிப்புதான் வருகுது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல் தான்.

    மனிதன் வாழ மழை நீர் வேண்டும், மழை பெற மரம் வளர்க்க வேண்டும் .

    பதிலளிநீக்கு
  5. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. // முக்கிய சந்திப்பில் முறையே நான்கு கிமீ நீளங்களில் நான்கு பைபாஸ் கட்டுவதற்காக செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை முன்னிருக்கும் சாலையின் 46 மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்து விட்டது மாநகராட்சி.//

    அடப்பாவிகளா!

    என்னமோ போங்க!.. வர வர கேள்விப்படுகிற செய்திகள் எல்லாம் மோசமாகவே இருக்கிறது. பெங்களூர் என்றாலே குளிர்ச்சியான கால நிலை தான் என் நினைவிற்கு வரும். நான் சென்னையில் இருந்த போது பெங்களூரில் உள்ள நண்பன் வீட்டிக்கு வருவேன். ஊட்டி மாதிரி செம குளிராக இருக்கும்.. தண்ணீர் எல்லாம் அனாசியமாக செலவு செய்து கொண்டு இருப்பான். கடந்த முறை சென்ற போது தண்ணீரே இல்லை.. ரொம்ப சிரமமாக உள்ளது என்று கூறினான். மரம் எல்லாம் வெட்டப்பட்டு கோவை மாதிரி மொட்டையாகி விட்டது அவன் ஏரியா. வருத்தமாக இருந்தது.

    //மக்களின் இந்த விழிப்புணர்வு இனியேனும் இருக்கிற மரங்களைக் காக்கட்டும். மின்னல் வெட்டி மேகங்கள் கொட்டட்டும்.//

    இதெல்லாம் நடக்கிற காரியமா..

    கமெண்ட் போடும் நல்லவர்களே! இங்க ஒருத்தரு மரம் வெட்டப்படுவதை பற்றி எவ்வளவு வருத்தமாக எழுதி இருக்காங்க..அதைப் பற்றி கூறாமல் மரம் அழகு, படம் அழகு என்று டெம்ப்ளேட் கமெண்ட் போட்டு இந்த மரம் வெட்டுபவர்களை விட நீங்கள் அதிகம் டென்ஷன் செய்து கொண்டு இருக்கிறீர்கள். சீரியஸ் பதிவிற்கும் இப்படி டெம்ப்ளேட் கமெண்ட் போட்டு தயவு செய்து மொக்கை போடாதீர்கள்.

    பாதி பேரு பதிவை ஒழுங்கா படித்தார்களா என்றே தெரியலை. கஷ்டம்டா சாமி!

    பதிலளிநீக்கு
  7. நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு. மரம் வெட்டினால் உங்கள் விரல்களை வெட்டுவோம் எனக் குரல் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு!

    த.ம. 3

    பதிலளிநீக்கு
  8. கார்டன் சிட்டியில மரங்களைக் கார்டனில் தான் பார்க்க வேண்டி இருக்கும்....அதுவும் அப்புறம் சார் பார்க்கிங் இடமாக மாறியிருக்கும்!
    நல்ல பதிவு !

    பதிலளிநீக்கு
  9. அன்பின் சகோதரி,

    தற்காலத்தில் மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. கொங்க்ரீட் காடுகள் உலகை ஆளுகையில் விருட்சங்களின் வேர்களைச் சிதைத்து விடுவதைத்தான் மனிதர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இருக்கும் மனிதர்கள் எல்லாம் ஆளுக்கொரு பெருமரத்தை நட்டால் கூட பூலோகம் குளிர்ந்துவிடும் இல்லையா?

    எனது பதிவு குறித்த இணைப்புக்கு நன்றி சகோதரி.

    உங்களது அருமையான படங்கள், கட்டுரைக்கும் மேலும் வலுச் சேர்த்தன.

    மீண்டும் நன்றி அன்புச் சகோதரி :-)

    பதிலளிநீக்கு
  10. @துளசி கோபால்,

    அதுதான் நடக்கிறது.

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @balchandhar,

    இந்தக் கேள்விதான் எல்லோரது மனதிலும். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @கிரி,

    உண்மை. பசுஞ்சோலையாய் இருந்த பல பகுதிகள் பாலையாகி விட்டன. இருக்கும் மரங்களாவது தப்பிப் பிழைக்க வேண்டும்.

    ஒவ்வொருவர் நேரத்தையும் மதிக்கிறேன். அவரவர் ரசனையை ஒட்டிக் கருத்துகள். படங்கள் பற்றியதை வடக்குவாசல் வெளியீட்டுக்கானதாக எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி வெளியிட்ட நேரத்திலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற இப்பதிவை வாசித்த பாதி பேருக்காவது மரங்களைக் காக்க இந்த ஜனங்களைப் போல் தம்மால் ஆனதை செய்யும் எண்ணம் வருமாயின் ஆறுதலே. ரிஷானின் கட்டுரையும் சிறப்பான ஒன்று. அதற்கான சுட்டியின் வழியாகவும் பலர் வெளியேறியிருந்தனர்.

    சில நாட்கள் முன்னர் ‘மழை தருமோ மேகம்..’ என்றுதான் ஃப்ளிக்கரில் இப்படத்தைப் பகிர்ந்திருந்தேன். கேட்டாலும் கேட்டேன், இன்னும் மழை இல்லை. பெங்களூரின் பல இடங்களில் நிலத்தடி நீர் சுத்தமா வற்றி விட்டது. எல்லோரும் டேங்கர் தண்ணீரை எதிர்பார்த்துதான் காத்திருக்கும் நிலை. பாஸிடிவ்வா சொல்லி வைக்க வேண்டாமா:)? நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட். அரசாங்கமே இப்படி துணை போனால் என்னதான் செய்வது?

    பதிலளிநீக்கு
  14. @MangaiMano,

    இங்கே வசிக்கிற நீங்கள் கண்ணால் பார்க்கிறீர்களே. நன்றி மங்கை.

    பதிலளிநீக்கு
  15. @எம்.ரிஷான் ஷெரீப்,

    /ஆளுக்கொரு பெருமரத்தை / விருட்சங்களின் பாடலில் அழகாய் நீங்கள் வலியுறுத்திருக்கும் கருத்தும் அதுவே. அருமையான அக்கட்டுரையுடன் எனது படங்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் கோபமாய் பெரும்பாலும் எழுத மாட்டீர்கள் உங்களையே கோபப்பட வைக்கும் சம்பவம் நடந்திருக்கு

    பெங்களூர் பற்றி பெருமையா பேசுறதே மரங்களுக்கு தான் அங்கேயே இந்த நிலைமையா?

    பதிலளிநீக்கு
  17. என்னதான் அவர்கள் 10 மரக்கன்றுகளை நடுகிறேன் என்று சமாதானம் சொன்னாலும் அவை ஓராண்டில் மரமாகி விடுமா என்ன..? அழகிய சுற்றுச்சூழல் பறிபோனது போனதுதானே... சிந்திக்காத பாவிகள்! உங்களின் அழகிய புகைப்படங்களை முழுமையாக ரசிக்க விடாமல் கோபம் தடுக்கிறது. மோகன்குமார் சொன்னது போல் பெங்களூரு பசுமைக்கும் குளிர்ச்சிக்கும் பெயர்பெற்றது. அதைப் போக்கி விடாமல் பாதுகாத்திடத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. கோரமங்கலால ஒரு வருஷம் இருந்தேன் மேடம்! பெங்களூரோட அழகே அங்க இருக்கும் பெரிய பெரிய மரங்கள் தான், அதை வெட்டி எடுத்தா ஊர் சுடுகாடு மாதிரி தான் இருக்கும் :(

    பதிலளிநீக்கு
  19. அச்சச்சோ... ஊருக்கு அழகையும் சுற்றுச் சூழலுக்கு பசுமையும் தர்ற மரங்களை வெட்ட எப்படித்தான் மனசு வந்ததோ.. அழிக்கறது சுலபமாச்சுதே... உருவாக்கறதுதானே கஷ்டம்... என்னத்தைச் சொல்ல மேடம்? மனசு வலிக்குது.

    பதிலளிநீக்கு
  20. நல்ல விழிப்புப் பகிர்வு.

    பசுமைதரும் பாரிய விருட்சங்களை ஒருகணத்தில் அழித்துவிடலாம் அவை வளர்ந்து செழித்து வர எத்தனை ஆண்டுகள் செல்கின்றன என்பதை உணர்வதில்லை.

    படங்கள் அழகூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  21. மரங்களை அளித்துவிட்டு மழைக்கு தவிக்கின்றனரா ... நல்ல பதிவு மரம் வளர்ப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு....
    படங்கள் அனைத்தும் அருமை அக்கா....

    பதிலளிநீக்கு
  22. சகோதரி பெங்களூரை பெற்ற அன்னையை போல் நேசிக்கும் பல்லாயிர கணக்கானவர்களில் நானும் ஒருவன்,80 களில் ஹெக்டே முதல்வராய் இருந்தபோது மாநகராட்சி வீட்டிற்குஒரு செடி கொடுத்து வளர்க்க சொன்னது,நான் வில்சன் கார்டனில் உள்ள என் வீட்டின் முன் பகுதியில் ஒரு புங்க மரமும்,ஒரு சண்பக மரமும் வைத்தேன்,இன்று வானளவ வளர்ந்து தெருவெங்கும் மணம் பரப்புகிறது.

    பதிலளிநீக்கு
  23. @மோகன் குமார்,

    ஏர்போர்ட் நோக்கிச் செல்லும் பெலாரி ரோடில் பலவருடங்களாக பார்த்து வந்த பெரிய பெரிய விருட்சங்கள் சில ஆண்டுகள் முன் வெட்டிச் சாய்க்கப்பட்டு சாலை வெறுமையானதைப் பார்த்தது முதல் அனுபவம். இங்கிருப்பவர்களின் ஆற்றாமையையே பதிவு செய்துள்ளேன். நிறைய இழந்த பின்னரே விழித்துக் கொண்டுள்ளோம். நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  24. @பால கணேஷ்,

    உண்மைதான். ஏதோ கடமைக்காக நட்டு வைத்து விட்டு பராமரிக்காமல் விடவும் வாய்ப்புள்ளது. நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  25. @தக்குடு,

    மெட்ரோ, பைபாஸ் என பல இடங்களில் மரங்கள் போயாச்சு தக்குடு. ஒன்றை கொடுத்துதான் ஒன்று என்பதற்கும் ஒரு வரையறை இருக்கல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. @vijayan,
    /வானளவ வளர்ந்து தெருவெங்கும் மணம் பரப்புகிறது/

    கேட்கவே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. பகிர்வுக்கும் முதல் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. இப்போதைய பெங்களூர் விஜயத்தின் போது என்னை மிகவும் பாதிச்சதுன்னா அது மரங்களற்ற, வெயிலில் காயும் பெங்களூர்தான். திரும்பி வர்றதுக்காக கோரமங்களா பகுதியாத்தான் வர வேண்டியிருந்தது. மரங்களடந்த சாலைகளுக்குப் பெயர் போன அந்தப் பகுதியும் இப்போ அந்தப் பெருமையை இழந்துட்டு வருதுன்னு கண் கூடாப் பார்த்தப்ப வெறுத்துப்போச்சுங்க..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin